Skip to main content

- குன்றுதோறாடும் குமரன் - முருகப் பெருமானை முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் எனக்கருதினால் அது முருகப் பெருமானுக்கு மேலும் புகழ் சேர்க்கும்


           தங்கநிலா டாட்காம்  

ஒடுக்கப்படுவோரின் 

உரிமைக்குரல்




Year 5 Week 42

02 11 2025

பெரியகுளம் முகம்மது

இதழாசிரியர்


தங்கநிலா
பார்க்கப்படும் உலகநாடுகள்
(Google blogger states)

இந்தியா சிரிலங்கா 
சிங்கப்பூர் மலேஷியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அரபு நாடுகள்
ஐரோப்பிய நாடுகள்
இந்தோனேஷியா
சீனா ஜப்பான் தென்கொரியா
சுவீடன் நார்வே


குன்றுதோறாடும் குமரன்

 ஆய்வுக் கட்டுரை
உள்ளே கடைசியாக இருக்கிறது.


 Yanabi Salaam Alaika


பாத்திமா வாழ்ந்தமுறை
உனக்குத் தெரியுமா



வீடியோ விளக்கம்.

மனிதர்களை நாய்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டன.

          விளம்பர பிரதிநிதி

தங்கநிலா டாட்காம்
இணைய வார இதழ்

விளம்பரப் பிரதிநிதிகளை
வரவேற்கிறோம்.


திருமணம்
புதுமனைப் புகுவிழா விளையாட்டுப் போட்டிகள்,
மீலாது விழாக்கள் பரிசளிப்பு விழாக்களின் வீடியோவை தங்கநிலா
இணைய வார இதழில் வெளியிட்டு
உலகெங்கும் காணச் செய்யலாம்.

விளம்பரம் சேகரித்து அனுப்பும் விளம்பரப் பிரதிநிதிகளுக்கு
தக்க கமிசன் வழங்கப்படும். வழங்கப்படும்.

விளம்பரப் பிரதிநிதிகளின் பெயர்
புகைப்படத்துடன்
தங்கநிலாவில்
வெளியிடப்படும்.

விருப்பமுள்ளோர்
TNAD என டைப்செய்து அடுத்து உங்கள் வாட்சப் நம்பரையும் டைப் செய்து
90 80 92 50 62 க்கு வாட்சப்பில்
அனுப்பி மேல் விபரம் பெறவும்.


இதழாசிரிர்
தங்கநிலா டாட்காம்



M.K.Stalin

நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள திரு. CP Radhakrishnan அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன்.

தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்!

Met our Hon’ble Vice-President, Thiru #CPRadhakrishnan, on the historic soil of Madurai. A proud son of Tamil Nadu who has risen to one of the highest offices of our Republic, his wisdom and sense of duty will continue to bring honour to both Tamil Nadu and India!


PalanivelThiyagaRajan

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மதுரையிலிருந்து புறப்பட்ட மாண்புமிகு துணை குடியரசுத் தலைவர்  
திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மதுரை விமான நிலையத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.

பி.டி.ஆர். பழனிவேல்
தியாகராஜன் அவர்கள் புத்தகம் பரிசளித்து வழி அனுப்பினார் .


M.K. Stalin

#AsianYouthGames2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு! 🥇🥇

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

Sports Development Authority of Tamilnadu Udhayanidhi Stalin


NazeerAhamed

வீரமங்கை அன்னை இந்திராவின் 41வது நினைவு நாளில் நாட்டுக்கான அவரது உழைப்பை நினைவு கூறுவோம்.


Mohamed  NoorulHudha

ஊடகத்துறையில் உள்ளோர்

தென்னிந்திய பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகப்பணியாளர் நலச் சங்கத்தில் இணைய மேலுள்ள செய்தியைப் படிக்கவும்.


Vairamuthu

கடந்தகாலத்தில் 

பெருமைக்குரிய பெரியவர்களின்

பெயர்களோடு ஒட்டியிருக்கும்

பின்னொட்டு

சாதிப்பெயர்கள் என்று

கருதப்படக் கூடாது

அவை

அந்தந்தக்காலப் புழக்கங்கள்

அடையாளங்கள் மற்றும்

ஆகுபெயர்கள்

ஜி.டி.நாயுடுவை

நாயுடு என்றே அழைக்கலாம்


உ.வே.சாமிநாதய்யரை

அய்யர் என்றே விளிக்கலாம்


வ.உ.சிதம்பரம்பிள்ளையைப்

பிள்ளை என்றே வழங்கலாம்


இவற்றுள் எதுவும்

அவர்களின் சாதி அபிமானத்தின்

சாட்சி அல்ல

அதைச் சாதிக்கு மட்டுமான

பெருமிதமாகக் கருதுவதுதான்

சமூகப் பிழை


அப்படித்தான்

பசும்பொன் 

முத்துராமலிங்கத் தேவர்

என்ற பட்டப் பெயரும்


இவை யாவும்

அவரவர் காலத்துக் குறியீடுகளே

அவற்றை அழிப்பதற்கு

நமக்கென்ன உரிமை?


நானோ என் மகன்களோ

சாதிப்பெயர்களை

இட்டுக்கொள்ள மாட்டோம்


என் பாட்டன்களோ

என் தந்தையோ

இட்டுக்கொண்டதை

நாங்கள் எப்படித் தடுக்க முடியும்

அல்லது அழிக்க முடியும்


சாதிக்கு முன்

சாதிக்குப் பின் என்று

இரண்டு காலங்கள் உண்டென்று

வரலாறு வகிர்ந்து சொல்லட்டும்


ஆதலால்,

ஓங்கிச் சொல்லலாம்

தேவர் திருமகன் வாழ்க;

தேவர் திருப்பெயர் வாழ்க;

தேவர் தியாகங்கள் வாழ்க.

#தேவர்_ஜெயந்தி


Ilyas Riyaji

திருமாவளவன் அவர்களின் வலது பக்கம் நிற்பவர் 

“முன்னாள் IAS அதிகாரி வரப்பிரசாத். இவர் விருப்ப ஓய்வு பெற்று ஆந்திரா YSR காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து MLA ஆனவர். பிறகு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்” என்று இவரை நமக்கு அறிமுகப்படுத்திய திருமா அவர்கள், “பின்னர் இவர் BJP-யில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

வெற்றி பெற்றிருந்தால் ஒன்றிய அமைச்சராக ஆகியிருப்பார்” என்று கூறினார். 

அப்போது இல்யாஸ் ரியாஜி சொன்னார்: “நல்லவேளை தோற்றுவிட்டார், வெற்றி பெற்றிருந்தால் அவர் சங்கியாக அல்லவா போயிருப்பார்” என்று. அதற்குதான் இந்த சிரிப்பு.

அதற்கு திருமா கூறினார்: “இல்லை, இவர் ஓர் அம்பேத்கரிஸ்ட், ஒடுக்கப்பட்டோரின் பக்கத்தில் தான் நிற்பார்” என்று சொன்னார்.

பிறகு திருமா அவர்களின் பேட்டி வெளியான 28.10.2025. Times of India நாளிதழை பார்வையிட்டோம். |சந்திப்பு நாள்: 28.10.2025.|


Sirsjul Hasan

நியாயமான கேள்வி
அறம் சார்ந்த வினா.

வெறும் மூன்று விழுக்காடே உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு-

அதுவும் நேற்று வரை பாஜக அடிமையாக இருந்து இன்று அணி மாறி வந்த ஒருவருக்கு

துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்று இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.

பதினேழு அல்லது பதினெட்டு விழுக்காடு உள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு அந்தப் பதவியைத் தரக்கூடாதா,

முஹம்மதின் மகன்களுக்கு அந்தத் தகுதி இல்லையா என்று வினா எழுப்பியுள்ளர் மஜ்லிஸ் கட்சியின் தலைவர் உவைசி அவர்கள்.

அறச்சீற்றமுள்ள வினா.

உவைசி அவர்கள் இன்றுதான் இந்த வினாவை முன்வைக்கிறார்.

அக்டோபர் 24ஆம் நாளே இது தொடர்பாக நான் பதிவிட்டிருந்தேன்.

அந்தப் பதிவு வருமாறு.
_______________

\\பிகாரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பதினெட்டு விழுக்காடு.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தியா கூட்டணிக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள்.

தேஜஸ்வி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மகிழ்ச்சி. சரியான தேர்வு. மாற்றுக்கருத்து இல்லை.

துணை முதல்வர் பதவி யாருக்குத் தெரியுமா?

நேற்றுவரை பாஜகவுக்கு அடிமையாக இருந்து இன்று அணி மாறிவந்துள்ள முகேஷ் சஹானி என்பவர் துணை முதல்வராம்.

ஏன் அந்தத் துணை முதல்வர் பதவியை 18 விழுக்காடு உள்ள முஸ்லிம் சமுதாயத்திற்குத் தரக்கூடாதா?

தரக் கூடாதாம்.

ஏன் கூடாது?

முஸ்லிம்களுக்குப் பதவி தந்தால் “மதரீதியான அணிதிரட்டல்” நடைபெற்றுவிடுமாம்.

சொல்கிறார்கள் சில அறிவுஜீவிகள்.

சரி, அப்படியானால் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டுமாம்?

“சிந்தாமல் சிதறாமல் வாக்களித்துவிட்டாயா?”

“ஆமாம்.”

“போ..உன் வேலை முடிந்தது. தெருவோரம் ஏதாவது கடை வைத்துப் பிழைத்துக்கொள். உனக்கெல்லாம் பதவி தந்தால் இந்துத்துவ சக்திகள் விழித்துக்கொள்ளும்.”

அடப்பாவிகளா....

இப்படியா ஒரு சமுதாயத்தை மொட்டை அடிப்பீர்கள்?

இப்படியா ஒரு சமுதாயத்தின் துணிச்சலைக் காயடிப்பீர்கள்?

கொடுமை.\\
-சிராஜுல்ஹஸன்


நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

மூன்று விஷயங்களில் அல்லாஹ் உடன்படிக்கை செய்து கொள்கிறான்.

1. தர்மத்தால் ஒரு அடியானின் சொத்து குறைவதில்லை.

2. ஒரு அடியான் அநீதி இழைக்கப்பட்டு அதில் அவன் பொறுமை காத்தானெனில், அவனுக்கு அல்லாஹ் மரியாதையை அதிகப்படுத்தித் தருவான்.

3. (தேவை தீர்ந்தும் கூட) யாசகத்தின் வாசலை ஒரு அடியான் திறந்து வைத்தால், அல்லாஹ் அவனுக்கு தரித்திரத்தின் வாசலை தி


SAJalal


Sm Hithayathullah


CelonVoice



நயினார்

உழைத்துத்தான் சாப்பிடுகிறார்கள்

ஆனாலும்
படுக்க இடம் தேடி அலையும்போது
இவர்களை பிச்சைக்காரர்களாக
காட்டிவிடுகிறது மழை.

இவர்களுக்கு
நேரத்திற்கு ஒரு முகமூடியை
மாட்டி விடுகிறது சென்னை.
காலையில் கூலித்தொழிலாளிகள்
மாலையில் நடைபாதை வாசிகள்
மழை காலங்களில்
பேருந்து நிலைய பயணிகள்.

நாடோடிகளாய்
இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
ஆதார் அட்டையிலிருந்து
ரேசன் அட்டை வரை
அத்தனையும் எப்போதும் இருக்கும்
வேலை மட்டும்
வந்து வந்து போகும்.

அவசரத்திற்கு
காவல்துறையின் சந்தேக கேசுக்கு
அழைத்துச் செல்பவர்கள்
முதல் குற்றப் பத்திரிகையில்
எழுதும் கதைக்கு
இவர்கள் கதாநாயகர்களாவதுமுண்டு.

சாலையோர சுவர்களுக்கு
வண்ணமடிப்பது முதல்
மழைநீர் கால்வாய் தோண்டுவதை வரை
அரசின் சீரமைப்பில்
இவர்களுக்கு பங்கிருக்கிறது
என்றாலும்


தேர்தல் காலங்களில்
பாரபட்சமின்றி கட்சிகளின்
பிரச்சாரங்களுக்கு இவர்களின்
வாழ்க கோஷங்களானது
இவர்களையும்
குவார்ட்டரும் பிரியாணியுமாய்
இந்நாட்டு மன்னர்களாக
வாழ வைத்துவிடுகிறது.

நயினார்


Tamil Now


Tamil Trending News


SA Jalal


Jaqh Dindugal


DW தமிழ்


KilakaraiZTimesNrws

கீழக்கரை, இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வு.

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் சாதனை

 ராமநாதபுரம், வேலுமாணிக்கம் உயர்நிலைப் பள்ளியில் 24.10.2025 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில்
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கூடைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

பள்ளி நிர்வாகம், முதல்வர், மற்றும் ஆசிரியர்கள், மாணவிகளின் சிறந்த விளையாட்டு ஆற்றலைவும் உடற்கல்வித் துறையின் அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.



SyedIbrahim NavasAli


Celon Voice


SA Jalal

நேக்கு வேற யாரைத் தெரியும்?..



தங்கநிலா
இதழாசிரியர்

அருமை நண்பர்
அருணகிரி சங்கரன் கோவில் அவர்கள்
அவரது கனடா நண்பர் ஆனந்துடன்
தேனி மாவட்டத்தில் சுற்றுலா.



#Prince Mateen

King and Queen of Selangor at their Crown Prince's wedding


மலேசியாவில் ஓரு திருமணம்

தமிழா தமிழா


அட்வகேட் ஆசிக்


ராகுல் காங்கிரஸ்

ஈரான்-பாகிஸ்தான்-துருக்கி ரயில் பாதை டிசம்பர் மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது

கடல் வழியுடன் ஒப்பிடும்போது இந்த ரயில் பாதை வழியாக பயணிப்பது சுமார் 13 முதல் 15 நாட்கள் வரை சேமிக்கும்,






Madawala News


SA Jalal


AbdulKaheem

நிஜமான மாற்றம் எங்கே தொடங்குகிறது?

நம்மில் பலர் பொருளாதார வளர்ச்சியையும், கல்வியையும், அரசியலையும் மாற்றினால், நாடு முன்னேறிவிடும்னு நினைக்கிறோம். ஆனால், குர்ஆன் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறது:

"ஒரு சமூகம் தன்னுடைய உள்மனதை (அன்ஃபுஸை) மாற்றும் வரை, அல்லாஹ் அதன் நிலையை மாற்ற மாட்டான்."

اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌
எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.
(அல்குர்ஆன் : 13:11)

இந்த வசனத்தின்படி, பொருளாதாரம் முக்கியம், கல்வி முக்கியம், அரசியல் முக்கியம்—இவை அனைத்தும் முக்கியம், எல்லாவற்றிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்தும் பழங்கள் தான், வேர் இல்லை.

வேர் என்ன? வேர் தான் அன்ஃபுஸ்.

இந்த வசனம் இரண்டு விதமான மாற்றங்களைக் குறிக்கிறது:

1. தகய்யுருல்லாஹ் (அல்லாஹ்வால் மாற்றம்): நாம் வலுவாக இருக்கிறோமா அல்லது பலவீனமாக இருக்கிறோமா என்பதை அல்லாஹ்வே தீர்மானிக்கிறான், மனிதன் அல்ல. மனிதனின் எந்த ஒரு திட்டமும் (Strategy) நம்மை பலப்படுத்த முடியாது.

2. தகய்யுருல் கவ்ம் (சமூகத்தால் மாற்றம்): ஒரு சமூகத்தால் தானே கொண்டு வரப்படும் மாற்றம். இதுதான் அன்ஃபுஸின் மாற்றம்.

சமூகம் அதன் அன்ஃபுஸை மாற்றும்போதுதான், அல்லாஹ்வால் கொண்டு வரப்படும் தகய்யுருல்லாஹ் ஏற்படுகிறது. 

ஒரு சமூகத்தின் முக்கியப் பணி அதன் அன்ஃபுஸை மாற்றுவதுதான். 

அதை மாற்றும்போது, அல்லாஹ் அவர்களுக்கு கௌரவம், அதிகாரம் மற்றும் உயர்ந்த நிலையை அளிக்க முடிவு செய்கிறான்.


அன்ஃபுஸ் என்றால் என்ன?

* அன்ஃபுஸ் என்பது நஃப்ஸ் (சுயம்) என்பதன் பன்மை.

* இது ஒரு மனிதனின் நடத்தை மற்றும் மனப்பான்மை ஆகியவற்றில் தாக்கம் செலுத்தும் அனைத்து உளவியல் சக்திகளையும் குறிக்கிறது.

* ஒரு மனிதனின் மனநிலை, அவனது சிந்தனைகள், அவனது ஆசைகள், உலகைப் பார்க்கும் அவனது கோணம், அதன் விளைவாக அவனுள் எழும் உணர்வுகள்—இவை அனைத்தும் சேர்ந்துதான் அன்ஃபுஸ் ஆகிறது.

மாற்றம் நம்மில் இருந்து, நம்ம மனசுல இருந்து தொடங்கட்டும்!
---
சையத் சஅதுல்லாஹ் ஹுசைனி

#foodforthought #changeyourlife


இந்தியர் நல்வாழ்வுப் பேரவை குவைத்


துபாயில் அமெரிக்க பல்கலைக் கழகம் சார்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த சேவைக்காக குவைத் சுப்ரீம் கார்கோ குழுமத்தின் நிறுவனர் #அபூபக்கர்_சித்திக் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்தியர் நல்வாழ்வு பேரவை குவைதர மண்டலம் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெறிவித்து மரியாதை செலுத்தபட்டது.

இந்நிகழ்வில் குவைத் மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லா கான், மண்டல பொருளாலர் முகம்மது காசீம், மண்டல துணை தலைவர் ஆக்கூர் முஜிபுர் ரஹ்மான்,

மண்டல நிர்வாக குழு உறுப்பினர் எருமபட்டி கமருதீன், மண்டல தொண்டரணி செயலாளர் பொதக்குடி அப்துல் ரஷீது ஆகியோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Priya

மணலைக் கயிராகத் திரிக்கப் போகிறாராம்.

5 வருடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது
செய்திருக்க வேண்டியததானே.


சொர்க்கப்பூமி தஞ்சாவூர்.


கசதி அஜீஸ்ராவுத்தர்


Ashraf Ali


குடும்பக் கிழவனார்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்
1939 ஜூலை 10ஆம் தேதி அரிசன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. மதுரை நகரத்தில் வாழ்ந்த காங்கிரஸ் பிரமுகர் வைத்தியநாதையர் இதனை முன்னின்று நடத்தி னார்.

தமிழ்நாட்டில் அரிசனங்களுக்கும் பெருந்தெய்வ ஆலயங்களுக்கும் உற்ற உறவினை ஏறத்தாழக் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நந்தன் கதையின் மூலம் முதன்முதலாக அறிகிறோம். 

அதன் பின்னர் வைணவப் பெரியாரான இராமாநுசர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கருநாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டையில் (திருநாராயணபுரம் என்று வைணவர் வழங்குவர்) திருமால் கோயிலுக்குள் அரிசனங்களை அழைத்துச் சென்ற செய்தியினை ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவத்தால் அறிகிறோம்.

1939இல் மதுரையில் பரபரப்பூட்டிய அரிசன ஆலயப் பிரவேச நிகழ்ச்சியின் மறுபக்கத்தினை அதாவது, அதற்கு மேல்சாதியினர் காட்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வரலாற்றுக் கட்டுரைகளிலும் நூல்களிலும் முழுமையாகக் காணமுடியவில்லை.
இந்நிகழ்ச்சி ஒரு அரசியல்வாதியின் தனிமனித முயற்சியாகவே காட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு எதிரான அரசியல், சமூகப் பின்னணி பற்றிய செய்திகள் பின்வந்தவர்களால் அறியப்படவே இல்லை எனலாம். 

1963இல் மதுரைக் கோயிலில் பி. டி. இராசன் முயற்சியால் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 

இதையொட்டி வெளியிடப்பட்ட இ. பழனியப் பன் எழுதிய ‘கோயில் மாநகர் ‘ என்ற திருக்கோயிலாரால் வெளியிடப் பட்ட 300 பக்கங்களையுடைய நூலில் கோயில் வரலாற்றில் முக்கிய மான இந்த நிகழ்ச்சி ஓரிடத்தில்கூடக் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் இந்நுழைவு நடந்த காலத்தில் அரிசன ஆலயப் பிரவேசத்தைக் கண்டித்தும் எதிர்த்தும் பிராமணப் பெண்கள் இருவர் பாட்டுப் புத்தகங்களை வெளியிட்டுள்ளனபர்.

1939இல் ‘மதுரை பேச்சியம்மன் கோயில் ரஸ்தா லேட் பத்மனாபய்யரவர்கள் பாரி பாகீரதி அம்மாள் ‘ என்பவர் ‘ஆலய எதிர்ப்பு கும்மி பாட்டுப் புஸ்தகம் ‘ என்ற பெயரில் இரண்டணா விலையில் 16 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 

1940இல் ‘மதுரை கமலத் தோப்புத் தெரு எஸ். தர்மாம்பாள் ‘ என்பவர் ‘ஆலயப் பிரவேச கண்டனப் பாட்டுப் புஸ்தகம் ‘ என்ற பெயரில் இரண்டணா விலையில் 28 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

 உணர்ச்சிமயமான இந்தப் புத்தகங்களின் பெயர்களில் ஒரு ‘தெளிவின்மை ‘ காணப்படு வது கவனிக்கத் தகுந்தது.

1937 மார்ச் தொடங்கி மதுரைக் கோயிலில் ஆர். எஸ். நாயுடு என்பவர் நிர்வாக அதிகாரியாக இருந்திருக்கிறார்.

மதுரையில் புகழ்பெற்று விளங்கிய வழக்கறிஞர்களில் ஒருவரும் காங்கிரஸ் தலைவருமான வைத்தியநாதையரும், ஆர். எஸ். நாயுடுவும் மதுரைக் கோயிலில் ‘அரிசன ஆலயப் பிரவேசம் ‘ நடத்தத் தீர்மானித்தனர். 

1939இல் வைத்தியநாதையர் இது குறித்துப் பொதுக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். 

ஜூன் மாதத்தில் இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் மதுரை நகருக்குள் சில பொதுக் கூட்டங்களையும் அவர் நடத்தினார்.

நுழைவுக்குப் பத்து நாள் முன்பிருந்தே மதுரையில் தனது இல்லத் தில் (இப்போதுள்ள காலேஜ் ஹவுஸ் விடுதியின் பின்புறம்) சுமார் 50 பேர்களுக்கு சத்தியாக்கிரகப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்.

ஆனால் ஆலயப் பிரவேச நாளை அவர் வெளியிடவில்லை. 

வைத்திய நாதையரின் முயற்சியினை அறிந்த ஆலயத்தின் பிராமணப் பணியா ளர்கள், சனாதனிகள் ஆகியோர் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. 

இந்நிலையில் ஜூலை 8ஆம் தேதி திடீரென்று 6 பேரை உடன் அழைத்துக்கொண்டு வைத்தியநாதையர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டார்.

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த அறுவரில் மதுரை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் தமிழக அமைச்சராக இருந்தவர்), ஆலம்பட்டி முருகானந்தம், மதிச்சியம் சின்னையா, விராட்டிபத்து பூவலிங்கம், முத்து ஆகிய ஐவரும் அரிசனர். 

ஆறாவது நபர் விருதுநகர் சண்முக நாடார். 1 (அக்காலத்தில் நாடார்களுக்கும் கோயில் நுழைவு மறுக்கப்பட்டிருந்தது).

இதைக் கண்ட ஆலய அர்ச்சகர்களும், வேதம் ஓதும் ‘அத்யயன பட்டர் ‘ என்ற பிரிவினரும் இந்தத் தி
டீர் முயற்சியைக் கடுமையான சொற்களால் (மட்டும்) எதிர்த்தனர். 

இருப்பினும் அன்றும் மறுநாளும் ஆலய பூசைகளை முறைப்படி செய்தனர். 

10.7.39 அன்று காலை பூசை முறைகாரர் சுவாமிநாத பட்டர் என்பவர். 

மீண்டும் 10ஆம் தேதி பெருமளவில் அரிசனர்கள் கோயிலுக்குள் நுழையப் போவதைப் பிராமணர் அறிந்து மதுரை (தானப்ப முதலித் தெருவில் இருந்த) ‘மங்கள நிவாசம் ‘ என்னும் பங்களாவில் கூடினர்.

வைத்தியநாதை யரைப் போலவே அக்காலத்தில் மதுரையில் புகழ் பெற்றிருந்த வழக்கறிஞர்கள் கே.ஆர். வெங்கட்ராமையர் என்பவரும் ஆறுபாதி நடேச ஐயர் என்பவரும் இவர்களுக்கு உதவினர். 

இவர்களில் ஆறுபாதி நடேச ஐயர் ஏற்கெனவே ‘வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் ‘ மதுரை நகரத் தலைவராகவும் இருந்தார்.

வழக்கறிஞர் களின் ஆலோசனைப்படி பிராமணர்கள் 9ஆம் தேதி இரவு முதல் கோயிலைப் பூட்டிவிட முடிவு செய்தனர்.

10ஆம் தேதி அர்ச்சக முறைகாரரான சுவாமிநாத பட்டர் இதற்கு உடன்படவில்லை. 

எனவே 9ஆம் தேதி இரவு பூசை முடிந்ததும் அர்ச்சகர்கள் கோயிலைப் பூட்டி, சாவியை எடுத்துச் சென்றுவிட்டனர்.

‘கோயில் நிர்வாக அதிகாரி ஆர். எஸ். நாயுடு சனாதனிகள் செய்யவிருந்த ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்பார்த்து அதற்குத் தகுந்த காரியங்களைச் செய்தார் ‘ என்கிறார் ஒரு தகவலாளி.

இதன்படி 10ஆம் தேதி காலையில் மேஜிஸ்டிரேட் ஒருவர், சுவாமிநாத பட்டர் ஆகியோர் முன்னிலையில் ஆர்.எஸ். நாயுடு பூட்டியிருந்த கோயிற்கதவுகளைத் திறந்தார். 

திட்டமிட்டிருந்தபடி அன்று ஏராள மான அரிசனங்கள் ஆலயப் பிரவேசம் செய்தனர்.

கே. ஆர். வெங்கட்ராம ஐயரும் ஆறுபாதி நடேச ஐயரும் போட்ட திட்டங்கள் தோற்றுப் போயின. 

வெங்கட்ராமையர் வன்முறையை எதிர்பார்த்துத் தன் கட்சிக்காரரும்

நண்பருமான பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் உதவியை நாடியதாகத் தெரிகிறது. 

ஆனால் தேவர் உதவி செய்ததாகத்

தெரியவில்லை....

பேராசிரியர் தொ.பரமசிவன்

(முன்னாள் தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)


இறைவனின் திருப்பெயரால்...

மூன்று மாத அடிப்படைக் கல்வி சேர்க்கை

நமது ஜமாஅத் சார்பில் மதுரை அவனியாபுரத்தில் அல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம் பெண்களுக்கு தங்கும் விடுதி வசதியுடன் இயங்கி வருகிறது.

முஸ்லிம் பெண்களுக்கு உணவு கட்டணத்துடன் மூன்று மாத இஸ்லாமிய அடிப்படைக்கல்வி மூன்றாம் பேட்ச் ஆரம்பமாக உள்ளது

மூன்று மாத அடிப்படை வகுப்பிற்காக புதிய சேர்க்கை இன்ஷா அல்லாஹ் நவம்பர் 2025 {10-11-2025} திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

*அட்மிஷன் நடைபெறும் நாள்: 10-11-2025 திங்கள்கிழமை
நேரம்: காலை 10 மணி..!*

மூன்று மாத அடிப்படைக் கல்வி கோர்ஸில் சேர விரும்புவோர் கீழ்கண்ட எண்ணில்....

மாணவி பெயர்: __
கல்வி:_
ஊர் :__
செல் நம்பர் : _
ஆகியவற்றை SMS மூலம் மட்டும் பதிவு செய்யவும். 9976649599
(குறிப்பு: வாட்ஸ்அப் வழியாக வரும் பதிவு ஏற்று கொள்ளப்படாது.)

பதிவு செய்தபின் புக்கிங் எண் SMS மூலம் தெரியப்படுத்தபடும்.

மற்ற தகவல்கள் விரைவில் தெரியப்படுத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.

தகுதி
1) தமிழ் எழுத - படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2) 14 வயது முழுமையடைந்திருக்க வேண்டும்.
3) குர்ஆன் ஓரளவு ஓத தெரிந்திருக்க வேண்டும்.
4) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்!

புத்தகம் மற்றும் உணவு கட்டணம் ஆகியவற்றுக்கு மூன்று மாதத்திற்கு ₹.10,500 (பத்தாயிரத்து ஐநூரு) மட்டும் பெறப்படும்.

குறைவான இடங்களே இருப்பதால் தகுதியானவர்கள் தற்போதே கீழ்க்கண்ட அலைப்பேசியை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முகவரி:
அல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்,
42, MMC காலனி, அவனியாபுரம்,
மதுரை – 625012.

தொடர்புக்கு : 9976649599
(காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)

உண்மைகள்தமிழ்




Trichi Syfudeen

அரபு மொழியில் இருந்து தமிழுக்கு கிடைத்த சொற்கள்
அசல் أصل. மூலம்
மாஜி ماضي முந்தைய
அத்து حد வரம்பு
முகாம் مقام தங்குமிடம்
அத்தர் عطر மணப்பொருள்
முலாம் ملام மேற்பூச்சு
அமுல் عمل நடைமுறை
ரத்து رد விலக்கு/நீக்கம்
அனாமத் أنعمت. கேட்பாரற்ற
ரசீது رصيد ஒப்புப் படிவம்
அல்வா حلوه இனிப்பு
ராஜி راضي உடன்பாடு
ஆஜர் حاظر வருகை
ருஜு رجوع உறுதிப்பாடு
ஆபத்து آفت துன்பம்
ருமால் رمال கைக்குட்டை
இனாம் انعام நன்கொடை
லாயக் لائق தகுதி
இலாகா علاقة துறை
வக்கீல் وكيل வழக்குரைஞர்
கஜானா خزانة கருவூலம்
வக்காலத்து وكالة பரிந்துரை
காலி خالي வெற்றிடம்
வகையறா وغيره முதலான
காய்தா قاعدة தலைமை/வரம்பு
வசூல் وصول திரட்டு
காஜி قاضي நீதிபதி
வாய்தா وعده தவணை
கைதி قيد சிறையாளி
வாரிசு وارث உரியவர்
சவால் سوال அறைகூவல்/கேள்வி
சர்பத் شربة. குளிர்பானம்
ஜாமீன் ضمان பிணை
சரத்து شرط நிபந்தனை
ஜில்லா ضلعة மாவட்டம்
தகராறு تكرار. வம்பு
தாவா دعوة வழக்கு
திவான் ديوان அமைச்சர்
பதில் بدل மறுமொழி
பாக்கி باقي நிலுவை
மஹால் محل மாளிகை
மகசூல் محصول அறுவடை/ விளைச்சல்
மாமூல் معمول வழக்கம்.

இது பற்றிய செய்தியை தஞ்சாவூர் வல்லத்தில் 2007 ல் நடந்த TNTJ தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் கண்காட்சி அரங்கில் இருந்தது.


CPIM தமிழ்நாடு


Mohamed Ameen


அபு பர்ஹானா


திருநவேலி , நாரோயில் வட்டார இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இயக்குனர் மீரா கதிரவன் இயக்கி விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஹபீபி திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த வருடம் இதே நாளில் வெளியான இந்தப் போஸ்டரை பார்க்கையில் அத்தனை இன்பம் !!

மலையாள திரைப்படங்களில் காட்டுவது போல இஸ்லாமியர்களின் வாழ்வியலையும் அழகியையும் மேலும் அவர்களின் வாழ்வோடு இயைந்த அழகிய தமிழையும் தமிழ் செல்லுலாய்டில் முழு நீளப்படமாக இன்னும் யாரும் எடுக்கவே இல்லையே என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருந்தது.

இஸ்லாமிய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கூட அதற்கான முயற்சியில் இறங்கவில்லை என்பது இன்னும் வேதனையான விஷயம் !!!

தமிழ் சினிமாக்களில் இஸ்லாமிய சமூகத்தை எவ்வாறு காட்சிப்படுத்தினார்கள் என்பதை கொஞ்சம் கவனித்தால் , அந்த சமூகத்தின் மேல் ஊடகத்தின் காழ்ப்புணர்வும் வெறுப்புணர்வும் விளங்கும்.

பழைய படங்களில் வேட்டி உடுத்துக்கிட்டு, தாடி வச்சிட்டு , சால்வை போட்டுகிட்டு அரைகுறை தமிழும் உருதும் கலந்து பேசுவது போல காட்சிப்படுத்தி , இந்த மண்ணுக்கும் மொழிக்கும் அந்நியவனாக காட்ட முயற்சிச் செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்....

மழிக்கப்பட்ட மீசை, நெற்றியில் காய்ப்பு, கண்ணுக்கு கீழ் கருப்பு மை , ஜிப்பா என அடையாளப்படுத்தும் முறையில் மாற்றம் வந்தது.

அதன் பிறகு விஜயகாந்த் , அர்ஜுன் போன்றவர்களின் திரைப்படங்களில் வில்லன்களாக குறிப்பாக தீவிரவாதிகளாக அடையாளம் காட்டி இந்த தேசத்துக்கே எதிரானவர்கள் போல உருவகப்படுத்தினார்கள். அதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது.

அத்திபூத்தாற் போல சீனு ராமசாமி , K. V. ஆனந்த் போன்றவர்களின் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை உண்மை தன்மையோடு காட்டியிருப்பார்கள்.

இஸ்லாமியர்களின் வாழ்வியலை போன்று தான் திருநவேலி , நாரோயில் வட்டார பேச்சு வழக்கும் அதன் அழகியலும் இன்னும் முழுமையாக காட்சிப்படுத்தவில்லை. ஒரு சில படங்களை தவிர !!!

சாமி , ஒஸ்தி திரைப்படத்தில் பயன்படுத்திய வட்டார வழக்கில் வராத ஈர்ப்பும் மகிழ்ச்சியும் பரியேறும் பெருமாள் கர்ணன் ,பைரி, வாழை, பைசன் போன்ற படங்களில் நெல்லை தமிழை கேட்கும் போது வந்தது.

ஏனென்றால் சும்மா எல போலன்னு பேசிவிட்டால் அது எங்க ஊரு பேச்சு ஆகிவிடாது. வாழ்விலோடு பிணைந்த பேச்சு வழக்கு தான் நம் மனதோடு இணையும்...

இந்தக் கதையை தான் முதல் படமாக எடுக்க வேண்டுமென விரும்பியதாகவும் , அதனை சாத்தியப்படுத்த இருபது வருடங்கள் ஆகியிருக்கென்றும் ஒரு அறிக்கையில் இயக்குனர் மீரா கதிரவன் தெரிவித்திருப்பார். 

படம் தயாரான பிறகும் திரைக்கு வர தாமதமாகி கொண்டுதான் இருக்கிறது.

தன் சமூகத்தின் வலிகளையும் அழகியலையும் சொல்லியிருக்கும் ஹபீபி திரைப்படத்தை காணும் ஆவலில் இருக்கும் ஒரு ஹபீபியின் அன்பின் வாழ்த்துக்களும் முத்தங்களும் !! இது உங்களின் கனவு படம் மட்டும் அல்ல !! ஒரு சமூகத்தின் கனவு...

இத்திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் !!!

அன்பின் வழியது உயிர்நிலை !!!!

Meera Kathiravan


Karuthu Kannayiram


என் புள்ள உசுரோட இருந்தால் கூட 35 லட்சத்தை (20+10+5) சம்பாதிச்சி கொடுத்திருக்க மாட்டான்ப்பா.... நீங்க இப்படி தொடர்ந்து கூட்டம் போடுப்பா....

அப்பதான் தாய்மார்கள் வாழ்வில் ஒளி பிறக்கும்ப்பா...



Syeed


Jaffna Muslim

பாலஸ்தீனத்தில் மோசமான, யுத்த கள நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதில் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக,

பாலஸ்தீன பத்திரிகையாளர் தியாகி மரியம் அபு தக்காவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான “பத்திரிகை ஹீரோஸ்” விருது வழங்கப்பட்டுள்ளதாக வியன்னாவில் உள்ள சர்வதேச பத்திரிகை நிறுவனம் அறிவித்துள்ளது.

உண்மையை அறிக்கையிட்டு, வெளிக்கொணர்வதில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அபாயங்களை எடுத்துரைத்து, பத்திரிகை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் மீதான விதிவிலக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் உலகில் எங்கும் இல்லாத ஆபத்துக்களை எதிர்கொள்வதால் இந்த விருது முக்கியமாக கருதப்படுகிறது. எனினும் மரியம் அபு தக்கா இந்த விருதை பெற்றுக்கொள்ள, தற்போது உயிருடன் இல்லை. அவர் தியாகியாகி விட்டார்.

www.jaffnamuslim.com



Jaffna Muslim

இந்தியா - கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நஸ்ரேன் சூசை, குமரி மாவட்ட கத்தோலிக்க கிறித்தவ சமூகத்தவரின் முதன்மை மதகுரு.

இனயம் ஜமாஅத் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஹமீது 26-10-2025 அதிகாலை வபாத் ஆகி, மாலை ஐந்து மணிக்கு ஜனாஸா அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்த வேளையில் மரண வீட்டின் முன்புறம் வந்துநின்ற வாகனத்தில் இருந்து கோட்டாறு பிஷப் தனது உதவியாளர்களுடன் இறங்கி வீட்டுக்குள் வந்தார்.

ஜனாஸா குளிப்பாட்டி கொண்டு வந்து உடல் கஃபன் பொதிவது முழுவதும் அருகில் நின்று பார்த்த
பிஷப், ஜனாஸாவைப் பின்தொடர்ந்தது சுமார் அரை கி.மீ தூரம் பள்ளிவாசல் வரை நடந்து வந்தவர், ஜனாஸா தொழுகை நடந்து முடிவது வரை ஓரமாக நின்றதுடன்,

ஜனாஸா அடக்கம் செய்யும் இடம் வரை வந்து ஒருபிடி மண் தனது கையால் எடுத்து கொடுத்து அடக்கம் முடிவது வரை அங்கிருந்து விட்டு திரும்பி சென்றது நெகிழ்வான காட்சிகள்.

நடந்து செல்லும் வழியில் பிஷப் அவர்களிடம் பேசினேன்.

இருவருக்குமான நட்பு முப்பது ஆண்டுகளுக்கு மேலானது என்று கூறிய பிஷப், ஏ.எஸ்.ஹமீது அவர்கள் இனயம் ஜமாஅத் தலைவராக இருந்த நேரத்தில், இனயம் பங்குதந்தையாக பொறுப்பு வகித்த போது துவங்கிய நட்பு தற்போது வரை தொடர்வதாகவும்,


ஏ.எஸ்.ஹமீது தனது பிள்ளைகள் திருமணங்களின் போது தேடி வந்து அழைப்பதும், பண்டிகை நாட்களில் விருந்து பரிமாறுவது உட்பட நெருக்கமான நட்பை பேணியவர் என்றும் தெரிவித்தார்.

இன்றைய ஞாயிற்றுக்கிழமை தனது பிஸியான மாலை நேர ஆராதனை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து விட்டு இஸ்லாமிய நண்பர் நல்லடக்கம் நிகழ்ச்சியில் கலந்து சிலமணி நேரம் செலவழித்த பிஷப் அவர்கள் செயல் போற்றுதலுக்குரியது.


Colachel Azheem


DW தமிழ்


Gopalakrishnan P




Abdul Rahman


தமிழா தமிழா


NowshadAli Baqavi


*ஆலிம்களுக்கான மூன்று மாத தொடர் திறன் மேம்பாட்டு வகுப்புகள்*

➤ அரபி மொழி இலக்கணம்.
➤ வஹ்ஹாபிச குழப்பங்களுக்கான மறுப்புகள்.
➤ மாடர்ன் அரபி & அடிப்படை கணிணி பயிற்சி.

வாரம் மூன்று தினங்கள். காலை 10 - மதியம் 12.

பதிவு செய்ய கடைசி நாள்: நவம்பர் 07.

இது நேரடி வகுப்பாகும். ஆன்லைன் இல்லை.

ஏற்பாடு: நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா.

https://www.facebook.com/share/p/18g1bNWQCt/

#nowshuupdates | #nowshuposts


Peer Mohamed


இன்று (25.10.2025) காலை, எனது நாடாளுமன்ற அலுவலகத்தில், ஜமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் மாணவர் அணியான Students Islamic Organisation of India (SIO)-இன் மாநிலத் தலைவர், அகில இந்தியத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் என்னைச் சந்தித்து ஆழமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

திட்டமிடப்பட்ட அரை மணி நேர உரையாடல், செறிவும், ஆழமும் கொண்டதன் காரணமாக, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

1941ல் தொடங்கப்பட்ட இந்த ஜமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் மாணவர் அணியில் ஆரம்பக் கட்டத்தில் பயணித்த பலர், தங்கள் பேச்சுத் திறனாலும், எழுத்துத் திறமையாலும், தலைமைப் பண்பாலும் உயர்ந்த பதவிகளையும், தலைமைப் பொறுப்புகளையும் அடைந்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.

“நீ ஆத்திகனா? நாத்திகனா? நீ யார்?” என்று என்னைக் கேட்டால், கடந்த 25 ஆண்டுகளாக, நான் உலக சகோதரத்துவத்தை என் வாழ்க்கை நெறியாகக் கொண்டு பயணித்து வருவதாக உரக்கச் சொல்வேன். 

நான் மட்டுமல்ல என் குழந்தைகளுக்கும் அதையே போதித்துள்ளேன்.

இதுபற்றி நான் இதுவரை வெளிப்படையாக பேசியது இல்லை. எனினும், முதன்முறையாக ஒரு அமைப்பின் பிரதான கொள்கை, நான் பின்பற்றும் Universal Brotherhood - உலக சகோதரத்துவம் என்று சொல்வதைக்கேட்டு உச்சி குளிர்ந்தேன். 

அதுவே என்னை மிகவும் கவர்ந்தது. இந்த ஒத்த சிந்தனையே, இந்த இளைஞர்களிடம் என்னை இன்னும் இணக்கமாக ஆக்கியது.

இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய அறிவுரையான, “உலகில் தோன்றிய அனைவரும் ஒரு தாய் மக்கள். சமத்துவ சமுதாயத்தை உருவாக்குங்கள், பிறருக்கு தொந்தரவு இன்றி, ஆழ்மனதில் தவறான எண்ணங்கள் இல்லாமல், பிறர் பிணிகளை நீக்கி சகோதரத்துவத்துடன் வாழுங்கள்” என்பதை அடிப்படையாகக் கொண்ட இவர்களின் தத்துவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து, அனைவரையும் சகோதர-சகோதரிகளாகக் கருதி ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற இவர்களின் பார்வை என் மனதைத் தொட்டது.

இன்று என்னைச் சந்தித்தவர்களில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்கள், தொழில்கல்வி பயின்றவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் என பலதரப்பட்ட, பண்பு மிக்க இளைஞர்கள் இருந்தனர்.

அவர்களுடனான உரையாடல் எனக்கு பெரும் உற்சாகத்தையும், மன மகிழ்ச்சியையும் அளித்தது.

உலக சகோதரத்துவத்தை மையப்படுத்திய எங்கள் கலந்துரையாடல், நம்பிக்கையையும், மன எழுச்சியையும் தந்தது.

இத்தகைய சித்தாந்தங்களைப் புரிந்து கொள்ள, பரந்த மனப்பான்மை அவசியம்; இல்லையெனில், சர்ச்சைகளே மிஞ்சும்.

16 இலக்குகளுடன் செயல்படும் இந்த மாணவர் அமைப்பின் முக்கிய இலக்குகளில் இரண்டை நாம் இணைந்து செயல்படுத்துவோம் என உறுதியளித்தேன்:

1. மனிதத்தைப் போற்றுதல்: சாதி, மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து, மனிதத்தைப் போற்றுவதற்கு சிந்திக்கவும், செயல்படவும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

2. பொதுநலப் பயணம்: ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தனியாகத் தீர்க்க முடியாது. எனவே, அரசியலைக் கடந்து, பொதுநல நோக்கில் இளைஞர்களுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறேன்.

என்னுடன் ஏற்கனவே பல தன்னார்வலர்கள் இணைந்திருக்கின்றனர்.

இதேபோல், உங்களில் பலர் என்னுடன் இணைந்து, உங்கள் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவும், எனது அரசுப் பணிகளுக்கு தேவையான தன்னார்வப் பயணங்களை மேற்கொள்ளவும் ஒருவருக்கொருவர் பயன்படுவோம். 

இதனால், நாமும் மக்களும் பயனடைவோம் என்று எடுத்துரைத்தேன்.

இந்த சந்திப்பு மிகவும் நிறைவாக அமைந்தது. இதுபோன்ற விசாலமான சிந்தனை கொண்ட இளைஞர்கள் இருக்கும்போது, சாதி, மதம், இனம், மொழி வேறுபாடுகளற்ற நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்குவது மிகவும் எளிது என்று உறுதியாக நம்புகிறேன்.

அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
25.10.2025

#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko


பரமக்குடியைச் சேர்ந்த விளையாட்டு வீரனுக்கு வாழ்த்துக்கள்

பஹ்ரைன்‌ நாட்டில்
நடைபெற்று வரும் ஆசிய தடகளம் போட்டியில் 400 மீட்டர் சீனியர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளி பதக்கத்தை வென்ற 🏆 இராமநாதபுரம் மாவட்டம் ,பரமக்குடி

 பொன்னையாபுரத்தை சேர்ந்த
#சரண்மேகவர்ணம் ❤️ தமிழகத்திற்கும்,இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கும் பரமக்குடிக்கும் பெருமைசேர்த்த தம்பி அவர்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🫂 🔥 💐

#AsianYouthGames2


Jaffna Muslim


யாரும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள் எந்த நாட்டிலும் இல்லை. 

எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள் எந்த நாட்டிலும் இல்லை, யாரும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. 

அமெரிக்காவின் வரலாற்றில் சிறந்த பொருளாதாரம் எங்களிடம் உள்ளது, மேலும் இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

உலகில் எந்த கடற்படையும் எங்கள் கடற்படையுடன் போட்டியிட முடியாது, ஒரு நாடு அவ்வாறு செய்தால், அதை அழிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். 

அமெரிக்க வரலாற்றில் ஒரு டிரில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள மிக உயர்ந்த பாதுகாப்பு பட்ஜெட்டை நான் அங்கீகரித்துள்ளேன்.

ஒவ்வொரு மாதமும், போர் என்ற விகிதத்தில் 8 மாதங்களில், 8 போர்களை நாங்கள் நிறுத்தினோம்.

- டிரம்ப் -

www.jaffnamuslim.com


Jaffana Muslim


பொது வாழ்க்கையில் நுழைய எனது முஸ்லிம் அடையாளத்தை மறைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு என் மாமா எனக்கு அறிவுறுத்தினார், ஆனால் எனது பதில்: நான் நேற்று, இன்று, நாளை ஒரு முஸ்லிம். "நான் நியூயார்க்கில் ஒரு முஸ்லிம் மனிதனாக இருப்பேன். 

நான் சார்ந்திருப்பதில் பெருமைப்படும் மதத்தை மாற்ற மாட்டேன், 

நிழலில் என்னைத் தேட மாட்டேன், நான் வெளிச்சத்தில் என்னைக் கண்டுபிடிப்பேன்

(நியூயார்க் நகர மேயர் பதவிக்கான, ஜனநாயக கட்சி வேட்பாளர் சொஹ்ரான் மம்தானி)

www.jaffnamuslim.com

கசதி அஜீஸ்ராவுத்தர்


Ellorum Nammudan



ArtyNybe


Maruthambal


Pandian


Maruthanmbal


MUHAMMAD Rabik


Pesu Tamizha Pesu


Lyric Woods


Tamilan


Secular Hyderabathi

On This Day — October 27, 1605
Mughal Emperor Jalaluddin Muhammad Akbar, one of India’s greatest rulers, passed away at 64 after a short illness.


Abdul Fareed


முனைவர் முஜிப்புர் ரஹ்மான்

இந்த இடம் தான் அது...?! 🏹 🏹 😯
****************************************

மக்கா முகர்ரமா நகரில் இருந்து மதீனா முனவ்வரா நகருக்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஹஜ்ரத் அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு புலம் பெயர்ந்து செல்லும் போது

நூறு சிவப்பு நிற ஒட்டகைகளுக்கு ஆசைப்பட்டு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொலை செய்ய சுராகத் இப்னு மாலிக் என்பவர் வில் பூட்டிய அம்புடன் பின் தொடர்ந்து வருகிறார்.

இதையறிந்து கொண்ட ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்ய..

சுராகாவை அவர் பயணித்து வந்த குதிரையுடன் பூமி உள்ளிழுக்க ஆரம்பித்தது.

உடனே அவர் கதறியபடி மன்னிப்பு கேட்க..

அவர் விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் பின் தொடர்கிறார்.

மீண்டும் பூமியில் இழுக்கப்பட...

மன்னிப்பு கேட்கிறார்.

இவ்வாறு மூன்று முறை இழுக்கப்பட்டு

மன்னிப்பு கேட்கிறார்.

அவர் பின் தொடர்ந்து வந்து பூமியால் இழுக்கப்பட்ட இடம் இது தான்...!

#makkamukarrama #madeenamunawwara
#hijrath #hazrathmuhammedsal..
#surakaibnumalik


Mohamed Ismail

படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள்.

அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும்.

அப்படியென்றால் சுமார் 300 வருடங்கள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு நம் நினைவகத்தில் திறன் இருக்கிறது என்று அர்த்தம்.

*அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான்*

வியப்பூட்டும்....!
✍️ மதுரை.,இஸ்மாயில்.


எண்ணம் போல்வாழ்வு

ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.

ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.

அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன.

அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன.

 மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார்.

அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். 

அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான்.

மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன்.

முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.

இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார்.

 தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான்.

அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார்.

அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார்.

.
அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்

புரியவில்லை” என்றார் அரசர்.

எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். 

எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான்.

அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்.........


Mohamed Farook


Sadham Husain


🔰"ஆயிஷா என்ற
இஸ்லாமிய அன்னை இறந்து
வெகு நேரமாகிவிட்டது.

மத சடங்குகள் முடிந்து
நல்லடக்கம் செய்ய வேண்டிய நேரம்
நெருங்கி கொண்டிருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும் வந்து
அஞ்சலியும் செலுத்தப்பட்டுவிட்டது.

ஆனாலும்....

யாரையோ...
எதிர்பார்த்து
உறவுகள் காத்திருக்கிறார்கள்

பதைபதைப்போடு
வாசலை பார்த்து நிற்க்கின்றார்கள்

இடையில்...
காவல்துறை உளவு பிரிவினர்
முஸ்லீம் ஜமாத்தார்களிடமும்
குடும்ப உறுப்பினர்களிடமும்

ரகசியமாக....
ஏதோ கூறி செல்கிறார்கள்.

சரி என்பது போன்று அவர்கள்
தலையாட்டுவதையும்
புரிந்துகொள்ள முடிகிறது.

நேரம் செல்லச்செல்ல...
சந்தேகம் வலுத்த காவல் துறை

நேரிடையாகவே மிரட்டுகிறார்கள்

அவர் வந்தவுடன்
அஞ்சலி செலுத்த
நீங்கள் அனுமதிக்க கூடாது"

அவரை
புறந்தள்ள வேண்டும்
எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்
என்று காவல் துறை மிரட்டுகிறது.

சரி....
அப்படியே செய்கிறோம் என்று
ஜமாத்தார்கள சொல்கிறார்கள்.

இதற்க்கிடையே...

ஒரு...
வில்லு வண்டி வந்து நிற்கிறது…

நீண்ட ஜிப்பா
அடர்ந்த தாடி
குல்லா அணிந்த
பாத்திகா ஓதக்கூடியவர் போன்றவர்
(துவா செய்யக்கூடிய ஹஜ்ரத்)
வண்டியில் இருந்து இறங்குகிறார்.

#கண்களில்_கண்ணீர்_தாரை_தாரையாக_பெருக்கெடுத்து_ஓடிக்கொண்டே_இருந்தது.

ஆயிஷா அம்மையாரின்
உடல் அருகே செல்கிறார்.

அந்த குடும்பமே

அவரை தழுவி
கைகளை பற்றி கொண்டு
அஞ்சலி செலுத்த வந்தவருக்கு
ஆறுதல் சொல்கிறது"

இவரும் கண்ணீருடன்
அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.

பின்பு உடனடியாக....

வந்த வண்டியில் ஏறி
கண்ணீருடன் விடை பெறுகிறார்.

பொறுத்திருந்த ஜமாத்தார்கள்

இறுதி ஊர்வலம்
தொடங்க வேண்டும் என சொல்ல

ஜனசா ஊர்வலம்
தொடங்குகிற நேரத்தில்...

காவல் துறை ஓடி வருகிறது...

கொஞ்சம் பொறுங்கள்
நாங்கள் எதிர் பார்க்கின்ற #தேவர்

எப்படியாவது...

#இறந்துவிட்ட_தன்_தாய்_ஆயிஷாவிற்க்கு_அஞ்சலி_செலுத்த_வருவார்.

நாங்கள் அவரை
கைது செய்ய வேண்டும்
என்று சொல்கிறார்கள்.

இப்பொழுதுதானே...

தேவர் வந்து
அஞ்சலி செலுத்திவிட்டு போகிறார்
என்று சொல்ல....

காவல்துறை
கூடுதல் பதற்றம் அடைந்து
கோபத்தின் உச்சிக்கு சென்றது.

எப்போ வந்தார் எப்படி வந்தார்...

இப்போதுதானே....
வில்வண்டியில் வந்து
தன் தாய்க்கு மரியாதை செய்தார்
என்று சொல்ல....

காவல் துறைக்கு'
ஏன் தெரியபடுத்த வில்லை

உங்களிடம்...
என்ன சொல்லி வைத்திருந்தோம்...
என்று மிரட்ட...

அந்த குடும்ப பெரியவர்கள்
அமைதியாக சொன்னார்கள்.

நம்பியவர்களை
கைவிடாத குடும்பத்தில்
உதித்த தேவருக்கு....

தாய் பாலூட்டி வளர்த்தவர் #ஆயிஷா_அம்மையார்.

அந்த அம்மாவிற்கு
அஞ்சலி செலுத்த

எங்கள் வீட்டு
#மூத்த_பிள்ளை_தேவர்
வந்து சென்றபோது....

நாங்கள் எப்படி...
எங்கள் பிள்ளையை
காட்டி கொடுப்பது என்று சொல்ல...

காவல்துறை திரும்பி சென்றது"

தேவர்
எந்த ஜாதிக்கும்
மதத்துக்கும் சொந்தமில்லை

#தேவர்_ஒரு_மாமனிதர்.

தேவர் அவர்களை
ஒரு சாதிக்கு சொந்தமான
தலைவராக சுறுக்கி விடாதீர்கள்…

#அவர்_அனைவருக்குமானவர்...

உங்களின் இந்த செயல்பாடே
சில சாதி மக்களின் வெறுப்பை
அவர் மேல் உருவாக்குகிறது...

ஆனால்....
#தேவர்_அவர்கள்_மனித_நேயம்_கொண்ட_மாமனிதர்_அனைவரும்_கொண்டாடப்பட_வேண்டிய_அற்புத_மாமனிதர்
#அவருடைய_சமுதாயத்தை_சார்ந்த_நண்பர்கள்_அவருக்கு_நீங்கள்_செய்யும்_சிறப்பே_அவரை_பொதுவான_மனிதராக #போற்றுவதுதான்_சாதி_சங்கத்தில்_அவரின்_புகழை_அடைக்காதீர்கள்.


நட்புகளே....உறவுகளே...🔰"ஆயிஷா என்ற
இஸ்லாமிய அன்னை இறந்து
வெகு நேரமாகிவிட்டது.

மத சடங்குகள் முடிந்து
நல்லடக்கம் செய்ய வேண்டிய நேரம்
நெருங்கி கொண்டிருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும் வந்து
அஞ்சலியும் செலுத்தப்பட்டுவிட்டது.

ஆனாலும்....

யாரையோ...
எதிர்பார்த்து
உறவுகள் காத்திருக்கிறார்கள்

பதைபதைப்போடு
வாசலை பார்த்து நிற்க்கின்றார்கள்

இடையில்...
காவல்துறை உளவு பிரிவினர்
முஸ்லீம் ஜமாத்தார்களிடமும்
குடும்ப உறுப்பினர்களிடமும்

ரகசியமாக....
ஏதோ கூறி செல்கிறார்கள்.

சரி என்பது போன்று அவர்கள்
தலையாட்டுவதையும்
புரிந்துகொள்ள முடிகிறது.

நேரம் செல்லச்செல்ல...
சந்தேகம் வலுத்த காவல் துறை

நேரிடையாகவே மிரட்டுகிறார்கள்

அவர் வந்தவுடன்
அஞ்சலி செலுத்த
நீங்கள் அனுமதிக்க கூடாது"

அவரை
புறந்தள்ள வேண்டும்
எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்
என்று காவல் துறை மிரட்டுகிறது.

சரி....
அப்படியே செய்கிறோம் என்று
ஜமாத்தார்கள சொல்கிறார்கள்.

இதற்க்கிடையே...

ஒரு...
வில்லு வண்டி வந்து நிற்கிறது…

நீண்ட ஜிப்பா
அடர்ந்த தாடி
குல்லா அணிந்த
பாத்திகா ஓதக்கூடியவர் போன்றவர்
(துவா செய்யக்கூடிய ஹஜ்ரத்)
வண்டியில் இருந்து இறங்குகிறார்.

#கண்களில்_கண்ணீர்_தாரை_தாரையாக_பெருக்கெடுத்து_ஓடிக்கொண்டே_இருந்தது.

ஆயிஷா அம்மையாரின்
உடல் அருகே செல்கிறார்.

அந்த குடும்பமே

அவரை தழுவி
கைகளை பற்றி கொண்டு
அஞ்சலி செலுத்த வந்தவருக்கு
ஆறுதல் சொல்கிறது"

இவரும் கண்ணீருடன்
அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.

பின்பு உடனடியாக....

வந்த வண்டியில் ஏறி
கண்ணீருடன் விடை பெறுகிறார்.

பொறுத்திருந்த ஜமாத்தார்கள்

இறுதி ஊர்வலம்
தொடங்க வேண்டும் என சொல்ல

ஜனசா ஊர்வலம்
தொடங்குகிற நேரத்தில்...

காவல் துறை ஓடி வருகிறது...

கொஞ்சம் பொறுங்கள்
நாங்கள் எதிர் பார்க்கின்ற #தேவர்

எப்படியாவது...

#இறந்துவிட்ட_தன்_தாய்_ஆயிஷாவிற்க்கு_அஞ்சலி_செலுத்த_வருவார்.

நாங்கள் அவரை
கைது செய்ய வேண்டும்
என்று சொல்கிறார்கள்.

இப்பொழுதுதானே...

தேவர் வந்து
அஞ்சலி செலுத்திவிட்டு போகிறார்
என்று சொல்ல....

காவல்துறை
கூடுதல் பதற்றம் அடைந்து
கோபத்தின் உச்சிக்கு சென்றது.

எப்போ வந்தார் எப்படி வந்தார்...

இப்போதுதானே....
வில்வண்டியில் வந்து
தன் தாய்க்கு மரியாதை செய்தார்
என்று சொல்ல....

காவல் துறைக்கு'
ஏன் தெரியபடுத்த வில்லை

உங்களிடம்...
என்ன சொல்லி வைத்திருந்தோம்...
என்று மிரட்ட...

அந்த குடும்ப பெரியவர்கள்
அமைதியாக சொன்னார்கள்.

நம்பியவர்களை
கைவிடாத குடும்பத்தில்
உதித்த தேவருக்கு....

தாய் பாலூட்டி வளர்த்தவர் #ஆயிஷா_அம்மையார்.

அந்த அம்மாவிற்கு
அஞ்சலி செலுத்த

எங்கள் வீட்டு
#மூத்த_பிள்ளை_தேவர்
வந்து சென்றபோது....

நாங்கள் எப்படி...
எங்கள் பிள்ளையை
காட்டி கொடுப்பது என்று சொல்ல...

காவல்துறை திரும்பி சென்றது"

தேவர்
எந்த ஜாதிக்கும்
மதத்துக்கும் சொந்தமில்லை

#தேவர்_ஒரு_மாமனிதர்.

தேவர் அவர்களை
ஒரு சாதிக்கு சொந்தமான
தலைவராக சுறுக்கி விடாதீர்கள்…

#அவர்_அனைவருக்குமானவர்...

உங்களின் இந்த செயல்பாடே
சில சாதி மக்களின் வெறுப்பை
அவர் மேல் உருவாக்குகிறது...

ஆனால்....
#தேவர்_அவர்கள்_மனித_நேயம்_கொண்ட_மாமனிதர்_அனைவரும்_கொண்டாடப்பட_வேண்டிய_அற்புத_மாமனிதர்.


#அவருடைய_சமுதாயத்தை_சார்ந்த_நண்பர்கள்_அவருக்கு_நீங்கள்_செய்யும்_சிறப்பே_அவரை_பொதுவான_மனிதராக #போற்றுவதுதான்_சாதி_சங்கத்தில்_அவரின்_புகழை_அடைக்காதீர்கள்.

நட்புகளே....உறவுகளே...


ப. அப்துல்சமத்


சவுதி அரேபியா ஜித்தாவில் இந்திய துணை தூதரகத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் என்ற அடிப்படையில் மேதகு துணை தூதர் பஹத் அகமதுகான் சூரி

 அவர்களையும் தூதரக ஹஜ் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து கடந்து ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த புனித ஹஜ் பயணிகளுக்கு சிறந்த முறையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்து.

அதேப்போல் நடப்பாண்டிலிலும் சிறந்த முறையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினேன்.

இந்நிகழ்வில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்தின் (IWF) ஜித்தா மண்டல தலைவர் கீழை இர்ஃபான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


Mufthi OmarSheriff Qasimi

“அல்லாஹ்வின் தூதரே, நான் உங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். நான் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்!”

இவை, ஃபக்ருத்தின் பாஷா, மதீனாவை பிரிட்டிஷ் ராணுவமும் மற்றும் அரேபிய தீபகற்பத்தின் அரபு பழங்குடி அரபுகளும் முற்றுகையிடப்பட்டபோது நபி (صلى الله عليه وسلم ) அவர்களின் கப்ரு சரீஃபுக்கு அருகில் கூறிய வார்த்தைகள்.

ஆங்கிலேயர்களும் அரேபிய தீபகற்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அரபு பழங்குடியினர்களும் மதீனாவையும் நபி (صلى الله عليه وسلم ) அவர்களின் கப்ரு சரீபையும் முற்றுகையிட்டபோது,
அங்கு ஹீரோ பக்ருத்தீன் பாஷா அதை பாதுகாத்து அரணாக இருந்தார்.
ஆனால்,

அவருடைய பிம்பத்தையும் மார்க்க பற்றையும் ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே சிதைக்க முயன்றனர்,

மேலும், அவரது மதிப்பை மக்களின் இதயங்களில் குறைக்க முயன்றனர்.

அவரும் அவரது வீரர்களும் பசி, நோய் மற்றும் வலியை அனுபவித்தனர்,

வெட்டுக்கிளிகளை சாப்பிட்டனர், அல்லாஹ்வின் தூதரின் நகரத்தை பிரிட்டிஷ் கொடியின் கீழ் ஆங்கிலேயர்களிடமும் சில துரோக அரேபியர்களிடமும் ஒப்படைப்பதை எதிர்த்து நின்றனர்!

ஹீரோ ஃபக்ருத்தீன் அவர்களின் சிதைக்கப்பட பொய்யான வரலாறு பண்டைய காலங்களிலிருந்து இன்று வரை ஆங்கிலேயர்களின் கட்டளைப்படியும் அவர்களின் நிதியுதவியுடனும் எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு, முஸ்லிம்களுக்கு மத்தியில் வெளியிடப்பட்டு வருகிறது.

எழுதியவர்: முஹம்மது அல்-ஃபாத்திஹ்


Dr.InigoIruthayaraj


Xavier Chinnappan


CMN Saleem

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்,
ரூஹ் அகாடமி, இராமநாதபுரம் எகனாமிக் சேம்பர், பாரதிநகர் முஸ்லிம் நல அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கல்வி ஆர்வலர்கள் மற்றும் ஜமாஅத் சபைக்கான கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு கல்வி ஆர்வலரும், ஒவ்வொரு முஹல்லா ஜமாஅத்தும்,
இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படிக்கின்ற உயர்கல்வியில் ஆர்வமுடைய
ஒரு 5 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சொல்லுகின்ற உயர்கல்விப் பிரிவில் படிக்க வைத்திட முயற்சி செய்யுங்கள்.

 அடுத்த 5 ஆண்டுகளில் மகத்தான மாற்றங்களை உங்கள் முஹல்லாவில் காண்பீர்கள்.

இதுதான் இந்த இரண்டு மணிநேர பயிலரங்கத்தின் மைய்ய கருத்தாக இருந்தது.

இந்த பதிவை பார்க்கின்ற நீங்களும் உங்கள் முஹல்லாவில் முயற்சி செய்யுங்கள்.

கல்வியில் முஸ்லிம்கள் முன்னேற வேண்டும் என்று இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பேசிக் கொண்டே இருப்பது.

தொலைநோக்கு செயல்திட்டமும் அர்ப்பணிப்பு மிகுந்த களப்பணியும் மட்டுமே மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டு வரும்.


Karuthu Kannayiram

முதல் உறுதிமொழியாக இனி எக்காரணத்தை கொண்டும் தப்பித்து ஓட கூடாது என உறுதிமொழி எடுக்கப்பட்டது. 😂😂😂


Yasir RM

அன்று நாகூர் அனிபா என்ற பெயருக்காக இசையமைப்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டதை போல, இன்று சஃப்ராஸ்கான் என்ற பெயருக்காகவே அணியில் அவர் சேர்க்கப்படவில்லை என்று குற்றசாட்டுகள் வந்துள்ளதை போல, Opinion Tamil ஆரம்பிக்கும் போது எனக்கும் அந்த பிரச்சனை வந்தது.

யாசிர் என்ற பெயருடன் இயங்கினால் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது, மத கண்ணோட்டம் புகட்டுவார்கள், வாய்ப்பு கிடைக்காது, ஒரு பொது பெயருடன் இயங்குங்கள் என்று பலரும் சொன்னார்கள்.

அப்போ ஆரம்பிச்சது தான் இந்த "நான் உங்கள் யாசிர்". ஒவ்வொரு வீடியோவிலும் அழுத்தி சொன்னேன். இன்று வரை சொல்கிறேன்.

ஆரம்பத்தில் தோழர்கள் அதை கிண்டலாக சொல்வார்கள். ஆனால் இன்று எல்லா youtube சேனல் நெறியாளர்களும் நான் உங்கள் அல்லது நான் என்று தங்கள் பெயருடன் அறிமுகம் செய்கிறார்கள்.

அது எல்லோரும் பயன்படுத்தும் அடையாளமாக தற்போது மாறியுள்ளது.

யாசிர் என்ற பெயர் வைத்து கொண்டு பலவற்றை பேச முடியாது தான். 

பல தடைகள் வரும் தான். 

ஆனால் அந்த அடையாளத்தை எல்லோரையும் ஏற்க வைக்க வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தேன். 

இன்று என்னை விமர்சனம் செய்பவர்கள் 200 உபி, கொத்தடிமை சேனல், திமுக சேனல், fake news அல்லது நான் பேசும் கருத்துக்கு எதிர்கருத்து தான் வைக்கிறார்களே தவிர விமர்சனத்திற்கு கூட என் மதத்தை இழுத்ததில்லை.

அதற்கு காரணம் நான் பேசும் திராவிட அரசியல். ஒருவர் எந்த மதமாகவும் இருக்கலாம் ஆனால் அவர் பேசுவது என்ன கொள்கை என்பதே இங்கு பார்க்கப்படும். 

அப்படி தான் நானும் பார்க்கப்படுகிறேன்.

ஒருவருக்கு கீழ் இயங்காமல் சுயமாக இயங்குவதால் கூட பெயர் அழுத்தம் உருவாகாமல் இருக்கலாம். 

ஆனால் என்னுடைய பெயர் காரணமாகவே வாய்ப்புகள் பறிபோகிறது என்பது தெரியும். 

ஆனால் பெயரை விட விரும்பவில்லை. 

நான் உள்ளிட்ட பலர் தங்கள் பெயரை மாற்ற வாய்ப்புகளை பெறுவதைவிட, இந்த சமூகம் தன் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். 

அந்தக் கண்ணோட்டத்தை மாற்றும் ஒரு புள்ளியாக என் முயற்சி அமைந்துவிட்டு போகட்டும்.

நான் உங்கள் யாசிர்..


News4 TAmi ldigital

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் திடீர் சந்திப்பு!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ நேற்று மாலை நேரில் சந்தித்தார்.

இருவரும், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பாமக உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பின்போது, பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி (ராமதாஸ் மகள்), நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Mohamed Faizudeen


Abdul Wahab

அதானே எலி ஏன் அம்மணத்தோடு  ஒடுதேனு பார்த்தேன்.

Mahamed Faijudeen


Jaffna Muslim

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன் , தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார்.

ராஜ்பவனில் இன்று (31) காலை நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இதன் மூலம், காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தின் முதல் முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் சுமார் 30% முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தபோதிலும், முஸ்லிம் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லாதிருந்தது.

எனினும், இந்த நியமனத்திற்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலைக் குறிவைத்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.



Mohamed Faizudeen


இடும்பவனம் கார்த்திக்


Mohamed Faizudeen


Venkatasamy Ramasamy

பார்ப்பனர்கள் பரப்பிய மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சமூக நீதிக் கொள்கைக்கு ஆதரவாகவும், தீவிரமான கொள்கைகளைக் கொண்ட கட்சியாக, இந்தியாவிலேயே திமுக மட்டுமே பலமாக உள்ளதால், 

அனைத்து
அரசியல் கட்சிகளிலும், ஊடகங்களிலும்
உள்ள பார்ப்பனர்கள் ஒன்றிணைந்து,
திமுகவை எப்படியாவது ஒழிக்க வேண்டும்
என்று பல உத்திகளை 1967 லிருந்து
கையாண்டு வருகிறார்கள்.

அதில் ஒரு உத்தி தான் பாப்புலரான சினிமா நடிகர்களை பின்னிருந்து இயக்குவது.
இந்த அரசியல் உண்மை தான் இந்திய
அரசியலின் அரிச்சுவடி.


       குன்றுதோறாடும் குமரன் 


முருகப் பெருமானை முஸ்லிம்கள்
அல்லாஹ்வின் தூதர் எனக்கருதினால்
அது முருகப் பெருமானுக்கு
மேலும் புகழ்

சேர்க்கும்.

சிறப்புக் கட்டுரை

- பெரியகுளம் முகம்மது -

கல்வி,செல்வம்,
நல்லொழுக்கம் ஆகியவை பெற்றோர், ஆசிரியர் மூலமாகப்
பிள்ளைகளச் சென்றடைகின்றன.

சில சமயம்
பிள்ளைகள் மூலமாக மதம் பெற்றோரைச் சென்றடைந்த வரலாறும் உலகில் உண்டு.

தந்தைக்கு உபதேசம்
செய்த பிள்ளைகள்
வரிசையில்
முருகப் பெருமானும்
இறைத்தூதர்
ஆப்ரகாமும் வருகிறார்கள்.

ஆறு படைவீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்
படைதனிலே வரும் முருகா
என்றப் புகழ் பெற்ற பாடலில்

ஓம் எனும் மந்திரத்தின் சாறெடுத்து
தந்தைக்கு உபதேசம்
செய்த மலை
சுவாமிமலை
என்ற வரியும் வருகிறது.

முருகப்பெருமான்
வேத சாரத்தை
சுவாமிமலையில்
தன் தந்தைக்கு சொன்னதாக
அப்பாடல் வரிகள்
கூறுகின்றன.

இது போன்றே

இஸ்லாம் கிறித்தவம்
யூதம் ஆகிய
மும்மதக் கொள்கையின்
மூலப்பிதாவான
ஆப்ரகாமும்
தன் தந்தைக்கு
தனது புதியக்
கடவுள் கொள்கையை
எடுத்துச் சொல்லி
கொலை மிரட்டலுக்கு ஆளானச் செய்தியும் குர்ஆனில் வந்துள்ளது.

குர்ஆன்

اِذْ قَالَ لِاَبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــٴًـــا‏ள


(ஆப்ரகாம்),


“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களது எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை
(சிலையை)
ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?”

என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
(அல்குர்ஆன் : 19:42)

يٰۤـاَبَتِ اِنِّىْ قَدْ جَآءَنِىْ مِنَ الْعِلْمِ مَا لَمْ يَاْتِكَ فَاتَّبِعْنِىْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِيًّا‏
“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத
கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது;

ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்.
(அல்குர்ஆன் : 19:43)
-------------
-------------

قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُ‌ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ‌ وَاهْجُرْنِىْ مَلِيًّا‏
(அதற்கு ஆப்ரகாமின் தந்தை)

“இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை (சிலைகளை)
புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்;

இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
(அல்குர்ஆன் : 19:46)

قَالَ سَلٰمٌ عَلَيْكَ‌ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا‏
(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்;

நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 19:47)

وَ اَعْتَزِلُـكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّىْ‌ ‌ عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّىْ شَقِيًّا‏
ஆகவே ஆறுபடைவீடு பாடலைக் கொண்டும்
ஆப்ரகாமைப்பற்றிய குர்ஆன் வசனங்களைக் கொண்டும்,

முருகப்பெருமான்
ஆப்ரகாம்
(இப்ராஹீம் அலை.)
தங்கள் தந்தையருக்குப் புதியதொரு
கடவுள்
கொள்கையைக்
அறிமுகப் படுத்தியுள்ளதை
அறிய முடிகிறது.

முருகப் பெருமான்
தந்தைக்கு
வேத உபதேசம்
செய்தார்.

முருகப் பெருமான்
தன் தந்தைக்கு எந்த வேதத்தை உபதேசம்   
செய்தார் ?

ஆப்ரகாம்
தம் தந்தைக்கு
உபதேசம் செய்த
சிலை வணக்கத்திற்கு எதிரான
ஏகத்துவக் கொள்கையைக்
மையமாகக் கொண்ட
தமிழ் மறையை (வேதத்தை)
முருகப் பெருமான்
தன் தந்தைக்கு
உபதேசம்
செய்திருக்கலாம்
என எண்ணுவதற்கு
வாய்ப்புக்கள் நிறைய உள்ளன.

முகம்மது நபி வரை
இவ்வுலகிற்கு
ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம்
இறைத்தூதர்கள் வந்து சென்றுள்ளனர்
என
இஸ்லாமிய அறிஞர்கள்
கூறுகிறார்கள்.

அவர்களில்
ஆப்ரகாம், இயேசும்
உள்ளக்கம்.

இஸ்லாமிய அறிஞர்களில்
சிலர்

வடமாநிலங்களில்
அதிகமாக அறியப்படும்
இராமர், கிருஷ்ணர்
ஆகியோர் கூட
ஏகத்துவத்தைப்
போதித்த இறைத்தூத இருந்திருக்கலாம்
பின்னர் அவர்களை
மக்கள் கடவுள் அந்தஸ்துக்கு
உயர்த்தி இருக்கலாம்
என்று கருத்து
தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலியை அடுத்த பத்தமடை
சிவானந்த சரஸ்வதி
அடிகளார்,


மனம் பற்றிய அவரது நூலொன்றில்

(The Divine Life Society of India Risikesh - Publication)


" மக்கள் கடவுள் எனக் கருதி வழிபடும் இராமர் கிருஷ்ணர் சிவன்

போன்ற இவர்களெல்லாம்
கடவுள் கிடையாது.

அவர்களெல்லாம்
அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த
மக்களால் அறியப் பட்ட நன்மக்கள் ஆவர்.

கடவுள் உருவம் இல்லாதவர் என்பதுதான்
வேதங்களின்
சாராம்சம் ஆகும்.
எனக்கூறியுள்ளார்.

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்;

அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 14:4)

وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ‌ فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِىَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு;
அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 10:47)

شَرَعَ لَـكُمْ مِّنَ الدِّيْنِ مَا وَصّٰى بِهٖ نُوْحًا وَّالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهٖۤ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسٰٓى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَ لَا تَتَفَرَّقُوْا فِيْهِ‌ كَبُـرَ عَلَى الْمُشْرِكِيْنَ مَا تَدْعُوْهُمْ اِلَيْهِ‌ اَللّٰهُ يَجْتَبِىْۤ اِلَيْهِ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ‏

(நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான்.

ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், ‘‘நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்.
அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை எதன் பக்கம் நீங்கள் அழைக்கிறீர்களோ அ(ந்த ஓரிறை கொள்கையான)து, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும்.

அல்லாஹ், தான் விரும்பியவர்களையே தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.

தன்னை முன்னோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்.
(அல்குர்ஆன் : 42:13)


மேற்கண்ட குர்ஆன் வசனங்களின் கருத்து,

உலகில் உள்ள எல்லாச் சமுதாயத்தினருக்கும்
அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நல்லடியாரை
இறைவன் தூதராகக் தேர்ந்தெடுத்து
அச்சமுதாயத்தினர்
பேசும் மொழியிலேயே
அத்தூதருக்கு இறைவன் வேதத்தை வழங்கினான்‌.

அத்தூதர்
அச்சமுதாயத்தி
னரின் தாய் மொழியிலேயே
வேத உபதேசம்
செய்தார்கள்.

எல்லா இறைத்தூதர்களும்
ஓரிறைக் கொள்கையைத்தான்
போதித்தார்கள்.

மேலுள்ள குர்ஆன் வசனங்களின் கருத்துப்படி

கல்தோன்றி
மண்தோன்றா
காலத்து
முன்தோன்றிய
மூத்தக்குடியான
தமிழ்குடிக்கு,
தமிழ் மண்ணில்

இறைவன் வழங்கிய
தமிழ் மொழியிலான
வேதத்துடன்
மண்ணின் மைந்தன் ஓருவர்
இறைத்தூதராக
நிச்சயம்
வந்திருக்க வேண்டும்.

அவர் யார் ?

தமிழகத்திற்கு
தமிழ் வேதத்துடன்
வந்த இறைத்தூதர்,

உலகெங்கும் கோடானு கோடி
தமிழ் நெஞ்சங்களால் கடவுளாக
வணங்கப் பட்டுவரும்
முருகப் பெருமான்

தமிழ் மறையுடன்
வந்த இறைத்தூதராக
இருக்கலாம் என
நினைப்பதற்கு
பல காரணங்கள்
இருக்கிறது.

1. தமிழகத்தில்
தமிழர் கடவுள்களில்
நீண்ட வரலாறு கொண்டவர்
முருகப்பெருமான்
மட்டுமே.
(வேதமுந்தியக்காலம்)
ChatGPT
2. கீழடி நாகரீகம் (வைகைக்கரை நாகரீகம்)
கி. மு. 3 ம்
நூற்றாண்டிலிருந்து கி.மு. 6 ம் நூற்றாண்டு வரை.

குர்ஆன் வசனம்

இறைத்தூதர்கள்
அனைவரும்
ஒரிறைக் கொள்கையைக் கொண்டிருந்தனர்.
சிலை வணக்கத்தை எதிர்த்தனர்.

கீழடி அகழ்வாய்வில்
எந்தக் கடவுளின்
உருவமோ மதச்சின்னங்களோ
கிடைக்கவில்லை.

ஆகவே முருகப் பெருமானின்
காலத்தில் ஏகத்துவக் கொள்கை
(உருவமற்ற இறைவனை உருவமில்லாத நிலையில் வணங்குவது)
இருந்திருக்கிறது.

முருகப் பெருமான்
இஸ்லாமியக் கொள்கையான
பலதார மணத்தை
ஆதரித்துள்ளார்.

வள்ளி தெய்வானை
இரு பெண்களை
மணந்துள்ளார்.

وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ‌ ‌ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ذٰ لِكَ اَدْنٰٓى اَلَّا تَعُوْلُوْا ‏
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் -

இரண்டிரண்டாகவோ,

மும்மூன்றாகவோ,

நன்னான்காகவோ;

ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
(அல்குர்ஆன் : 4:3)

முருகப் பொருமானார் காலத்தில் சிலையை வணங்குவது,
வருணாசிரமம் ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்ட சனாதனம் இல்லை.

மருத நிலத்தலைவரான முருகன்,
முல்லை
நிலத்தையும் தாண்டி குறிஞ்சிநில இளவரசி வள்ளிக் குறத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார்.

இவற்றையெல்லாம் ஆராயும்போது

முருகப் பெருமான்
வேதம் வழங்கப்பட்ட
இறைத்தூதர்.

ஓரிறைக் கொள்கைக்காரர்

முருகப் பெருமான்,
முகம்மதுநபி இயேசு
ஆப்ரகாம் போன்ற
உலகெங்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படும்
இறைத்தூதர்கள்
வரிசையில்
இணைகிறார்.

முருகப் பெருமானைப் பற்றி ஒரு முஸ்லிம்
இவ்வாறு யூகிப்பது

குன்றுதோறாடும்
குமரனின் புகழை
மேலும் உயர்த்துவதாகவே அமையும்.


MOHAMED ABDULLAH

(பெரியகுளம்முகம்மது)

உரிமையாளர் & இதழாசிரியர்

1- 207 Perumalpuram

Periyakulam 625 601

Theni Dt.50 62


Comments