இணைய வாரஇதழ்
Year 5 Week 40
31 08 2025
பெரியகுளம் முகம்மது இதழாசிரியர்
பெருங்கொடையே
இன்னிசைப் பாடல்
Ajmal Aalim
Krisnamorthy
பிள்ளையார் சிலையை உடைத்த பெரியார்.
நீதிமன்றத்தில் நடந்த விவாதம்!
பெரியார் ,
பிள்ளையாரைப் போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்…!
நீதிபதி
(கைது செய்த காவலரிடம்):-
இவர் என்ன குற்றம் செய்தார்?
காவலர்:-
இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்.
நீதிபதி (பெரியாரிடம்): :
பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?
பெரியார்: : ஆமாம், போட்டுடைத்தேன்.
நீதிபதி: : ஏன் அப்படிச் செய்தீர்கள்?
பெரியார் : கடைவீதிக்குப் போனேன்.
அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன்.
யாருக்கும் இடையூறு இல்லாமல், தெரு ஓரமாகப் போட்டுடைத்தேன்.
நீதிபதி : ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதைப் புண்படுத்தாதா?
அது தவறல்லவா?
பெரியார் ; நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள்.
அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்.
நீதிபதி (காவலரிடம்):- மற்றவர்கள் என்ன செய்தார்கள்?
காவலர் : அவர்களும் போட்டுடைத்தார்கள்.
நீதிபதி : அவர்களை ஏன் கைது செய்யவில்லை?
காவலர் : அவர்கள் “கடவுள் உண்டு” என்று சொல்லி உடைத்தார்கள்.
ஆனால் இவரோ, “கடவுள் இல்லவே இல்லை” என்று சொல்லி உடைத்தார்.
நீதிபதி : இது என்ன வேடிக்கையாக இருக்கிறது?
“கடவுள் இல்லை” என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு.
“கடவுள் உண்டு” என்று சொல்பவர், அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா?
(பெரியாரை பார்த்து) அய்யா, நீங்கள் போகலாம்....
Benitto Kumar
சிரித்து😂 வாழ வேண்டும்
முன்னோடியாகக்
கொண்டாரா ?
-பெரியகுளம் முகம்மது
புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்கள்
முதலில் எடுக்க வேண்டிய உறுதிமொழி
லாயிலாஹ
இல்லல்லாஹு
முஹம்மதுர்
ரஸுலுல்லாஹி
என்பதுதான்.
இதன்பொருள்
கடவுள் இல்லை இல்லவே இல்லை
அல்லாஹ்வைத் தவிர
என்பதாகும்
ஈ.வெ.ரா. பெரியாரின் கொள்கையும்
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே
இல்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை நம்புவன் மடையன்
என்பதுதான்.
பெரியார் தனது கடைசி உரையின்போது
இந்தியாவில் வாழும் பட்டியல்
வகுப்பார் (என வகைப் படுத்தப்பட்டுள்ளோர் SC )
சுதந்திரமாகவும்
தன்மானத்துடனும்
வாழவேண்டுமானால்
ஒன்று அவர்கள்
இந்த நாட்டை விட்டு வேறு நாட்டுக்குச் சென்றுவிட வேண்டும்
அல்லது
இஸ்லாத்தில் இணைந்து விட வேண்டும்
இங்கே ஒரு முரண்பாடு வெளிப்படையாகவேத் தெரிகிறது.
கடவுள் இல்லை என்று சொல்லும் ஒருவர்
கடவுள் ஒருவர் உண்டு என்றக் கொள்கையை அடிப்படையாகக்
கொண்ட இஸ்லாம்
மதத்தில்
பட்டியல் சமூகத்தார்
இணைய வேண்டும் என ஏன்
சொல்கிறார்.
பெரியார் சொல்கிறார்,
கடவுளோ மதமோ எனக்கு சிக்கல் இல்லை.
சமூகங்களுகிடையே ஏற்றத்தாழ்வுகள்
தீண்டாமை அடிமைத்தனம் மதவழிச் சுரண்டல் இவற்றை நீக்கி சமூக சமத்துவம்,
சமூகநீதியை கொண்டுவர முயற்
சிக்கும்போது
ஏற்றத்தாழ்வுகள்
தீண்டாமை அடிமைத்தனம் சுரண்டல்
இவற்றை
உருவாக்கியது
அவற்றை இன்றுவரைப்
பாதுகாத்து
வருவது எதுவென்றால்
அது மதம், வேதம்,
கடவுள்
என்பதாகவே
இருக்கிறது.
அசைக்க வேண்டி
இருக்கிறது.
என்கிறார் பெரியார்.
கடவுளோ மதமோ
பெரியாருக்கு சிக்கல் கிடையாது.
சமூகங்களுக்கிடையை ஏற்றத்தாழ்வை
ஒழிப்பது
தீண்டாமையை
அழிப்பது
சமூக நீதியை
நிலைநாட்டுவது
இதற்காக உழைப்பது
இதுதான்
பெரியாரின்
நோக்கமாக இருந்தது.
புதிதாக ஒருமதத்தை
உருவாக்குவது
மத சீர்திருத்தம்
செய்வது
மத அறிஞர் செய்யும் பணி.
பெரியார்
சமூக சீர்திருத்தவாதி
பெரியார் எதிர்பார்த்த
சீர்திருத்தங்கள்
இஸ்லாத்தில்
இருந்தது.
ஆகவே பெரியார்
பட்டியல் வகுப்பார்
தன்மானத்துடன்
சுதந்திரத்துடனும்
வாழவேண்டு
மானால் அவர்கள்
இஸ்லாத்தில்
இணைய வேண்டும் என்றார்.
வட்டார அளவிலான
ஒரு குழுவினர்.
பள்ளிவாசலில்
(அசரத்) மதகுருவாகப் பணிபுரிபவர்கள்.
குழுவில் இருக்கும்
பத்துப்பேரில்
ஐந்து மதகுருமார்கள்
பல தலைமுறைகளாக
இஸ்லாத்தில் இருப்பவர்கள்.
மீதமுள்ள ஐந்து பேர் சுமார்
40 வருடங்களுக்கு முன் கிறித்தவ மதத்தில் இருந்து
இஸ்லாத்தில் இணைந்து
மதகுரு பயிற்சி பெற்று பள்ளிவாசலில்
அசரத் ஆகப் பணிபுரிபவர்கள்.
இவர்களின் பெற்றோர்
இந்து மதத்திலிருந்து
கிறித்தவ மதத்திற்கு
வந்திருந்தனர்.
பட்டியல் பிரிவில் இருந்தவர்கள்.
மேலே படம்
எவ்வளவு அழகான
சமத்துவம் இங்கே
உண்மையிலே
நிலை நாட்டப் பட்டு இருக்கிறது.
சாதி இழிவால்
தீண்டாமையால்
அவதிப்படும்.
ஒவ்வொருவரும்
பார்த்து சிந்திக்க
வேண்டியப் படம்.
லாயிலாஹ இல்லல்லாஹு
முஹம்மதுர்
ரஸுலுல்லாஹி
கலிமாச் சொல்லி
இஸ்லாத்தில்
இணைந்தார்கள்
சாதியும் ஒழிந்தது தீண்டாமையும் அகன்றது.
சமத்துவமும்
மலர்ந்தது.
இப்ராஹீம் ( அலை)
(ஆப்ரகாம்)
இவர் ஒரு
இறைத்தூதர்.
இஸ்லாம் கிறித்தவம்
யூதம்
இந்த மூன்று
மதங்களின்
மூலப்பிதா
இவர்தான்.
மனிதர்கள்
கையால் செய்யப்
பட்டச் சிலைகளை
கடவுளாக
வணங்கும்
மதப்பிரிவைச் சேர்ந்தவராக இருந்தார்
இப்ராஹீம்.
இப்ராஹீமின் தந்தை
அதை விற்று வருவது இப்ராஹீமுடைய வேலையாகும்.
எல்லாக் காலங்களிலும்
பகுத்தறிவாளர்
கூட்டம் ஒன்று
வந்திருக்கிறது.
இப்ராஹீம்
பகுத்தறிவாளர்
கூட்டத்தில்
சிக்கிக்கொண்டார்.
சிலைகள்
கடவுள் கிடையாது.
சிலைகளை கடவுளாக எண்ணி
அவற்றுக்கு
ஆறாட்டுகள்
நடத்துவதாலோ
அச்சிலைகளுக்கும் எந்தபயனும் பயனுமில்லை.
செய்யும் மனிதர்களுக்கும்
அதனால் எந்தப் பயனுமில்லை
இருக்கிறான்.
அவன் உருவம்
இல்லாதவன்.
இறைவனுக்கு
தாய் தந்தை
கிடையாது
மனைவி பிள்ளைகள்
கிடையாது.
இந்த உலகில்
இறைவனுக்கு
இணையாக எதுவும்
கிடையாது.
உருவம் இல்லாத
இறைவனை
உருவம் இல்லாத
நிலையிலேயே
வணங்க வேண்டும்.
(முஸ்லிம்கள் போல)
என இப்ராஹீம்
சிலை வணக்க முறைக்கு எதிராகப்
பரப்புரைச் செய்தார்.
இக்கொள்கை
ஆப்ரகாம் கோட்பாடு
அல்லது
தவ்ஹீது ஏகத்துவக் கொள்கை
ஓரிறைக் கொள்கை என அழைக்கப்
படுகிறது.
ஒருநாள் இரவு
இப்ராஹீம்
ஊர் மக்கள்
அனைவரும் திருவிழாவில்
கலந்து கொள்ள
காட்டுக்குச் சென்றிருந்த சமயத்தில்
சிலை வணக்கக்
கோயில் ஒன்றுக்குள்
புகுந்தார்.
மறுநாள்
காலை பூசாரி
கோயிலைத்
திறந்து பார்த்தபோது
அங்கிருந்த
சிறிய சிலைகள்
எல்லாம்
ஒன்றுக்கு கால்
ஒன்றுக்கு கை
ஒன்றுக்குக் கண்
ஒன்றுக்கு மூக்கு
ஒன்றுக்கு மண்டை
இவ்வாறு
உடைக்கப்
பட்டுக் கிடந்தன.
அரசர் விசாரித்த போது
மக்கள்,
இப்ராஹீம்
என்ற இளைஞர்தான்
கோயிலில் உள்ள
சாமி சிலைகளுக்கு
எதிராகப் பரப்புரைச் செய்து கொண்டு இருக்கிறார்
என்றார்கள்.
அரசர் இப்ராஹீமை
கோவிலுக்கு வரவழைத்து
விசாரித்தபோது,
சிலைகளை
உடைத்தது யார் என்பதற்கான
சாட்சி இங்கேயே கண்கூடாக இருக்கிறதே.
பெரியசாமியின்
தோளில் கோடறி
இருப்பதைப் பாருங்கள்.
பெரியசாமிக்கும்
சின்னச் சாமிகளுக்கும்
இடேயே கருத்து வேறுபாடு
ஏற்பட்டு அவர்களுக்குள்
அடிதடி ஏற்பட்டிருக்கிறது.
பெரியசாமிதான்
சின்னச் சாமிகளின்
கையை உடைத்து காலை உடைத்து
மண்டையை உடைத்து
சின்னச்சாமிகளை
அடக்கி வைத்திருக்கிறது.
என்றார்.
அதற்குக் கோயில் பூசாரி,
இப்ராஹீம்
பொய் சொல்கிறார்.
நான் 50 வருடங்களாக
இந்தக் கோயிலில்தான்
பணிபுரிந்து வருகிறேன்
சாமிசிலைகள்
வைக்கப்பட்ட இடத்தில் அப்படியேதான் இருக்கும்.
காலால் அவை நடந்ததையோ
கையால் அவை
எதையும் பிடித்ததையோ
கண்திறந்து பார்த்ததையோ
சிலைகள்
பேசியதையோ
நான் பார்த்தில்லை.
அசுத்தமானக் கால்களோடு தன் முகத்தின் மீது அமரும் ஈயைக்கூட இந்தச்சிலைகள் விரட்டியதை நான் பார்த்ததில்லை
இது இப்ராஹீம் செய்த வேலையாகத்தான்
இருக்கும் என்றார்.
அப்போது
இப்ராஹீம்,
ஒரு ஆபத்து வரும் பொழுது தங்களையே காத்துக் கொள்ளச்
சக்தி பெறாத இந்தச் சிலைகள்
உங்களைக் காப்பாற்றும்
என்று எப்படி நம்புகிறீர்கள்,
எனக்கேட்டார்.
இப்ராஹீமின் கருத்தைக் கேட்டு
அறிவுக்கண் திறந்த அங்கிருந்த பலர்
சிலை வணக்கத்தை விட்டுவிட்டு
இப்ராஹீமின் பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றனர்.
பகுத்தறிவு
ஒன்று தவறானது
என்பதை அறிந்ததும்
அதைவிட்டு விலகி
சரியானதை
தேர்ந்தெடுப்பதற்குப்
பெயர்தான் பகுத்தறிவு
இன்றைய உலக
மக்கள் தொகையில்
75% மேற்பட்டவர்கள்
பகுத்தறிவாளர்களே.
(முஸ்லிம்கள் யூதர்கள் கிறித்தவர்கள்)
இந்த மூன்று கூட்டத்தாரும்
இப்ராஹீமுடையக்
கோட்பாடான
ஒரிறைக் கொள்கையை ஏற்றவர்கள்தான்.
முகம்மதுநபி
இஸ்லாம் மதம்
மோசஸ் (மூசா)
யூதமதம்
ஸீசஸ் (ஈஸா)
கிறித்தவ மதம்
கோவிலில் சாமி சிலையை உடைத்ததால்
இப்ராஹீம் கொழுந்து விட்டு எரியும் நெருப்பில்
தூக்கி எறியப்பட்டார்
என்பது இப்ராஹீமின் வரலாற்றின் மறுபக்கமாகும்.
ஆகவே சாமிசிலையை
உடைக்கும் வகையில்
ஈ.வெ.ரா.
பெரியார்
இப்ராஹீமை
முன்னோடியாகக்
கொண்டிருந்தார்
என்றுதான்
கருத வேண்டி இருக்கிறது.
மேலுள்ள வரலாற்றுச் செய்திக்கான
ஆதாரமான குர்ஆன் வசனங்கள்
وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَ
நினைவு கூறுங்கள்!
“என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக!
என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!”
என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
(அல்குர்ஆன் : 14:35)
رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِيْرًا مِّنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِىْ فَاِنَّهٗ مِنِّىْ وَمَنْ عَصَانِىْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ
(“என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன;
எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்.
எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை; என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன் : 14:36)
وَ تَاللّٰهِ لَاَكِيْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ
“இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் .)
(அல்குர்ஆன் : 21:57)
قَالَ بَلْ فَعَلَهٗ كَبِيْرُهُمْ هٰذَا فَسْــٴَــلُوْهُمْ اِنْ كَانُوْا يَنْطِقُوْنَ
அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை
பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 21:63)
قَالُوْا نَـعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيْنَ
அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 26:71)
اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ اِلَيْهِ تُرْجَعُوْنَ
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு
ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்;
அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 29:17)
اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخٰلِقِيْنَۙ
“நீங்கள். படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
(அல்குர்ஆன் : 37:125)
Devi S
தலைநகர் டில்லியில்இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைமை அலுவலகம்.
அப்துர்ரஹ்மான்
சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல்
(24 08 2025 )இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைமையகம் டில்லியில் செயல்படத் தொடங்கி இருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்.
முஸ்லிம் லீகின் வரலாற்றுத் தொடரில் தலைநகர் டெல்லியில் தலைமையகம் அமையப் பெற்றிருப்பது ஒரு தனி அத்தியாயம். தனிச்சிறப்பு.
இந்திய தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம் லீகின் பங்களிப்பு பிரிக்கமுடியாத அங்கமாகத் திகழ்வதை வரலாறு சொல்லிக் கொண்டே இருக்கும்.
குறிப்பாக, தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய முஸ்லிம் லீக் தலைவர்களின் தியாகம், சுதந்திர இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கத்தில் உறைந்து கிடக்கிற முஸ்லிம் லீகின் பின்புலம்,
அரசியல் நிர்ணய சபையில் தலைவர்கள் ஆற்றிய உரைகள் என எண்ணற்ற வரலாற்றுப் படிவங்கள் மறைக்கப்பட முடியாதவை.
இத்தகைய தனிச் சிறப்பு சமூக அரசியல் அமைப்புகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கே உண்டு.
அல்ஹம்துலில்லாஹ். இதற்கான தலைமையகம் தலைநகர் டெல்லியில் அமைந்திருப்பது மிக மிக அவசியமானது.
இறைவன் அமைத்துத் தந்திருக்கிறான். இந்தியா முழுவதும் இந்த இயக்கப் பணிகள் விரிவாக்கம்பெற வேண்டிய அவசியக் கட்டத்தில் இருக்கிறோம். அதற்குரிய மிகச்சரியான தருணம் இது.
திறப்புவிழா நிகழ்ச்சிகள் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கோடு நடைபெற்றன.
செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், தேசிய தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத், பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி மற்றும் முன்னணி
தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
எம். அப்துல் ரஹ்மான்
தேசிய துணைத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
Aluteen Aluteen
SAJalal
Ayesha
Kaja Shariff ASM
மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சியும் மேம்பாடும் அறிமுக நிகழ்ச்சி நீடூரில் மௌலவி. Dr M கலீல் அஹமது முனீரி phD பங்கேற்று உரை
சாதனையாளர்
அ.ல.முகைமினா
எழுத்தாளர்
ஆசிரியர் கவிஞர்
சமாதான நீதவான்
குறிஞ்சாக்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தரம்-
04 படிக்கும் போதே பாடசாலையில் நூலகத்தில் தினகரன்,
நவமணி, தினமுரசு, வீரகேசரி முதலிய பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்தார்.
பத்திரிகைகளில் அதிகமாக கவிதை வடிவில் உள்ள விடயங்களை விரும்பிப் படிப்பார்.
இது அவருக்கான கலையார்வத்தை அதிகரித்தது.
இப்படியே தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் சேவையுடனும் எனது நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியில் தரம் நான்கு படிக்கும் போதே நேயர் வினாவுக்கு பரிசு கிடைத்தது .
அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தி/குறிஞ்சாக் கேணி மகளிர் மகாவித்தியாலயத்தில் தரம் 12 வரை கலைத்துறையில் கற்று
தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பட்டதாரியாக 2006 இல் வெளியானார்.
அதனைத் தொடர்ந்து இரண்டு தனியார் நிறுவனங்களில் முகாமையாளராக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.தற்போது மாவட்ட சமாதான நீதவனாகவும் இருக்கிறார்.
அத்தோடு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் கற்று முடித்து தற்போது வரை தி/ கிண் /இக்ரா வித்தியாலயத்தில் தமிழ் மொழிப்பாட ஆசிரியராக கடமை புரிந்து வருகிறார்
மேலும் சுரத ஊடக வலையமைப்பில் தமிழ்ப் பிரிவு நிகழ்ச்சித் தொகுப்பாளராக,நாடறிந்த சிறந்த எழுத்தாளராக சமூக சேவையில் ஈடுபாடுடையவராக சமூகத்தில் பெண்கள், ஆண்கள், முதியோர், சிறுவர் என் அனைவரோடும் கலந்துரையாடி சிறப்பான தொடர்பாடலை உடையவர்.
தமிழ் மொழிப் புலமை காரணமாக ஒரே வருடத்தில் மூன்று புத்தகங்களை வெளியீடு செய்து இருக்கிறார்.
கவிதை ,கட்டுரை,சிறுகதை,பாடல்,எனப்பல துறைகளிலும் சிறுவயது முதல் பல்வேறு வெற்றிகளை அடைந்து கலைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது கட்டையாறு வீதி, கிண்ணியா _02 இல் தற்காலிகமாக வசித்து வரும் இவர் கிண்ணியா நகரசபையில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
அ.ல.முகைமினா
றஹ்மானியா வீதி
கிண்ணியா-0
0702417409
0756420094
muhaiminamoosa496@gmail.com
Jaffna Muslim
இந்தியாவை சுமார் 800 ஆண்டு காலம் ஆட்சி செய்த எந்தவொரு முகலாய ஆட்சியாளர்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் தங்களது ஆளுகையின் கீழ் வாழ்ந்த முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை விருப்பம் நிறைவேற பெரும் உதவியாக முகலாய மன்னர்கள் இருந்துள்ளனர்.
தற்போது பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் குஜராத் மாநிலம் முகலாயர் ஆட்சியில் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான தங்குதளமாக விளங்கியுள்ளது.
முகலாயர் ஆண்ட பிரதேசம் முழுவதிலிருந்தும் ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்கள் குஜராத் மாநிலம் சூரத் துறைமுகம் வழியாக தான் கப்பல் மூலம் பயணித்துள்ளனர்.
இதன் காரணமாக சூரத் துறைமுகம் #பாபுல்மக்கா என்று அழைக்கப்பட்டுள்ளது.
அக்பர் மற்றும் ஷாஜஹான் ஆட்சி காலத்தில் குஜராத்திலிருந்து கப்பல் போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளனர்.
ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் அரசாங்க செலவில் இரண்டு கப்பல்கள் இலவசமாக ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது..
முகலாய ராணிகள் பலரும் ஹஜ் செய்துள்ளனர்.
பாபரின் மகள் குல்பதான் பேகம், அக்பர் மனைவி சலீமா பேகம் தலைமையில் 40 பெண்கள் ஹஜ் யாத்திரை சென்றுள்ளது தெரிய வருகிறது..
Colachel Azheem
Arsath Ali
Hithayathullah
Azees Luthfulla
முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பீகார் உரையை அழகாக, நேர்த்தியாக, சிறப்பாக இந்தியில் மொழிபெயர்த்து அசத்திவிட்டார் வழக்கறிஞர் ஆலிம் புகாரி Moulavì Alim Albuhari
உச்சரிப்பிலும் சரி, உரையாற்றிய தொனியிலும் சரி, தேர்ந்தெடுத்த சொற்களிலும் சரி - ஆலிம் புகாரி அசர வைத்துவிட்டார்.
ஒவ்வொரு முறையும் விண்ணை அதிரச் செய்த ஆரவாரமே சான்று.
தோழமைக்கு ‘மித்ரதா‘ என்றும் ‘தோஸ்தானா‘ என்றும் சொல்லி அழுத்தம் கொடுத்தது சிறப்பு.
தமிழுக்கே உரித்தான சொற்றொடர்களை அழகாக மொழிபெயர்த்தது அழகு.
அவற்றைச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்காமல் அவற்றுக்கு இணையான பொருளைத் தருகின்ற, மக்களுக்கு நன்கு அறிமுகமான சொற்களை லாகவமாக ஆண்டது வெகு சிறப்பு.
இவ்வாறாக, ‘கீ கொடுத்தால் ஆடுகின்ற பொம்மையாக தேர்தல் ஆணையத்தை ஆக்கிவிட்டார்கள்’ என்பதற்கு ‘சுனாவ் ஆயோக் கூ வோ ரீமோட் பே சல்னே வாலி கட்புத்லி பனா சுக்கே ஹைன்’ என்று மொழிபெயர்த்ததும்
‘மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள்’ என்பதை ‘பஹுமத் கே தண்டோரா பீட்னே வாலே’ என்று மொழிபெயர்த்ததும் ஓ போட வைத்தது.
‘லாலுவின் வழித்தடத்தில் அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார் தேஜஸ்வி அவர்கள்’ என்பதை
‘உன்கே யோகிபுத்திரர் தேஜஸ்வி ஜீ சங்கர்ஷ் கர் ரஹே ஹைன்’ என்று மொழிபெயர்த்தது அபாரம்.
ஆலிம் புகாரிக்கு ஆயிரம் வாழ்த்துகள்.
மாஷா அல்லாஹ்
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
Muganool Fm 91.5
தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்...!
பெரும்பாலான தந்தைகளின் இறுதிக் காலம் மௌனத்திலும், தனிமையிலும், சில நேரங்களில் புறக்கணிப்பிலும் கழிகிறது.
இது நம்முடைய சமூகத்தின் மிகுந்த வருத்தமளிக்கும் உண்மை.
தந்தை என்ற மனிதர் வாழ்நாள் முழுவதும் கொடுத்துமட்டுமே பழகியவர்.
குடும்பத்திற்காக உழைத்தவர்.
ஆனால் வயதான பிறகு தாம் எதையும் கேட்காமல் மௌனத்தில் வாழ்கிறார்.
அப்போதுதான் அவரின் தேவைகளை பிள்ளைகள் அறிந்து நிறைவேற்ற வேண்டும்.
தந்தையின் மனதை நெகிழ்க்கும் சிறிய செயல்கள்:
அவருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தால் வாரப் பத்திரிகை, புத்தகம் வாங்கிக் கொடுங்கள்.
சில்லறைச் செலவுகளுக்காக சிறிது பணம் கொடுங்கள்.
மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளில் ஈடுபடுத்துங்கள்.
பேரன்–பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள்.
தனிமையை போக்க வானொலி அல்லது டி.வி. ஏற்பாடு செய்து விடுங்கள்.
குறிப்பாக, மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகக் கொடுமையானது.
பெண் சூழலுக்கு ஏற்ப பழகிக் கொள்ள முடியும். ஆனால் குடும்பத் தலைவனாக இருந்த தந்தை, தனது துணைவியை இழந்தவுடன் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார்.
தந்தையின் வாழ்நாள் முழுவதும் அவர் உங்களுக்காக உழைத்தார்.
இப்போது அவருக்காக நீங்கள் செய்யும் சிறிய அன்பான செயல்கள் தான் அவரின் இறுதி நாட்களை அமைதியாக்கும்.
✨ மறைந்த பிறகு மரியாதை செய்யாமல், உயிருடன் இருக்கும் போதே கௌரவியுங்கள்.
✨ தந்தை மரியாதைக்குரியவர்.
-பகிர்வு பதிவு.
🌹🌹🌹🌹🌹🌹
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது.
மூதாதையர் இந்த மரத்தை நட்டு விட்டுட்டு இந்த உலகத்தில் இருந்து விடை பெற்று சென்று இருக்கின்றனர்.
ஒரு பண மரத்தின் காலம் 100 லிருந்து 150 வருடமாக சொல்கிறார்கள் இங்கே ஓங்கி அழகாக வளர்ந்திருக்கும் பனை மரத்தில் அழகுக்கு சின்ன வடலிகளை காணவில்லை.
இந்த மரங்கள் பட்டுப்போனால் இந்த இடம் இந்த அழகை இழந்து விடும்.
இந்த நிலங்களுக்கு அருகில் சிறிய பனங்கண்டுகளை நட வேண்டும் @Pondicherryvillages
*திருட தைரியம் இல்லாதவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்*... !
*பிச்சை எடுக்க வெட்கப்படுபவர்கள் திருடி விடுகிறார்கள்... !*!
*இவ்விரண்டையும் சேர்த்தே செய்ய விரும்புவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்...!!*
*மனசாட்சிக்கு பயந்து மனிதனாக வாழ நினைப்பவர்கள் உழைத்து வாழ்கிறார்கள்.
❤️‼️
பகுத்தறிவு தென்றல்
Idea123
RA Media
அரக்கர் கூட்டம்
Today Special Calendar
Mohan K
Benitto Kumar
வாழ்க் கையில் தோல்வி
பகுத்தறிவு தென்றல்
Gajitha Kadhalan
நாணல்
JiHa MeMes
சூப்பர்ல.... 🫢
கல்வித் தகவல்
வாழ்க்கையில் தோல்வி
S Sadskathulla
மத்தியமைச்சர்., சிவராஜ் சவுகான்
அந்த ,புஷ்பக, விமானத்தின்
தொழில்நுட்பத்தை வைத்து
போர் விமானத்தையும்
பயணிகள் விமானத்தையும்
ஏவுகணைகளையும் ட்ரோன்களையும்
கண்டுபிடிக்க வேண்டியதுதானே..?
எதற்கு..? அயல்நாட்டிடம்
கோடி கோடியாக.!,பணத்தை கொட்டி
ஆயுதம், வாங்கவேண்டும்.
முருங்கைப் பொடியைஆரம்பப் பள்ளியோடு
நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உயர்நிலைப் பள்ளியில்
பயன்படுத்தினால் பாலியல் தொல்லை அதிகரிக்கும்.
Anwar Basha
_🔵நீங்க,ஒருவிஷயம் நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா..._
இந்தியாவில் IAS படித்து உயர் மற்றும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களில், பெரும்பான்மையானவர்கள் எல்லாம், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
குறிப்பாக, தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரியான, ஞானேஷ் குமார் IAS, இவரது மூத்த மகள் மேத்தா ரூபம் IAS, இவருடைய கணவர் IAS, இளைய மகள் அபிஷிரீ IRS, இவருடைய கணவர் IAS என எல்லாரும் உ.பியை சேர்ந்தவர்கள் தான்.
இந்த தகவல் தெரிந்ததும் 'இந்திய அளவில் எந்த மாநிலத்திலிருந்து, அதிகளவில் IAS, IPS அதிகாரிகள் வருகிறார்கள்'? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
கொஞ்சம் ரிசர்ச் செய்து பார்த்தேன். ஷாக்கா இருந்தது.
ஜனவரி, 2024-ம் ஆண்டின் புள்ளி விபரத்தின்படி, இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்தில் தான் அதிகளவில் IAS மற்றும் IPS படித்து வந்துள்ளார்கள்.
இதோ புள்ளி விபரம்:-
உத்திரப்பிரதேசம் - 652 IAS / 541 IPS
மத்தியப் பிரதேசம் - 459 IAS / 319 IPS
மகாராஷ்டிரா - 435 IAS / 317 IPS
தமிழ் நாடு - 394 IAS / 276 IPS
இந்த பட்டியலில் 6-வது இடத்தில்...
பீகார் - 359 IAS / 242 IPS
9-வது இடத்தில்...
குஜராத் - 313 IAS / 208 IPS டச்
நாம் பல ஆண்டுகளாக படித்து வந்து விஷயம் என்னான்னா, 'கல்வியறிவில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எதுவென்றால், அது கேரளா' தான்.
ஆனால், இந்த பட்டியலில் கேரளா 11-வது இடத்தில்...266 IAS / 188 IPS.
அதாவது, நாட்டிலேயே கல்வியறிவில் முதல் இடத்தில் உள்ள மாநிலத்தில் இத்தனை IAS/IPS அதிகாரிகள் தான் வருகிறார்கள்.
இன்னொரு புள்ளி விபரம் பாருங்க...
இதே 2024-ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி, கல்வியறிவில் முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பீகார் மாநிலங்களே இல்லை.
கல்வியறிவில்..
உத்திரப்பிரதேம் 23-வது இடம்
பீகார் 25-வது இடம்
மத்தியப் பிரதேசம் 26-வது இடம்.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் உ.பி 23-வது இடத்திலும், ம.பி 26-வது இடத்திலும் இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலிருந்து தான் அதிகளவில் IAS/IPS அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.
(மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும், கல்வியறிவு இவ்வளவு பாதாளத்தில் இருக்காதே..?)
அதுவும், கேரளா, கர்நாடகா மாநிலங்களை விட பீகார் மாநிலம் 6-வது இடத்தில் இருக்கிறது என்றால் இதை நம்ப முடிகிறதா...?
சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியானது. பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
ஒரு ஆங்கில ஆசிரியரை சில ஆங்கில வார்த்தைகளை கரும்பலகையில் எழுத சொன்னார்.
கலெக்டர் எழுத சொன்ன வார்த்தைகள் Twenty, Eleven, Fifteen.
அந்த ஆங்கில ஆசிரியர் எழுதியது...
Tvantee, Ilavan, Pipteen...
இதை பார்த்து கலெக்டர் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து சென்று விட்டார்.
கல்வியறிவில் இப்படி ஒரு சூழல் அங்கே நிலவும்போது, இங்கேயிருந்து எப்படி இத்தனை IAS/IPS அதிகாரிகள் உருவாக முடிகிறது...?
பதிவு - Prakasam P Palani
**********************
நாமக்கல் கவிஞர்
Chandran Veerasamy
தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கொருகுணம் உண்டு
அமிழதம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும் ....
கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம் !
மானம் பெரிதென உயிர் விடுவான்
மற்றவர்க்காக துயர்ப் படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேலெனப் பேசிடுவான் ........ மட்ட
##நாமக்கல்கவிஞரின்
நினைவு தினம் 26 08 !
TikTok Machan
Jaffna Muslim
சர்வதேச முஸ்லிம் விஞ்ஞானிகள் ஒன்றியத்தின் தலைவர் அலி கராதகி, காசா குடியிருப்பாளர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக வியாழக்கிழமை (28) முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு கேட்டுக்
கொள்கிறார்.
Gowtham P
மதுரை - மேலூர் அருகில் ஆணவ கொலையில் பலியான கள்ளர் சமூகத்தை சேர்ந்த தம்பி சதிஷ்குமாரின் பெற்றோர்கள் மகாராஜன் - வீராயி மற்றும் உறவினர்கள் இன்று என்னை வந்து சந்தித்தனர்.
தம்பி சதிஷ்குமாருக்கான சட்ட தலையிட்டு பணியினை எவிடென்ஸ் அமைப்பு எடுத்து செல்ல இருக்கிறது.
கணவனை இழந்து இருந்த ராகவி என்கிற பெண்ணை திருமணம் செய்தவர் சதீஷ்குமார்.
ராகவியும் சதிஷ்குமாரும் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்த ஆணவ படுகொலை பொருளாதாரம் மற்றும் ஆணாதிக்க தெனாவெட்டினால் நடத்தப்பட்டது.
சதிஷ்குமாரின் பெற்றோர்களை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.
எவிடென்ஸ் அமைப்பு அவர்களுக்கான நீதியை உறுதியாக பெற்று கொடுக்கும்.
VincentRaj
தமிழ் அமிர்தம்
Krishnamoorthy S
மாற்று மதத்தினர் கோயிலில் நுழைந்ததால்
பரிகார பூசை..
இன்றைய
நவீன தீண்டாமை ...
( நில அளவை வல்லுநர் ,இந்திய மேப்பை உண்டாக்கியவர் ,
ஆங்கிலேயர் வில்லியம் லேம்டனின் சிலை இது.
நில அளவையின் போது தஞ்சை கோபுரத்தின் மேல் ஏற்றப்பட்ட எந்திரம் சரிந்து விழுந்ததில் கோபுரத்தில்
சேதம்ஏற்பட்டது.
அதை தஞ்சை சரபோஜி மன்னர் மராமத்து வேலை பார்க்கையில் வில்லியம் லேம்டன் நினைவாக இந்த சிலையை உருவாக்கினார்.
Comment
தேச பக்தியாளர்களுக்குத் தெரிந்தால்
இந்தச் சிற்பத்தை உடைக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்துவார்கள்
முத்துக் கிரிட்டிணன்.
தகவல் தோழர் Mani Vannan Mani Vannan )
Iniya Islam
இணையத்தில் வைரலான வீடியோ, பாகிஸ்தானில்
வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்து மதரஸா மாணவர்கள் தங்க நகைகளை மீட்டெடுப்பதைக் காட்டுகிறது.
குப்பைகள் மற்றும் சேற்றை அகற்றும் போது மாணவர்கள் நகைகளைக் கண்டுபிடித்தனர்.
மாணவர்கள் நகைகளை இடிபாடுகளில் இருந்து மீட்டு, அதை தங்கள் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்ததாகவும், சரிபார்ப்புக்குப் பிறகு அதை சரியான உரிமையாளரிடம் திருப்பி அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களின் நேர்மைக்கு வெகுமதியாக அவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது, ஆனால் அதையும் நன்கொடையாக வழங்கத் தேர்ந்தெடுத்தனர்.
SM.இதாயத்துல்லா,
தமிழ்நாடு ஜமாத் பைத்துல்மால் (ஏழைநிதியம்)& வட்டியில்லா கடன் கூட்டமைப்பு
தொடர்பு- 8778560804
நன்றி SM ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு
தங்கநிலா கேட்டுக் கொண்டதற்
கிணங்க
பைத்துல்மால் சம்பந்தமான முழு விபரங்களையும்
தங்கநிலா இணைய வார இதழில் வெளியிட
வீடியோவாக அனுப்பியுள்ளார்கள்.
மேலும் சந்தேகங்களை
தொடர்பு- 8778560804
எண்ணை அணுகி
தெரிந்து கொள்ளலாம்.
பகுதி->1 https://www.facebook.com/share/v/14y8iTRLW4/?mibextid=wwXIfr
பகுதி->2 https://www.facebook.com/share/v/16TrKY9AEr/?mibextid=wwXIf
பகுதி->3 https://www.facebook.com/share/v/1Fm5czmvFN/?mibextid=wwXIfr
பகுதி->4 https://www.facebook.com/share/v/1A9BVnkwyj/?mibextid=wwXIfr
பகுதி->5 https://www.facebook.com/share/v/1BgfiAA9Ta/?mibextid=wwXIfr
பகுதி->6 https://www.facebook.com/share/v/16PJZzffZN/?mibextid=wwXIfr
பகுதி->7 https://www.facebook.com/share/v/16o2jr6Rae/?mibextid=wwXIfr
ஸ்டாலின் In Bihar
படம் Peer Mohamed
செய்தி Afsal Husain
உங்களை எல்லாம் பார்ப்பதற்காகத்தான் இரண்டாயிரம் கிலோ மீட்டர் கடந்து நான் இங்கே வந்திருக்கிறேன்.
பீகார் என்றாலே
மரியாதைக்குறிய
லாலு பிரசாத் யாதவ்
அவர்கள் அனைவருக்கும்
நினைவுக்கு வருவார்.
சமூகநீதி - மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளம் அவர்!
தலைவர் கலைஞர் அவர்களும் - லாலு அவர்களும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள்.
எத்தனையோ வழக்குகள் - மிரட்டல்கள் வந்தாலும், பா.ஜ.க.விற்கு பயப்படாமல் அரசியல் செய்த காரணத்தினால், இந்தியாவின்
மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார், லாலு பிரசாத் அவர்கள்
அவரின் வழித்தடத்தில், அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் தேஜஸ்வீ அவர்கள்.
கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பீகாரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பீகார் மக்களின் பலம்! ராகுல் காந்தியின் பலம்! தேஜஸ்வீயின் பலம்!
இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கான போர்க்குரலை பீகார் எழுப்பியிருக்கிறது. இதுதான் வரலாறு!
‘லோக்நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக மக்கள் சக்தியை அவர் திரட்டினார்.
அந்தப் பணியைத்தான், அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களும், தம்பி தேஜஸ்வீ அவர்களும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் செல்லும் இடம் எல்லாம், மக்கள் - கடல் போல திரண்டு வருகிறார்கள்.
அதிலும், தேஜஸ்வீ அவர்கள் கார் ஓட்ட, அதில் ராகுல் காந்தி பயணம் செய்த காட்சியைப் பார்த்தேன். ஏன், மோட்டார் சைக்கிள் பயணத்தையும் நான் பார்த்தேன்.
உங்களின் நட்பு, அரசியல் நட்பு மட்டும் கிடையாது; இரண்டு உடன்பிறப்புகளின் நட்பு!
ஜனநாயகத்தை காக்க - மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள்.
பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தர இருப்பதே இந்த நட்புதான்.
பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது!
அதனால்தான் இந்த வெற்றியைத் தடுக்க பார்க்கிறார்கள்.
நியாயமாக - முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால், பா.ஜ.க. கூட்டணி தோற்றுவிடும் என்று, மக்களான உங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள்.
65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, ஜனநாயகப் படுகொலை!
சொந்த மண்ணில், பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் இருக்க முடியுமா?
அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும், அவர்களை அட்ரஸ் இல்லாதவர்கள் போன்று ஆக்குவது அழித்தொழிப்புதானே?
சகோதரர்கள் ராகுலும் - தேஜஸ்வீயும் பெற இருக்கும் வெற்றியை தடுக்க முடியாத பா.ஜ.க., கொல்லைப்புற வழியாக இந்த வேலையைப் பார்க்கிறது.
இதற்கு எதிராக என்னுடைய சகோதரர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தை வாழ்த்துவதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.
அதிலும் குறிப்பாக, ராகுல் காந்தி அவர்கள், தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடிகளையும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தால், முறையான ஒரு பதிலைக்கூட சொல்ல முடியவில்லை!
ஆனால், ராகுல் காந்தி அவர்கள் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்கிறார்.
இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா?
ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும் - கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது!
ராகுல் காந்தி அவர்களைப் பொறுத்தவரைக்கும், சும்மா அரசியலுக்காக - மேடைகளுக்காக பேசுபவர் கிடையாது. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் - மிகுந்த கவனத்துடன் பேசுபவர் அவர்.
இப்போது ஏன் பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள் என்றால், பா.ஜ.க. - தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது
என்று ராகுல்காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில், பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள்.
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க.வின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதைத்தான் பீகாரில் இப்போது கூடியிருக்கும் இந்தக் கூட்டம் எடுத்துக் காட்டுகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்கிருக்கும் பாட்னாவில்தான் விதைத்தோம்.
எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று நினைத்த பா.ஜ.க.வின் கர்வத்தை தகர்த்த இடம்தான் இந்த பீகார்.
400 இடம் என்று கனவு கண்டவர்களை, 240-இல் அடக்கியது இந்தியா கூட்டணி.
மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள், மைனாரிட்டி ஆகிவிட்டார்கள்.
மக்கள் சக்திக்கு முன், எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்று, மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும்
அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே… நீங்கள் இன்றைக்கு இந்தியாவிற்கான வழக்கறிஞராக இருக்கிறீர்கள்.
உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும்!
மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை என்று சகோதரர் தேஜஸ்வீ காட்டிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் இரண்டு பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றிதான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழா கூட்டத்திலும்
நிச்சயமாக -
உறுதியாக நானும்
பங்கேற்பேன்.
நன்றி வணக்கம்
PERIYAKULAM
MUHAMMAD
உரிமையாளர் &
இதழாசிரியர்
1- 207 Perumalpuram
Periyakulam 625 601
Theni Dt.
Cell 90 80 92 50 62
THANGANILAA
DOT COM
இணைய வாரஇதழ்

































































Comments
Post a Comment