THANGANILAA DOT COM
இணைய வாரஇதழ்
Year 5 Week 37
10 08 2025
பெரியகுளம் முகம்மது
இதழாசிரியர்
திருநெல்வேலி
கவீன் மரணம் ஆணவக் கொலை அல்ல.
- பெரியகுளம் முகம்மது
ஒரே சமூகத்தைச் (சாதி) சேர்ந்த இருவர் காதலித்து
அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக
பெற்றோரை அணுகியும்
ஏழை, பணக்காரர்
சமூக அந்தஸ்து
மற்றும் பல காரணங்களுக்காக
திருமணம் செய்து வைக்க
பெற்றோர் மறுக்கும்போது
காதல் இணை
பெற்றோர் இல்லாமல் தாங்களாகவே
திருமணம் செய்து கொண்டால்
கோபமடைந்த பெற்றோர்
இளம் தம்பதியினரை
கொலை செய்வது
ஆணவக்கொலை
என்ற வகையில்
வரும்.
அது தவிர்த்து
மதம்
அல்லது (சாதி)சமூகம்
மாறிக் காதலிப்பவர்கள்
கொலை செய்யப்பட்டால்
அது கௌரவக் கொலை ஆகாது.
இது இன, சமூகமரபு காக்கும்
ஒரு சமூக நடவடிக்கை
என்றுதான் காலங்காலமாகக் கருதப்பட்டு வருகிறது.
இது போன்ற
இன, சமூக மரபு காக்கும் நடவடிக்கைகள்
தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும்
பன்னெடுங் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கிறித்தவர்
அவர் காமிலா பார்க்கர் என்ற முஸ்லிம் பெண்ணைக் காதலித்தார்.
திருமணத்துக்கு முயற்சித்தபோது
அரசகுடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவரைத்தான்
திருமணம் செய்ய வேண்டும்
இது அரசக்குடும்பத்தின்
மரபு அதை மீற முடியாது என
சார்லஸ் காமிலா பார்க்கர் திருமணத்துக்கு
அரசக் குடும்பம் மறுப்பு தெரிவித்து
விட்டது.
சார்லசை மிகவும் வற்புறுத்தி
டயானா என்ற அரசகுடும்பத்துப். பெண்ணை
திருமணம் செய்து வைத்தனர்.
சார்லஸ் காமிலா உடனும் தொடர்பில் இருந்ததால்
சார்லஸுக்கும் டயானாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து
வாழ்ந்து வந்தனர்.
டயானாவின் சில
நடவடிக்கைகள்
அரசகுடும்பத்துக்கு
இழிவை ஏற்படுத்தியதால்
டயானா
அரசக் குடும்பத்தாரால் கொலை செய்யப்பட்டு
அது விபத்து என மூடி மறைக்கப் பட்டதாக அப்போதைய மேற்கத்திய ஊடகங்கள்
சொல்லி இருந்தன.
மொகலாயப் பேரசின் இளவரசர் சலீம்
நாட்டிய மங்கை அனார்கலியைக்
காதலித்து அவளை
திருமணம் செய்து கொள்ள
முயற்சி செய்தார்.
அங்கேயும் அரசமரபு குறுக்கே வந்ததால்
அனார்கலி உயிருடன் சமாதியில் வைக்கப்பட்டதாக
திரைப் படத்தில்
காட்டினார்கள்.
மூன்றாம் குலோதுங்கச் சோழனின் மகள்
அமராவதி
கவியரசர்
கம்பர் வீட்டுக்கு
படிப்பதற்காகச்
சென்று வந்த வகையில்
கம்பர் மகன்
அம்பிகாபதிக்கும்
அமராவதிக்கும்
காதல் மலர
அங்கும் அரச மரபு
குறுக்கே வர
அம்பிகாபதி
கொல்லப்படுகிறான்.
அரசக்குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி
ஆர்யமாலா.
தோழிகளுடன்
காட்டில் விளையாட வந்த ஆரியமாலா குழுவினரை சிங்கம் ஒன்று தாக்க வர
பதறி ஓடிய ஆர்யமாலா
விலங்குகளைப்
பிடிக்க வேடன் காத்தவராயன்
விரித்த வலையில்
மாட்டிக் கொள்ள
காத்தவராயன் வலையிலிருந்து
ஆர்யமாலாவை மீட்க
அது காதலாக மலர
அவர்களது திருமணத்துக்கு
அரசக் குடும்ப மரபு வந்து
குறுக்கே நிற்க
காத்தவராயன்
கொல்லப்படுகிறான்.
உலக முழுதும்
உள்ள சமுதாயங்கள்
ஒவ்வொன்றும்
தங்களுக் கென்று
சில மரபுகளை
வைத்திருக்கின்றனர்.
அந்த மரபைக் கட்டிக்காக்க
கடைசிக் கட்டமாக
கொலை முயற்சியை
கையாளுகின்றனர்.
தமிழகத்தில் குறிப்பிட்ட
சமூகத்தினர்
குறிப்பிட்ட
சமூகத்தை மட்டுமே
கொலை செய்கிறார்கள்
என்றப் பொதுவான
கருத்து நிலவுகிறது.
ஆனால் தமிழகத்தில்
எல்லாச் சமூகங்களைச்
சேர்ந்தவர்களும் ஆணவக் கொலை செய்துள்ளனர்
என்பதைச் செய்திகள்
சொல்லுகின்றன.
" ஆணவக் கொலை எல்லாச் சமூகத்திலும்
நடைபெறுகிறது.
// கடந்த மாதம் சிதம்பரத்தில் ஆசாரி சமூக இளைஞனை காதலித்ததற்காக ஒரு தலித் தந்தையே தன் பெண்ணை கழுத்த றுத்து கௌரவக் கொ லை செய்தார்.
// கடந்த வருடம் தஞ்சாவூரில் ஒரு தலித் இளைஞன் தன் தலித் தங்கையை திருமணம் செய்த அகமுடையார் சமூக இளைஞனை ஆணவக்கொ லை செய்தான்.
// ஏழெட்டு வருடங்களுக்கு முன் விழுப்புரத்தில் ஒரு பறையரின பெண்ணை சக்கிலி சமூக இளைஞன் கலப்பு திருமணம் செய்தான் என அந்த பெண்ணை கூட்டி வந்து கொரவகொ லை செய்தது அந்த பறையர் குடும்பம்.
// ஆறு மாதம் முன், ராணிப்பேட்டையில் கிரிக்கெட் பிரச்சனை என யாதவ இளைஞர்கள் இருவரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளு த்தி அதில் ஒரு இளைஞனை கொ லையானார்.
// பத்து வருடங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நாற்பது வயதான குடிகார நொண்டி தலித் இளைஞன் தன்னை காதலிக்க வலியுறுத்தி வெறும் 16 வயதான நவீனா என்ற சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திக்
கொலை செய்தார்
// ஏழாண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தில் திலகவதி என்ற வன்னிய பெண் தன்னை காதலிக்கவில்லை என கூறி ஒரு தலித் சைகோ இளைஞன் ஒருவன் வீடுபுகுந்து கத்தி யால் வெட்டி
கொலை செய்தார்.
// கடந்த மாதம் கன்னியாகுமரியில் இஸ்லாமிய பெண்ணை காதலித்ததற்காக ஒரு தலித் இளைஞன் அந்த இஸ்லாமிய பெண் வீட்டிலேயே ஆணவ கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டான்.
(மேலுள்ளச் செய்திகள் முகநூலில் வந்த கட்டுரை ஓன்றின் சுருக்கம் ஆகும்)
சில ஆண்டுகட்கு முன் நான் சென்னை பல்லாவரம் பகுதியில் ஒரு கடையில் தேநீர்
அருந்திக் கொண்டிருந்தேன்.
அங்கே சட்டம் போடப்பட்ட புகைப்படம் ஒன்று இருந்தது.
இளைஞன் ஒருவன் முரட்டுக்காளை ஒன்றை அடக்குவது
போன்றிருந்தது
அந்தப் படம்.
கடையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருப்பவர்தான் அந்தக் கடையின் உரிமையாளர்
என்று தெரிந்து கொண்டேன்.
நான் அவரிடம்,
நீங்கள் மதுரை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவரா எனக் கேட்டேன்.
அவர்
ஆமாம் பாய்
எப்படிக் கண்டுப் பிடித்தீர்கள் என
ஆச்சரியத்தோடு என்னிடம் கேட்டார்.
படத்தைப் பார்த்துத்தான்
கணித்தேன்
என்றேன் நான்.
பாய் நான் மறவன்
நாங்கள் எங்கிருந்தாலும்
எங்களது ஒவ்வொரு குருதித் துளியிலும்
உடலின் ஒவ்வொரு
அணுவிலும் வீர உணர்வு இருந்து
கொண்டே இருக்கும் என்றார்
அவர்.
பேச்சுக் கிடையே
நான்
உங்கள் சமூகத்தில்
வேறு சமுகத்தைச்
சார்ந்தவர்களை
திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை
அப்படி ஏதேனும்
மரபுமீறி நடந்தால்
அவர்களைப்பிரித்து மறுதாலி கட்டும்
பழக்கம் உள்ளதாக கேள்விப் பட்டுள்ளேன்.
ஏன் அப்படிச் செய்கிறீர்கள்
என்றேன்
அதற்கவர்
எங்கள் சமூகத்தின்
அடையாளமே
வீரம்தான்.
எங்களுக்கென
உயர் பண்புகள்
பல இருக்கின்றன.
மாற்று சமுதாயத்துடன்
கலந்தால்
எங்கள் சமுகத்தின்
மரபு
மாறிவிடும்
ஆகவே பல
தலை முறைகளாக
இந்த மரபைப்
பின்பற்றி வருகிறோம்
என்றார்.
சாதி மாறிய நிகழ்வுகள் நடந்தால் அதைத் தடுப்பதற்கு
எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன
அவற்றைப் பின்பற்றலாம்
கொலை மட்டும்தான்
தீர்வா என்றேன்.
அதற்கு அவர்
கடைசிக்கட்ட முயற்சியாகத்தான்
கொலை நடக்கிறது.
கொலையுண்டவர்
மற்றும் அவரது உறவினர்களுக்கு
எங்கள் சமூகத்தில்
சாதிய மாறியத் திருமணத்தை அனுமதிக்க மாட்டோம்
ஆகவே நீங்கள்
விலகிக் கொள்ளுங்கள்
என்று பல முறை
எச்சரித்தும்
அவர்கள்
அதைப் பொருட்
படுத்தாமல்
இருப்பதால்
கடைசிக் கட்டமாகவே
கொலை நிகழ்வுகள் நிகழ்கின்றன
என்றார் அந்தத்தேநீர் கடைக்காரர்.
திருநெல்வேலி
நிழ்வுக்கு முன் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வு
ஓன்றின் போது,
புதிய தமிழகம்
கட்சியின் தலைவர்
மருத்துவர்
கிருட்டிணசாமி,
" பட்டியல் வகுப்பார்
உங்கள் சமூகப் பெண்களையே நீங்கள்
திருமணம் செய்து கொள்ளுங்கள் "
( மற்றச் சமூகப் பெண்களைக் காதலித்து அல்லது
திருமணம் செய்து ஏன் உயிரை இழக்கிறீர்கள்.
சாதி மாறியக் காதலின் முடிவு மரணம் மட்டுமே.
இதை எந்தக் தலைவராலும்
ஏந்தச் சட்டத்தாலும்
தடுக்க முடியாது.
மாற்றவும் முடியாது)
என்றக் கருத்தைச் சொல்லி இருந்தார்.
இந்தக் கருத்தை
எல்லா சமூகத்தினரும்
தங்கள் சமூகத்தின் இளைய தலை முறையினருக்கு சொல்லி தங்கள்
சமூகத்தினருக்கு
விழிப்புணர்வு
ஏற்படுத்தினால்
இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.
சுபாஷினி கவின் இருவரின் பெற்றோரும்,
சாதி மாறியக் காதல் நிறைவேறாது
அது மரணத்தில்தான்
முடியும்
என்பதைச் சொல்லி
முன் உதாரணங்களையும் சொல்லிக் காட்டி
மற்றவர்கள் மூலமாக
தங்கள் பிள்ளைகளுக்கு
தக்கமுறையில்
ஆலோசனைகள்
வழங்கி (Counciling )
அவர்களைப்
பிரித்திருக்கலாம்.
தழிகத்தில் பிரபல நடிகரும் இயக்குநருமான ஒருவரின் மகள்
இது போன்ற சிக்கலில் மாட்டியபோது
மகளை மிகவும் புத்திசாலிதனமான முறையில்
அந்த நடிகர்
மீட்டெடுத்தார்.
ஓவ்வொரு சமூகத்தாருக்கும்
சில மரபுகள் இருக்கும் அதை
மற்றச் சமூகத்தார் மதிக்க வேண்டும்.
அய்யா பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர்
சொன்னதுபோல்
விவேகத்துடன் கூடிய வீரமே பலனளிக்கும்.
விவேகம் இல்லாத வீரம் அது என்ன வீரம்?
காலில் குத்திய முள்ளை ஊசியைக் குத்தியே எடுத்து விடமுடிம்.
கோடாலியை ஏன்
பயன்படுத்த வேண்டும்.
ஒருவருக்கு அவர் உயிர்
எப்படி உயர்ந்தாக
கருதப்படுகிறதோ
சமூக மரபுகளை
அந்தந்தந்தச் சமூகத்தினர்
உயிரைப் போன்றே
மதிக்கின்றனர்.
பாதிக்கப் படுபவர்கள்
டாக்டர் கிருட்டிணச்
சாமியின் (காதல் திருமணம்)
அறிவுரையைப் பின்பற்றலாம்.
வீரமிக்கவர்கள் வீரத்தோடு விவேகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
எது எப்படியாயினும்
கவின் சுபாசினி வரலாறு
வருங்காலக் காதலர்களுக்கு
தக்க அறிவுரையாக அமையும் என்பது
உறுதி.
முகம்மதுநபி சொன்னார்,
உங்கள் பெண்பிள்ளைகள்
பருவ வயதை அடைந்து விட்டால் அவர்களது திருமணத்தை விரைவு படுத்துங்கள்.
தாமதப்படுத்தாதீகள்.
(திருமணத்தைத் தாமதப் படுத்துவது பெண்கள் வழி தவற காரணமாக அமைந்து விடும்.)
மதச்சகிப்புத் தன்மை மலரட்டும்
மனிதநேயம்
ஓங்கட்டும்.
மென் பொறியாளர் கவின் கொலைக்கு பிறகு, அவனும் அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படங்களை சில விஷ கிருமிகள் பகிர்ந்து அந்த பெண்ணுக்கு விபச்சாரி பட்டம் கட்டுவதும்,
கவினின் தந்தை "என் மகனிடம் அந்த பெண் கற்பை இழந்து இருக்க மாட்டாளா?"
அவளையும் கொன்று இருந்தால் நான் மகிழ்சி அடைந்து இருப்பேன் என்று தத்துவம் பேசுவதும்,
காதல் வயப்படும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை பாடம்.
சாதி மாறி காதல் செய்யாதீர்கள் , உங்கள் வாழ்வும் , மானமும் பாழாகும் என்று சாதிய அமைப்புகள் செய்யும் பிரச்சாரத்தை விட
கவினின் அப்பா செய்யும் இழிவான பிரச்சாரம் இளம் பெண்களை சென்றடைந்து காதல் மீது பயம் கொள்ள செய்திருக்கிறது.
இனியாவது பெண்கள் விழிப்பாக இருப்பார்கள் என்று நம்புவோம்...
Babu Kingstone Manuel
Diva Suppu
Peer Mohamed
Shahul Hameed R A
மதுரையைச் சேர்ந்த யோகிதா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி..
தென் கொரியாவில் நடைபெற்ற 20 வது ஆசியா ரோலர் ஹாக்கி சூப்பர் சீனியர் போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்துகொண்டு தங்கம் வென்றார்..
தமிழகத்திலிருந்து ஒருவர் கலந்து கொண்டு தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
அவரது சொந்த ஊரில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள்..
தமிழகத்திற்கு இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தங்கமங்கைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.
Sri Pria
சேவரையன் அப்துல் கனி
தற்சார்பு வாழ்க்கை
Thittiur Siva
Chandran Veerasamy
ArtyNyb(Painting)
Parama Jothi
முதல் படம் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்.
இரண்டாவது படம் பைசாவை கொள்ளை அடித்ததால் சாய்ந்த கோபுரம்.
Tamil
பல்சுவை கதம்பம்
Bala Subramaniam
Mylai Kamarudeen
அப்ரோஸ் அஹமது இவர் காங்கிரஸ் கட்சியில் ஒரு பொறுப்பில் இருக்கின்றார் இவரது வீடு பெரிய மேட்டில் சாமி தெருவில் இருக்கின்றதுஅவரது தெருவில் சாலை சரியாக போடவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதன் பிறகு கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று கமிஷ்னர் முன்பு கருப்புக்கொடி காட்ட முயற்சித்தார் இதுதான் நடந்த சம்பவம்
இதற்கு எந்த பிரிவில் இவரை கைது செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கலாம் ஆனால் மிகக் கடுமையான சட்டமான குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இவரை கைது செய்து இருக்கின்றனர் ஒரு மாத காலம் ஆகின்றது இன்னும் விடுவிக்கவில்லை காங்கிரஸ் கட்சியும் கண்டு கொள்ளவில்லை
காங்கிரஸின் முன்னாள் தலைவர் அழகிரி மட்டும் கடுமையான கண்டன குரலை எழுப்பினார் தற்போது தலைவராக இருக்கும் செல்வ பெருந்தொகை பெரிதாக கண்டு கொண்டது போல் தெரியவில்லை
முஸ்லிம் என்பதால் காங்கிரஸ் கட்சி இந்த நிலைப்பாட்டில் இருக்கின்றதா ? இந்த விஷயத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் போராடி இருக்க வேண்டும் நேற்று கூட அப்ரோஸ் அவர்களின் மனைவி காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கைகளையும் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நிகழ்த்தினார்
ஆளும் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிகே இந்த நிலை இது ஒரு பக்கம் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கூட ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் ஆட்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றது என்று வன்மையாக கண்டித்தது இதையும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது
Mylai Kamaru Deen
PERIYAKULAM MUHAMMAD
உரிமையாளர் & இதழாசிரியர்
1- 207 Perumalpuram
Periyakulam 625 601
Theni Dt.
Cell 90 80 92 50 62



















































Comments
Post a Comment