தங்கநிலா டாட்காம்
ஒடுக்கப்படுவோரின் உரிமைக்குரல்
உமர் அப்துல்லா
M.K.Stalin
பிறந்தநாள் வாழ்த்துக்கள் J&K National Conference தலைவர் திரு. ஃபாரூக் அப்துல்லா.
காஷ்மீரின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்கு எதிராக போராடும் குரலின் அடையாளமாக அவர் நிற்கிறார்.
அவருக்கு மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
Omar Abdullah
Ilyas Riyaji
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 19.10.2025 அன்று நடைபெற்ற மீலாதுன் நபி, சமூக நல்லிணக்க நிகழ்வில், “நானிலத்தின் நன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்)” நூலை கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் திருவடிக்குடில் சுவாமிகள் அவர்களுக்கு ரஹீமா பதிப்பகம் உரிமையாளர் ஹுசைனுல் ஆபிதீன் வழங்கினார்.
நூலை அறிமுகம் செய்து இல்யாஸ் ரியாஜி உரையாற்றினார்.
சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை இந்நிகழ்வுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.
Peer Mohamed
" *இப்புவியில் நாம் வந்துசெல்வது ஒருமுறைதான். எனவே, நாம் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும்.
அதனை, உடனே நிறைவேற்ற வேண்டும்.
இதனைத் தள்ளிவைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை, ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை*."
- பென்னிகுயிக்- முல்லை பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேயர்.
நினைவலைகள்,
25.10.2024
வெள்ளி.
அம்மாடியோ பார்த்த உடனேயே தெரிது யார் என்று.... தெரிந்தால் சொல்லிற்று போங்க.
அதானே
34 இலட்சம் மொத்தமா இனி எப்போ கிடைக்கும்.
SA Jalaal
Tamil பல்சுவைக் கதம்பம்
KVC Media
ஹிட்லர் ஏன் மூக்கிற்கு கீழே இப்படி மீசை வைத்திருந்தார் தெரியுமா?
மூக்கிற்கு மேல வைக்க முடியாது அதுதான்😂😂
Dr APM Abbas
"தங்கம் சேற்றில் துருப்பிடிக்காது.
இரும்பு அரண்மனைகளில் தங்கமாக மாறாது.
ஆன்மாக்களும் அப்படித்தான்."
Guna Gunasekaran
Kanchi Siva Siva
🔴 ஆண்டாளு கேட்டியா டி கதையைநம்ம அன்புமணி தம்பி ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சரா இருந்தபோது... மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததில் ஊழல்நடந்ததாக சிபிஐ
-வழக்குபோட்டு பதினைந்து வருடங்கள் ஆகின்றது.
இதுவரை எந்த? விசாரணையும் இல்லை...
இதுபோலத்தான் தம்பி ஜோசப் விஜய் சம்மந்தப்பட்ட விசாரணையும் இருக்கும்.
அதுவரை கட்சி இருக்குமோ.? இருக்காதோ.? ஆதவ் அர்ஜூனா. இந்தியாவிலுள்ள எல்லாகட்சிலயும் மெம்பராகி வெளிய வந்துடுவார்.
P Palani Palani
ஜிஎஸ்டி குறைத்த பின்பு ரெண்டு மாதத்தில் மிச்சமான பணத்தில் வாங்கியது.
SA Jalaal
Jaqh Dindugal
Chandran VeerasamyLks Meeran Mohideen
எங்கள் இல்லம் வந்து எங்கள் தாயாருக்கு துஆ செய்து ஆறுதல் கூறிய….
கீழக்கரை தொழில் அதிபர் சீனா தானா செய்யது அப்துல் காதர் வாப்பா அவர்களுடன....
எங்கள் தாய் மாமா SMS ஹமீது மற்றும் என் தம்பி LKS கல்வத் பீர் முகம்மது உடன்….
Allaudeen
Sustin Jus
பெரிய பெரிய கிளப்களில் பயிற்சி எடுத்து கொண்டு .அவர்கள் வேளா வேளைக்கு அட்டவனை போட்டு கொடுக்கும் புரத சத்து மிகுந்த உணவை உட்கொண்டு மேலே வருவது எல்லாம் பெரிய விஷயமே இல்ல சார்,
நாலு இட்லியை சாப்பிட்டு விட்டு பூங்கா ஓரமாக கிடைக்கும் காலி இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் வெறும் கால்களில் ஆடி பயிற்சி எடுத்து இந்த இடத்திற்க்கு வந்தது பெரிய விஷயம் சார்.
#கார்த்திகா
குறிப்பு..முதல் மூன்று லீக் போட்டிகளில் இலங்கை,பங்களாதேஷ் உட்பட மூன்று நாடுகளை பெரும் புள்ளி வித்தியாசத்த்ல் பந்தாடி இருக்கிறது .
கார்த்திகாவை துனை கேப்டனாக கொண்ட இந்திய அணி..
KVC Media
Arsts AndbEntertinement
Anika
Being Tamizhan
இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும்.
மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் அப்துல்லா இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார். அவரது மறைவுக்குப் பிறகு, இது மூன்றாவது தலைமுறை.
மறைந்த டாக்டர் அப்துல்லாவுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர் டாக்டர் செய்யதா, மகப்பேறு மருத்துவா், பாபு அப்துல்லா பொது மருத்துவர், அவரது மனைவி சுல்தானா மகப்பேறு மருத்துவர்,
சின்னதுரை அப்துல்லா ரேடியாலஜி மருத்துவர், அவர் மனைவி பாத்திமா மகப்பேறு மருத்துவர். இவர்களின் வாரிசுகளும் மருத்துவர்களே.
இவர்களின் குடும்பத்தில் தற்போது 20 மருத்துவர்கள் பிராக்டீஸ் செய்துவருகிறார்கள்.
மருத்துவத்தை சேவையாகத் தன் தந்தை தொடங்கிய கதையைச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா.
“சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என் அப்பா. கஷ்டமான சூழலில், அவரின் தாயார் செய்யதம்மாள்தான் படிக்கவைத்தார்.
பத்தாம் வகுப்புக்கு மேல் வீட்டின் சூழ்நிலை படிக்கவிடாமல் தடுக்க, வேலைக்குப் போனார். அவரது ஆசிரியர் ராமகிருஷ்ண அய்யர்தான் வற்புறுத்தி, அப்பாவைப் படிப்பைத் தொடரவைத்தார்.
நன்றாகப் படித்து, ‘சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி’யில், பெஸ்ட் அவுட்ஸ்டாண்டிங் மாணவனாக வந்தார்.
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில், ஹானரி டாக்டராக முதலில் பணியாற்றினார்.
பிறகு, தாயாரின் பெயரில் செய்யதம்மாள் மருத்துவமனையைச் சிறிய அளவில் ஆரம்பித்தார்.
எங்களுடைய மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால், குறைந்த செலவில் எல்லோருக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்பட்டார்.
அவரைப் பார்த்துதான் எங்களுக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. என் தம்பி, தங்கை இருவரும் டாக்டர் இல்லை.
ஆனால், எல்லோரும் ஒரே வீட்டில் இருந்ததால், அவர்களின் பிள்ளைகள் இன்று டாக்டர்களாகிவிட்டார்கள். சிலர், எங்கள் மருத்துவமனையிலும், சிலர், வெளியூர் மருத்துவமனைகளிலும் பிராக்டீஸ் செய்கிறார்கள்.
அவர்கள் திருமணம் செய்துகொண்டவர்களும் டாக்டர்கள்தான். மொத்தமாக எங்கள் வீட்டில் இப்போது 20 டாக்டர்கள்.’’ என்று பெருமிதமாகச் சொன்னார்.
ஒரு பழமையான மரத்தை வெட்டுவதற்கு, அரசு நிர்வாகம் முயற்சி எடுத்தபோது, அதில் உள்ள பறவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்திவர் டாக்டர் பாபு அப்துல்லா.
‘‘வீட்டில் எல்லோரும் டாக்டர்கள் என்பதால், வருடத்துக்கு ஒருமுறையோ, ஏதாவது விசேஷத்துக்கோதான் ஒன்று சேர முடிகிறது.
எங்களுக்கு ஓய்வே இல்லை. நாங்கள் வீட்டில் இருந்த நாட்களைவிட, மருத்துவமனையில் இருக்கும் நாட்கள்தான் அதிகம்’’ என்று சிரிக்கிறார் டாக்டர் சுல்தானா.
சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துவரும் இந்த நாட்களில், சுல்தானா டாக்டரிடம் போனால், சுகப்பிரசவம் என நம்பி வருகிறார்கள்.
அவர்கள் நம்பிக்கைக்கேற்ப, சிசேரியன் பிரசவங்களை முடிந்தவரையில் தவிர்த்து, அதிக அளவில் சுகப்பிரசவங்களை நடத்தி, கைராசிக்காரர் எனப் பெயர் வாங்கியிருக்கிறார்.
“ஓய்வே இல்லாமல் மற்றவர்களின் உடல்நலனைக் கவனித்துக் கொள்கிறீர்கள். உங்கள் உடலைக் கவனிக்க நேரம் இருக்கிறதா?”
“காலையில் எழுந்து தோட்டத்தில் உள்ள செடி, மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவேன். வாக்கிங் போவேன். வீட்டுக்குள்ளேயே சிம்பிளான உடற்பயிற்சிகளைச் செய்வேன்.
அதுவே சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போது, பேட்மிண்டன் விளையாடுவேன்.
மேலும், சில விளையாட்டு கிளப்களுக்கும் ஆதரவாகச் செயல்படுகிறோம்” என்கிற பாபு அப்துல்லாவைத் தொடர்ந்தார் தம்பி சின்னத்துரை அப்துல்லா.
“நானும் என் மனைவியும் சேர்ந்து, வீட்டுத் தோட்டத்தில் வாக்கிங் போவோம். சிம்பிளான உடற்பயிற்சிகள் தினமும் செய்வோம். உடற்பயிற்சியைப் போல, உணவுக்கும் அதிக முக்கியத்துவம் தருவோம்.
காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வோம். விசேஷ நாட்களில் மட்டும்தான் அசைவம் சாப்பிடுவோம்.
எங்கள் வீட்டிலேயே எல்லா ஸ்பெஷலிஸ்ட்களும் இருப்பதால், உடலில் ஏதாவது பிரச்னை வந்தால், கன்சல்ட் செய்வோம். உடற்பயிற்சி, சரியான உணவு, மருத்துவ வேலைகளில் பிஸி என இருப்பதால், இதுவரை யாருக்கும் எந்த பெரிய நோயும் வந்தது இல்லை.’’
இந்தக் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை மருத்துவரான ஷாநாஷ் ஃபாருக் அப்துல்லா,
“குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியாது. டி.விகூட அதிகம் பார்ப்பது இல்லை. வீட்டுக்கு வந்தால் உடனே, ஹாஸ்பிட்டலில் இருந்து ‘சீரியஸ் கேஸ்’ னு போன் வரும்.
இந்தப் பரபரப்பிலும், வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எங்கள் வாழ்க்கை மருத்துவத் துறையைச் சார்ந்து இருப்பதால், குடும்பமாகச் சேர்ந்து பேசும் போதுகூட, மருத்துவம் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம்.
ரம்ஜானுக்கு எங்க வீட்டுக்கு வந்து பாருங்க. வீடே ஒரு மருத்துவ மாநாடு மாதிரி இருக்கும்.” என்று சிரிக்கிறார்.
“ராமநாதபுரத்தை மருத்துவ நகரமாக மட்டும் இல்லாமல், கல்வி நகரமாகவும் மாற்ற எங்கள் அப்பா கனவு கண்டார்.
அதை நாங்கள் முடிந்த அளவு நிறைவேற்றிவருகிறோம். கூடுதலாகப் பசுமை நகரமாக்குவதும் எங்கள் குடும்பத்தின் கனவு.
யார் போன் செய்து கேட்டாலும் மரக்கன்றுகளை வழங்கியும், நடுவதற்கு இடம் கொடுத்தால் நட்டுப் பராமரிக்கவும் செய்கிறோம். மருத்துவம் மட்டுமல்ல, மக்களுக்காகச் செய்யும் எல்லா சேவையுமே உயர்வானவைதான்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா.
- செ.சல்மான்
டாக்டர் குடும்பம் தரும் டிப்ஸ்இது வெயில் காலம் என்பதால், காட்டன் உடைகளை அணியுங்கள். உணவில் காரத்தைக் குறைப்பது நல்லது. பழங்கள் அதிகமாகச் சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். செயற்கையான குளிர்பானங்களைத் தவிர்த்திடுங்கள்.
உடல் ஆரோக்கியத்துக்கு, தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி அவசியம். ஒருமணி நேர சிம்பிள் உடற்பயிற்சிகளை வாரம் மூன்று நாட்களாவது செய்யுங்கள். 20 வயதுக்கு மேல் அசைவ உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.
எண்ணெயில் பொரித்த, ஜங் ஃபுட் உணவுகளைத் தொடாதீர்கள். குழந்தைகளுக்குக் காய்கறிகள், கீரைகள், மீன் என சத்தான உணவை, சின்ன வயதிலேயே பழக்கப்படுத்துங்கள்.
உடலில் பிரச்னைவந்தால், சுயமாக மருத்துவம் பார்க்காமல் டாக்டரைப் பாருங்கள்.
சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டாலே, பல நோய்கள் நம்மை அணுகாது. மனதை அலைபாயவிடாமல், ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ளுங்கள்.
புத்தகம் வாசிப்பதிலும், இசை கேட்பதிலும் கவனம் செலுத்தினால், நோ டென்ஷன்!
விதை ஒன்று விருட்சமானது!
ராமநாதபுரத்தின் முதல் டாக்டரான அப்துல்லா, தன் தாய் பெயரிலேயே செய்யதம்மாள் பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார்.
வறுமை, அறியாமை காரணமாக, அந்த காலத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்.
அந்தத் தருணத்தில், டாக்டர் அப்துல்லா, மற்ற ஆசிரியர்களுடன் கிராமம் கிராமமாகச் சென்று, வயல்வேலை, கால்நடை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை, சாப்பாடுபோட்டுப் படிக்கவைப்பதாக உத்தரவாதம் கொடுத்து, மாணவர்களை விடுதியில் தங்கிப்் படிக்கவைத்தார். .
அப்படிப் படித்த மாணவர்களில் இன்று பலர், ஐ.ஏ.எஸ் உட்பட பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
தகவல் உதவி: Adirai Pirai
#பெருந்தலைவர் #காமராஜர், முதல்வராக
இருந்த போது, சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்
என்று #ஜீவா போராடினார்.
அப்போது, தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.
அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்
ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.
திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
என்று கேட்டார்" ஜீவா.
"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா,
"நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
காமராஜரை,
உட்கார வைக்க,
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.
"நீ அடிக்கல் நாட்டிய,
பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்"
என்றார் காமராஜர்.
"காமராஜ்,
நீ முதலமைச்சர்,
நீ திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச
நீ இல்லாம,
நான் எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார், காமராஜர்,
"அப்படின்னா,
நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்"
என்றார் காமராஜர்.
விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.
"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு,
காய வைச்சு,
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,
"ஜீவாவின்
மனைவி படித்தவர்.
அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.
உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.
ஆனா,
நான் கொடுத்தா, அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.
அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி,
"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.
உடனே,
நான் வேலை
போட்டுத் தர்றேன்...
ஆனா,
இந்த விஷயம்
வேறு யாருக்கும்
தெரியக்கூடாது
அவன் முரடன்,
உடனே வேலையை
விட வைச்சுடுவான்
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே
ஜீவாவுக்குத்
தெரியாமல்,
அவருடைய
மனைவிக்கு
அரசு வேலை
கொடுத்தார்
காமராஜர்.
அதற்குப்
பின்னரே
ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.
காமராஜர், ஜீவா
இருவருடைய நட்பும்
வார்த்தைகளால்
வடிக்க முடியாதது.
நோய் வாய்ப்பட்டு
சென்னை அரசு பொது
மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... "காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.
இனி எங்கே
காணமுடியும்..?
இது போன்ற
தலைவர்களை.
அடித்தட்டு
மக்களோடு மக்களாக,
வறுமையை உணர்ந்த,
பகிர்ந்த தலைவர்கள்,
#கர்மவீரர்காமராஜர்,
#ஜீவா,
#கக்கன்
போன்ற தலைவர்கள்.
இதை பகிரலாம்
என்று நினைத்தால்,
செய்யலாமே... !!
நண்பர்களே....!
படித்து பகிர்ந்து
Kumari Tamil
அமுதா IAS
மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். 1994 பேட்ஜ் IAS அதிகாரி. 27 வருட கறைபடியாத பணிக்கு சொந்தக்காரர்.
படிக்கும் போது மூன்று முறை கபாடி போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது கனிமளக் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். அதன் பிறகும் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டே அடக்கியவர்.
தர்மபுரி ஆட்சியராக பணிபுரிந்த போது தன் முத்திரையை பதித்தார்.
2015 ம் வருடம் அலட்சியத்தால் ஏற்பட்ட சென்னை வெள்ள பாதிப்பை தன் திறமையால் கட்டுப் படுத்தினார்.
அப்துல்கலாம் ஜெயலலிதா கலைஞர் ஆகியோரின் இறுதிச் சடங்குகளை அரசு சார்பில் யாதொரு குறையில்லாமல் நடத்தி முடித்தார்.
குறிப்பாக பதட்டமும் பரபரப்பும் நிறைந்த கலைஞரின் இறுதிச்சடங்கை பொறுப்பும் உறுதியும் நிறைந்த ஒரு மகளைப் போல மிக குறைந்த நேரத்தில் சிறு குறையுமின்றி நடத்தி முடித்தார்.
பேராளுமை மிக்க கலைஞர் என்ற மனிதர் ஆற்றிய சமூகப்பணிகளை மனதிற்குள் நிறுத்தி நெகிழ்ந்து தன் இறுதி கைப்பிடி மண்ணை குழிக்குள் போட்ட அந்நொடியில் மக்கள் மனதில் கலைஞரின் வாரிசாகவே தெரிந்தார்.
அவரின் நேர்மை, அறிவுக்கூர்மை, திட்டமிடல், ஆளுமைப்
பண்பு, மக்கள் மீதான அன்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மீளவும் தமிழக பணிக்கு வருவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஊராக வளர்ச்சி துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் வாழ்த்துக்கள் மேடம்.
முகநூல் பதிவு
Mohamed Faizudeen
Sinthanai Selvan
சமூக நீதிக்கான போராட்டத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து, திருநங்கைகள் உரிமைக்காக இடையறாது குரல் கொடுத்து வரும் தோழர் Grace Banu அவர்கள் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள இந்திய அளவிலான ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
#VC
Mohamed Ramseen
KSA Expats
Peer Abdul
ஓரணியில் இஸ்லாமியர்கள் ஒற்றுமை புரட்சி விழிப்புணர்வு மாநாடு அழைப்பு கொடுத்த போது, சபாநாயகர் அப்பாவு அவர்களூடன்.
Muthupettai Darga
#மேன்மக்கள்_மேன்மக்களே
ஒரு நபர் சுல்தானுல் உலமா A.P அபூபக்கர் முஸ்லியார் அவர்களிடம் வந்து நான் சிலருடைய பேச்சுக்களை கேட்டு உங்களை பற்றி அறியாமல் குறை சொல்லி இருக்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என்றாராம்
அப்போது அந்த நபரைப் பார்த்து சிரித்த முகத்தோடு ஷைகுணா சொன்னார்களாம் நீங்கள் என்னைப் பற்றி பேசிய அந்த நொடியே நான் உங்களை பொருத்தப்பட்டு விட்டேன் என்று
தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் இலட்சியத்தை நோக்கிய ஷைகுணாவின் வெற்றி பயணத்தை கண்டு ஷைகுணாவை விமர்சித்த பலரும் ஷைகுணாவின் தலைமையேற்று அவர்களது சேவைகளை செய்து வருகின்றனர்.
யா அல்லாஹ் எங்கள் உஸ்தாத் பெருந்தகை அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆஃபியத்தையும் தந்தருள் புரிவாயாக
✍️ Afzal Ahamed
ஆனால் இவைபற்றி சமூதாயம் பேசாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாக இருக்கிறது.
தமது பிள்ளை ஏதாவதொரு புகழ்பெற்ற பாடசாலையில் படித்தால் அதன் புகழ் மாலையைப் பாடும் அனேகர் நம்மத்தியில் இருக்கிறார்கள்.
தமது பிள்ளை சாதாரண தரத்தில் இஸ்லாம் பாடத்திற்கு பதிலாக வேறொரு மதப் பாடத்தில் சித்தியடைந்து விட்டால் அதுவே ஒரு புகழாக கருதி அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்து தன் பிள்ளையின் பெருமையை உலகறியச் செய்கிறார்கள்.
ஆனால் ஊர்ப் பாடசாலையில் கற்று முன்னேற்றம் கண்டவர்களை வேண்டுமென்றே ஓரம் கட்டுகிறார்கள்.
இவ்வாறான மனக்குமுறல்களை, ஆதங்கங்களை கூற வந்தால் நான் உங்களுக்கு சொல்ல வந்த விடயம் தடம்புரண்டு விடும் என்பதால் விடயத்திற்கு வருகின்றேன்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலைமையை கருத்தில் கொள்ளும் போது காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்களாகவே ஒரு காலத்தில் காணப்பட்டன.
காலி மாவட்டத்தில் மிக குறைந்த வைத்தியர்கள், பொறியிலாளர்கள், சட்டத்தரணிகள், இன்னும் பல பதவிகளுடையவர்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டனர். காலப்போக்கில் அந்த நிலைமை மாறத்தொடங்கின.
வசதி படைத்தவர்கள் காலி வாழ் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைக்க தயாராகினர். அதன் பின்னர் சில மாற்றங்கள் இடம்பெற தொடங்கின.
காலி மாவட்டத்தில் காலி நான்கு கடவைகளில் உள்ள தங்கெதர எனும் கிராமத்தின் ஒரு கோடியில் அமைந்திருந்த தூவ வத்த எனும் குக்கிராமம் மக்களின் கவனத்தை ஈர்க்காத ஒரு இடமாகவே அக்காலத்தில் காணப்பட்டது.
1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காலியில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் கலவரத்தின் போது இந்த சிறிய கிராமத்தில் இருந்த வீடுகள் தீக்கிறையாகின.
அதன் பின்னர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் உதாகம திட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் ஒரு மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு 1984 ஆண்டில் சமகிவத்தகம எனும் பெயரில் திறந்து வைக்கப்பட்டன.
அந்த கிராமத்தில் வசித்த மொஹமட் இர்ஷாத் பாத்திமா ஸஹியா ஆகியோருக்கு மூத்த பிள்ளையாக பிறந்தவர் தான் பாத்திமா ஜிப்ரியா 1986 ஆம் ஆண்டு இவ்வுலகில் அவர் கால்பதிக்கிறார்.
ஜிப்ரிய்யாவின் தந்தை ஒரு மாணிக்கக் கல் வியாபாரி அவரின் தாய் ஒரு ஆசிரியை.
1990 ஆண்டு ஆசிரியராக நியமனம் பெறுகிறார். அவரின் முதல் நியமனம் காலி ஹிரிம்புர ஸுலைமானிய்யா வித்யாலயமாகும்.
தொடர்ந்து 24 வருடங்களாக அப்பாடசாலையிலேயே கடமையாற்றிய ஸஹியா ஆசிரியை அவர்கள் 2014 ஆண்டில் அதிபராக பதவியேற்று 2016 ஆண்டுவரை குறித்த அதே பாடசாலையில் கடமையாற்றுகிறார்.
அதன்பின்னர் கா/ஹாலிவெல முஸ்லிம் வித்யாலயத்திற்கு மாற்றம் பெற்ற அவர் 2018 ஆண்டுவரை அதிபராக கடமை புரிந்தார்.
அவரின் இறுதியான பாடசாலையாக கா/ முஸ்லிம் மகளிர் கல்லூரி அமைந்தது. அங்கிருந்து 2018 ஆண்டு ஓய்வு பெற்றார்.
கடந்த 2024 ஆண்டு அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றாலும் அவரின் பெண் வாரிசுகளின் பெயரால் அவரின் புகழ் இன்றுவரை ஓங்கி ஒலிக்கின்றன.
குடும்பத்தில் முதலில் பிறந்த ஜிப்ரிய்யாவைத் தொடர்ந்து அவரின் வயிற்றில் உருவாகிய நான்கு குழந்தைகளும் பெண் பிள்ளைகளாகவே அமைந்தாலும் இர்ஷாத் தம்பதியினர் ஒரு போதும் மனம் தளரவில்லை.
மூத்த பிள்ளையை தான் கடமையாற்றிய ஸுலைமானிய்யா வித்யாலயத்திலே சேர்ப்பதற்கு தயக்கம் காட்டாத ஸஹிய்யா ஆசிரியை தனது ஏனைய நான்கு பிள்ளைகளையும் அதே பாடசாலையிலேயே சேர்த்தார்.
இன்றைய காலத்தில் தான் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் தனது பிள்ளையைச் சேர்க்க தயங்கும் அதிபர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஸஹிய்யா ஆசிரியை போற்றத்தக்க ஒருவராகவே காணப்பட்டார்.
பிள்ளைகள் ஐந்து பேரும் தமது தாய் மொழியில் மிகுந்த அக்கறையுடன் கற்று வந்தனர்.
பத்தாம் ஆண்டுவரை கா/ ஸுலைமானியா வித்யாலயத்தில் கல்வி பயின்று வந்த ஜிப்ரியா கல்முனை மஹ்மூத் பாலிகாவில் சேர்ந்தார்.
அங்கு தனது சாதாரண தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்தார். அதில் திறமையாக சித்தி பெற்றதன் பின்னர் அதே பாடசாலையில் உயிரியல் பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார்.
தான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற தனது தாயின் ஆசையை நிறைவேற்ற மிகவும் சிரமத்துடன் செயற்பட்டாலும் இறைவனின் நாட்டம் வேறொரு விதமாக அமைந்தது.
அவரின் பெறுபேறு சிறந்ததாக அமைந்த போதிலும் வைத்தியத் துறையை தேர்வு செய்யும் அளவுக்கு அமைந்திருக்கவில்லை.
அவர் மனம் தளரவில்லை பொருத்தமான அரச உத்தியோகத்தில் அமர வேண்டும் என்ற ஆவல் மேலோங்கி இருந்தது அவ்வாறான தருணத்தில் தான் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் பதவிக்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கை நடைபெறுவதாக அறியக் கிடைத்தது.
ஜிப்ரியாவும் அதற்கான விண்ணப்பம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
அதற்கான பரீட்சையை திறம்பட செய்ததன் விளைவாக 2006 ஆம் ஆண்டிலே கோட் முதலியார் என்ற பதவியிலே அவர் அமர்த்தப்பட்டார். அவரின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை
இந்த பதவி கிடைத்து ஒரு சில காலங்களில் அவர்
யூனானி மருத்துவதுறைக்கு தெரிவு செய்யப்படுகிறார்.
ஆனால் தான் மேல்படிப்பை மேற்கொண்டால் தனது சகோதரிகளின் படிப்புக்கான செலவுகளை ஈடுசெய்வதற்கான வசதி தாய் தந்தையரிடம் போதாமை காரணமாக தான் வகித்து வந்த முதலியார் பதவியை கைவிடவில்லை.
தொடந்து அந்த தொழிலில் ஈடுபட்டார்.
காலம் செல்ல செல்ல நீதி தேவதையின் நிழலில் நின்ற வண்ணம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரின் உள்ளத்தில் வலுவாக ஊன்றி நின்றது.
மூத்தவளுக்கே ஏற்ற பொறுப்பும் தாய் தந்தையரின் அரவணைப்பில் கிடைத்த அன்பும் அவருக்கே உரித்தான ஆளுமையும் அவரின் எதிர்காலத்தின் அத்திவாரத்தை நிர்ணயித்தது.
கல்வி பயிலும் காலத்தில் பாடசாலையின் சிறந்ததோர் மாணவியாகத் திகழ்ந்த ஜிப்ரியா பல போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பாடசாலைக்காக பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்தவராவார். கவிதை எழுதுவதிலும் அவர் சிறந்து விளங்கினார்.
காலம் மெல்ல மெல்ல கடந்து சென்றது.
2008 ஆண்டிலே அவர் சட்டக்கல்லூரியின் திறந்த பரீட்ச்சைக்கு தோற்றி இலங்கை சட்டக் கல்லூரியின் மாணவியாக தெரிவு செய்யப்பட்டார்.
2012 ஆண்டில் ஒரு சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட இவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திலே பணியாற்றி வந்தார்.
இவரோடு சக முதலியாராக சேவை புரிந்த திஹாரியைச் சேர்ந்த தில்ஹாமை மணம் முடித்த இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் கணவரும் தற்போது ஒரு சட்டத்தரணியாக கடமையாற்றி வருகிறார்.
ஜிப்ரியா என்ற ஆளுமை மிக்க பெண் சட்டத்தரணி பல கோணங்களில் மிளிரத் தொடங்கினார்.
அவரின் பேச்சு வன்மை விவாதத் திறமை, மும்மொழிகளிலும் திறம்பட பேசக்கூடிய ஆற்றல் அவரின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாய் அமைந்தது.
கிட்டத்தட்ட பண்ணிரண்டு வருடங்கள் சட்டத்தரணியாக நின்று சாதித்த பெண் ஆளுமை அவரின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக உழைத்தார்.
சட்டத்துறையின் மேற்படிப்புக்காக நாவலை சட்டக்கல்லூரியில் இணைந்து ( LLM ) பட்டத்தை பெற்றதோடு
சட்டத்துறைக்கு மிகவும் அத்தியாவசியமான DIPLOMA IN FORENSIC MEDICINE எனும் வைத்தியத்துறை கற்கை நெறியை பேராதெனியாப் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
எப்படியாவது ஒரு நீதிபதியாக வரவேண்டுமென்ற கனவைச் சுமந்தவளாய் அதற்கான தருணம் வரும் வரை காத்திருந்தார்.
அதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியெய்திய அவர்
2025. 04. 01 ஆம் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அல்ஹம்துலில்லாஹ் அவரின் கனவு மட்டுமல்ல தாய் தந்தையரின் பிரார்த்தனையும் நிறைவேறிய சந்தோஷத்தில் அவர் அகமகிழ்ந்தார்.
நமது சமூகம் இதனைப் பாராட்ட வேண்டிய கட்டாய தேவையுள்ளது.
நாம் தேடிப்பார்த்த போது தென்மாகாணத்தில் இருந்து ஒரு பெண் கூட நீதிபதியாக வரவில்லை என்று அறியக் கிடைத்தது.
மாறாக ஒரு ஆண் நீதிபதியாக இருந்தார். என்பதை நாம் அறிகிறோம்.
அவர் பியதிகமையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அல்ஹாஜ் அப்துல் ஸலாம் அவர்கள்.
அவர் வேறு யாருமல்ல நாம் மேற்கூறிய ஜிப்ரியாவின் தந்தையான இர்ஷாத் அவர்களின் மிக நெருங்கிய உறவினர் ஆவார்.
எமது சமூகத்தின் பெருமையை நாடறியச் செய்த பாத்திமா ஜிப்ரியா அவர்களை வாழ்த்துவதோடு இந்த பதிவை அனைவருக்கும் பகிர்ந்து இவர் போன்ற இன்னும் பல ஆளுமையுள்ளவர்களை உருவாக்க துணை புரியுங்கள்.
நன்றி.
கலைமணாளன் ஹிஷாம்
காலி.
RabeekRaja DMKVagampuli
Madawala News
Art
Peer Mohamed
*தெலங்கானாவில், பெற்றோர்களை கவனிக்காமல் அலட்சியம் செய்யும்* *அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10% முதல் 15% பிடித்தம் செய்யப்படும்;*
*பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அவர்களுடைய பெற்றோரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.*
*இந்தச் சட்டம் தண்டனை அல்ல, பிள்ளைகளுக்காக பெற்றோர் செய்யும் பல* *தியாகங்களுக்கு நீதி வழங்கும் முயற்சி!*
*இந்த புதிய சட்டம் விரைவில்
அமல்படுத்தப்படும்.*
KhajaShairff ASM
SDPI திருப்பூர் தெற்கு
போதைக்கு எதிரான
புதிய பாதையை கட்டமைப்போம்..
போதையிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற
SDPI கட்சி
அனைத்து அரசியல் கட்சிகள்,இயக்கங்கள், ஜமாஅத்கள்,பள்ளிவாசல் நிர்வாகிகள்,சமூகசேவை அமைப்புகள் என அனைவரையும் ஒருங்கினைத்து நடத்தும் தீர்வை நோக்கிய
மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி..
எதிர்வரும் 27/10/2025 திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு ரோஜா மஹாலில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணி.
திராவிட, பெரியாரிய, மார்க்சிய, முற்போக்கு சிந்தனைகளைக் கொண்டு வெளி வரும் நூல்களைப் படித்து அதற்கான நூல் அறிமுகவுரைகளை ' இது என்னுரை ' என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் 2020 ஆண்டு முதல் இந்த அக்டோபர் 2025 ஆண்டு வரை தொடர்ந்து எழுதி சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றேன் .
கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 230 நூல் அறிமுகவுரைகளை எழுதிப் பகிர்ந்துள்ளேன்.
அவற்றில் பல என்னுரைகள் ' விடுதலை ' ' உண்மை ' மற்றும் ' தாய் ' இதழ்களில் வெளியாகி இன்னும் பலரிடம் சேர்ந்துள்ளன.
தந்தை பெரியார் கூறியது போல - இந்த வேலையைச் செய்ய வேறு எவரும் வராததால் அதை நான் செய்கிறேன் .
அதற்குத் தகுதியானவனா என்று எனக்குத் தெரியாது ! ஆனால் அதை செய்ய வேண்டியது எனது கடமை என்பதை மட்டும் நான் அறிவேன் !
இந்த ஐந்து ஆண்டுகள் பயணத்தில் எனக்கு தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் வழங்கி வந்த எனது தோழர்களுக்கு நன்றியும் வணக்கங்களும் !
இந்தப் பயணம் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது..அது வரை உங்களது ஆதரவு என்ற கையைப் பிடித்து தொடர்கின்றேன் ...
மிக்க நன்றி தோழர்களே ...
பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,
சென்னை - 21.10.2025
************************************
Chandran Veerasamy
“கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்… பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தியங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா.
இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.
“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா…?” “இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன்.
நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும்.
அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா…?” என்றார்.
நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே…” என்று ஆரம்பிக்கவும்.
அவரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னு” சொல்றீயா…? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா… மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்..
அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி.
எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது.
சமுதாயத்துல பேதம் போகணும்… ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க.
ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்… இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா…?” என்று கேட்டார்.
நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக் கிறீங்களா…?இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே…! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட்டாரே…?” என்றேன்.
“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன்.
சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன்.
எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான்.
அதுலே என்ன பிராமணன் சூத்திரன்…? ரொம்ப அயோக்கியத்தனம்…!” என்றார் காமராசர்.
= பெருந்தலைவர் காமராசரின் நெருங்கிய நண்பர் , தமிழ்நாடு சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர் திரு.பெ.எத்திராஜ் அவர்களின் பதிவிலிருந்து .
Arunagiri Sankarankovil
Jaffna Muslim
நான் காசாவிற்குச் சென்று எல்லா இடங்களிலும் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்தபோது, அந்தப் பகுதி அணு குண்டுவெடிப்பில் சிக்கியது போல் உணர்ந்தேன்.
அந்தக் காட்சி மிகவும் சோகமாக இருந்தது. மக்கள் அழிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திரும்புவதைக் கண்டேன்.
நான் இஸ்ரேலிய இராணுவத்திடம் கேட்டேன்: அவர்கள் எங்கே போகிறார்கள்?
அவர்கள் எனக்கு பதிலளித்தனர்: அவர்கள் தங்கள் அழிக்கப்பட்ட நிலங்களுக்கும் நகரங்களுக்கும் திரும்புகிறார்கள்.
அது மிகவும் வேதனையான காட்சி. இந்த மக்களுக்கு வேறு எங்கும் செல்ல முடியாது என்று குஷ்னர் மேலும் கூறினார்.
காசாவில் நடந்தது இனப்படுகொலை என்று அவர் நம்புகிறாரா என்று ஒளிபரப்பாளர் கேட்டதற்கு, குஷ்னர் பதிலளித்தார்: "இல்லை, அங்கு நடந்தது இனப்படுகொலை என்று நான் நினைக்கவில்லை." "
(அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகன் குஷ்னர்)
Sivanthi
Facts Tamilan
வாழ்க்கையில் தோல்வி
Babu Kingdton Manuel
Jaffna Muslim
“காசா போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களும் மத்தியஸ்தர்களும்
கமல் ஷரஃப்பின் கார்ட்டூன்
மகிழா
படித்ததில் பிடித்தது..
நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி...
மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும் கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.
படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது.
வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.
இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.
ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.
நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.
இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம்.
அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு.
புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிவாரணத்துக்காய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது......
இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா....இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள் தான்...
ரசிகர்கள்...
போங்கடா போயி புள்ள குட்டிகள படிக்க வையிங்க 🤦♂️
🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
கணக்கு கொஞ்சம் முன்னபின்ன தான் இருக்கும்...
ஆனா கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா இருக்கும் 😔
யாரையும் தனியா குறிப்பிடல... பொதுவா போட்ட பதிவு. 👍
- மீள் பதிவு.
🌹🌹🌹🌹🌹🌹
பெண்களின் ஆசைகள்
Adirai Farook
அமெரிக்காவின் ஜனாதிபதி பொறுப்பில் கடந்த காலங்களில். இரண்டாவது முறை வென்று மக்களின் பேராதரவுடன் ஆட்சி செய்து மக்களின் முழு திருப்தியுடன் இறங்கி சென்றவர்கள்தான் அதிகம்.
ஆனால் இரண்டாவது தடவை வெற்றிப் பெற்றவர்களில் இவரை நாம் ஏன் மீண்டும் தேர்ந்தெடுத்தோம் என்று மக்கள் தலையில் அடித்துக்கொண்டது 'ட்ரம்பிற்காக' மட்டும் தான்.
மீண்டும் தேர்ந்தெடுத்த தவறுக்கு பிராயச்சித்தமாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பெரும் பெரும் போராட்டங்களை வெடிக்கச் செய்து அவமானப்படுத்திக் கொண்டு, கீழே இறங்கச் சொல்லி போராடுகின்றார்கள்.
அல்லாஹ் யாருக்கு கண்ணியத்தை கொடுக்க நாடுகின்றானோ அவருக்கு கண்ணியத்தை கொடுப்பான். யாருக்கு இழிவையும், அவமானத்தையும் கொடுக்க நினைக்கிறானோ அவருக்கு அவ்வாறே கொடுப்பான்.
மனிதத்தை நேசிக்காமல் மதத்தை நேசித்ததால் அல்லாஹ் இவருக்கு இழிவை கொடுத்தான் இன்னும் கொடுப்பான்.
பச்சிளம் பாலங்களை ஒரு காட்டு மிருகம் குதறி தள்ளும்போது அதை தடுத்து நிறுத்த வக்கற்ற காரணத்தினால் இந்த இழிவும், மக்களுடைய கோபமும் இவர் மீது ஏற்பட்டது.
Mohamed Faizudeen
ஒரு படைப்பாளியின் அறச்சீற்றம்
Chandran Veerasamy
உலகத்திற்கே போலீஸ்காரனாக தன்னை நினைத்து கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு இன்று வரை கண்ணில் விரல்விட்டு ஆட்டம் காட்டும் நாடு எதுவென்றால் கண்ணை மூடிக் கண்டு சொல்லலாம் அந்த நாடு,அமெரிக்காவின் வெகு அருகில் இருக்கும் சின்னஞ் சிறு நாடான #கியூபா என்று.
ஈரான்,ஈராக்கில் பெட்ரோலியம் போல உலகின் சக்கரை கிண்ணம் என்று அழைக்கப்பட்ட கியூபாவின் சக்கரை வளம் அமெரிக்காவின் கண்ணை உறுத்த,அடிபணிய மாட்டோம் என கியூபா வீரம் காட்டியது.
தனக்கு கட்டளைக்கு கீழ் படியாத நாடுகளின் மீது போர் தொடுப்பது,அந்த நாடுகளின் பிற்போக்கு வாதிகளுக்கு எல்லா ஆதரவும் அளித்து அரசை கவிழ்ப்பது, பொம்மை ஆட்சியாளர்களை அமர வைப்பது,
தனது கொள்கைகளுக்கு பிடிக்காத நாட்டு தலைவர்களை படுகொலை செய்வது என உலக நாடுகளில் அமெரிக்கா ஏகாதிபாத்தியம் நிகழ்த்திய படுகொலைகளும் அட்டூழியங்களும் ஏராளம்!
அந்த வகையில் "கியூபாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்கு" நூற்றுக்கும் மேலான முயற்சிகளை அமெரிக்கா CIA செய்தது.
கியூபா என்னும் சின்னஞ்சிறு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் உட்பட அரசு ரீதியான தடைகள் அனைத்தையும் ஏவி,மற்ற நாடுகளை யும் அதற்காக நிர்பந்தித்து கியூபாவை உலகில் இருந்து தனிமைபடுத்தியது அமெரிக்கா.
இன்று கொரானா போல 1980 ல் கியூபாவில் மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!
"உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவை தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்",என #பிடல்_காஸ்ட்ரோ கெஞ்சினார்!
அமெரிக்காவுக்கு பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை.
பெரும் இழப்பிற்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப்பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன!
அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், ஐரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையை பிடல் உருவாக்கினார்.
உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது.அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.
இவ்வளவு மருத்துவப் புரட்சியை செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்!
உலக நாடுகளே!உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள்", என்று அறிவித்தார்.
அவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களை கியூபா அனுப்பி உள்ளது.
இன்றைக்கு 'கொரோனா' வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்த கியூபா என்ற சின்னஞ் சிறு நாட்டை அமெரிக்கா தனிமைப் படுத்தி வைத்தி இருக்கிறது!
அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்த கியூபா!
கியூபா கொரோனாவுக்கு மருந்து தயாரித்து சீனாவிற்கு அனுப்பி வைத்து விட்டு உலகம் முழுவதும் தன்னுடைய மருத்துவ சேவையை தொடங்கியுள்ளது.
39 வருடங்களுக்கு முன்பு கியூபா என்ற நாடு கண்டுபிடித்த மருந்தை W.H.O தடை செய்தது. ஆனால் அதே மருந்தால் தான் இன்று சீனா தங்கள் நாட்டு கொரோணா நோயாளிகளை கட்டுப்படுத்துகிறார்கள்! அது அன்று கியூபா கண்டுபிடிச்ச #Interferon_Alpha_2b என்ற மருந்தே !!
இப்போதாவது புரிகின்றதா பொருளாதார தடை ஏன் விதிக்கப்படுகின்றது என்று!
எல்லா நாடும், தனது நாட்டு எல்லையை மூடி சொந்த நாட்டு மக்களைக்கூட உள்ள விடமாட் டேன்னு சொல்லுறான்.
ஆனால், கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி அனுப்பிய போது,கியூபா தனது துறைமுகத்தில் அனுமதித்து அவர்களுக்கு தஞ்சம் கொடுத்து உள்ளது.
அவர்கள் அனைவருக்கும் மருத்துவம் வழங்கி குணப்படுத்த முன்வந்துள்ளது.
அதற்கு வித்திட்டது #கம்யூனிசம் என்னும் பேரன்பு...!
#மனிதநேயமே_கம்யூனிசம்...!
(Thiyagarajan Rangaswamy அவர்களின பதிவு) மீள் பதிவு.
Santhanam S
மூன்றாவது வாரமாக
தொடரும் அமெரிக்க மக்கள் எழுச்சி போராட்டம்!
"கிங் டிரம்ப்"புக்கெதிராக '
கொதித்து எழுந்தனர் லட்சக்கணக்கான
குடிமக்கள்!!!
இந்த No King போராட்டம் அரசியல் போராட்டம் அல்ல. மக்களை பிரிப்பது,
பொருளாதார சரிவு,
அரசியல் சட்ட மீறல்கள்,
ஜனநாயகத்தை சீர்குலைத்தல்,
சர்வாதிகார
போக்கு, பொறுப்பில்லா ஆட்சி, அதிகாரத்தை ஏவி விடுதல், சமத்துவத்தை சீர் குறைப்பது, கையாலாகாத அதிபரின் மோசமான நிர்வாகம் என அறிவித்து
50 மாகாணங்களிலும் பொது மக்கள் பேரணி,
பொதுக்கூட்டம், முக்கிய இடங்களில் மறியல்
போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
வழக்கம் போல இது
அமெரிக்க தேச விரோதிகளின் போராட்டம் என டிரம்ப் நிர்வாகமும், அவரது ஆதரவாளர்களும்
பொது மக்களை முத்திரை குத்தி இருக்கிறார்கள்!!!!
படத்தில் இருப்பது
நியூயார்க் டயம் ஸ்கொயர்.
Syed Ali
அஷ்ஃபாகுல்லா கான்: போர்ப்பாடல் பாடி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன்!
(இன்று அக்டோபர் 22 சுதந்திர போராட்ட வீரத் தியாகி அஷ்ஃபாகுல்லா கானின் 125வது பிறந்தநாள்)
ஸர்ஃபரோஷி கி தமன்னா அப் ஹமாரே தில் மே ஹே
தேக்னா ஹே ஸோர் கித்னா பாஹு ஏ காத்தில் மே ஹே
("தியாகத்திற்கான வேட்கை இப்போது எங்கள் இதயத்தில் உள்ளது;
கொலையாளியின் கரங்களுக்கு எவ்வளவு வலிமை என்று நாங்கள் பார்க்க வேண்டும்")
குடியுரிமைப் போராட்டங்கள் உட்பட அண்மைக் காலங்களில் நடந்த பொது உரிமைகளுக்கான எழுச்சிகளில் எதிரொலித்த இந்த வரிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த பிஸ்மில் அஸிமாபாதி எழுதிய இந்தப் புரட்சிக் கவிதை, முக்கியமாக இரண்டு தியாகிகளின் பெயர்களுடன் இணைத்து பேசப்படுகிறது.
ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபாகுல்லா கான் ஆகிய இருவரும் சிறையில் தினமும் பாடி நடந்த வீரப் பாடல் இதுவே.
1900 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில், செல்வாக்குமிக்க ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் ஷஃபிகுல்லா கான் மற்றும் மசஹருன்னிசா பேகம் ஆகியோரின் மகனாக அஷ்ஃபாகுல்லா கான் பிறந்தார்.
தாயின் செல்வாக்கால் இலக்கிய ஆர்வம் கொண்டவராக வளர்ந்த அஷ்ஃபாகுல்லா கான், சிறுவயதிலிருந்தே உருது கவிதைகளை எழுதினார்.
அந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை, ஆட்சிக்கு எதிரான கடுமையான விமர்சனங்களையும் மக்களின் வலிகளையும் ஆழமாக வெளிப்படுத்தின.
நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற அவரது தணியாத வேட்கை, அவரை இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தின் (HRA) தலைவரான ராம் பிரசாத் பிஸ்மிலுடன் நெருக்கமாக்கியது.
ஒரு ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை ஆரம்பத்தில் பிஸ்மில் சேர்த்துக் கொள்ளத் தயங்கினாலும், அஷ்ஃபாகுல்லாவின் தீரத்தையும், தேசப்பற்றையும், அர்ப்பணிப்பு உணர்வையும் உணர்ந்து அவரை அமைப்பில் இணைத்துக் கொண்டார்.
இவர்கள் இருவருக்குமிடையேயான உறவு, சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு உன்னதமான ஒரு உதாரணமாகக் கருதப்படுகிறது.
புரட்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்குவதற்குப் பணம் திரட்ட, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பணத்துடன் செல்லும் ஒரு ரயிலைக் கொள்ளையடிக்க பிஸ்மில் திட்டமிட்டார்.
இத்தகையதொரு நடவடிக்கையை மேற்கொண்டால், பிரிட்டிஷ் அரசு கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவிவிடும் என்றும், அது போராட்ட வழிமுறைகளுக்குப் பாதகமாக அமையும் என்றும் அஷ்ஃபாகுல்லா கடுமையாக எதிர்த்தார்.
இருப்பினும், அமைப்பிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் முடிவை மதித்து, அவர் அந்தத் திட்டத்தில் முக்கியமான பங்கினை வகித்தார்.
1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி, அரசாங்கக் கருவூலத்திற்கான பணத்துடன் சென்ற சஹாரன்பூர்-லக்னோ பயணிகள் ரயிலை, லக்னோவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காகோரி கிராமத்தில் வைத்து புரட்சியாளர்கள் கொள்ளையடித்தனர்.
பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா ஆகியோருடன் ராஜேந்திர லாஹிரி, சந்திரசேகர் ஆசாத், சச்சீந்திரநாத் பக்ஷி, கேசப் சக்கரவர்த்தி, மன்மத் நாத் குப்தா, முராரி ஷர்மா, முகுந்த் லால், பன்வாரி லால் ஆகியோர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டனர்.
அன்று கவரப்பட்ட தொகை 4679 ரூபாய் ஒரு அணா ஆறு பைசா ஆகும். இந்த அதிர்ச்சியூட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசு நாடு முழுவதும் தீவிரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிஸ்மில் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்திற்குப் பிறகு நேபாளத்திற்கும் (இப்போதைய ஜார்கண்டின்) டால்ட்டன் கஞ்சிற்கும் தப்பிச் சென்ற அஷ்ஃபாகுல்லாவைக் கண்டுபிடிக்க பிரிட்டிஷார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபோதும் முடியவில்லை.
ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு, கிராமவாசிகளில் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டதால், போலீசார் அவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையின் போது, பிஸ்மிலைக் காப்பாற்றுவதற்காக, கொள்ளையின் முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாக அஷ்ஃபாகுல்லா பகிரங்கமாக அறிவித்தார்.
வழக்கறிஞரின் ஆலோசனைகளை ஏற்க மறுத்து, தன்னைக் குற்றவாளியாகக் காண வேண்டும் என்று அவர் பிரிவி கவுன்சிலிடம் வேண்டினார்.
பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா, ராஜேந்திர லாஹிரி, ரோஷன் சிங் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்து பேர் ஆயுள் தண்டனைக்காக காலாவதிக்கு நாடு கடத்தப்பட்டனர்.
சந்திரசேகர் ஆசாத்தை கைது செய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை (பின்னர் அலகாபாத்தில் உள்ள ஆல்பிரட் பூங்காவில் வைத்து போலீசார் சுற்றி வளைத்தபோது அவர் சுயமாகச் சுட்டுக் கொண்டு உயிர் நீத்தார்).
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஃபைசாபாத் சிறையில் வைத்து அஷ்ஃபாகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார்.
இறுதி ஆசை ஏதேனும் உண்டா என்று கேட்ட அதிகாரியிடம், நாட்டின் சுதந்திரத்தை விட வேறு எந்த விருப்பமும் இல்லை என்று பதிலளித்து, 'ஸர்ஃபரோஷி கி தமன்னா' பாடலை உரத்த குரலில் பாடி, நிமிர்ந்த தலையுடனும் புன்னகையுடனும் அவர் தூக்கு மேடையை நோக்கி நடந்து சென்றார்.
ஆக்கிரமிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்கவோ, கருணையை யாசிக்கவோ மறுத்த, அஷ்ஃபாகுல்லாவைப் போன்ற தீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து பெற்றுத் தந்த விலைமதிப்பற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்தியருக்கும் கடமை உண்டு.
மலையாளத்தில் மாத்யமம் நாளிதழ்.
Sadhakathulla
Nizar Abdul
Ramesh Lakshmanan
Basheer N
🔴அபூர்வ #சரித்திர தம்பதிகள்!
♦️ #அக்ரம் அபுபக்ர், #இஸ்ரேலிய சிறையில் #ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட #பலஸ்தீன கைதி!
♦️அபூபக்கர் திருமணம் செய்து #இல்லறவாழ்வில் இணைந்து ஒரு சில வாரங்களிலேயே இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டு #ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
♦️அவர் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு அனுப்பப்பட்ட போது, தன்னால் தனது மனைவியும் #வாழ்விழந்து ஆயுள் முழுவதும் #துன்புறக்கூடாது என்பதற்காகவும்,
தனது மனைவி இனிமேல் #புதிய இல்லறவாழ்வில் இணைந்து #சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காகவும், அவளை உடனடியாக #விவாகரத்து செய்திருந்தார்.
♦️இவ்வாறு ஆயுள் சிறை விதிக்கப்பட்டு 23 வருடங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் #அபூபக்கர் அண்மையில் #ஹமாஸ் - இஸ்ரேல் இடையே இடம்பெற்ற போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் செய்யும் திட்டத்தின் கீழ் #விடுதலை செய்யப்பட்டு மீண்டும் #பலஸ்தீன மண்ணில் கால்பதித்தார்.
♦️23 #வருடங்களின் பின்னர் #அதிஷ்ட்டவசமாக விடுதலை செய்யப்பட்ட அவர் அங்கிருந்து #கெய்ரோ சென்று தமது குடும்பத்தாரிடம் சங்கமித்தார்.
♦️கெய்ரோ (எகிப்து) சென்ற அவருக்கு ஒரு பெரிய #ஆச்சர்யம் காத்திருந்தது.
♦️23 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் #விவகாரத்து செய்து சென்ற அவரது #மனைவி இதுவரைக்கும் #எவரையும் திருமணம் செய்யாமலும், தவறான எந்தொவொரு செயல்களிலும் ஈடுபடாமலும்,
மிக #பொறுமையோடும் #விசுவாசத்தோடும் தன் கணவனுக்காக இன்னும் காத்த்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
♦️ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, விவகாரத்து செய்து சென்ற ஒரு கணவனுக்காக 23 வருடங்கள் #ஒழுக்கத்தோடும் #உறுதியான நம்பிக்கையோடும் காத்திருந்த அவரது மனைவியின் செயலைக்கண்டு கண்டு #ஆச்சர்யத்தில் மூழ்கிய #அக்ரம்அபூபக்கர்
தனது மனைவிக்காக மீண்டும் தனது வாழ்வை அர்ப்பணிக்க போவதாக முடிவெடுத்து குடும்பம் மற்றும் நண்பர்கள், உறவுனர்களின் பங்களிப்புடன் அவளை மறுபடியும் #திருமணம் செய்து கொண்டார்.
♦️உறுதியான இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் கொண்ட அதிசயிக்கத்தக்க பலஸ்தீன தம்பதிகளின் இந்த சம்பவம் அரபுலகம் உட்பட உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
18.10.2025
@top fans
Almashoora Latest News
Lks. MohamedMeeran
" நீங்க எல்லாம் இருந்துமா ஒரு பள்ளிக்கூடத்தை இப்படி வச்சிருக்கீங்க.?"
" என்னத்த கேக்க ...சொல்லுப்பா" என்று கேட்டான் என் அருமை நண்பன் அம்பிகாபுரம் முத்துப்பாண்டியன். 1992ஆம் ஆண்டு நான் இந்த கேள்வியை என் நண்பனிடம் கேட்டேன்.
நண்பர் அம்பிகாபுரம் முத்துப்பாண்டியன் இன்றைக்கு நெல்லை மாவட்ட ஆவின் பால் பிரிவில் மிகப்பெரிய தணிக்கை அதிகாரியாகப் பணி செய்து பணி நிறைவு பெற்று வாழ்கிறார்.
நாங்கள் இருவரும் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ,ஆறாம் வகுப்பு தொடங்கி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பட்டம் முடிகின்ற வரையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகப் படித்தவர்கள்.
கல்லூரி வகுப்புகளின் இடைவேளை மதியம் என் வீட்டு உணவை அவனும், அவன் வீட்டு உணவை நானும் ஒன்றாக அமர்ந்து உண்டு பரிமாறி பாசத்தை வளர்த்துக் கொண்டோம்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நகர் பெரும்பான்மையான அளவில் முஸ்லிம் மக்களைக் கொண்டது. அதே ஊரில் இரண்டு தெருக்களோடு ,அம்பிகாபுரம் ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளியும் உள்ளது.
" நான் நேற்று உங்கள் அம்பிகாபுரம் தொடக்கப்பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு மேற்கே உள்ள ரோட்டில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.
அப்பொழுது வகுப்பறையில் பாடம் நடத்த இடமில்லாமல் பிள்ளைகளோடு ஒரு ஆசிரியை அந்தக் கோயிலுக்கு மேற்புறம் உள்ள மரத்தடியில் வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் .
தரையில் 20 அல்லது 25 பிள்ளைகள் இருந்தார்கள். அந்தப் பொழுதில் அவர்கள் இருந்த இடத்திற்கு ஒரு 20 அடி தொலைவில் சாக்கடைக்கு பக்கம் இரண்டு பன்றிகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு கடும் சீற்றத்துடன் ஊளையிட்டுக்கொண்டே...பிள்ளைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன .
இதனைப் பார்த்த பிள்ளைகள்.... ஓவென்று கத்தவும்.... அந்த ஆசிரியை கைகளில் ஒரு பிரம்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நிலைமையும் ....பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்." இதைத்தான் என்னுடைய நண்பனிடம் சொன்னேன்.
" என்னசெய்வது மாப்பிள்ளை?.... லிண்டல் மட்டம் வரை 3 வகுப்பறைகள் கட்டி பணம்இல்லாமல் பாதியில் நிற்கிறதே...." என்று சொன்னான்.
" ஏன் நீங்கள் சென்று வசூல் செய்தால் நன்றாக இருக்குமே" என்று கேட்டபோது இல்லை... "நாங்கள் இங்குள்ள முதலாளிகளிடத்தில் சென்று நன்கொடைகள் கேட்டால் ....மிக குறைந்த தொகையை தந்து எங்களை அனுப்பிவிடுகிறார்கள்" என்று சொன்னான்.
" நாங்களும் எங்களால் இயன்ற அளவு போய்விட்டோம்.... ஒரு உதவி செய்வியா ? நீ எங்களோடு வந்து பணம் வசூல் வசூல் செய்து தர முடியுமா? என்று என் அருமை நண்பர் முத்து பாண்டியன் கேட்டார்.
"அப்படியா நான் ....வருகிறேன் நாம் சென்று வசூல் செய்வோம் என்றேன்.
அன்றைக்கு அவரோடு என்னுடைய நண்பர்கள் சிவாஜி திருநாவுக்கரசு, மயில்வாகனன் முதலானவர்கள் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள்.
என்னை அவர்கள் மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். நானும் அவர்களை மாப்பிள்ளை என்றுதான் மறுமொழி அழைப்பேன்.
நானும் என்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு நிர்வாகிகளாக அன்றைக்கிருந்த என்ஆசிரியர் கோமதி நாயகம் அவர்களின் அண்ணன் கருப்புசாமி , அன்றைய அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் நல சங்கத்தின் செயலாளர் அருணாசலம் உள்ளிட்டவர்களையும் சேர்த்துக்கொண்டு நன்கொடைகள் கேட்கச் சென்றேன்.
நன்றாக நினைவில் இருக்கிறது அன்றைய பொழுதில் இன்ஜினியர் எஸ்கே செய்யது அகமது அவர்கள் மேலப்பாளையம் ஆசாத் ரோட்டில் சப்பாணி ஆலிம் தெரு விற்கும் , எக்கின் பிள்ளை தெருவிற்க்கும் இடையே, மாடியில் ஒரு அலுவலகத்தை வைத்திருந்தார்கள் .
அவர்கள் மட்டும் ஓரளவு கண்ணியமான முறையில் நிதி உதவி செய்தார்கள்.
மற்றவர்களெல்லாம் 500 ரூபாய்க்கு கீழே உதவிசெய்து அன்றைய பொழுதில் எனக்கு மனதளவில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி தந்தார்கள்.
என்ன செய்யலாம்? என்று யோசித்தோம் .
"எனக்காக ஒன்று செய்ய வேண்டும் .சென்னையிலிருந்து மணிச்சுடர் என்று ஒரு நாளிதழ் வருகிறது .
அதற்கு முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது அவர்கள் ஆசிரியராக இருக்கிறார்கள் .அந்த நாளிதழில் நம்முடைய பள்ளிக்கூட தேவையை வெளியிட்டு நாம் நிதி கேட்கவேண்டும்" என்று சொன்னபொழுது... நண்பர்களும் அந்த பெரியவர்களும் உடன் பட்டார்கள் .
அன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய் அளவில் கடைசிப் பக்கத்தில் மேலப்பாளையம் அம்பிகாபுரம் துவக்கப் பள்ளிக்கு உதவி செய்யுங்கள் என்று ஒரு விளம்பரம் செய்தோம்.
"கல்விப் பணிக்கு கனிவான வேண்டுகோள்" என்கின்ற தலைப்பில் வேண்டுகோள் விளம்பரம் செய்தோம்.
நம்புங்கள் தோழர்களே அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு நிதி வரும் என்று நினைத்தேன் ஆனால் ஒரு புதையலே வந்தது. அதுவும் ஓரிடத்திலிருந்து மட்டும்.
1992 ஆம் ஆண்டு மத்தியில் நான் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் கல்வி குழு உறுப்பினராக மறைந்த சேர்மன் அல்ஹாஜ் எம் ஏ எஸ் முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர் ஆனேன்.
1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேர்மன் எம் ஏ எஸ் முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் பள்ளியின் தாளளராக தேர்வு செய்யப்பட்டார்கள் .
அதற்குப் பின்னர் பள்ளியின் வளர்ச்சிக்காக தமிழகமெங்கும் அதையும் தாண்டி , அண்டை மாநிலங்களிலும் நிதி வசூல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம் .
அவ்வாறு நிதி திரட்டுவதற்கு ஒரு குழுவாக சென்று பணியைத் தொடர்ந்தோம்.
செலவை மிச்சப்படுத்த சேர்மன் அவர்கள் வைத்திருந்த, அம்பாசிடர் காரில், எரிபொருளை மட்டும் பள்ளிக்கூட செலவில் போட்டுக்கொண்டு, தமிழ்நாடு, கேரளா ,கர்நாடகம் என்று சுற்றி வந்தோம் .
கார் ஓட்டுவதற்கு ஆள் இல்லை. அதனால்...நானே கார் ஓட்டி ஆனேன்.
பல மாதங்கள் அப்பணியை செய்தேன் .
அதனால் மேலப்பாளையத்தில் "காரோட்டி ...தேரோட்டி" என்று பட்டம் கொடுத்து முஸ்லீம் கல்விக்கமிட்டியை கிண்டல் செய்து ஒருவர் போர்டு... கூட வைத்தார்.
சென்னையில் கீழக்கரை வள்ளல் ஈடிஏ கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களைச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டோம் .
நாங்கள் சேர்மன் அபூபக்கர் சாஹிப் அவர்கள் தலைமையில் பள்ளியின் பொருளாளர் உசேன் உதுமான் , பேராசிரியர் முஹம்மது பாரூக் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஎஸ்டி சம்சுல் ஆலம், வயதில் இளையவனான நானும் சென்று இருந்தோம்.
பி எஸ் ஏ ரகுமான் அவர்களை சந்திக்க காத்திருந்த பொழுதில், மதுரை பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்களுடன், நீண்ட நெடிய நேரங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் சென்றதும் நாங்கள் பி.எஸ்.ஏ. அவர்களை பார்ப்பதற்கு உள்ளே நுழைந்தோம்.
எங்களை கல கலப்போடும், மகிழ்ச்சியோடும் பிஎஸ்ஏ ரகுமான் அவர்கள் வரவேற்றார்கள். மேலப்பாளையம் பள்ளிக்காக, உங்களிடம் நிதி கேட்க வந்து இருக்கின்றோம் என்பதையும் சொன்னோம்.
"அப்படியா மிக்க மகிழ்ச்சி.... நானும் மேலப்பாளையம் பள்ளிக்குத் தான் உதவி செய்யப் போகிறேன்" என்றார்.
என்னோடு வந்தவர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிக் கடலில் இருந்தார்கள்.
நாம் கேட்கும் முன்பாகவே பிஎஸ்ஏ ரகுமான் அவர்கள் , நம் பள்ளிக்கு உதவிகள் செய்யப் போகிறார் என்கிற எண்ணம் குடி கொண்டு இருந்தது .
"சேர்மன் அவர்களிடம் உங்களுடைய ஊரில்.... யாரெல்லாம் கல்விப் பணி செய்து கொண்டு இருக்கிறார்கள் ? "
என்று கேட்டார் .
" நாங்கள் 1941இல் இருந்து கல்வி குழு மூலமாக கல்விப்பணிசெய்து வருகிறோம். முகம்மது லெப்பை தெருவைச் சேர்ந்த MLM.முகம்மது லெப்பை அவர்கள் 1988 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு என்று பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் .
வேறு சில தனியார்களும் உயர்நிலை, நடுநிலை, துவக்கப்பள்ளி களை நடத்தி வருகின்ற விதத்தையும் சொல்லி காட்டினோம்.
" இல்லை.... இல்லை... இன்னொருவர் பெயர்... எனக்கு நினைவில் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறது... அவர் யார்?" என்று கேட்டார் .
அப்போது அருகில் வந்த அவரது உதவியாளர் ஹஸன் அவர்களிடம், "அந்தப் பேப்பரை எடுத்து வாருங்கள்" என்றார்.
ஒரு ஐந்து நிமிடத்தில் அவரது உதவியாளர் கைகளில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு நாளிதழ் இருந்தது .
அது ஆயிரம் ரூபாய் செலவழித்து விளம்பரம் கொடுக்கப்பட்ட மணிச்சுடர் நாளிதழ். அதனைப் பிரித்து பார்த்தார்கள்.
படபடப்போடு நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
"மீரான் முகைதீன் என்றால் யார் அவர் ? "என்று கேட்டார்.
எங்கள் சேர்மன் "எந்த மீரான் முகைதீன் ?"என்று திரும்ப அவரிடத்தில் கேட்டார்.
" எல் கே எஸ் மீரான் முகைதீன் என்றால் யார் அவர்?" என்று கேட்டார்.
என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த விஎஸ்டி சம்சுல் ஆலம் அவர்கள்..." நீங்கள் சொல்லுகிற மீரான் மைதீன் ...சாட்சாத் இவர் தான்" என்று என்னை தூக்கி நிறுத்தி அவர்கள் முன்னால் நிற்க வைத்தார்.
" தம்பி நீங்களா இந்த விளம்பரத்தை கொடுத்தீர்கள்? "உங்க வயசு என்ன ?"
"என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று புன்னகையோடு அடுக்கடுக்கான கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.
நான் படபடப்போடு... பயந்து... வார்த்தைகளை மென்று.... விழுங்கி... பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.
" நான் பெரிதாக ஒன்றும் தொழில் செய்யவில்லை. எங்கள் குடும்பத்து முன்னோர் பெரியவர்கள் வைத்து சென்றிருக்கிற நிலங்களில், வயல்களில், நெல், வாழை முதலான விவசாயம் செய்து வருகிறேன். ஆடுமாடுகள் வளர்த்து வருகிறேன். என்று சொன்னேன்"
என்னை அவர்கள் இருந்த இருக்கையில் பக்கத்தில் வரவைத்து ,அமர்த்திஅவர்கள் சிரித்துக் கொண்டார்கள்.
அம்பிகாபுரம் பள்ளிக்கூடத்தை பற்றி அதில் படிக்கின்ற 710 மாணவர்களைப் பற்றி..... மேலப்பாளையத்தில் நகரில் அமைந்துள்ள அதன் நிலைமையை பற்றி ....என்னிடத்தில் கேட்கும்போது ஒவ்வொன்றாகச் சொன்னேன்.
" சரி ....நான் இந்த தம்பிக்கு தான் உதவி செய்ய போகிறேன். முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு அடுத்து பார்க்கலாம் என்றார்கள்.
என்னோடு வருகைதந்த பொருளாளர் உசேன் உதுமான் அவர்கள் "என்னப்பா இது? நம்ம பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டிய பணம், உன்னுடைய விளம்பரத்தால் மாறிப் போய்விடும் போலிருக்கிறதே.. என்று என்னோடு காதோடு கேட்டார்கள்.
கொஞ்ச நேரத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒரு கட்டாக கட்டி என்னிடம் தந்து ,இந்தப் பணத்தைக் கொண்டு அரைகுறை நிலையில் இருந்த மூன்று வகுப்பறை களுக்கும் கான்கிரீட் கூரை அமைத்து , அதற்கு மேல் மூன்று வகுப்பறைகளும் எழுப்பி கட்டிடத்தை முடிக்கவேண்டும் என்று சொன்னார்கள் .
நான் மகிழ்ந்து போனேன். ஆனால் அவர்களிடம் அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டேன்.
இதனை மூன்று அல்லது நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு நேரடியாக அனுப்பி வையுங்கள்.
நான் இதனை வாங்கி கொண்டு செல்வது சரியாக இருக்காது. வீணான சந்தேகங்களை ஏற்பட்டுவிடும் .என்று திரும்ப கொடுத்து விட்டேன்.
" பணத்தை சும்மா கொண்டு போங்க தம்பி ....பணம் தருபவன் நான்.... உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
யார் கேட்டாலும் நான் பதில் சொல்வேன்." என்று சொன்னார்கள்.
" இல்லை வாப்பா" என்று மீண்டும் மறுத்த உடன், வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் நான் சொன்னது போல் நான்கு பிரிவுகளாக அந்த பணத்தை கட்டிடம் கட்டுவதற்கு மேலப்பாளையம் அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒரே ஒரு நிபந்தனை மட்டும் என்னிடம் சொன்னார்கள்.....
இந்தக் கட்டிடத்தை திறக்கும்போது ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அருணாசலம் அவர்களை அழைத்து அதனை திறந்து வைத்தால் , முஸ்லிம் சமுதாயமும், ஆதிதிராவிடர் சமுதாயமும் நெருக்கமாக இருக்கக்கூடிய நிலைமையை உலகமெல்லாம் அவர் சொல்லிக் கொள்வார்.
செய்யுங்கள் என்றார்கள்.
அவ்வாறு அவர்கள் ஆசைப்பட்ட படியே அமைச்சர் எம் அருணாசலம் அவர்கள் அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்கள் .
வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களுடைய பெயரும் , திறந்து வைத்த அமைச்சர் அருணாசலம் அவர்களுடைய பெயரும் மட்டுமே அந்த கல்வெட்டில் அமைந்திருக்கும் .
என்னுடைய பெயர் என்னுடைய நண்பர்களின், இதயத்தில் மட்டும் என்ற அளவில் உள்ளது.
இதனைத் தெரிந்த நண்பர்கள் குறிப்பாக முத்துப்பாண்டியன், சிவாஜி திருநாவுக்கரசு , பெரியவர் கருப்பசாமி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஎஸ்டி சம்சுல் ஆலம் என்று சிலர் இருக்கிறார்கள்.
இத்தனையும் செய்து கொடுத்த பின்னர்.... நான் எந்த நிர்வாகத்தில் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்தேனோ.... அந்த நிர்வாகம் கட்டிடத் திறப்பு விழாவில் இல்லை .
வேறு ஒரு நண்பர் நிர்வாகியாக மாறி விட்டார்.
நான் அந்தத் திறப்பு விழா மேடையில் அமர்வதற்கு கூட எனக்கு நாற்காலி எதுவும் இல்லை.
தூரத்தில் காருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன் .
வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்கள் .
அப்போது அவர்கள் கேட்டார் "எங்கே எல் கே எஸ் மீரான்?... அவருக்குத்தான் இந்த பொன்னாடை பரிசு அளிக்கப்படவேண்டும் .
அவர் பெயரைகூட இந்தப்பட்டியலில் காணோமே? சரி போய் வருகிறேன்... என்று சில வார்த்தைகள் முடித்து விட்டு என்னோடு கிளம்பி வந்து விட்டார்.
கிளம்பி கீழே வரும்போது... அங்கே போர்த்தப்பட்ட பொன்னாடையை எனக்கு போர்த்தி அழகு பார்த்தார்.
கட்டி அணைத்துக்கொண்டார்.
அதற்குப் பின்னர் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக அவர்கள் தந்த லட்சோபலட்சங்கள் என் மூலமாகவே தாளாளர் அவர்களிடம் கொடுக்கப்பட்டன, என்பது காலமெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டியவையாகும்.
இயேசுவின் குலப் பெருமையைக் காத்தது
இஸ்லாம் (குர்ஆன்) தான்.
- பெரியகுளம் முகம்மது -
இயேசு,
அவர் வாழ்ந்த காலத்திலேயே
அவருடைய பரப்புரைக்கு கடினமான கண்டனம் எழுந்து
அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு
இயேசுவை சிலுவையில் அறைய உத்தரவிடப்பட்டது
இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இயேசு (ஹஜ்ரத் ஈஸா அலை.)
அவரது மறைவுக்குப்
பின்னும்
இயேசும் அவரது தாயார் மேரி (ஹஜ்ரத் மர்யம் (அலை.)
இருவரையும்
மற்றும் கிறித்தவர்
களையும் கிறித்த மதத்தையும்
எவ்வாறெல்லாம் குறை சொல்ல முடியுமோ
அந்த அளவுக்கு
யூத மதத்தினர்
குற்றங் குறை சொல்லி இழிவு படுத்தி வந்தனர்.
அதிலும்
கன்னி மரியாள் திருமணம் ஆகாமல் இயேசுவைப் பெற்றெடுத்த
நிகழ்வை,
கிறித்தவர்களின்
தலைவரைப் பாருங்கள்
அம்மாவுக்கு கணவன் யார் என்று தெரியாது
மகனுக்கு தந்தை யார் என்று தெரியாது எனப்பேசி இழிவுபடுத்தினர்.
அன்றையக் கிறித்தவர்கள்,
கன்னி மரியாள்
பரிசுத்தமானவர்
என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
கன்னிப் பெண்ணான மரியாள் கருவுற்றதும் குழந்தையைப் பெற்றெடுத்ததும்
கடவுளின் ஏற்பாட்டின்படியே என்பதை
நாங்கள் உறுதியாக
நம்புகிறோம்
எனப் பதிலளித்தார்கள்.
ஆண் தொடாமல்
ஒரு பெண்ணை கர்ப்பமடையச் செய்வது இறைவனைப் பொறுத்தவரை சாத்தியம் என்பதை
குறை சொல்லும் யூதர்களுக்கு
தர்க்கரீதியாக
விளக்கிக் சொல்வதற்கு
அன்றையக் கிறித்தவர்களுக்கு
இயலவில்லை.
இயேசுவையும் மேரியையும் இழிவு
படுத்தும் அன்றைய யூதர்கள் மறுக்க முடியாத அளவுக்கு
உதாரணத்தைக் கூறி குர்ஆன்தான்
இயேசு, மேரி ஆகியோரின் குலப் பெருமையை மீட்டெடுத்தது குர்ஆன்தான்.
குர்ஆன்
اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் (இயேசு) உதாரணம்
ஆதமின் உதாரணம் போன்றதே;
அவன் அவரை (ஆதமை)மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
(அல்குர்ஆன் : 3:59)
கருத்து
இறைவன்
முதல் மனிதனான
ஆதாமை
தாய் தந்தையர்
இன்றி படைத்தான்
பின்பு
தாய் இல்லாமல் ஆதாமில் இருந்து
ஏவாள் (ஆதாமின்
மனவியைப்) படைத்தான்.
மேலே உள்ளக் கருத்து
இஸ்லாம்
கிறித்தவம்
யூதமதம்
ஆகிய மும்மதத்தாரின்
வேதம் சார்ந்த
நம்பிக்கையாகும்.
ஆகவே
தாய்தந்தை இல்லாமல் ஒரு
ஆணைப்படைத்தவன்
தாய் இல்லாமல்
ஒரு ஆணிலிருந்து
ஒரு பெண்ணைப் படைத்தவன்
அதே இறைவன்தான்
ஒரு பெண்ணிலிருந்து
ஒரு ஆணை
உருவாக்கி இருக்கிறான்.
தந்தையில்லாமல்
இயேசு பிறந்ததற்கு
ஆதாம் ஏவாளே
உதாரணம் என
குர்ஆன் விளக்கம்
சொன்ன பிறகுதான்
யூதர்கள்
குறை சொல்வதை
நிறுத்தினார்கள் என்று
வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.
இங்கு ஒரு சந்தேகம் எழலாம்.
கிறித்தவ வேதம் சார்ந்த இருவரைப்பற்றி
குர்ஆன் ஏன் விளக்கம்
அளிக்கிறது.
முகம்மது நபியைத் தூதராக அனுப்பிய
அல்லாஹ்தான்
இயேசுவையும் தூதராக அனுப்பினான்.
இறைத்தூதர்கள்
அனைவரும்
பரிசுத்தமானவர்களே.
இறைத்தூதர்கள். அனைவரும் இயேசு உட்பட,
" இறைவன் ஒருவன்
அவன் உருவம் இல்லாதவன்
இறைவன் மனிதரிடமிருந்து
எந்தத் தேவையுமில்லாதவன்.
இறைவனுக்குத் தாய்தந்தையர் மனைவி பிள்ளைகள் கிடையாது.
படைப்புக்கள் எதனோடும் இறைவனை ஒப்பிட முடியாது.
நாங்கள் இறைவனின் தூதர் மட்டுமே.
நீங்கள் உருவமில்லா இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்.
என்றுதான் பரப்புரைச் செய்தார்கள்.
இக்கொள்கைதான் ஆப்ரகாமியக் கொள்கை அல்லது ஏகத்துவக் கொள்கை என அழைக்கப்படுகிறது.
பரிசுத்தமான இறைத்தூரின் (இயேசு மரியாள்) மீது
வாரி இறைக்கப்பட்ட அவதூறை
இறைவன் அடுத்து வந்த வேதத்தின் மூலம் கழுவி சுத்தப் படுத்தினான்
என்பதுதான்
உண்மை.
கன்னி மரியாள்
எந்த அளவுக்குப் பரிசுத்தமானப் பெண் என்பதற்கு
பைபிளை விட
குர்ஆனில்தான்
அதிக விளக்கம்
கொடுக்கப் பட்டுள்ளது.
மரியாளை பரிசுத்தமானப் பெண்ணாக அல்லாஹ் தேர்ந்தெடுத்திருப்பதையும்,
உலகத்திலுள்ள அனைத்துப் பெண்களையும் விட மேலானப் பெண்ணாக மரியாளை அல்லாஹ் தேர்ந்தெடுத்திருப்ப
தையும் மரியாளிடம் சொல்லும்படி இறைவன்
வானவர்களை
மரியாளிடம் அனுப்பி வைத்தச் செய்தி குர்ஆனில் உள்ளது.
وَاِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الْعٰلَمِيْنَ
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; (வானவர்கள் சொன்னார்கள்)
மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்;
உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்;
இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
(அல்குர்ஆன் : 3:42)
கன்னி மரியாள் மிகவும் ஒழுக்கமானப் பெண் என்பதற்கு
குர்ஆனில் வரும் இன்னொரு நிகழ்வும் ஒரு எடுத்துக் காட்டாகும்.
கன்னி மரியாள் மக்களை விட்டுப் பிரிந்து
தனித்திரு
பசித்திரு
விழித்திரு
என்ற அடிப்படையில்
தவவாழ்க்கையில் இருந்தபோது,
அவரைச் சந்தித்து
இறை நற்செய்தியைச் சொல்ல வானவர்
வந்தபோது,
குர்ஆன்
فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا فَاَرْسَلْنَاۤ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا
அவர் (மரியாள் தம்மை) அவர்க (மற்றவர்)ளிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்;
அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்;
(மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
(அல்குர்ஆன் : 19:17)
قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا
(அப்படி அவரைக் கண்டதும் மரியாள்,)
“நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்;
நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.
(அல்குர்ஆன் : 19:18)
قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا
“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 19:19)
قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا
அதற்கு அவர் (மர்யம்),
“எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 19:20)
قَالَ كَذٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهٗۤ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا
“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்;
இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
(அல்குர்ஆன் : 19:21)
ஒரு கன்னிப்பெண்
தனிமையில்
தவ வாழ்க்கையில் இருக்கும்போது ஒரு ஆண் உள்ளே நுழையும் போது நெருங்காதே போய்விடு என்கிறார்.
தான் இறைத்தூதர் என்று அவர் சொன்ன
போதுதான் இறைத்தூதர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்ற வகையில் மரியாள் அமைதியடைகிறார்.
நீ ஒரு ஆண்மகவை
பெற்றெடுப்பாய்
என இறைத்தூதர்
சொன்னபோது,
எந்த ஒரு ஆணும் தன்னைத்
தொடாத நிலையில்
தான் நடத்தை கெட்டவளாக இல்லாத நிலையில்
ஒரு கன்னிப்பெண் எவ்வாறு குழந்தைப் பெறமுடியும் ?
என வாக்குவாதம் புரிகிறார் கன்னி மரியாள்.
இறைவனுக்கு இது சாத்தியமே என தேவதூதர் சொன்ன போது சமாதான மடைகிறார் கன்னி மரியாள்.
கன்னி மரியாள்
எந்த அளவுக்கு
தன்மான மிக்கவராக இருந்தார் என்பதை
கீழ்கண்ட குர்ஆன்
வசனங்கள் கூறுகின்றன.
குழந்தை இயேசுவை பெற்றெடுத்தவுடன்
கன்னி மரியாள் தனக்குள் சொல்லிக் கொள்கிறார்.
குழந்தையைக் கருவுறுவதற்கு முன்னாலேயே
நான் இறந்து போய் இருந்தால்,
கன்னி மரியாள் என்ற தவசாலிப் பெண் ஒருவர் இருந்தார் அவர் இறந்துவிட்டார்
என மக்கள் என்னை மறந்திருப்பார்கள்.
கன்னிப் பெண்ணான நான்
குழந்தையுடன் ஊருக்குள் சென்றால்
மக்கள் இழிவாகப் பேசுவார்களே
எனக்கவலைப் படுகிறார்.
இறைத்தூதர்
மரியாளே நீ கவலைப்பட வேண்டாம் இது இறைவனது ஏற்பாடு என
ஆறுதலளிக்கிறார்.
குர்ஆன்
فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
(அல்குர்ஆன் : 19:22)
فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது:
“இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
(அல்குர்ஆன் : 19:23)
فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا
(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.
(அல்குர்ஆன் : 19:24)
وَهُزِّىْۤ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا
“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
(அல்குர்ஆன் : 19:25)
فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا فَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால்,
“மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்;
ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
(அல்குர்ஆன் : 19:26)
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்;
அவர்கள் கூறினார்கள்:
“மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”
(அல்குர்ஆன் : 19:27)
மரியாளின் தாய் தந்தையரும் பரிசுத்தமானவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது.
يٰۤـاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَ بُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا
“ஹாரூனின் சகோதரியே! (மரியாளே)
உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை”
(என்று பழித்துக் கூறினார்கள்).
(அல்குர்ஆன் : 19:28)
فَاَشَارَتْ اِلَيْهِ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا
(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி மரியாள்) அத (குழந்தையி) ன்பால் சுட்டிக் காட்டினார்;
“நாங்கள் தொட்டிலில் கிடக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?”
என்று (ஊர்மக்கள்)
கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 19:29)
இயேசு தொட்டிலிருந்தே பேசினார்.
قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்;
அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்;
இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 19:30)
وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்;
மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 19:31)
وَّبَرًّابِوَالِدَتِىْ وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்
;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
(அல்குர்ஆன் : 19:32)
وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
(அல்குர்ஆன் : 19:33)
ذٰ لِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ قَوْلَ الْحَـقِّ الَّذِىْ فِيْهِ يَمْتَرُوْنَ
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்);
எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
(அல்குர்ஆன் : 19:34)
இயேசு சிலுவையில் அறைந்து
கொலை
செய்யப்பட்டார்
என்றக் கருத்தையும் குர்ஆன் மறுக்கிறது.
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۙ
மேலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா மஸீஹை நாங்கள்தாம் கொன்றோம் என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்).
உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை!
மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது.
மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள்.
யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை.
நிச்சயமாக அவர்கள் அவரை மஸீஹை (இயேசுவை) கொலை செய்யவேயில்லை.
(அல்குர்ஆன் : 4:157)
وَمَكَرُوْا وَمَكَرَاللّٰهُ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ
பிறகு இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் (ஈஸாவிற்கெதிராக) சதித் திட்டங்கள் தீட்டினார்கள்.
(அதற்குப் பதிலாக) அல்லாஹ்வும் தகுந்த திட்டங்களைத் தீட்டினான். மேலும் இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரினும் வல்லவன்.
(அல்குர்ஆன் : 3:54)
اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِ
ஒரு பெண்ணை ஒரு ஆண் தொடாமலேயே அவளை கர்ப்பமடையச் செய்ய முடியும்
என்பது தற்காலத்தில் அறிவியல் ரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
மதங்கள் அனைத்தும் மனிதகுல மேம்பாட்டுக்காக உருவானவைதான்.
விவேகானந்த அடிகளார் விரும்பிய ஏகத்துவக் கொள்கை.
அமெரிக்கா சிகாகோ நகரில் நடந்த பல்சமய மாநாட்டில் கலந்து கொண்டு கப்பலில் இந்தியா திரும்பும் வழியில் விவேகானந்தர் அவருடைய நண்பர்களுடன் நடத்திய உரையாடல் ஒன்று விவேகானந்தரின்
வாழ்க்கை வரலாற்று நூலில் இடம் பெற்றுள்ளது.
அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
நாம் செல்லும் இந்தக் கப்பல்
நாளை ஒரு தீவில் ஒருநாள் முழுக்க நிற்கும்.
அந்தத் தீவில்
இயேசு இறைவனின் தூதர் மட்டுமே எனநம்பும் ஏகத்துவக் கொள்கையைக் கொண்ட, நடைமுறையில் கிறித்துவத்தில் உள்ள திரியேகத்துவ ,(பிதா சுதன் பரசுத்த ஆவி) கொள்கையை ஏற்றுக் கொள்ளாத கிறித்தவர்குழு ஒன்று இருக்கிறது.
அவர்களை நாம் சந்திக்க வேண்டும்.
என்பதே அவர்களின் உரையாடலின் உள்ளடக்கம் ஆகும்.
கிறித்தவர்களிலும் ஏகத்துவ வாதிகள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குறியச் செய்திதான்.
Hyder Ali
தமிழக இராவுத்தர்கள்
தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் என்றாலே வடநாட்டவர்போல் எதோ உருதுபேசுவார்கள் கலாச்சார வேறுபாடு உள்ளவர்கள்,
நம்மல்கீ நிம்மல்கி என்று பேசுபவர் போல் சிலர் சினிமாவில் காட்சி படுத்தி,
எதார்த்த வரலாறையும் உண்மையான அவர்களது கலாச்சாரத்தையும் பொது சமூகத்தில் காட்டவில்லை.
அதனால் பலருக்கு அவர்கள் உண்மையான வரலாறு தெரியாது அதை கூறவே இப்பதிவு.
தமிழகத்தில் முக்கியமான முஸ்லிம் சமூகமாகவும் அதிகமான தமிழ் கலாச்சார ஒற்றுமையும் கொண்ட சமூகமாக திகழ்பவர்கள் இராவுத்தர்கள்தாம்.
ஆம் உண்மையில் 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும் சரி 20ஆம் நூற்றாண்டு இடைக்காலம்வரையும் சரி தமிழகத்தின் அதாவது மதராஸ் மாகாண தமிழ் ஜில்லாக்களை சேர்ந்த முகமதியர்கள் என்றாலே இராவுத்தர்கள் பெயர்தான் முன்னில் வந்து நிற்கும்.
மற்ற தமிழ் இந்து சமூக மக்களும் தங்களின் ஆதரவை இஸ்லாமியர்களில் ராவுத்தர்களுக்கு தருவர்.
உறவுமுறை வைத்து அழைத்து மத வேற்றுமை இன்றி எல்லாரும் ஒற்றுமையாக தமிழ் மக்கள் என்ற எண்ணமும் இந்திய தேசியவாதிகள் என்ற பெருமிதத்தோடு இருந்தனர்.
இப்போது வரலாறையும் அவர்கள் பூர்வீக பகுதிகளையும் பார்ப்போம்.
இராவுத்தர்கள் என்பவர்கள் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்கள்.
இவர்கள் தமிழகத்தின் 70% சதவீத தமிழக இசுலாமியர்கள்ஆவர்.
இவர்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள்.
இவர்கள் தந்தையை #அத்தா என்றும் அழைப்பார்கள். அத்தா என்பது தந்தை குறிக்கும் பழமையான தமிழ் சொல்லாகும்.
அதனால்தான் மற்ற தென்னிந்திய இஸ்லாமியர்கள் போல் அல்லாமல் ஹனபி பள்ளியை பின்பற்றுக்கின்றனர்.
இவர்கள் இசுலாத்தை ஏற்கும் முன்னரும் இராவுத்தர்களாக அறியப்பட்ட சைவர்கள் ஆவர்.
இவர்கள் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுப்பவர்கள்.
வரலாற்றில் குதிரை வீரர்களாகவும், குதிரை படைத் தளபதிகளாகவும், குதிரை வணிகர்கள் ஆகவும் இருந்தவர்கள், இவர்களை பற்றிய குறிப்பு மாணிக்கவாசகர் காலத்திலேயே சிவ புராணங்களில உள்ளது.
இவர்கள் அதிகம் உள்ள இடம் பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம்
அதாவது இன்றைய மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி போன்ற மாவட்டங்கள்.
ராவுத்தர்களை மற்ற தமிழர்கள் முறை வைத்து அழைப்பது அதாவது மாமன், மாப்பிள்ள, சியான், அத்தா போன்ற உறவுச் சொற்கள் அதிகம் புழங்கும் இடம் மதுரையாகவே உள்ளது.
இவர்கள் ராவுத்தர்களின் தமிழக வரலாற்றையே மதுரையிலிருந்துதான் தொடங்குவார்கள்.
சில வரலாற்று ஆய்வாளர்கள் இவர்கள் தென்தமிழக தேவர் சமூகத்தில் இருந்து இசுலாத்தை ஏற்றவர்கள் என கூறுகிறார்கள்.
மதுரையில் துபாஸ் காதிர் ராவுத்தர் என்ற பந்தல்குடி ஜமீந்தார், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் என்ற மிகப்பெரும் செல்வந்தர் இருந்துள்ளனர்.
பழனியாண்டவர் மாலை பாடிய புலவர் காதர் மொய்தீன் மஸ்தான், காங்கிரஸ் அரசியல்வாதி குலாம் முகைதீன் ராவுத்தர், முஸ்லிம்லீக் அரசியல்வாதி மதுரை செரீப் சாகிப் (எமபியாக இருமுறை இருந்தவர் 60 முதல் 70 வரை) கட்சதீவுக்காக் குரல் எழுப்பிய முக்கியமான தலைவர்களுள் மதுரை செரீப் சாகிப் ராவுத்தரும் ஒருவர்,
முன்னால் அமைச்சர் திமுக அரசியல்வாதி ரகுமான்கான் அவர்கள், திரையுலகில் பழம்பெரும் தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், பிரமாண்ட தமிழ் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், லியாகத் அலிகான், பாடலாசிரியர் மு மேத்தா, இயக்குநர் மோகன்ராஜா, நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் அமீர், நடிகர் மன்சூரலிகான், நடிகர் ஷாம் போன்றோர்கள் ஒருங்கிணைந்த மதுரையை பூர்வீகமாக கொண்ட பிரபல ராவுத்தர்கள்.
அடுத்து ராவுத்தர்கள் பூர்வீகம் பழைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தது.
அதாவது இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் விருதுநகர்.
இங்கு ராவுத்தர்கள் பெரும்பாலும் தேவர் சமூகத்தை போன்றே சீர்வரிசை வம்சப் பெயர் வைக்கும் பழக்க வழக்கம் கொண்டவர்கள்.
சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் நெருங்கிய தோழராகவும் பர்மாவின் அரசியல்வாதியாகவும் பின் மலாயாவில் நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் அமைச்சராக இருந்த கரீம் கனி,
விவசாய விஞ்ஞானி பத்மஶ்ரீ E.A. சித்திக், சூபி ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு, நடிகர் MK முஸ்தபா, மதராஸ் தொழிலதிபர் ஜமால் முகைதீன் ராவுத்தர், அரசியல்வாதி மற்றும் தென்னிந்திய வர்த்தக இளவரசர் என போற்றப்பட்ட ஜமால் முகமது ராவுத்தர், திமுக அரசியல்வாதி முன்னால் அமைச்சர் S.N.M உபையதுல்லா, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி F.M இப்ராகிம் கலிஃபுல்லா, அதிமுக அரசியல்வாதி அன்வர் ராஜா, முஸ்லிம்லீக் அரசியல்வாதி நவாஸ்கனி போன்றோர் ஒருங்கிணைந்த பழைய இராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல ராவுத்தர்கள்.
பிறகு ஒருங்கிணைந்த திருநெல்வேலி பகுதிகள் அதாவது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி இங்கு சைவ பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் திருநெல்வேலி ராவுத்தர்கள்.
அதனால் அவர்கள் மாட்டிறைச்சி உண்ண மாட்டார்கள் என பலர் கூறுவதுண்டு.
தக்கலை பீர் அப்பா என போற்றப்படும் சூபி இஸ்லாமிய சித்தர் தென்காசி ராவுத்தர் குடும்பத்தில் பிறந்தவர் சாமூர் என்னும் வகையறாவைச் சேர்ந்தவர்
இந்திய சிறந்த இசுலாமிய புலவர்களுள் ஒருவராக கருதப்படும் உமறுப்புலவர் அவர்கள் எட்டயபுரத்தில் பிறந்த ராவுத்தர் ஆவார்.
இந்திய சுகந்திர போராட்டவீரர் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கை உருவாக்கிய காயிதே மில்லத் அவர்கள் திருநெல்வேலி பேட்டை ராவுத்தர் ஆவார்.
கண்ணியமிகு காயிதே மில்லத் மதராஸ் மாகாணத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்தவர்.
இந்திய அரசியல் சாசனம் உருவாக்கிய சபையில் இருந்தவர், கேடிஎம் அகமது இப்ராஹிம் சாகிப் ஆல் இந்தியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்களில் ஒருவாக இருந்தார் இருவரும் அரசியல் சாசன சபையில் இருந்தவர்கள் (கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் தம்பியாவர் KTM அவர்கள்), அரசியல்வாதி மேடை முதலாளி மு.ந. அப்துர் ரஹ்மான் சாகிப்,
முஸ்லிம்லீக் கட்சியின் முன்னால் தென்காசி பாராளுமன்ற உருவினர் ஏ.கே ரிபாய், திமுக முன்னால் அமைச்சர் T.P.M மொகிதீன்கான், அதிமுக முன்னால் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் வக்பு வாரிய தலைவராக இருந்த Y.S.M யூசுப், இந்திய விண்வெளி அறிவியலாளர் நிகார் சாஜி ஆகியோர் ஒருங்கிணைந்த திருநெல்வேலியின் பிரபல ராவுத்தர்கள்.
தென் தமிழக ராவுத்தர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களாகவும் விவசாயிகளாகவும் பின்பு வெளிநாட்டு வேலைகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.
இன்று சென்னையில் வாழும் முஸ்லிம்களில் ராவுத்தர்களில் 80% பேர் தென் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்தான்.
பாளையம் என்று கூறும் இடங்களே அக்காலத்தில் ராவுத்தர்கள் அதிகம் இருந்த இடங்கள்தான் (சமீபகாலப் பெயர் மாற்றம் கொண்ட இடங்கள் அல்ல) அதாவது அக்காலத்தில் பாளையம் இறங்கியுள்ளது என்றால் குதிரை படையினர் முகாமிட்டுள்ளனர் என அர்த்தம்.
பழைய ஒருங்கிணைந்த தஞ்சை அதாவது தஞ்சாவுர், புதுக்கோட்டை, திருவாரூர், கும்பகோணம், நாகபட்டினம் என ராவுத்தர்கள் அதிகம் உள்ளனர்.
இங்கு ராவுத்தர் வீட்டு பெரியோர்கள், பெண்கள் வெள்ளை துப்பட்டி அணியும் வழக்கம் அதிகம் கொண்டவர்கள்.
நாகப்பட்டினத்தின் ஜமீந்தாராக முஹமது மீரா ராவுத்தர் என்பவர் இருந்துள்ளார், இந்த டெல்டா மாவட்ட ராவுத்தர்கள் பெரும்பாலும் மிராசுதார்களாக அக்காலத்தில் இருந்தவர்கள்.
குறிப்பாகக் கீழ் தஞ்சை பகுதிகளிலிருந்து இவர்கள் புதுக்கோட்டைவரை மிராசுகளாக பரவி இருந்துள்ளனர்.
மதராஸ் மாகாண அரசியல்வாதி மற்றும் புதுக்கோட்டை சமஸ்தான திவானாக இருந்த திவான் கான் பகதூர் கலிஃபுல்லா ராவுத்தர் சாகிப், காங்கிரஸ் அரசியல்வாதி 80களில் தமிழக எதிர்கட்சி தலைவராக இருந்த K.S.G ஹாஜா செரீப் அவர்கள், காங்கிரஸ் அரசியல்வாதி ESM பக்கிர் முகமது அவர்கள், இசைமுரசு நாகூர் ஹனிபா, நான்காம் நக்கீரர் குலாம் காதிறு நாவலர், பழம்பெரும் திரைத்துறை பாடலாசிரியர் கா.மு ஷெரீப்,
தமிழ் அறிஞர் தாவுத் ஷா, அறிவியல் தமிழ் தந்தை மணவை முஸ்தபா, மலேசிய காங்கிரசின் நிறுவனர்களில் ஒருவர் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எஸ்.ஓ.கே. உபைதுல்லா காதிர் பாஷா,
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இப்போது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் சாகிப் அவர்கள், எம்பி அப்துல்லா,
கவிஞர் ராஜாத்தி சல்மா, கவிஞர் மனுஷப்புத்திரன் போன்றோர் டெல்டா பகுதியை பூர்வீகமாக கொண்ட பிரபல ராவுத்தர்கள்.
கரூர் மாவட்டத்தில் ராவுத்தர்கள் உண்டு பள்ளப்பட்டி, அவரகுறிச்சி போன்ற பகுதிகளில் ஏராளமாக உள்ளனர்.
முஸ்லிம் சமூதாய தலைவராக திகழ்ந்த லத்தீப் சாகிப் அவர்கள் கரூரை சேர்ந்த ராவுத்தர் தான்.
காசியப்ப ராவுத்தர் என்ற மிகப்பெரும் மிராசுதாரும் திருச்சியில் இருந்துள்ளனர்.
அவர்களின் மகன் காங்கிரஸ் அரசியல்வாதி M.K முகமது இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள் (திருச்சி இப்ராஹிம் பூங்கா இவரின் பெயரில் தான் உள்ளது), அவரது மகனார் இந்தியாவின் இரண்டாவது மக்களவை உறுப்பினராக இருந்த MKM அப்துல் சலாம் ராவுத்தர் அவர்கள் இப்படி பலர் திருச்சியின் பிரபல ராவுத்தர்கள்.
கொங்கு பகுதியிலும் ராவுத்தர்கள் கணிசமாக இருக்கின்றனர்.
கொங்கு பகுதி என்பது இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் பகுதிகளில் ஆகும்.
இங்கும் ராவுத்தர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாக திகழ்கின்றனர்.
சில இடங்களில் அதாவது குன்னூர், உடுமலைபேட்டை, ஈரோட்டில் பலர் நிலக்கிழார்கள்.
திமுக நீண்ட கால பொருளாளராக இருந்த S.J சாதிக் பாட்சா, புலவர் தாராபுரம் காதர் முகையதீன் ராவுத்தர், முஸ்லிம் சமூதாய தலைவராக திகழ்ந்த முன்னால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்
அ.கா.அ அப்துல் சமது சாகிப் அவர்கள், அரசியல் பேச்சாளர் பழனிபாபா போன்றவர்கள் கொங்குப்பகுதியின் பிரபல ராவுத்தர்கள்.
பாலக்காடு இன்று கேரளாவில் இருந்தாலும் அங்கு அதிகம் பேசப்படும் மொழி தமிழ்தான்.
அங்கும் தமிழர்கள் உண்டு.கோவை, பாலக்காடு மாவட்டகளிலும் ராவுத்தர்கள் உண்டு.
கேரளத்திலும் ராவுத்தர்கள் குறிப்பாக தென் கேரளத்தில் அதிகம் உள்ளனர்.
இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தமிழக முதல் பெண் ஆளுநர் பத்மபூசன் பாத்திமா பீவி அவர்கள் ராவுத்தர் குடும்பத்தை சேர்ந்தவர்.
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர், நடிகர் மம்மூட்டி, நடிகர் ரகுமான், தமிழில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர்கள் பாசில், சித்திக், நடிகர் பகத் பாசில், நஸ்ரியா ஆகியோரும் கேரளத்தை சேர்ந்த ராவுத்தர்கள் தான்.
சைவ இலக்கியத்தில் இராவுத்தர் என்ற சொல்:
"ஐயமில் லாமன் முன்னின் றாவணி மூல நன்னாள்
துய்யபே ருலகுக் கெல்லாந் துளங்கி ராவுத்தராயன்
மெய்யைமெய் யுடைய மெய்யன் மெய்யடி யானை வேண்டிப்
பொய்யிலா மன்னன் காணப் பொய்ப்பரி மாற்றஞ் செய்தான்"
என்று ஆசிரியர் கூறுகிறார். இதில், 'துய்ய பேருலகுக் கெல்லாந் துளங் கிரா வுத்த ராயன்' என்று குதிரைச் சேவகராக வந்தவரைச் சிறப்பிக்கின்றார்.
இராவுத்தராயர் என்பது இராவுத்தர்களுக்குத் தலைவனென்று பொருள்படும்.
பல குதிரைகளோடு வந்தாரென்பது வரலாறாதலின் அக்குதிரைகளை நடத்தும் இராவுத்தர்களுக்கு அவர் தனித் தலைவரானார்.
சிவபக்தராகிய புலவர் ஒருவரால் தம்முடைய வழிபடு கடவுளைக் குறிக்கையில் இராவுத்தராயனென்ற சொல் வழங்கப்படுதலின் இச்சொல் மதிப்புடையதாகவே இருக்கவேண்டும்.
பின்னும், குதிரைகளைப் பெற்றுக்கொண்ட பாண்டிய மன்னன் அவற்றை யளித்தவருக்கு வரிசை வழங்க வேண்டுமென்றெண்ணி ஓரழகிய ஆடையை அளித்தா னென்பதை ஆசிரியர்,
"இந்நெறி மன்னர் மன்னன் இனிமைகூர்ந் திராவுத் தற்கு
நன்மைகூரு வரிசைத் தூசு நல்குவ மென்று நல்க"
என்று சொல்கிறார். இங்கே குதிரைச் சேவகராக வந்த கடவுளை 'இராவுத்தன்' எனக் குறிக்கின்றனர்.
இப்புராணத்திலே சோழனைக் கொண்டாழியிற் றாழ்த்த திருவிளையாட லென்னும் ஒரு வரலாறு உண்டு.
பக்தனாகிய ஒரு பாண்டியன் பொருட்டு அவன் பகைவ னாகிய சோழனொருவனைச் சிவபிரான் குதிரைவீரராக வந்து கொண்டாழியென்னும் ஒரு வகை நீர்நிலையில் ஆழ்த்தினாரென்ற செய்தி அதிற் சொல்லப்படுகிறது:
"துன்று பல்படைச் சோழனை யாழ்த்திய
கொன்றை மாலைக் குதிரை யிராவுத்தன்
வென்றி நீள்குரல் காட்டி விளங்கும் ஒன்மன்று ளாலயம் புக்கு மறைந்தனன்"
என்பது அதில் உள்ள ஒரு செய்யுள். இதன் கண், சோழனை ஆழ்த்திய குதிரை வீரராகிய சிவபிரான் ஆலயத்துள் மறைந்தாரென்று காணப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கடலோர கிராமமான கோட்டைப் பட்டிணத்தில்
இராவுத்தர் அப்பா
என்ற புகழ் பெற்ற
பெரியாரின் சமாதி
உள்ளது.
அப்பகுதியில்
முகம்மது ராவுத்தர்,
ராவுத்தர் நைனா முகம்மது, ராவுத்தர் சேக்காதி,போன்ற
பெயர்கள் பரவலாக
இருக்கிறது.
இதழாசிரியர்
தங்கநிலா.
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர்தான் சவூதி அரேபியாவின் சுலைமான் அல்ராஜிஹ்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை பலமுறை இவரது பெயரை வெளியிட்டுள்ளது.
ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் இவரது பெயர் இல்லை. காரணம்?
தமது திரண்ட செல்வத்தில் கிட்டத்தட்ட 16 பில்லியன் டாலரை நன்கொடையாக அளித்து உலகையே திகைக்க வைத்தார். இது வரலாற்றில் மிகப்பெரிய தனிநபர் நன்கொடைகளில் ஒன்றாகும்.
ஒரு பில்லியன் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 100 கோடி.
அவர் பணத்தை மட்டும் கொடையாகக் கொடுக்கவில்லை. மாறாக உலகின் மிகவும் லாபகரமான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றான அல்ராஜிஹ் வங்கியின் பங்குகள், ரியல் எஸ்டேட்கள், வணிகங்கள், கோழிப் பண்ணைகள், அல்ராஜிஹ் பல்கலைக் கழகம் மற்றும் பலவற்றையும் நன்கொடையாக வழங்கினார்.
அவரது திரண்ட செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கு சொத்துக்கள் இஸ்லாமியச் சேவை, கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக 'வக்ஃப்’ செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ளவை அவரது பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேட்டபோது, "அனைத்தையும் நான் அல்லாஹ்வுக்காகக் கொடுத்தேன்” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னார்.
வறுமையில் பிறந்த அவர் கோடீஸ்வரராக மாறுவதற்கு முன் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், கூரியர் பாயாகவும் பணியாற்றினார்.
இல்லாமையில் இருந்து அவரது செல்வத்தை உருவாக்கினார். இப்போது இல்லாதவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கிறார்.
சுலைமான் அல்ராஜிஹின் கதை வெறும் தானதர்மம் பற்றியது அல்ல. மாறாக..
உண்மையான வெற்றி எது என்பது பற்றியது. பேராசை எனும் வெறியை உடைத்தெறிவது பற்றியது. ஏழைகளை மேம்படுத்த செல்வத்தைப் பயன்படுத்துவது பற்றியது.
கோடிக்கணக்கான செல்வங்கள் தொடப்படாமல் அப்படியே இருக்க; கோடீஸ்வரர்கள் அப்படியே இறந்து போகும் இந்த உலகில்..
சுலைமான் அல்ராஜிஹ் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆம். வாழும்போதே மற்றவர்களுக்கு வாரி வழங்கினார்.
இதனால்தான் இவரது பெயர் இப்போது போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் இல்லை.
மனிதர்களின் பட்டியலில் அவரது பெயர் இல்லாமல் இருக்கலாம். அதனால் என்ன? வாரி வழங்கும் வள்ளலான அல்லாஹ்வின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருக்குமே.
✍️ நூஹ் மஹ்ழரி
வாழ்க்கையில் தோல்வி
விண்வெளி ஆராய்ச்சி என்றாலே நம் நினைவுக்கு வருவது ISRO அல்லது அனுபவம் மிக்க விஞ்ஞானிகள்.
ஆனால் தற்போது, அந்த விஞ்ஞான துறையில் தன்னுடைய பெயரை எழுதிக் கொண்டிருக்கிறார் — ஜைனுல் ஆபிதீன்.
உத்தரப் பிரதேசத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜைனுல் ஆபிதீனுக்கு, விண்வெளி துறையுடன் எந்த நேரடி தொடர்பும் இல்லை.
இருந்தாலும், 16 வயதிலேயே அவரின் ஆர்வம் “ஒரே ராக்கெட்டை பலமுறை பயன்படுத்த முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பியது. அந்தக் கேள்வியே அவரின் பாதையைத் தீர்மானித்தது.
விண்வெளி குறித்து இணையம், யூட்யூப், புத்தகங்கள், இலவச வகுப்புகள் — எல்லாவற்றிலிருந்தும் தன்னைத் தானே கற்றுக் கொண்டு மெதுவாக “ராக்கெட் விஞ்ஞானி”யாக மாறினார்.
BITS Pilani ல் இயற்பியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் போது 2020-ல், வயது 19 மட்டுமே இருக்கும் போது, Abyom SpaceTech and Defence என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார்.
Abyom என்பது Above and Below Vyom. அதாவது, Vyom என்பதன் பொருள் விண்வெளி. இந்த நிறுவனத்தின் ஒரே நோக்கம் — விண்வெளிக்கு செல்லும் செலவைக் குறைக்க வேண்டும், அதே சமயம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
படிப்படியாக அந்தக் கனவு வடிவம் எடுத்தது. Abyom நிறுவனம் இந்தியாவில் தனியார் துறையில் முதல் ராக்கெட் என்ஜின் சோதனை மையம் அமைத்தது.
ஆரம்பத்தில் நிதி பிரச்சனை இருந்தது; ஆனால் அந்தக் குறையைத் தீர்க்க, அவர்கள் ஒரு புத்திசாலித்தனமான வழியை கண்டுபிடித்தார்கள்.
“EdTech” துறையில் காலடி எடுத்து வைத்து, 3,500 மாணவர்களுக்கு விண்வெளி பயிற்சி கொடுத்து, அதிலிருந்து வந்த வருவாயைத் தங்களது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினர்.
இன்று ஜைனுல் ஆபிதீன் பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார் — கரம் வீர் சக்ரா விருது, உத்தரப் பிரதேச முதல்வர் விருது, மேலும் Boeing BUILD 2024 ஆண்டு வெற்றியாளர். அத்துடன், அவர் பெயர் Forbes Asia 30 Under 30 பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
இப்போது Abyom நிறுவனத்துக்கு புதிய முதலீடுகள் கிடைத்து, மறுபயன்பாட்டு ராக்கெட் கனவை நினைவாக்கும் பணியில் வெற்றியை நெருங்கி வந்துள்ளார்கள்.
Jaffna Muslim
மனிதநேயம் – மதத்தைத் தாண்டிய மரியாதை
பௌத்தர் நெஞ்சம் மலர்ந்ததோர் மணி,
மௌலவியின் கரம் தொட்ட பாணி —
மதம் மரம் போல வேறானாலும்,
நிழல் ஒரே உவமை தரும் தனி.
மொழி வேறு, வழி வேறு என்றாலும்,
மனிதம் மட்டும் ஒரே மொழி —
நெஞ்சில் கருணை விதையிட்டால்,
நிறைவாகும் மனிதம் மதவெறி ஒழியும்.
மனிதர் என்பதே மந்திரம் ஒன்று,
மதம் என்பதே அதன் வடிவம் —
மரியாதை என்பதே பூமியின்
மிக உயர்ந்த சமயப் பொக்கிஷம்.
கையிலே குர்ஆன், இதயத்தில் தர்மம்,
இரண்டும் சேரும் இசைதான் அமைதி —
அன்பே வழிபாடு, அன்பே மதம்,
அதுவே உண்மை மனித நெறி!
– தமிழன்புடன். கலைமகன் பைரூஸ் -
கசதி அஜீஸ் ராவுத்தர்
*தஞ்சாவூர் பல்கலை மாணவிக்கு 2.5 கோடி ஸ்காலர்ஷிப்*
• திருச்சூர் கரவண்ணூர் பகுதியை சேர்ந்த சித்தீக் – ஸபீனா தம்பதியரின் மகள் ஃபாத்திமா ஷெஹ்ஸீனா, +2யை லிட்டில் பிளவர் கான்வென்டில் முடித்து, JEE மெரிட்டில் தேர்வு பெற்று தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையில் B.Tech (Chemical Engineering) முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்றார்.
• தொடர்ந்து இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலையில் Advanced Chemical Engineering & Technology முதுகலை படிப்பில் முதல் ரேங்கும், சிறந்த ப்ராஜெக்ட் சமர்ப்பித்தலுக்கான விருதையும் பெற்றுள்ளார்.
• *உயரிய மதிப்பு வாய்ந்த மேரி கியூரி ஃபெலோஷிப் எனும் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான உலகளாவிய ஸ்காலர்ஷிப்பை* வென்றுள்ளார்.
• உயிர்காக்கும் மருந்துகளின் அதிக விலையை குறைக்கும் நோக்கில் சமூக நலனை கருத்தில் கொண்டு அவரது ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
MOHAMED ABDULLA























































































Comments
Post a Comment