Skip to main content

THANGANILAA DOT COM

   இணைய வாரஇதழ்

 Year 5 Week 39

24 08 2025

பெரியகுளம்முகம்மது

இதழாசிரியர்


சாதி சண்டை வேண்டாம்.
ஒற்றுமையே உயர்வு தரும்


Permpidugu Perunchenai


சமூக (சாதி) நல்லிணக்கமே
சமூக முன்னேற்திற்கு உதவும்.


-
சித்தன் சிவமாரி-

எல்லா சமூகத்தினரும் (சாதியினரும்)
அவசியம் சிந்திக்க வேண்டிய கருத்து
- தங்கநிலா.


பெரும்பான்மை
சமூகமாக இருந்தும், 

என் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை 

கூட நம்ம சாதிக்காரன் பிற சாதிக்காரன அடிச்சு கலவரமானதா நான் கேள்விப்பட்டதே இல்ல 😏

குறிப்பா நமது சமூக தலைவர்கள் இது வகையில் இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதில்லை.

தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு பிற சமூக பையனோடு வரலாற்று ரீதியில் பிரச்சினை ஏற்பட்டது.

சமூக தலைவர்களிடம் நான் முறையிட்ட போது,
அவர்கள் சொன்னதுதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

அவர்கள் என்னிடம் கேட்டார்கள்,
நீ ஏன் அவனுங்ககிட்ட பழக்கம் வச்சிக்கிற
என்று,

நான் அவர்களுடன் உறவாடவில்லை, வரலாறு திருட்டைத்தான் தட்டிக்கேட்டேன்,

அதற்காக எனக்கு துணைநிற்க வேண்டிய சமுதாய தலைவர்கள் யாரும் எனக்கு துணையாக நிற்கவில்லை,

இது இந்த சமூகத்திற்கு பிடித்த பீடை 😏

சாதி சாதினு போய் வாழ்க்கையை இழக்காமல்,

அக்கம் பக்கத்து பிறசாதி நண்பர்களை பகைத்துக்கொண்டு,
பொருளாதாரத்தையும் இழந்து,

சாதியிலும் முன்னேற்றம் இல்லாமல்

மன உலைச்சலுக்கு ஆளாகாமல், சுய புத்தியோடு சுய பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள் இளைஞர்களே,

சாதிக்காரன நம்புனா நீ நடுத்தெருவுல தான் நிற்கவேண்டும்

இதை என்னோட அனுபவத்தில்
இருந்து சொல்கிறேன் 😏

குறிப்பு:
ஊர் சம்மந்தமான பிரச்சினைகளில் முதலில் வெளியூர் நபர்களை
அனுமதிக்காதீர்கள்

நீங்கள் வீரியத்துடன் போராடினாலும் உங்களை மூலைச்சலவை செய்து அந்த வீரியத்தை குறைத்து அந்த பிரச்சினையையே மடைமாற்றி விடுவார்கள்...

அல்லது,
உங்களை வைத்து எந்த வகையில் லாபமடையலாம் என யோசிப்பார்கள்.

கடைசிவரைக்கும் தீர்வு மட்டும் எட்டப்படாது....

அல்லது,


தேவையே இல்லாமல் நண்பர்களாக ஒரே ஊரில் வாழ்ந்து வரும் பிற சமூக மக்களோடு

ஒரு சின்ன பிரச்சினைக்காக
தீர்க்கவே முடியாத பகையை உண்டாக்கிவிட்டு

அவர்கள் அடுத்த ஊரில் கலவரத்தை தூண்டிவிட போய்விடுவார்கள்...

முடிவாக ! முடிஞ்சவரைக்கும் உன்னோட பிரச்சினைய நீயே தீர்க்கப்பாரு,

என்ன பிரச்சினையாக இருந்தாலும் சட்டப்படி அணுகி தீர்வைப்பெறு,

கண்டவனையும் நம்பி நட்டாத்துல மாட்டிக்காதே.

அவ்ளோதான்...



Vignesh Msd



நேற்று அதிபர் மரத்தை முத்தமிட்டதால் வந்த இன்றைய விளைவு...😃😃🤣

யாரோ ஒரு அரசியல் தலைவரை சாடையாகச் சொல்வதுபோல் இருக்கிறது.

- தங்கநிலா


வெற்றி வீரன் யாதவ்

#இடைச்சியின் முந்தானைக்கு கட்டுபடுவது இடையன் மட்டுமல்ல...😍

#இடையர்களின் காளையும் தான்....❤️



இது போன்ற செயல்பாடுகள்
தான் சமூகத்தை முன்னேற்றும்
.

- தங்கநிலா

C T AsrafAli Ulavi

கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி உதவி விழா, சுமார் 150 மாணவர்கள்
ரூ 8 லட்சம் உதவி இறையருளால் பெற்றனர்.

உதவி பெற்று பல பணிகளில் சேர்ந்த மாணவர்களும் உதவி வருகின்றனர்.

TNPSC, UPSC தேர்வுகளில் சாதிக் IAS அகடமி உதவி வருகிறது.

கிருஷ்ணகிரி KITE அறக்கட்டளையும் எமது சமூக கல்வி, பொருளாதார மேம்பாட்டு (SEED) அறக்கட்டளையும் இணைந்து பல ஆண்டுகளாக நடத்தி வரும் நிகழ்ச்சியில்,

நீதியரசர் அக்பர் அலி அவர்களுடன் எமது கல்லூரி தோழர் அப்துல் கரீமும் கலந்து கொண்டார்..

கல்வி, பொருளாதார வளர்ச்சி பெறாத எந்த சமுதாயமும் சமூக, அரசியல் அந்தஸ்தை பெற முடியாது என்பதை தலைவர்கள், ஆலிம்கள்,அமைப்புகள் அறிய வேண்டும் .

18 ஆண்டுகளாக பல மாவட்டங்களில் பல கோடி, கல்வி உதவி அந்தந்த மாவட்ட அமைப்பகளுடன் வழங்கி வருகிறோம்.

பிற மாவட்ட ஐக்கிய ஜமாத்கள், மாவட்ட உலமாசபை, மாவட்ட பைத்துல்மால் உள்ளிட்ட அமைப்புகள் மாவட்ட அளவில் கல்வி உதவி தர சதக்கா , நன்கொடை வசூல் செய்து ஒரு தொகையை திரட்டினால்,

SEED அறக்கட்டளை ஒரு பகுதி உதவி ஊக்கத்தொகையாக தரும்.

இணைந்து மாவட்டங்களில் கல்வி உதவி வழங்கலாம்.
8778560804.


Aathi Ananth Mct

#மருதம்_கல்வி_
பண்பாட்டு_அறக்கட்டளை கல்வி விருது வழங்கும் விழா- 2025*
====================
உலகையே மாற்றும் மாபெரும் சக்தியாகவும் வாழ்வின் பொக்கிஷமாகவும், இருப்பது கல்வியாகும்.

எவ்வளவு கடினப்பட்டாவது கல்வியை பெற்று விட வேண்டும்.

அதற்காக தொடர்ந்து மாணவ/மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நமது அறக்கட்டளை செயல்படும்.

Pandia Rajakkal Vision

கல்வி வளர்ச்சியே -
எங்கள் இலட்சியம்

தேவேந்திரகுலவேளாளர் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் (சாத்தூர்).

பயிற்சி மையம் திறப்பு விழா அழைப்பிதழ்

நாள் 20:08:2025

வாழ்த்துக்கள் 🏆 ❤️

#விருதுநகர் #சாத்தூர்


Ethearal Earth


மரத்தை மின்னல் தாக்கும் காட்சி


KPK Mahindra


பிரபல ஏழுத்தாளர்
பெரியகுளம்

சித்ரா சிவன்

பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சித்ரா சிவன்.

சித்ரா சிவன் கல்கி, விகடன், மங்கையர்மலர், தமிழ்வெளி, வாசகசாலை 'புரவி' இலக்கிய இதழ், படைப்பு தகவு இதழ், ராணி வார இதழ், தினமலர் வாரமலர், சிற்றுளி கலை இலக்கிய இதழ் ஆகியவற்றில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதியுள்ளார்.

இவ்விதழ்களில் தமிழ் எழுத்தாளர்களை இவர் எடுத்த நேர்காணல்கள் வெளியாகியுள்ளன.

சித்ரா சிவன் பெரியகுளத்தில் ரா.சேகர், கண்ணகிசெல்வி இணையருக்கு ஆகஸ்ட் 13, 1983-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர், ஒரு சகோதரி.

சித்ரா சிவன் பெரியகுளத்திலுள்ள ஹமீதியா நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். தேனியிலுள்ள நாடார் சரஸ்வதி பெண்கள் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

கே.ஏ.எஸ் மாண்டிசோரி கல்லூரியில் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பை முடித்தார்.

சித்ரா சிவன், கி.சிவனை டிசம்பர்

1, 2005-இல் திருமணம் செய்து கொண்டார்.

கணவர் சிவன் தலைமை சமையல் கலை வல்லுநராக அமெரிக்கா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணி புரிந்து

பின்னர் தன் சொந்த ஊரில் விவசாயத் தொழிலை செய்கிறார்.

சித்ரா சிவன் இணையருக்கு மகள் ஸ்ரீநிதி, மகன் ஸ்ரீகுகன் என இரு குழந்தைகள்.

மகள் ஸ்ரீநிதி கல்லூரியில் பொறியியல் படிக்கிறார்.

மகன் ஸ்ரீகுகன் பள்ளிக்கல்வி படிக்கிறார்.

சித்ரா சிவன் எழுதி அச்சில் வந்த முதல் கவிதை தினமலர் வாரமலரில் வெளியானது.

அச்சில் வந்த முதல் சிறுகதை 'அதிரூபன்' தமிழ்வெளி கலை இலக்கிய இதழிலில் வெளியானது.

அச்சில் வந்த முதல் நேர்காணல், கல்கி வார இதழுக்காக பாவைக்கூத்து கலைஞரை எடுத்தது.

சித்ரா சிவன் எழுதி நான்கு நூல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு கவிதை தொகுப்புகள், ஒரு நேர்காணல் தொகுப்பு, மற்றும் ஒரு நாவல்.

'ஆதிலா' கவிதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் மூலமாக 2022-இல் வெளியானது.

'ஒளவையின் கள் குடுவை'

கவிதைத் தொகுப்பு வாசகசாலை பதிப்பகம் மூலமாக வெளியானது.

'பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை.

உண்மை முனங்கினாலே போதும்' என்ற தலைப்பில் இணைய, வார, மாத இதழ்களில் வெளியான சித்ரா சிவன் எடுத்த 12 எழுத்தாளர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பும் வெளியாகியுள்ளது.

இவர் எழுதிய அத்தினி நாவல் ஸீரோடிகிரி பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.

சித்ரா சிவனின் கவிதை நூல்கள் 'அம்முராகவ்' என்ற புனைப்பெயரில் வெளியாயின.

சித்ரா சிவன் தன் ஆதர்ச எழுத்தாளர்களாக

தி.ஜானகிராமன், ஜெயமோகன், அ. முத்துலிங்கம், தமிழ்நதி ஆகியோரையும், கவிஞர்களில் இளம்பிறை, கலாப்ரியா ஆகியோரையும்,

இதழியல் துறையில் தனது ஆதர்சமாக கல்கி வார இதழின் தலைமை உதவி ஆசிரியரான எழுத்தாளர் அமிர்தம் சூர்யா மற்றும் தினமலர் செய்தி ஆசிரியர் சேதுநாகராஜன் ஆகியோரையும் சொல்கிறார்.

சித்ரா சிவன் 'சிற்றுளி' காலாண்டிதழின் உதவி ஆசிரியராக உள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பெண்கள் கிளையின் தேனி மாவட்டத் தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.

வாழ்க பன்னெடுங்காலம் அம்மையாரும் அவர்தம்  தமிழ்த் 
தொண்டும்.

வாழ்த்துவது
-
தங்கநிலா
இணைய
வார இதழ்


போடி வட்டாரச் செயலாளர் தேர்வு

தேனி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின்
போடிநாயக்கனூர்
வட்டாரச் செயலாளராக

மௌலவி ஹாபிழ் ஷேக் முஹ்யித்தீன் யூசுபி பாஜில்
காசிமி

ஹஜ்ரத் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

பணி சிறக்க வாழ்த்துக்கள் 
தங்கநிலா

படத்தில் இடமிருந்து வலமாக மூன்றாவதாக நிற்பது ஹஜ்ரத் அவர்கள்.

முதலாவதாக நிற்பது
தங்கநிலா இதழாசிரியர்
போடி வட்டார சபை உறுப்பினர்.




Today Special Colendar

Suresh Pargunan


பகுத்தறிவு தென்றல்

Abdul Nasar


#Tipu😳 Sultan🇮🇳🇮🇳🇮🇳

Akactormm1


Bakrudeen Bakrudeen



TNMedia 24×7

Pandian Vision

தேவேந்திர குல வேளாளர்களை
SC பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 24 நடைபெறும் மாநில மாநாட்டிற்கு

தென்னிந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சியின் தலைவர் திரு.திருமாறன் ஜீ அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.



எது சரி

கலா வாணி

களவாணி

பாண்டிய நிலா


kaja Sharif ASM


Aluteen Aluteen



Dr.K Krishnasamy

கள் மற்றும் மது போதையிலிருந்து விடுதலை கோரி மாபெரும் மகளிர் மாநாடு புதிய தமிழகம் கட்சி சார்பாக திருச்சியில் இன்று நடைபெற்றது.


Bakrudeen Bakrudeen


குய்யோ மொய்யோ என்று கத்தும்

நாய்க்கு ஆதரவாளர்களே!

கல்வி சுகாதாரம் அனைத்திலும் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாடு நாய்க்கடியிலும் முன்னிலையில் இருக்க வேண்டுமா

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கடித்து அச்சுறுத்தி பயமுறுத்தும் நாய் கூட்டத்திற்கு ஆதரவானவர்கள் நாயை விட மனிதர்களே மேலானவர்கள் என்பதை அவர்கள் உணர மாட்டார்கள்

நாயை விட மனிதர்களே முக்கியமானவர்கள் என்று அவர்கள் உணர்ந்து இருந்தால்

கால்நடை மாட்டு இறைச்சியை விட விட மனிதனின் உயிரே மேன்மையானது என்று
அவர்கள் உணர்ந்து இருப்பார்கள்

நாய்க்காக பரிந்துரைப்பவர்கள் எத்தனை ஏழைகளுக்கு உணவளித்து இருக்கிறார்கள்

எத்தனை ஏழை மாணவர்களின் கல்வியை இவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்

எத்தனை முறை ரத்ததானம் செய்திருக்கிறார்கள்.

வேலியே பயிரை மேயக்கூடாது அப்படித்தான் நாய்களின் வரம்பு மீறலும் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளன

பயிரை பாதுகாக்க களையெடுப்பதில் தவறொன்றும் இல்லை என்னதான் கலை எடுத்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்

இருந்தால் பரவாயில்லை
பயிர் முழுவதும் இருந்தால் கலையெடுப்பதே மனித அறிவு

AsiaVilleTamil

நாய்களும் நாமும்


Ajmal 
Aalim

Tamilan


நாய் வளர்ப்பதை தங்களது கௌரவமாக நினைத்து தங்களுக்கும் பிறருக்கும் உயிராபத்தை விளைவிப்போர் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு இது.

தஞ்சை மருத்துவர் Dr.சுந்தர்ராஜன் சொக்கலிங்கம். MBBS., M.D., அவர்கள் விவரிக்கும் இந்த பயங்கரத்தை படிப்பீர் பகிர்வீர்.

இதுவரை இந்த மருத்துவ பணியில் எவ்வளவோ மனித இறப்புகளை நேராக
பார்த்ததுண்டு .

ஆனால் கடந்த வாரம் பணியின் போது கண்கூடாக கண்ட ஒரு மரணம் என்னை இரண்டு நாட்களாக தூங்க விடவில்லை.

அந்த நோயாளி அவர்கள் வீட்டில் வளர்க்கபட்ட ஒரு அல்ஷேசன் வகை நாயால் உணவு தரும் போது எதேட்சையாக கடிக்க பட்டிருக்கிறார்.

40 வயது பெண் ஆகிய அந்த நோயாளி மூன்று பெண்களுக்கு தாய் ! அவரது கணவர் தஞ்சை வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறவர் .!!

அந்த நாய்க்கு எல்லா வகை தடுப்பூசிகளும் முறையாக போடப்பட்டிருக்கிறது.

40 நாட்களுக்கு முன்பு அவர் அந்த வளர்த்த நாயால் எதேட்சையாக கடிக்கப்பட்டு ,அவருக்கு தடுப்பூசியும் முறையாக போடப்பட்டிருக்கிறது.

இருப்பினும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள் நோயாளியாக கடந்த செவ்வாய் அன்று ரேபிஸ் அறிகுறிகளோடு அவர் அனுமதிக்கபட்டு எனது பணியின் போது
மரணமடைந்தார் .

தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எல்லா சிகிச்சைகளும் கொடுக்கபட்டிருந்தன.

அவரது குழந்தைகள் கணவர் முன்னிலையில் முழு சுய நினைவோடு அவர் இறந்த அந்த இரவும் ,அந்த குடும்பமே கதறிய சோகமும் என்னை பெரிதும் பாதித்தது.

அதுவும் இறப்பிற்கு பின் அவரது உடல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட போது அவரது மூன்று மகள்களும் கதறி அழுதது இன்றும் என் கண்களில்.

வாழ்க்கையில் இந்த மாதிரியான இறப்புகள் என்றும்,யாருக்கும் நிகழக் கூடாது.

எனது ஒரத்தநாடு கால்நடைமருத்துவ கல்லூரி பேராசிரிய நண்பரிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"எல்லா நாய்களின் உமிழ்நீரிலும் #ரேபிஸ் உண்டாக்கும் வைரஸ் 10 சதவீதம் கட்டாயம் இருக்கும்.

அவைகளுக்கு முழு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் "

இந்த தகவல் என்னை முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

என் பிரிய நண்பர்களே இனிமேலாவது வீட்டில் வளர்க்கும் நாயிடம் கவனமாக இருங்கள் அல்லது நாய் வளர்க்காதீர்கள்

ஏனேனில் எவ்வளவோ சிகிச்சைகள் வந்து விட்டாலும் ரேபீஸ் வந்து விட்டால் மரணம் நிச்சயம் .( mortality is 99.9percentage)

இந்த வாரம் என்னை பாதித்த இந்த மரணத்தின் தாக்கம் மறைய நாட்கள் நிறைய ஆகும் போலிருக்கிறது.

முடிந்த வரை நாய்கள் வளர்ப்பதை உங்கள் வீட்டில் மட்டுமல்ல பக்கத்து வீடுகளில் கூட கண்டிப்பாக தவிர்க்கவும் தடுக்கவும் செய்வீர்..

*தஞ்சை மருத்துவர் Dr.சுந்தர்ராஜன் சொக்கலிங்கம்., MBBS., M.D., அவர்களின் இந்த எச்சரிக்கை பதிவை உடனடியாக அனைவருக்கும் பகிர்வீர்.*



SDPI பெரியகுளம்

பெரியகுளம் நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நகரத் தலைவர் மீரான் அவர்கள் தலைமையில் 

அரசு பேருந்து பணிமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலை துறையிடமும், 

தெரு நாய்களையும் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளையும் கட்டுப்படுத்த கோரி நகராட்சி அலுவலரிடமும் மனுக்கள் வழங்கப்பட்டது.

மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

பெரியகுளம் நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர் .


Jafna Muslims


நபிகளாரை அறிமுகப்படுத்துகின்ற நோக்கோடு 

கர்நாடக ஜமாஅத் இன்ஷா அல்லாஹ் வருகின்ற செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 10 வரையில் மாநில அளவில் 


‘நீதிக்காகப் போராடிய நபிகளார்(ஸல்)’ 

என்கிற தலைப்பில் பரப்புரை நடத்த இருக்கின்றது. 

இதற்கான லோகோ-வை மாநிலத் தலைவர் டாக்டர் சஆத் பெல்காமி வெளியிட்டிருக்கின்றார்.

இன்றையக் கொந்தளிப்பான நாள்களில் நீதிதான் மிகப் பெரும் தேவையாக, எட்டாக் கனியாக, தூரத்து வானவில்லாக இருக்கின்றது.

 
நபிகளாரின் ஒட்டுமொத்த வாழ்வும் நீதிக்காக, நீதியை நிலைநிறுத்துவதற்காக, வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நீதியை செழித்தோங்கச் செய்வதற்காகவே அமைந்திருந்தது.

இந்தப் பின்னணியில் நபிகளாரின் நீதி தொடர்பான பரிமாணத்தை எடுப்பாக எடுத்துரைத்து பரப்புரையைக் கட்டமைத்திருப்பது பாராட்டத்தக்கது.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

Azeez Luthfullah

நவீன நாடோடி


து ராஜா

எத்தனை தடை போட்டாலும், குலத் தொழிலை கைவிட மாட்டோம்..” -

ஆட்சியர் அலுவலகத்தில் மனு!


தொடர்ந்து, பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த கவிதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது,

“கடந்த 17-ம் தேதி நாட்டார்மங்கலம் கிராமத்தில் கள் படையல் திருவிழா நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், 

அன்றைய தினமே நாங்கள் கச்சிராயப்பாளையத்தில் உள்ள எங்கள் சொந்த நிலத்தில் கள் படையல் திருவிழா நடத்தினோம்.

அப்போது, நாங்கள் கையில் வைத்திருந்த பனைப் பொருட்களை காவல்துறையினர் பிடுங்கி, பெண்கள் என்று பாராமல் எங்களைக் கீழே தள்ளிவிட்டனர்.


இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டோம்.

அப்போது, காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், கள் படையல் திருவிழா நடத்த அனுமதி இல்லை என்றும் ஆட்சியர் கூறினார்.

இதையடுத்து, கள் படையல் திருவிழா நடத்தலாம் என்ற சட்ட விதிகளை நாங்கள் அவரிடம் எடுத்துச் சொன்னோம்.

எத்தனை தடைகள் விதித்தாலும், எங்கள் குலத்தொழிலை நாங்கள் கைவிட மாட்டோம். 

கள் படையல் திருவிழாவை நாங்கள் நடத்தியே தீருவோம்.

எங்கள் சொந்த நிலத்தில் உள்ள பனை மரத்திலும், தென்னை மரத்திலும் நாங்கள் கள் இறக்குவோம்.

அதை யாராவது தடுத்தால், அதை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்,” 

Ellorum Nammudan



உதயதாரகை நாபிஸ்கா

கொழும்பு நகரில் வீற்றிருக்கும் புகழ்பெற்ற கட்டிடக்கலையுடன் வடிவமைப்பு செய்யப்பட்ட  பள்ளிவாசல் 
கொழும்பு நகரிலிருந்து... உதய தாரகை.


Musthafa Cdm


Abrar Hajrat


16-08-2025 அன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பெரிய பள்ளிவாசலில் கமுதி முதுகுளத்தூர் வட்டார உலமாக்கள் உமராக்கள் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

அதில் தொகுப்பாளராய் தொகுத்து வழங்கி நிகழ்ச்சியை இறைவனின் அருளால் சிறப்பித்த பொழுது சமூக ஆர்வலர் மாவட்ட ஆய்வாளர் எம் ஏ ஆலிம்


அரக்கர் கூட்டம்


“ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால் அவனுடைய விரோதியைப் பாருங்கள்:

நண்பர்களை அல்ல. ஏனெனில் நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்.

அதனால் எவனும் வீரனாகி விடமாட்டான்.

கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும் உண்மையான தொண்டனுமாவான்’’
- தந்தை பெரியார்


பகுத்தறிவு தென்றல்

Pandiar Vison

அழகிய கிராமம்.
#தென்காசி #ஆசாத்நகர்.

Samyam Tamil



மேலானூர் திமுக



ஆதரிப்போம்
விவசாயம்.


Mohamed Siyam


குணாளன் சேனைப்படை

அல்அஸ்ஹரில் விழா






இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி
அல் அஸ்கர் தொடக்க பள்ளியில் 79- வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த ,

அன்பு நண்பர். சண்முகநாதன் . வழக்கறிஞர் மதுரை உயர்நீதிமன்றம்.

அவர்களுக்கு என் சார்பாகவும் , பள்ளி நிர்வாகம் கமிட்டி சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அல்அஸ்ஹர் பள்ளி

தங்கநிலா இதழாசிரியர் பெரியகுளம் முகம்மது 25ஆண்டுகளாக
ஆசிரியராகப் பணிபுரிந்த பள்ளி
.

Muthupandi



Haja Gani


தொண்டி..
இலக்கியத் திசையில் இஸ்லாமிய மாணவியர்..
---------------
தொண்டி அஹ்லுஸ் ஸுன்னா மகளிர் கல்லூரியில்
15.8.2025 விடுதலை நாளை முன்னிட்டு இலக்கியப் படைப்பாக்கப் பயிலரங்கம் இனிதே நடைபெற்றது.

'விடுதலையின் வேர்கள்' என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் வாக்கு திருட்டு குறித்து கட்டுரை போட்டியும் நடத்தப்பட்டன.

மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு இப்போட்டிகளில் பங்கேற்று தங்கள் படைப்புகளை வழங்கினர்.

பேரா.தொண்டியம்மாள் போட்டிகளை ஒருங்கிணைத்தார்
.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .எல்லோருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மார்க்க அறிஞரும் கல்லூரி தாளாளருமான
முனைவர் முஜிபுர் ரஹ்மான் உமரி இலக்கியம் குறித்த இஸ்லாமிய நிலைப்பாடுகளை தொடக்க உரையில் எடுத்துரைத்தார்.

கவிதை, கட்டுரை படைப்பாக்கத் திறன் குறித்த வகுப்பை பேராசிரியர் முனைவர் ஜெ.ஹாஜாகனி நடத்தினார்.

இந்நிகழ்வில் இந்திய நல்வாழ்வு பேரவை ஜித்தா மண்டலத் தலைவரும் மக்கா தமிழ் சங்க நிர்வாகியுமான பொறியாளர் கீழை
இர்ஃபான்
மதீனா சிராஜ் மரைக்காயர் மற்றும் பொறியாளர் அபுபக்கர் ஜலீல் ஆலிம் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு தங்களுடைய படைப்பாக்க திறன்களை வெளிப்படுத்தினர். முன்னதாக பெண்கள்
பணிக்குச் செல்வது குடும்பத்திற்கு நல்லதா.? என்ற தலைப்பிலான விவாத மன்றம் நடைபெற்றது.

புதிய திசைகள் நோக்கிச் சிறகு விரிக்கும்
இந்தக் கல்வி பறவைகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.


Kannaginagar Kabadikulu

பகுத்தறிவு தென்றல்


Babu Kingston Manuel


சக்திவேல் வடலூர்


DW TAMIL


வாழைநாரில் மாதம் 

ரூ.7 லட்சம்” -

பீடி சுற்றிய பெண்களுக்கு இலாபம் அள்ளித் தரும்

‘Thirumathi Banana Fiber’

திருநெல்வேலி மாவட்டம் கொடுங்கநல்லூர் கிராமத்தில் பீடி
தொழிலில் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருந்த பெண்களுக்கு வாழை நார் மூலம் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.

'திருமதி' நிறுவனத்தில் வாழை நார் மூலம் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்து, மாதம் ரூ.20,000 வரை பெண்கள் வருமானம் ஈட்டுகின்றனர்.





Newsfirst.LK Tamil

Peer Mohamed


Peer Mohamed


தேவா

பகுத்தறிவு தென்றல்


Tamil Saaga Singapore


தமிழ்நாடும் அரசியலும்


Trending vlogs

Al Ramnad


Venkatesh thivya
பகுத் அச்சா ஜி....



Mohamed Farhan


"இஸ்ரேல்" காசாவில் தனது போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், ஒரு பாலஸ்தீன அரசு அதன் தலைநகரான கிழக்கு ஜெருசலேமை நிறுவ வேண்டும், பின்னர் நாம் இயல்பாக்கம் பற்றி பேசுகிறோம்.


Abdul Nasar

Tamil Trending Vedio

Ahamed Fasith


அரக்கர் சட்டகூட்டம்


Ramya


தேவா

அரசியல் சட்டம் உருவாகும் முன்னர், இந்தியாவின் கடுமையான, சோகமான நிஜம் இதுதான்—ஒரு உயர்ந்த சாதி ஹிந்து பெண், கீழ் சாதிய பெண்ணுக்கு தண்ணீரை நேராகக் கொடுக்காமல், தூரத்தில் இருந்து மூங்கில் குழாயின் வழியாகத்தான் ஊற்றி கொடுத்தாள்.

இதன் காரணமாகத்தான் பல சட்டங்கள் கீழ்
சாதியினருக்காக இயற்றப்பட்டது.

இப்படிப்பட்ட சட்டங்கள் மூலமாகத்தான் கீழ் சாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் இன்றைக்கு ஓரளவு உயர்ந்திருக்கின்றனர்.

Comment
ஆனால்
சங்கராச்சாரியார்களும்

குருக்களும்
சூத்திரனிடம் தூக்கித்தானே போடுகிறார்கள்
சட்டம் அங்கும்தானே வேலை செய்ய மறுக்கிறது.



Kagitha Kathalan


வீர அறிவொளி

வி சி  க


Sm.Hithayathullah

தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு மற்றும் மனித உரிமைகள் பிரிவு கூட்டங்கள்.


Sm Hithayathulla

பெரும்பாலான வழிகாட்டிகள், சமுதாய தலைவர்கள், கல்வி , பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிகாட்டாது,

வழிகாட்டுபவர்களுக்கு எதிராக இருப்பதால் சமுதாயம் அரசியல் உரிமை பெறுவதிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.


உணர்ச்சி ஊட்டும் மாநாடுகள், இறைவனே பாதுகாக்கும் ஷரியத்தை தாங்களே பாதுகாப்பாதாக கூறும் கூட்டங்கள்,மட்டுமே சமுதாயத்தை முன்னேற்றிவிடாதுஎன்பதை உணர்ந்து

பலநூறு கோடி போலி நிதிநிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தது போதும், 

இனியாவது நபி ஸல் கூறிய கூட்டு முதலீடுகள் மூலமாக அந்தந்த ஊர், வட்டாரங்களில் முதலீடு செய்து, ஒற்றுமை உணர்வு மூலம் கண் முன்னே, வெற்றி காண்போம்.

உதாரணம் துறையூர் வட்டத்தில் சில நூறு பங்குதார்கள் ( SHARES) நிலம் வாங்கி, மண்டபம், பள்ளி கட்டி, சில வருடங்களில் பல மடங்கு முதலீடு உயர்ந்து, 

ஆண்டு தோறும் லாபம் ( DIVIDEND) பெறுவது போல ஒவ்வொரு பகுதியும் முன்னேறுவோமா?

கடந்த ஆண்டு Share Certificates, Dividends வழங்கி வழிகாட்டியது போல இந்த ஆண்டு இறுதியில் கூட்டத்திலும் இறையருளால் கலந்து கொள்கிறேன்.

இத்தகைய முதலீடு சம்பந்தமான மேல் விபரங்களை 

தங்கநிலாவுக்கு அனுப்பி  வைத்தால் மற்ற ஊர் ஐமாஅத்தார்களும்

தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

- தங்கநிலா

ஒரு ஊரில் ஒரு ராஜா !

ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது.

அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும்.

ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!

ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!

மன்னன்
காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்.

இந்த சட்டத்தை யாராலும்
மாற்ற இயலாது.

இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப்
பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால்
அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.

இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனா 
கவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு.

அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது.

அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும்.

அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான்.

மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு
அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்,

''மன்னன் செல்லும் படகா இது!

பெரிய படகைக் கொண்டு வாருங்கள்!

நான் நின்றுகொண்டா செல்வது!

சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன!

சற்று நேரத்தில்
அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே!

காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.

அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான்

''மன்னா! எங்கே செல்கிறீர்கள்
தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''


''அதுவா!

நான் என்ன செய்தேன் தெரியுமா?

ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக்
கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்;

இன்று ஏராளமான தானியங்கள்
காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர்.


இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது.

இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!


சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்!

அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்!

உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே
வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

கருத்து: சூழ்நிலை எதுவாயினும் மனம் தளராமல் சிந்தனை செய்தால் தீர்வு நிச்சயமாக கிடைக்கும்.


திருத்தப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு: தெருநாய்களுக்கே வெற்றி!

டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது.

நாய் ஆர்வலர்கள், நாய் எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வந்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்ற உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு,

திருத்தப்பட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ‘தெருவில் திரியும் நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும்; மீண்டும் தெருக்களில் விடக் கூடாது’ என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அத்துடன், நாய் ஆர்வலர்கள் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க கூடாது, அதற்கென உள்ளாட்சி அமைப்புகளால் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்ற உத்தரவும் பாராட்டுக்குரியதாகும்.

தெரு நாய்களால் கடிபடும் சம்பவங்கள் ஆங்காங்கே ஒன்றிரண்டு நடந்து வருவது வருத்தத்துக்குரியதே.

தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகும் வகையில் சாலைகளில் திரியும் நாய்களுக்கு உணவளிக்க கூடாது என்பதும், மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம்

தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதும் இப்பிரச்சினைக்கான தீர்வாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.


அதை முறையாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தாததே தெருநாய்கள் பெருகிவரும் சம்பவங்களுக்கு அடிப்படை.

உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில், ரேபிஸ் தொற்றுள்ள நாய்கள் மற்றும் ஆபத்து விளைவிக்க வாய்ப்புள்ள நாய்களை காப்பகத்தில் அடைக்கலாம் என்று உத்தரவிட்டிருப்பது மிகவும் நியாயமான, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உத்தரவாகும்.

இந்த வழக்கை டெல்லியோடு நிறுத்தாமல் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தி அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க கேட்டிருப்பதன் மூலம்,

தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று நம்பலாம்.


Govindaraj Selam

இந்தக் கண்டுபிடிப்பை பார்த்து

உலக நாடுகள்  அதிர்ச்சி.

இதை கண்டுபிடித்த விஞ்ஞானியை 

அடுத்த ஆண்டு பிப்ரவரி 30 ம்தேதி

நாசா அழைத்து கவுரவிக்க உள்ளது

இந்த வருடத்தி நோபல் பரிசு கிடைக்கவும் வாய்ப்புள்ளது....🔥


PERIYAKULAM 

MUHAMMAD

உரிமையாளர் & 

இதழாசிரியர்

1- 207 Perumalpuram

Periyakulam 625 601

Theni Dt.

Cell 90 80 92 50 62


THANGANILAA 

DOT COM

   இணைய வாரஇதழ்

 

Comments