Skip to main content

மறுமை பயம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது. இசைப்புயல் A.R.ரஹ்மான்.சிறப்புக்கட்டுரை

 

              தங்கநிலா டாட்காம்

முற்போக்குச் சிந்தனையாளர்களின்   முத்துச்சரம்



Year 5 Week 45

23 11 2025

பெரியகுளம்முகம்மது

இதழாசிரியர்

தங்கநிலா டாட்காம்     பார்க்கப்படும் உலகநாடுகள்

(Google blogger stats)

இந்தியா சிரிலங்கா 
சிங்கப்பூர் மலேஷியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அரபு நாடுகள்
ஐரோப்பிய நாடுகள்
இந்தோனேஷியா
சீனா ஜப்பான் தென்கொரியா
சுவீடன் நார்வே
இங்கிலாந்து


Cheif Minister of Tamilnadu

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Yasar Yasar

வயது ஆனாலும் உன் தன்னம்பிக்கைக்கும் உன் உழைப்பிற்கும் எப்பொழுதும் வயதாகவே ஆகாது காற்று உள்ளவரை உன் பக்கம் அதை தூற்றிக்கொள்.

Aluteen Aluteen

Daily Factors

pondicherry Villages

அதிகம் புகைக்காத
ஆரோக்கியமான கிராமம்.

கடலூர் - சாவடி.

            
புத்தகப்பயணம் 


BalaG


Yusuf Siraj

படிச்சவன்
டை கட்டுவான் படிக்காதவன் கை கட்டுவான் 🥰🥰🥰


SA Jalal



SIR - கிராம மக்களுக்கு உதவி செய்யும் பள்ளிவாசல் அசரத்
புல்லங்குடி இராமநாதபுரம் மாவட்டம்.
மௌலவி முகம்மது சுல்தான்


Yaser Arafath

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்ட எம்ஜிஆர் நகரில் வாராந்திர ஸ்டால் தாவா  காலை 16-11-2025 

IMUL Tamilnadustate

தீரன்சாம்பவர் சு


NowshadAli Baqavi

https://youtu.be/ZdzpxZhl2iA?si=N3LwpQqr8tCFDLZA

நமது ராஹதுல் ஆஷிகீன் நற்பணி மன்றம், கடந்த ஜமாதில் அவ்வல் பிறை - 20 - ஹிஜ்ரீ 1447 / 12 - 11 - 2025 புதன்கிழமை அன்று மேலப்பாளையம் வாவர் ஹனஃபீ ஜும்ஆ மஸ்ஜிதில் நடத்திய புனித ஷமாயில் மஜ்லிஸ் & ஸெய்யிதுனா உஃத்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவை போற்றும் விழாவில்...

P.A. ஃகாஜா முயீனுத்தீன் பாகவீ

ஹழ்ரத் அவர்கள்* ஆற்றிய
அற்புத உரை.


Abubakar Sidhik Assidqi

தழிழ்நாடு அரசு
தலைமை ஹாஜி அறிக்கை

Jaffna Muslim 

ஒரு காலத்தில் முஸ்லிம்களை கேலி செய்து வந்த கோடீஸ்வர அமெரிக்க மைக்கேல் சனேகோ.

நம்பிக்கைகளை விமர்சிப்பது, ஆத்திரமூட்டும் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர்.

2023 இல் துபாயில் பகிரங்கமாக இஸ்லாத்திற்கு மாறினார்.

'உண்மையில் வழிகாட்டல் அல்லாஹ்வின் கைகளில் உள்ளது' ஒருவர் கோடீஸ்வரராக இருந்தாலும் சரி, தெருப்
பிரசங்கியாக இருந்தாலும் சரி.

அல்லாஹ்வின் விருப்பத்தால் மட்டுமே இதயம் திரும்புகிறது. இவரது இன்றையநிலை அந்த இறை சக்திக்கு ஒரு சான்றாகும்.

ஆடம்பர கட்டிகளில் முன் மட்டுமே உறங்கி, எழும்பிய அவர் பள்ளிவாசல் ஒன்றில் தூங்குகிறார்.

www.jaffnamuslim.com


Mohamed Arif

அரக்கோணம் வட்டார ஜமாஅத்துல் உலமா..
மிகச் சிறப்பாக
போதை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.


உலகம் தனிமனிதர்களின் உரிமைகளைப் பேசுகின்றது;


இஸ்லாம் இதயங்களின் உரிமைகளைப் பேசுகின்றது.

உலகம் ‘என்னுடைய வீடு, என்னுடைய குடும்பம்’ என்று ஆலாய்ப் பறக்கின்றது.

இஸ்லாம் ‘நம்ம தெரு, நம்ம ஊர், நம்ம நாடு’ என்றே உரத்து குரல் கொடுக்கின்றது.

ஒவ்வொரு வீட்டாரும் தத்தமது வீடுகளின் கதவுகளுக்கு வெளியிலும் தம்மீதான பொறுப்புகள் இருப்பதாக நினைத்து, உணர்ந்து, முனைப்புடன் செயல்படத் தொடங்கிவிட்டார்களெனில் ஊரே அமைதியின் தொட்டிலாக, இணக்கத்தின் குடியிருப்பாக மாறிவிடுகிறது.

ஒட்டுமொத்த ஊரின்மீதும் இறைக் கருணையின் நிழல் சூழ்ந்துக்கொள்கின்றது.

இணக்கமும் அமைதியும் நிறைந்ததுதான் இஸ்லாமியர்களின் வசிப்பிடம்; இஸ்லாமியர்களின் குடியிருப்பு.

இத்தகைய வசிப்பிடங்களில் ஒரு வலம் சுற்றி வாருங்கள்.

இறைநம்பிக்கையின் நறுமணத்தை நுகர்வீர்கள்.

அறமும் அன்பும் நிறைந்த நடத்தையின் அழகைக் காண்பீர்கள்.

அங்கு அன்பின் தித்திப்பு இருக்கும். பெருந்தன்மையின் இனிமை இருக்கும்.

அந்தக் குடியிருப்பில், அந்தத் தெருவில், அந்தச் சுற்றுப்புறங்களில் வீடுகள் சுவர்களால் பிணைக்கப்பட்டிருக்காது.

அதற்கு மாறாக இதயங்களால் அவர்கள் பிணைந்திருப்பார்கள்.

இஸ்லாமியப் பண்பாட்டின் உயிரோட்டமே இதுதான். சகலமானவரையும் அரவணைத்து நலன் காக்கின்ற சகோதரத்துவம் தழைக்கின்ற, திரும்பும் திசையெங்கும் அன்பு மிகைக்கின்ற சமூகம்தான் இஸ்லாமியப் பண்பாட்டின் உயிர்நாடி.

ஒவ்வொரு குடியிருப்பையும், ஒவ்வொரு முஹல்லாவையும், ஒவ்வொரு சுற்றுப்புறத்தையும் இஸ்லாமியப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்ற அழகு தீவுகளாய் மிளிரச் செய்வதுதான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.

அந்தத் தெருக்களில், அந்த முஹல்லாக்களில், அந்தச் சுற்றுப்புறங்களில் ஒருவர் நுழைகின்ற போது கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்பாக இதயங்கள் திறந்துவிடுவதைக் காண்பார்.

சுவர்களைக் காட்டிலும் உறவுகள் வலுவாக இருப்பதை உணர்வார்.

இது போன்ற முன்மாதிரியான சுற்றுப்புறத்தை, அன்பால் பாசத்தால் நெருக்கத்தால் பிணைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை உருவாக்குவதுதான் நம்முடைய பரப்புரையின் நோக்கமே.

- சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி
அகில இந்தியத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.


Sahul Hameed

மறுமை பயம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது. A.R.ரஹ்மான்

திலிப் குமாராக இருந்த ஓர் இளைஞன் இஸ்லாத்தை தழுவி ஏ.ஆர். 

ரஹ்மானாக மாறி உலக புகழ் பெற்றது குறித்தும் இஸ்லாத்தை ஏற்ற சூழல் குறித்தும் மனம் திறந்து அளித்த பேட்டி.

இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின் பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்தன.

1987 -ல் மலேசியா, சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே இசை சம்பந்தமான சில எலக்ட்ரானிக் சாதனங்களைப் பார்த்தேன். 

அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது.

அதுதான் என்னோட மூலதனம். அதை வைத்துத்தான் என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். 

எனவே வீட்டில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம்.

முட்டுக்கட்டை

எனது வளர்ச்சியால் தங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என நினைத்த சிலர் இதுக்கு பெரிய அளவில் முட்டுக்கட்டை
போட்டார்கள்.

அப்போது என் மனம் உடைந்து போகும் அளவுக்கு நிறைய இடைஞ்சல் செய்தார்கள். சுங்க

இலாகாவில் சிலர் என்னை ரொம்பவே கேவலமாக நடத்தினாங்க.

அந்த நேரத்தில் தினம் விமான நிலையத்துக்கும் வீட்டுக்கு மாக அலைந்தேன். 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படி தவித்தேன். 

நல்லவேளை எங்க அப்பாவோட சில நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.

அத்தனை அவஸ்தைகளுக்கு பிறகு கஷ்டப்பட்டு இசை சாதனங்களை மீட்டு வந்து வீட்டில் இறக்கினோம்.

இறைவன் மிகப்பெரியவன். அவன் கொடுக்க நினைத்தால் எவரால் தடுக்க முடியும்? என்கிறார் ரகுமான்.

சொன்னது பலித்தது

மகன் இரவில் தூங்காமல் இசைக் கருவிகளைக் கொண்டு பலவித இசைகளை இசைத்த நேரத்தில் அம்மா கஸ்தூரி – கோவில், தேவாலயம், மஸ்ஜித் என்று சென்று தன் மகனுக் காகவும், குடும்பத்திற்காகவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத நிலையில் ஒருநாள் கரீமுல்லாஹ் ஷா என்ற பெரியவரை கஸ்தூரி குடும்பம் சந்திக்க நேர்ந்தது.

ரகுமானுக்கு 21 வயதான போது 1987-ல் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் கிடைத்தன.

இதற்கு அடிப்படை பெரியவரின் அறிவுரை அதுவே ரகுமானயும், அவரது தாயாரையும் இஸ்லாத்தை தழுவ வைத்தது. 

அவருடைய இளைய சகோதரிகளும் இஸ்லாத்தில் இணைந்தனர். 

மூத்த சகோதரி காஞ்சனா மட்டும் கொஞ்ச காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்தார்.

இஸ்லாம் அனுபவம்

இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வைப் பற்றி ரகுமான் நினைவு கூர்கிறார்.

அது ஒரு கனவில் இருந்து ஆரம்பிக்கிறது. 

நான் அப்போது மலேசியாவில் இருந்தேன். 

ஒரு பெரியவர் என் கனவில் வந்து இஸ்லாத்தில் இணைந்து விடு என்று கட்டளை யிட்டார். 

இது பற்றி ஆரம்பத்தில் நான் பெரிதாக கவனம் கொள்ளவில்லை.

ஆனால் அடிக்கடி எனக்கு அந்த கனவு வந்தது.

ஒருநாள் என் அம்மாவிடம் இது பற்றிப் பேசினேன்.

இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொள் என்று எனது தாயாரும் எனக்கு ஊக்கம் அளித்தார்.

ஒரே இரவில் நான் இஸ்லாத்தைத் தழுவவில்லை.

இஸ்லாத்தின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டுன். 

இதற்காக ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் அரபி மொழி கற்றேன்.

1988-ல் என் சகோதரி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

அப்போது எத்தனையோ பெரிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவர் குணமாக வில்லை.

இறுதியில் ஒரு மார்க்கப் பெரியவரின் வழி காட்ட லால் நாங்கள்

 ’அல்லாஹ்’ விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தோம். 

என்ன ஆச்சரியம் என் சகோதரி கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்தார்.

இப்படித்தான் நான் திலீப்குமாரில் இருந்து ஏ.ஆர் ரகுமானாக பயணம் தொடங்கினேன் என்றார்.

ஹஜ் பயணம்

ஒவ்வொரு இஸ்லாமியரின் உன்னத கடமை ’ஹஜ் பயணம்’ ரகுமான் தனது முதல் ’ஹஜ் ஜை 2004-ல் நிறை வேற்றினார்.

அடுத்து 2006-ல் தாயாருடன் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்.

அது பற்றி ரகுமான் சொன்னது.

இந்த புனித யாத்திரை – வாழ்க்கையைப் பற்றிய எனது மதிப்பீடுகளையும், பார்வையையும் அடியோடு மாற்றி விட்டது.

அன்பு, சமாதானம், இணக்கமான சகவாழ்வு, சகிப்புத் தன்மை, நவீன காலத்துக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவைகளைக் கொண்டதாக இஸ்லாம் திகழ்கிறது.

ஆனால் சிலர் செய்யும் செயல்களால் இந்த மார்க்கம் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது.

இஸ்லாம் பற்றிய அறியாமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் பெருமை

முஸ்லிம்கள் முதலில் இஸ்லாத்தின் அடிப்படைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

அண்டை வீட்டாருடன் நட்போடு பழகுவது, அவர்களை நேசிப்பது, மற்றவர்களைச் சந்திக்கும்போது புன்முறுவல் செய்வது, இறைவனை வணங்குவது, தர்மம் செய்வது ஆகியவைகளைப் பேணி வர வேண்டும்.

மனிதச் சமுதாயத்துக்கு முழுமையான முறையில் சேவை செய்ய வேண்டும்.

மாற்று சமய நண்பர்களை விரோதிகளாகப் பார்க்கக்கூடாது அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்க்கவோ, விமர் சிக்கவோ கூடாது.

தங்கள் நடவடிக்கைகளால் உலகுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பரப்ப வாளை எடுக்கவில்லை.

பதிலாக தனது முன் மாதிரியான வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவை மூலமே இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

பரிசு

2006 ஜனவரி 6-ம் நாள் என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பரிசை இறைவனால் வழங்கப் பெற்றேன்.

மதீனாவில் தொழுவதற்கு ‘அல்லாஹ்’ எனக்கு வாய்ப்பைத் தந்தான்.

நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்தேன்.

அந்த அனுபவத்தை எதனோடும் ஒப்பிட முடியாது.

அது என் பிறந்த நாள் பரிசு.

நான் ஒரு கலைஞன்.

எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் தொழுகையை மட்டும் கைவிடுவதில்லை.

தொழுகை எனது மன அழுத்தத்தை வெளியேற்றி வேலையில் முழு நம்பிக்கையையும், உறுதியையும், ஈடு பாட்டையும் தருகிறது.

இறைவன் எப்போதும் எனது அருகிலேயே இருக்கிறான் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது.

மேலும் ‘மறுமையில் விசாரிக்கப்படுவேன்’ என்ற அச்சத்தை எனக்குள் கொண்டு வருகிறது.

இந்த ஹஜ் பயணத்தின் மூலம் நான் எனது இறைவனால் சுத்தப்படுத்தப் படுகிறேன்’ என்கிறார் ரகுமான்.


Muhammad Noorul Hudha

*௭ன்றுமே செய் நன்றி மறவா நெஞ்சத்துடன் , இதயம் ௧ணிந்த நன்றி௧ளை ; பிராா்த்திப்பு௧ளுடன் , சமா்ப்பி௧்௧ின்றேன்* !

*நட்பின் இல௧்௧ணம்* - மேண்மை மிகு , Rtn. Dr. திரு.TR . ராஜமோஹன் ஐயா
[ மாநில தலைவா் : தென்னிந்திய பத்திரி௧ையாளா்௧ள் மற்றும்
ஊட௧ப் பணியாளா்௧ள் நலச் சங்௧ம் - பதிவு .] & ( ஆசிரியா் - எடிட்டா் : தேசிய ம௧்௧ளாட்சி புலநாய்வு மாத இதழ் )
அவர்களின் , பரிந்துறை மற்றும் வழி௧ாட்டலின் பேரில் ; இந்த ௭ளியோனின் சமூகப் பணி௧ளை ௨ணா்ந்து , அங்கீகரித்து ;

*INDIAN FORUM AWARDS* [ Regd. Under NITI Aayog - Govt.Of India (Regd . No : BK 1V - 38 / 2024) அமைப்பினால் ;
08 . 11 . 2025 , அன்று , சென்னை பாரத்ய வித்ய பவனில் , நடை பெற்ற விழாவில் , அடியேனுக்கு வழங்கப்பட்ட ; [ Reg.No. M202511045 ] ACADEMIC EXCELLENCE AWARDS மற்றும் MEDAL ௧ளை ;
ஏனைய பணிச்சுமை௧ளால் நான் சென்று பெற்று௧் ௧ொள்ள முடியாத - இயலாத சூழ்நிலையில் ,


*௨யா் நேசத்துடன் தி௫ . ராஜ்மோஹன் ஐயா* அவா்௧ளே அவை௧ளைப் பெற்று ; ௭ன் இல்லம் / அலுவல௧ம் வந்தி௫ந்து , தனது அன்பு௧் ௧ரங்௧ளால் , அளித்து ம௧ிழ்ந்த இந்த ௨யரிய செயல்௧ளு௧்௧ா௧
, ௭னதுநெஞ்சம்நிறைந்த நன்றி௧ளை தெரிவித்து௧் ௧ொள்௧ின்றேன் !


அன்பு மறவாத .....
✍ மவுலவீ MNH . ஜிந்தா ரப்பானீ பாவா - ௭ன்௧ின்ற , அல்ஹாஜ் சங்௧ிலி பாவா மழ்ஹரீ .🌹
நிறுவனா் : தமிழ் மாநில ஜம்இய்யத்துல் ௨லமா
சபை அற௧்௧ட்டளை - பதிவு ; மற்றும் ,
தென்னிந்திய பத்திரி௧ையாளா்௧ள் மற்றும் ஊட௧ப் பணியாளா்௧ள் நலச் சங்௧ம் - பதிவு .

[ தலைமைய௧ம் . 73730 71800 ]

நாட்டைக் காட்டிக் கொடுப்போரில் 80 % முஸ்லிமல்லாதோரே.


மதுவை ஓழிக்க வேண்டும்.


இந்தியயூனியன் முஸ்லிம் லீக்

  
ஆயுள்கைதிகள் விடுதலை


வையை தமிழ்சங்கம்


Punitha Jothi

கடல் பரப்பில்nowshuposts
சக மீனைப் பார்த்து
துள்ளி குதிக்கும்
மீனென
இருக்கிறது
என் குழந்தை மனது.

வன்மத்தின் கூரோடு
சிலர் நிற்கையில்
யாவரும்
வன்மமற்றே
நிற்பதற்காய்ப்
படைக்கப்பட்ட
உயிர்களென
வடுக்களைத் திரும்பிப் பார்க்காமல் பயணித்தலையே அதில் காட்சிப்படுத்துகிறேன்.

கபடமற்றப்பரப்பில்
தன்னை நிலைநிறுத்துவதெனப்
பிறரையும் நினைப்பதில்தான்
இன்னும் அழகாகிறது
அக்குழந்தை மனது

செ. புனிதஜோதி


Dhinakaran Chellaiya

“இலக்கியம்” என்கிற பெயரில் மிகப் பெரிய கூட்டம் தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு மக்களை முட்டாள்களாக்கி பட்டி மன்றம்,
இலக்கிய மன்றம்,கம்பன் கழகம் ஊடாக சனாதன நஞ்சை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர்.

‘சனாதனம்’ என்பது சமத்துவத்தின் எதிரி, மனிதநேயமற்றது,மனித குலத்தை அழிவிற்கு இட்டுச் செல்லும் வன்முறை.

மக்களின் அறியாமையில் வாழும் கொடிய ஜந்து!

விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதிலிருந்தே மனித நேயம் தொடங்குகிறது.

சக மனிதனின் வலியைப் புரிந்து கொண்டு அவர்களை மதித்து நடப்பது மனிதநேயத்தின் அடிச் சுவடு.

மனித நேயத்திற்கு பிரிவினையைத் தூண்டும் மதமோ,மொழியோ,இனமோ,நாடோ,பாலினமோ,வர்க்கமோ இல்லை.

அது எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் இயல்பு நிலை.
எளிதாக உணரக் கூடியது!

இன்று இலக்கியவாதிகள் என தரையில் கால் படாமல் உலவிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விழைகிறேன்.

இலக்கியவாதிகள் எனும் பெயரில் நீங்கள் இன்னமும் கம்பனையும்,பாரதியையும் பக்தி இலக்கியங்களையும் எத்தனை ஆண்டுகள் கட்டி அழப் போகிறீர்கள்?!

இவற்றைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என எத்தனை ஆண்டுகள் ஏமாற்றப் போகிறீர்கள்?!மக்கள் பிரச்சனைகளை எப்போது பேசுவீர்கள்?! எழுதுவீர்கள்?!

மக்கள் பிரச்சனைகளை இலக்கியவாதிகள் பேசாவிட்டாலும், தானாகவே மக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதற்கான அறிகுறிதான் மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள்.

அம்மனே இடைத்தரகர் எதற்கு? 

என கேள்வி கேட்கத் தொடங்கி விட்டாள்.

இதற்கும் மனம் புண்பட்டுப் போகிறவர்கள் இருப்பார்கள்.
அம்மன் மீதும் அவதூறு பேசலாம்,  அம்மனையும.                 தேச விரோதி ஆக்கலாம்.


எது எப்படியோ     சனாதன எதிர்ப்பு பலவடிவங்களில் தமிழகத்தில் கிளம்பியிருப்பது  மகிழ்ச்சியே!   

சமூக மாற்றத்திற்கான.  அறிகுறி இது!


Wilma Selva

முத்து தேனீர்


மகிழா

நினைவுகள் தொடர்கதை...


"வெள்ளையனே வெளியேறு புரட்சியில் காமராஜர் ரகசியமாக தங்குவதற்கு இடம் அளித்த ராணிப்பேட்டை ஏ.பி.சுலைமான்"


நன்றி :
தினமணி கதிர்(16.11.2025) பக்கம்-10

உலகப்பயணி அருணகிரி

கம்போடியா Siem Reap நகரில் தங்கி இருக்கின்ற
Bayon Era Hotel அறையின் பலகணியில் இருந்து.

இது நான்கு தளங்கள் கொண்ட
நல்ல உயர்தரமான விடுதி.
நல்ல சுவையான உணவு.
ஊழியர்களின் பணிவும் பணிகளும் நம்மை மகிழ்விக்கின்றன.

உலகப்பயணிஅருணகிரி
21.11.2025


🔸தென்கிழக்காசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றி மொஹமட் நபீல் இல்மா ஸைனப் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பெற்று இந்தோனேஷியா செல்வதற்கான வாய்பினைப் பெற்றுள்ளார்.


பொலன்நறுவை முஸ்லிம் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் இம் மாணவி பொலன்நறுவை அஷ்-ஷபா மகா வித்தியாலய கணித ஆசிரியர் கே.எல்.எம்.நபீல், மாணிக்கம்பிட்டி அல்-மினா மகா வித்தியாலய ஆசிரியை வை.எல்.எப்.சுக்ரியா
ஆகியோரின் புதல்வியாவார்

சிங்கப்பூரில் 2023.இல் தரம் 06 "Paper B" பிரிவில் நடைபெற்ற போட்டியிலும் மலேசியாவில் 2024.2 5. 07."Paper C " பிரிவில் நடைபெற்ற போட்டியிலும் இந்தோனேசியாவில் 2025 இல் தரம் 08 "Paper C" பிரிவில் நடைபெற்ற போட்டியிலும் பங்கு பற்றி தொடராக மூன்று முறை அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.


IUML TamilnaduState


Abu Nafiye 
 
"يا صديقي إنّ قلوبَ الناس‌
مُكتظّةٌ بأمورٍ يجهلُها حتى أعزُّ الأقرباء فَمُرّ هَيِّنًا"

-
"ஓ நண்பனே, மக்களின் இதயங்கள் அவர்களுக்கே தெரியாத பல விஷயங்களால் நிரம்பியுள்ளது; எனவே நீ மென்மையாக நடந்து கொள்."

மவ்லானா ரூமீ...


MuthupettaiDharga RajaMohamed

ஒரு ஆலிம் தான் இந்தியாவின் முதல் கல்வித் துறை அமைச்சர் என்பதை மறந்த சமூகம் தான்
ஆலிம்கள் அரசியல் பேசக்கூடாது
அரசியலில் ஈடுபடக்கூடாது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது

என்னை பொருத்தவரை ஆலிம்கள் நிச்சயம் அரசியல் களத்தில் பயணிக்க வேண்டும்

(இன்ஷா அல்லாஹ் விரைவில்...)

மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை முதல் கல்வித் துறை அமைச்சராக நியமித்த பொழுது எல்லோரும் ஏன் என்று தான் கேட்டார்கள்.


அதற்கு நேரு அவர்கள் சொன்ன பதில்


"இவர் கல்வியை கடமையாக்கிய மார்க்கத்தில் இருந்து வந்தவர்
மார்க்க அறிஞரும் கூட என்றார்"

தன்னுடைய 11 வருட கல்வித்துறை அமைச்சர் பொறுப்பின் பல மாற்றங்களை நிகழ்த்தி உலகளாவிய அளவில் இந்தியாவை தலை நிமிர வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கே சாரும்

உலகளவில் இன்று வரை பல பெருமைகளுக்கு வித்திட்டு வரும் நாட்டின் சிறந்த உயர் கல்வி கூடங்களான இந்திய அறிவியல் கழகத்தை (ஐ.ஐ.டி) உருவாக்கிய பெருமை அபுல் கலாம் ஆசாத்தையே சாரும்.


இவரது தலைமையின் கீழ் 1951-ல் காரக்பூரில் முதலாவது ஐஐடி கல்வி நிறுவனமும், 1953-ல் பல்கலைக்கழக மானியக் குழுவும் (யுஜிசி) தொடங்கப்பட்டது பெருநகரங்களான சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் ஐஐடி உருவாக்கினார்

காங்கிரஸ் கட்சியின் முதல் இளம் தலைவரும் இவரே (35 வயதில்)

அனைவருக்கும் சமமான கல்வி ஏழைகளுக்கு இலவசமான கல்வி என்பதை வித்திட்டவரும் இவரே

ஆலிம்களின் அரசியல் சமூக வளர்ச்சியாக மட்டுமே இருக்கும் என்பதை உணர்த்திய மகான்
#மௌலானா_அபுல்_கலாம்_ஆசாத்

இறைவன் மண்ணறையை சுவனமாக்குவானாக ஆமீன்...

சஹாரா கவிஞன்.


IUML TamilnaduState


K.Navaskani

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைத்தின் சார்பாக சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவர் திரு. இறையன்பன் குத்தூஸ் அவர்கள்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் திரு.நாகூர் அ.ஹ.நஜிமுதீன் அவர்கள்,

திரு.பிரவீன் குமார் டாட்டியா அவர்கள், திரு.ராஜேந்திர பிரசாத் அவர்கள், திரு.ஜெ.முகமது ரஃபி அவர்கள், திரு.சு.வசந்த் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜி.சந்தீஷ்.இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
தேசிய செயலாளர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.


🦉மாவீரன் அழகுமுத்துக்கோன் (Maveeran Alagumuthu Kone, ஜுலை 11,1710–நவம்பர் 18,1759) நினைவு தினம்.


கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். 

மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்.

இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. 

ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது.

அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.


1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.


ராமஸ்வாமி பாலசுப்ரமணி


Su.SahulHameed

பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய
கோட்டாறு பிரிட்டிஷ் ஆங்கிலப்பள்ளி தாளாளர் N.M.S.மலுக்கு முகம்மது அவர்களுக்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

FEED தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் "தேசிய கல்வி தினம்" முன்னிட்டு தமிழகத்தில் சமுதாய முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டு சேவையாற்றி வரும் 10 தன்னார்வலர்கள், 5 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட


""MOULANA ABUL KALAM AZAD AWARD For EXCELLENCE In EDUCATION "" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..


தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்..

மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு இயங்கும் MUSLIM WOMEN AID SOCIETY (MWAS) கவுரவ செயலாளராக இருக்கும் மலுக்கு முகம்மது நூற்றுக்கணக்கான ஏழை முஸ்லிம் பெண்களுக்கு சிறுதொழில் துவங்க தலா பத்தாயிரம் ஊக்கத் தொகை கிடைத்திட புரவலர்களை கண்டறிய அயராது உழைப்பவர்..

குமரி மாவட்டத்தில் இயங்கும் சிறுபான்மை முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பான
Islamic Schools Association - K Kumari ன் தலைவராகவும் மலுக்கு முகமது அவர்கள் பள்ளிக்கூடங்களை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து நிர்வகிப்பவர்..


சகோதரர் மலுக்கு முகமது அவர்கள் அத்தனை சமுதாய பணிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் அவரது மனைவியும் விருது வழங்கும் நிகழ்வில் கவுரவிக்கப்பட்டார்...

வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்
எண்ணங்கள் ஈடேற துஆக்கள்...
Colachel Azheem


(Source Prof.Ansar)


SA Jalal


கடவுளுடன் ஒருபேட்டி !

=======================

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.

“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”

“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.

கடவுள் சிரித்தார்.

“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”

“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”

கடவுள் சொன்னார்…

“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.

பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!

சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”

கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.

“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?” -மீண்டும் கேட்டான்.

கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…

“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.

வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…

ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.

எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!

நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…

நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.

இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.

ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…

நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”

-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார்
கடவுள். அவரது கதவுகள் மூடின…

தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!
~மகிழா. 💃
-பகிர்வு பதிவு.


🌹🌹🌹🌹🌹🌹


Abdul Qaiyum


Muhammad Abdulla


கணேசன்


"நீட்" நுழைவுத் தேர்வு எவ்வளவோ பரவாயில்ல!
வாக்காளர் பட்டியல் நுழைவுத் தேர்வை விட.
Very SAD - SIR!

திரு. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஒய்வு)
முன்னாள் இந்திய துணை தேர்தல் ஆணையர்       Balakrishnan R


Sankar Sankar


வரலாற்றில் இன்று நவம்பர் 18, 1477 – இங்கிலாந்தில் அச்சிசு எந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான “Dictes or Sayings of the Philosophers” வில்லியம் காக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.

முதன் முதலாக அச்சு இயந்திரத்தை நிறுவி நூல்களை அச்சடித்தும் வெளியிட்டும் அச்சுத் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் வில்லியம் காக்ஸ்டன்.

அவர் இளைஞராயிருந்தபோது துவக்க காலத்திலிருந்த அச்சுக்கலையின் மீது காக்ஸ்டனுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அச்சு இயந்திர அமைப்பைத் தமது முயற்சியால் சீர்திருத்த நவீன யுக்திகளைக் கையாண்டு முன்னேறிய அச்சு இயந்திரத்தைக் உருவாக்கினார்..

1476-ம் ஆண்டு காக்ஸ்டன் வெஸ்ட் மினிஸ்டர் என்ற இடத்தில் நவீன சாதனங்களுடன் நவீன அச்சு இயந்திரம் ஒன்றை அமைத்தார். 

பல நூல்களை எழுதி அவற்றைத் தமது அச்சகத்தில் அச்சிட்டார்.

அவ்வாறு அவர் வெளியிட்ட முதல் நூல் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட “Dictes and Sayings of the Philosophers” என்ற நூலாகும்.

காக்ஸ்டன் நவீன அச்சு இயந்திரத்தின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்
TP Jayaraman


Janasakthi Tholaikatchi


நிர்மல் குமார்


வீரத்தியாகிகள் வாழ்க

17 11 2025 எட்டுமணிநேர வேலைநாளுக்கான மகத்தான போராட்டத்தில் தங்கள் உயிரை அர்ப்பணித்த ஹேமார்கெட் வீரர்களின் நினைவு நாள்

1887 நவம்பர் 11 ஆம் நாள் — நான்கு வீரத் தொழிலாளர் தலைவர்கள் ஜார்ஜ் எங்கல், அடால்ஃப் பிஷர், ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பீஸ் — அநியாயமாக தூக்கிலிடப்பட்டனர்.

 அவர்கள் வெண்மையுடையும், முகமூடியும் அணிந்து, சர்வதேச புரட்சி கீதமான “மார்செய்லைஸ்” பாடலுடன் தூக்கு மேடைக்குச் சென்றனர்.


அவர்களின் இறுதி நிமிடங்கள், தொழிலாளர் வர்க்கத்தின் இலக்கிற்கான வீரத்தையும், உறுதியான அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தன.

அவர்களின் தியாகம் வீணாகவில்லை.
அது இன்றும் உலக தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்குப் பேராற்றலாக விளங்குகிறது.


அவர்களின் தியாகம் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்கு எதிரான முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் உறுதியுடன், ஒன்றிணைந்து நிற்க வேண்டியது அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.

அவர்கள் தொடங்கிய போராட்டம் இன்னும் தொடர்கிறது!
ஹேமார்கெட் வீரத்தியாகிகள் வாழ்க!


திருச்சி பார்த்தி


கிழக்கு டுடே வில் எழுதிவரும் குறுநிலத் தலைவர்கள் தொடரில் இவ்வாரம் சங்ககால குடியினரான கோசர் குறித்து காண்போம்.

இந்நடுகல் சங்ககாலத்தில் நிகழ்ந்த கோசரின் படையெழுச்சி குறிப்பிடுகிறதோ, என்ற ஐயமும் எழுகிறது.

வீரர்களுக்கு நடுகல் எழுப்பும் மரபு தமிழர்களிடையே சங்ககாலத்தில் இருந்ததற்கு இங்கே, பல சான்றுகள் உண்டு.

அவ்வாறு, சங்ககாலத்தில் கோசர் படையெடுப்பில் இறந்த வீரனுக்கு நடுகல் எழுப்பியிருக்கக்கூடும்.

அந்நடுகல் காலப்போக்கில் அழிந்துபட, இறந்த அவ்வீரரின் வழியினர் மீண்டும் புது நடுகல்லை எழுப்பியிருக்கவும் இடமுள்ளது. 

ஏனெனில் இந்நடுகல் காலமான 5-6ஆம் நூற்றாண்டில் கோசர்களைப் பற்றி எந்தவித இலக்கியக் குறிப்போ, கல்வெட்டுக் குறிப்புகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நடுகல் குறிப்பிற்குப் பின் கோசர்கள் குறித்து வேறு தகவல்கள் இதுவரையிலும் கிடைத்தில.

கோசர்கள் குறித்து முழுவதும் அறிய பதிவின் முதல் பின்னூட்டத்தில் உள்ள இணைப்பில் கிளிக் செய்து காணவும்.


Velmurugan

அழகிய மூணாறு


NM Fathima

😭சவுதியில் இன்றைய பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது:

இதில் முதல் புகைப்படம் விபத்திலிருந்து தப்பிய ஒரே நபரான இந்திய இளைஞர் புகைப்படம் ஆகும். 

இவர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். தற்போது நினைவு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிராவல் ஏஜென்சி கூற்றுப்படி 45 பேர் பேருந்தில் பயணித்ததாக கூறுகிறார்(ஓட்டுநரை தவிர்த்து)

😭அதேபோல் பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநர்கள் தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.

சவுதி அரசு வரும் தினங்களில் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவான விபரங்கள் தெரியவரும்.

இந்திய பிரதம‌ர், வெளியுறவுத்துறை அமைச்சர், சிறுபான்மை துறை அமைச்சர் சவுதி அரசு, ஆந்திரா அரசு உள்ளிட்ட பல தரப்பினரும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.

😭விபத்தில் சிக்கியவர்கள் உம்ரா கிளம்பும் முன்னர் கடைசியாக விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தை பத்திரிகையாளர்களிடம் குடும்ப உறுப்பினர் ஒருவர் காண்பித்த காட்சியும் வெளியாகியுள்ளது. 

இந்த புகைப்பட தொகுப்பின் கடைசியில் விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த இந்தியர்கள் பெயர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Note: சிலரது புகைப்படங்கள் உள்ளிட்ட விபரங்கள்
இந்த பதிவில் இணைக்க முடியவில்லை.


KA Sengottaiyan

இந்திய தேசத்தின் விடுதலை வீர வரலாற்றின் தியாக செம்மல் வ.உ.சி என்று அழைக்கப்படும் மாமனிதரை நினைவு கூறும் நன்னாளில்,

சுதந்திரம் பெற ஆயுத போராட்டம் தான் சரி என்று ஒரு சாராரும், அகிம்சை தான் சிறந்த வழி என ஒரு சாரார் போராடிய காலத்தில், பொருளாதார முன்னேற்றம் தான் சிறந்த மாற்று வழி என்ற சிந்தனையின் அடிப்படையில் தன்னிடம் இருந்த சொத்துகளை விற்று மேலும் 40 ஆயிரம் பங்குதாரர்களை வைத்து தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் சுதேசி கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்திய போற்றுதலுக்கு உரியவர் .

சர்வதேச வர்த்தகத்தில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பெருமைக்குரியவர்.

இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் இவருக்கு மணி மண்டபம் கட்டி பெருமை படுத்தினார்..

இந்த தேசிய தலைவரின் புகழ் உலகெங்கும் என்றும் நிலைத்து நிற்கும்.


எனது லட்சியம்..
""""""""""""""""""""""""""""""
கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல..
ஜாதி ஒழிப்பே எனது பிரதான கொள்கை...!

ஜாதியை ஒழிக்க வழி தேடினேன்.
அது மதத்துக்குக் கட்டுப்பட்டது என்றார்கள்.எனவே மதத்தை ஒழிக்க ஆராய்ந்தேன்..அது வேதத்துக்குக் கட்டுப்பட்டது என்றனர்..வேதத்தை ஒழிக்க முற்பட்டேன். அது கடவுளுக்குக் கட்டுப்பட்டது என்றார்கள்..

ஜாதி எனும் மரத்தின் கிளைகளை வெட்டினால் அது மீண்டும் மீண்டும் வளரும்..எனவே ஜாதி மரத்தின் அடிவேரான கடவுளை அழிக்க முற்பட்டேனே ஒழிய,

எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறெந்தப் பகையுமில்லை...!!

ஜாதி ஒழிப்புப் பணியில் எவையெல்லாம் குறுக்கே வந்து தடை ஏற்படுத்துகிறதோ,அவற்றை எல்லாம் அழித்து,

"இந்த சமுதாயத்தை
மானமும் அறிவுமுள்ளதாக மாற்றவும்,
மனிதனுக்கு மனிதன் ஜாதிய ஏற்றத்தாழ்வில்லாமல் வாழச் செய்வதே என் லட்சியம்.

--தந்தை பெரியார்.




Chandran Veerasamy

" சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான்,பறையன்,சூத்திரன் மற்ற எந்தச் ஜாதியுமே இருக்கக் கூடாது.

மனிதன் தானிருக்க வேண்டும்.எப்படிக் கடவுளும் மதமும் கோயிலும் நம்மை மடையர்களாக்கி,இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றுதான் சுயராஜ்ஜியம்,சுதந்திரம்,ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது ! "


Jafnaa Muslim

டெல்லி கார் வெடிப்பு: 3 முஸ்லிம் மருத்துவர்கள் விடுதலை

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் முஹம்மது, ரெஹான், முஸ்தகீம் உள்ளிட்ட 4 பேரை விடுவித்த என்.ஐ.ஏ.

white collar பயங்கரவாதம் என்ற படித்த முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பிய ஊடகங்கள் இதை பெரிதுபடுத்தாமல் சிறிய செய்தியாகக் கடந்து சென்றுவிட்டது

JaffnaMuslim

இளைஞர்களைப் பாதுகாக்க புர்கினா பாசோ துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது 🇧🇫

"புர்கினா பாசோ நாட்டில் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. 

குடிமக்கள் இனி இந்த தளங்களைப் பார்வையிட முடியாது.


ஜனாதிபதி இப்ராஹிம் ட்ரேரே நாட்டை மறுசீரமைக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இளைஞர்களை ஆபாசமான உள்ளடக்கத்திற்கு வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.


"இணையம் கற்றல், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக்கான ஒரு கருவியாக இருக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் பொருட்களை உட்கொள்வதற்கு அல்ல.

நாம் நாட்டின் தார்மீக விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்களாகிய நாம் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Thangam Ramesh

இலக்கியச் சொற்பொழிவு

#தேறல்...(மது)

#முன்குறிப்பு: இது அறிவை மயக்கி நுகர்வோரை மிருகமாக மாற்றும் இக்காலத்திய மது பற்றிய பதிவு அல்ல... சங்க காலத்திய மனதை மயக்கும் கள் பற்றிய பதிவு...

தேறல், கள், மது, தோப்பி, பிழி, நறவு இன்னும் பல பெயர்கள்...

நான் சிறுமியாக கிராமத்து அத்தை வீட்டிற்கு சென்ற பொழுது... பக்கத்து தோப்பில் புதைக்கப் பட்டிருக்கும் சாராய ஊறல்களையும், அது சாராயமாக வடிக்கப்படும் விதத்தையும் பார்த்திருக்கிறேன்...

வாழைப்பழம், பேரீச்சம்பழம், சர்க்கரை, இன்னும் கம்பி என்று சொல்லப்படும் வெண்மையான கற்கண்டு கட்டிகள் போன்ற ஒரு பொருளையும் அதில் சேர்ப்பார்கள்...

அத்தனையும் நீர் விட்டுக் கலந்து மண்பானைகளில் இட்டு புதைத்து விடுவார்கள்... அதன் பெயர் ஊறல்... 

அது நன்கு ஊறி முற்றியவுடன், பெரிய பெரிய பானைகளில் வைத்து அடுப்பு மூட்டி கொதிக்க விடுவார்கள்... கொதித்து வெளிவரும் ஆவியை ஒரு குழாய் மூலமாக வெளியேற்றி நீர் நிரம்பிய கலத்தின் வழியாக செலுத்தி அதனைக் குளிர வைத்து கண்ணாடி புட்டிகளில் சேமித்து வைப்பார்கள்...

அதன் பதம் எப்படி என்று பார்ப்பதற்கு சிறிது சாராயத்தை எடுத்து அதில் நெருப்பு மூட்டிப் பார்ப்பார்கள்... எரியும் நெருப்பின் சுடரை வைத்து அதன் தரத்தை உறுதி செய்வர்... 

இந்த அமைப்பினைப் பார்க்கையில் ஒரு வேதியியல் கூடத்தில் இருப்பது போல தோன்றும்... அதன் மணம் கூட நாசி துளைக்கும்...

சங்க இலக்கியங்களில் எல்லா கொண்டாட்டங்களிலும் கள் தான் முதலிடம் பிடிக்கிறது...

பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமல்ல... இறந்த பின்னான படையலுக்கும், போருக்கு செல்லும் முன்னும், போர் முடிந்த பின்னும், நட்பு பாராட்டவும், ஏன் கலவியிலும் கூட கள் தான் முதன்மை...

அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபின், ஔவையார் தான் பாடும் கையறுநிலைப் பாடலில்,

மன்னா... சிறிதளவு கள் கிடைத்தால் எனக்கே கொடுத்து விடுவாய்... பெரிய அளவில் கிடைத்தாலும் எனக்குக் கொடுத்து, நான் பாட 

நீ மகிழ்ந்து உண்ணுவாய்...

நீ கொடுத்து நான் சுவைக்கும் ஊண் நாற்றம் என் தலை முடியில் படர... உன் நரந்தம் பூ நாறும் கையால் என் தலை கோதி விடுவாய்.. 

இந்த வேல் உன் இதயத்தை மட்டும் துளைக்கவில்லை... இரவலர் பாத்திரம் துளைத்து, அவர் தன் கைகளைத் துளைத்து, பாடும் பாணர்களின் நாவையும் துளைத்துச் சென்றது... இனி பாடுவாரும் இல்லை... ஈவோரும் இல்லை...

"சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தாம்மகிழ்ந் துண்ணு மன்னே
:
:
:
நரத்தம் நானும் தன்மையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே"

எவ்வளவு நயமான, படிப்போர் மனதை ஒரு கணம் ஆட்டுவிக்கும் பாடல்... மது குடித்ததால் மதி மயங்கிப் போயிருந்தால் இவ்வளவு நயம்பட பாட முடியுமா...

அக்காலத்தில் வெப்பமான தமிழகத்தில், கடினமாக வியர்வை சிந்தி வேலை செய்த மக்களின் நாக்குக்கு கள் போன்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் புளிப்பின் சுவை தேவைப்பட்டிருக்கிறது...

"பட்டு நீக்கித் துகிலுடுத்தும்
மட்டு நீக்கி மதுமகிழ்ந்தும்"

கலவியில் ஈடுபடும் முன் பெண்களும் மது குடித்திருக்கிறார்கள்...

அவர்கள் கட்டியிருக்கும் பட்டுத்துணியை நீக்கி...

நூலாடை கட்டிக்கொண்டு மது அருந்தி மகிழ்ந்திருக்கிறார்கள்...


கலவியின் போது, பூக்களின் நறுமணம் கலந்த மணம் கமழ் தேறல் காம பானமாக நுகரப்பட்டிருக்கிறது...

"தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ"

தேள் கொட்டுவது போன்ற நெறியேறுகின்ற நாட்பட்ட தேறலாம்... அதுவும் பொன்கலங்களில் பரிமாறப்படுகிறதாம்...

இங்கு நாட்பட்ட தேறல் மிகுந்த சுவையையும் மயக்கத்தையும் தரும் என்ற குறிப்போடு ஒரு வானியல் குறிப்பும் உள்ளது...

"கோன் மீன் அன்ன பொன்கலத்து" பொன்னைப் போன்று மின்னும் கோள் வியாழன் தான்... வியாழனைப் போன்ற ஒளி வீசுகின்ற பொற்கலத்தில் பரிமாறப்பட்டதாம்... என்னே வானியல் அறிவு...

போருக்குச் செல்லும் பொழுது வீர பானமாக கள் பரிமாறப்பட்டிருக்கிறது...

பனங்கள், தென்னங்கள், நறுமணக்கள், தேனைப் புளிக்க வைத்து செய்யும் கள், அரிசியை மாவாக்கி புளிக்க வைத்து செய்யும் பிழி, மூங்கில் குழாயில் ஊற்றிப் புதைத்து புளிக்க வைத்து பெறப்படும் கள், யவணத் தேறல் இப்படி பல வகையான கள் இருந்தாலும், #அத்திக் கள் என் மனம் கவர்ந்தது...

இது பாரியின் பறம்பிலே கபிலருக்கு பரிமாறப்பட்ட கள்... அத்திக் கள்ளுக்கு இணை உணவு (#சைடு_டிஷ்) அறுபதாம் கோழியாம்... 

மிகவும் சுவையான அறுபதாம் கோழியின் நினைவில் தான் இப்பொழுது #கோழி_65 என்ற பெயர் வந்திருக்கலாம்...

மிக அபூர்வமாகத் தென்படும் இந்தக் கோழியை புலி விரும்பி வேட்டையாடுமாம்...

பசித்திருக்கும் ஒரு புலி மானை வேட்டையாடாமல் மருகி நிற்கும் என்றால் அங்கே அறுபதாம் கோழி இருக்கிறது என்று வேள்பாரியில் சொல்வார்கள்... 

இந்த அறுபதாம் கோழியின் கழிவில் தான் தீப்புல் வளருமாம்...

இந்தப் புல் நீரில் நனைந்து காற்றில் ஆடும் பொழுது ஒளிரும் தன்மைத்ததாக இருக்கும்... 

ஆக... அறுபதாம் கோழி இல்லையென்றால் தீப்புல் இல்லை... பாரியின் பறம்பில் இப்படி அதிசயங்கள் பல... ஒவ்வொன்றாய் பகிர்கிறேன்...

அக்காலத்தில் கள்ளினை வீட்டிலும் சமைத்திருக்கிறார்கள்...

குற்றாத முனை முறியாத அரிசியை மாவாக்கி புளிக்க வைத்து வீட்டில் கள் சமைத்திருக்கிறார்கள்... அதன் பெயர் பிழி...

பாம்பு கடுப்பன்ன தேறல், தேள் கடுப்பன்ன தேறல் என்று வீரியம் கொண்ட பல வகைத் தேறல்களை இலக்கியங்கள் பகிர்ந்தாலும், 

மனதை மயக்குகின்ற... மதியை மயக்காத மிதமான தேறலை தான் அதிகமாக நுகர்ந்து தமிழ்க்குடி மகிழ்வுற வாழ்ந்திருக்கிறது என்பது விளங்குகிறது...
#தங்கம்_ரமேசு.
#சங்கத்தமிழ்
மீள்... 2020


Edward Jabaraj


East Stephen


Benitto Kumar


பயம். 

சிறுகதை.

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. 

ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.

மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.

ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.

கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.

மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான்.

விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.

யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. 

உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" 

என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

- பட்டாம் பூச்சி - தமிழ் நீதி கதைகள்.


CPIM Tamilnadu


SA Jalal
 🥰🥰🥰



Yaser Arafath

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்ட எம்ஜிஆர் நகரில் வாராந்திர ஸ்டால் தாவா இன்று காலை 16-11-2025 நடைபெற்றது .


Kanagu Kanagaraj


Yasar Arafath

குதிரையின் வேகம் என்னவென்று அதில் மேலே செல்பவனுக்கு நன்றாக தெரியும்.


Puzhal Sheik Mohamed


உயர்நீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில் நீண்ட கால வாழ்நாள் சிறைவாசிகளைத் தமிழ்நாடு அரசு முன் விடுதலை செய்ய வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

சுமார் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்நாள் சிறை அனுபவித்த 21 முஸ்லிம்கள் தங்களுக்கு பரோல் எனும் நீண்ட விடுப்பு வழங்க வேண்டுமென்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்திருந்தனர்.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய இரு நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு நீண்ட நாள் விடுப்பு குறித்த முடிவைத் தமிழ்நாடு அரசு தான் எடுக்க வேண்டும் என்றும்

கருணையுடன் செயல்படும் மாநில அரசு இவர்களை முன் விடுதலை செய்யவும் பரிசீலிக்க வேண்டுமெனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த 21 சிறைவாசிகளுக்கும் உடனடியாக நீண்ட விடுப்பு வழங்குவதற்கும் இவர்களை முன் விடுதலை செய்யவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை.


Kanagu Kanagaraj


Mohamed Faizudeen


பஞ்சகல்யாணி குதிரை


பழைய கோட்டை ஜமீன் அரண்மனை

Mohamed Haseen


🔥 பழையகோட்டை பட்டக்காரரிடம்
திப்புசுல்தான் வாங்கிய
பஞ்ச கல்யாணிக் குதிரை🔥

அபூர்வமாக
4 கணுக் கால்களிலும் முகத்திலும்
வெள்ள நிறமும்
10 இடங்களில் சுழிகளுடனும் உள்ளதே பஞ்ச கல்யாணிக் குதிரை ஆகும்.

தனது சவாரிக்கும் போர்க்காலங் களுக்கும் அந்தமாதிரிக் குதிரையே வேண்டுமெனத் திப்புசுல்தான் தேடிய வேளையில் அப்படியான குதிரை,
10 சுழிகளுடன் கூடியதாக, காங்கயம் காளைகளை வளர்க்கும் பழையகோட்டை 22-வது பட்டக்காரர்

"நல்ல சேனாபதி சக்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார்" (1781-1812) வளர்ப்பில் உள்ளது என்பதை அறிகிறார்.

🔥 அக்காலத்தில், ஆண்டுதோறும் அந்தியூர் குருநாதசுவாமித் திருக்கோவில் தேர்த் திருவிழாவில்,
10 நாட்கள் நடக்கும் குதிரை சந்தையில், திப்புவின் தந்தை ஹைதர் அலி தம் படைகளுக்குத் தேவையான குதிரைகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவ்வாறான திப்புவும் பஞ்சகல்யாணியை எப்படியும் வாங்கிவிடுவதென ஆவல் கொண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து பழையகோட்டை அரண்மனைக்கு வருகிறார்.

அப்போது பழையகோட்டை ஜமீன் உட்பட கொங்குநாடு முழுக்க திப்புவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலம்.

அதனால் பட்டக்காரரும் மகிழ்வோடு குதிரையைத் தர, 200 பொன் கொடுத்து திப்புவும் குதிரையை பெற்றுக் கொள்கிறார்.

அதல்லாமல் என்றுமே அசைவம் சாப்பிடும் திப்பு அன்று மட்டும் பட்டக்காரர் அளித்த சைவ விருந்து உண்டு சென்றாராம்.

அதனை அரண்மனைப் புலவரும்
"தயவோடிரு நூறுபொன் தானே தந்து
போரையோ கொள்திப்பு சுல்தான் சைவ
போஜனமும் கூட உண்டு போனான் தானே !"
- எனப் பாடியும் விட்டார்.
🔥(இலக்கியங்களும் வரலாற்று ஆதாரங்கள்)
-✍️-கவிஞர் சிவதாசன்
திருப்பூர் வரலாற்று ஆய்வு மையம்.


Asarafali


Mohamed Ismail

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள்.

1931 ல் உத்திரபிரதேசத்தில் பிறந்த டாக்டர் சித்தீகீ அவர்கள் இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து பல சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் இஸ்லாமியத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று அலிகார் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகவும் இஸ்லாமியத் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.


அதன்பின் சவூதி ஜித்தாவிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமியப் பொருளாதார ஆய்வு மையத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர் இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கீழைநாடுகள் குறித்த ஆய்வுகள் துறையில் ஃபெல்லோவாக (மூத்தபேராசிரியராகப்) பணிபுரிந்தார்.

பின்னர் ஜித்தாவிலுள்ள இஸ்லாமிக் டெவலப்மெண்ட் பேங்கின் இஸ்லாமிய ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தில் வருகைப் பேஎராசிரியராகப் பணி புரிந்தார்.

பேரா. சித்தீகீ அவர்கள் ஆங்கிலத்திலும் உர்தூவிலும் சரளமாக எழுதக் கூடியவர்.
பேரா.சித்தீகீ
63 நூல்களை- அத்தனையும் ஆய்வு பூர்வமானவை- எழுதியுள்ளார்.

அவை அனைத்தும் 5 க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகெங்குமுள்ள 177 பதிப்பகங்
களால் வெளியிடப்பட்டுள்ளன.

உலகெங்குமுள்ள 1301 நூலகங்களில் அவை ஆய்வறிஞர்களின் வாசிப்புக்காக இடம் பெற்றுள்ளன.

டாக்டர் சித்தீகீ அவர்களின் *வட்டியில்லா வங்கி முறை* - *Banking without Interest* என்னும் நூல் அவரை உலகம் முழுக்க பிரபலப் படுத்திய முக்கிய நூலாகும்.

இதை அவரின் *மாஸ்டர் பீஸ்-Master peace* -உயிரோவியம்-என்று கூறலாம்.

இதனால் தான் டாக்டர் சித்தீகி இன்றளவும் *இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை* எனக் கருதப்படுகிறார்.

இந்த ஒரு நூல் மட்டும் ஆங்கிலம் உட்பட மூன்று மொழிகளில் 1973 முதல் 2022 வரை முப்பது பதிப்புகளைக் கண்டுள்ளது.

இந்நூல் உலகெங்குமுள்ள 220 முக்கிய
நூலகங்களில்,
ஆய்வாளர்களின் குறிப்புக்காக,
பாதுகாத்து,
வைக்கப்பட்டுள்ளது.


இவரது பல நூல்கள் உர்தூ, ஹிந்தி, பார்ஸீ, துருக்கி, தாய், அரபி, இந்தோனேஷிய மொழி மலாய் மொழி ஆகிய பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.


இந்தியா, நைஜீரியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பல பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்யும்மாணவர்கள் எண்ணற்றோருக்கு வழிகாட்டும் நெறியாளராக (Guide to Researchers) டாக்டர் சித்தீகி பணியாற்றியுள்ளார்.

வாணியம் பாடி தொழிலதிபரும் இஸ்லாமிய ஆர்வலரும் ஆன திரு. அப்துர் ரஹீப் சாஹிப் அவர்கள் நிறுவன பொதுச் செயலாளராக (Founder Secretary) விளங்கும்

 *இஸ்லாமியப் பொருளாதாரத்திற்கான இந்திய மையம்- Indian Centre for Islamic Finance* எனும் அமைப்பின் தலைமைப் புரவலராகவும் டாக்டர் சித்தீகி திகழ்ந்தார்.


இந்த அமைப்பு வட்டியில்லா வங்கிகளுக்கு அரசிடமும் ரிசர்வ் வங்கியிடமும்,அனுமதிபெற,
முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஓர் அமைப்பாகும்.

டாக்டர் சித்தீகீ உலகின் பொருளாதார அமைப்பை சுரண்டலற்ற ஆக்ககரமான ஒன்றாக மாற்றிட தம் வாழ்நாளை அரப்பணித்த மாபெரும் சாதனையாளர் ஆவார்.

டாக்டர் சித்தீகியின் இந்த மகத்தான சேவையைப் பாராட்டி சவூதி அரசு அவருக்கு,1982ல்,இஸ்லாமியசேவைக்காக வழங்கப்படும் இஸ்லாமிய உலகின் மிக உயர்ந்த விருதான *மன்னர் ஃபைஸல் விருதை* வழங்கி கௌரவித்தது.

*ஷாஹ் வலிய்யுல்லாஹ்* விருதை இந்திய இஸ்லாமிய அறிஞர்களும் டாக்டர் சித்தீகீ அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்கள்‌.

உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு இஸ்லாமிய வங்கி தொடர்பான ஆய்வுமையங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் பல்கலைக் கழகங்களில்
டாக்டர் சித்தீகீ வகித்த பதவிகளும் அநதஸ்துகளும் எண்ணிலடங்கா.

ஆனால், டாக்டர் சித்தீகீ அவர்களோ பணிவின் சிகரமாக மிளிர்ந்து, *எனது உயர்வுகளுக்குக் காரணம் எனக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுத் தந்து உலக‌ மக்களுக்கு சேவையாற்றிடவும் பொருளாதார அநீதியிலிருந்து உலக மக்களைக் காப்பாற்றிடவும்

எனக்கு உணர்வூட்டிய மார்க்க அறிஞர்களே* என்று பல சந்தர்ப்பங்களில் தம் ஆசிரியர்களான உலமாக்களை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ அருகிலுள்ள சான் ஜோஸ் நகரில் தமது 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் புடைசூழ இறை விருப்பப்படி தம் இறுதிமூச்சை நிறுத்திக் கொண்ட இந்த மாமனிதரின் இழப்பு இஸ்லாமிய உலகுக்கு மட்டுமல்ல
மனித குலத்திற்கே பேரிழப்பாகும்.

கடந்த 12 நவம்பர் 2022 அன்று நம்மை விட்டு பிரிந்தார்.

அல்லாஹ் இவரைப் பொருந்திக் கொள்வானாக..!

இவர் போன்ற ஆளுமைகளை   நம் சமூகத்தில் நாம் உருவாக்க வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது.


நினைவோடு..,பிராத்தித்து...!
🤲 *மதுரை.,இஸ்மாயில்*.



இந்தக் கவிதையை

நீங்கள் எழுதியிருந்தால்
நான் எழுத வேண்டியிருக்காது

அந்த ஈர விழிகளில்
பதுங்கிய துக்கத்தை
அகழ்ந்தெடுக்க
ஒரு சுரங்கப் பணியாளனாக
இவ்வளவு ஆழத்தில்
விழுந்திருக்க மாட்டேன்

அவரவர் சுமை
அவரவர்க்கே சரி

நீங்கள்
ஒரே ஒரு முறை
திரும்பிப் பார்த்திருந்தால்
சிறு நம்பிக்கை முளைத்திருக்கும்

ஒரு சிறு புன்னகை
ஒரு பிடிமானமாக இருந்திருக்கும்

ஒரு வார்த்தை
ஒரு சைகை
இந்த மூழ்கலைத்
தடுத்து நிறுத்தியிருக்கும்

உங்கள் மெளனம்தான்
முழுதாகக் கைவிட்டது
என்னையும்
என் கைகளிலிருந்த
இந்தக் கவிதையையும்

பழநி பாரதி

Kannadi Channel Bilal

#சூயஸ்_கால்வாய் ஒரு பார்வை...

இன்று நவம்பர் 17, 1869ஆம் ஆண்டு இதே நாளில்தான் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.

கால்வாய் என்பது நீரைக் கொண்டுவருவதற்காக, அல்லது நீர்வழிப் போக்குவரத்திற்காக மனிதர்களால் செயற்கையாகத் தோண்டப்படுவது ஆகும்.

மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் 164 கிமீ (அணுகும் கால்வாய்களையும் சேர்த்தால் 193.3 கிமீ) நீளமும், 673 அடி அகலமும், 79 அடி ஆழமும் கொண்டது. 

சரக்குப் போக்குவரத்தின் பெரும்பகுதி, கப்பல்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிற நிலையில், ஆசியா-ஐரோப்பா இடையே பயணிக்க ஆப்பிரிக்காவைச் சுற்றிச்செல்வதைத் தவிர்த்ததன் மூலம் இந்தக் கால்வாய், 7000 கிமீ தூரத்தைக் குறைத்தது.

ஒட்டோமான் பேரரசின் எகிப்து நாட்டுக்கான ஆளுனரிடம் அனுமதி பெற்று இதனை உருவாக்கிய ஃபெர்டினாண்ட் டி லெசிப்ஸ், ஏழு நாடுகளைச் சேர்ந்த 13 நிபுணர்களைக் கொண்ட, 'சூயஸ் பூசந்தியைத் தோண்டுவதற்கான சர்வதேசக் குழு'வை 1855இல் உருவாக்கினார்.

1858 டிசம்பர் 15 அன்று உருவாக்கப்பட்ட 'சூயஸ் கால்வாய் நிறுவனம்' 99 ஆண்டுகளுக்கு கால்வாயை நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றது. 

1859 ஏப்ரல் 25 முதல், பின்னாளில் போர்ட் செய்த் துறைமுகம் உருவாகவிருந்த இடத்தில் இந்நிறுவனம் செயல்படத்தொடங்கியது.

1859இல் துவங்கிய தோண்டும் பணி பத்தாண்டுகளுக்கு நீடித்தது. மொத்தம் சுமார் 15 லட்சம் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். 

தன் வணிகத்துக்குப் பாதிப்பு என்று கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த இங்கிலாந்து, கால்வாய் திறக்கப்பட்ட பின்னர் 1875இல் 40 லட்சம் பவுண்டு மதிப்புக்கு (தற்போதைய மதிப்பில் சுமார் ரூ.800 கோடி) இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது.

எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர், 1956 ஜூலை 26 அன்று சூயஸ் கால்வாயை தேசவுடைமையாக்கி, நிர்வகிக்கும் பொறுப்பை 'சூயஸ் கால்வாய் ஆணைய'த்திடம் ஒப்படைத்தார். 


Indran Rajendran

சைக்கிள் சவாரி /


இப்படி எழுதினால்தான் கவிதை என்று
சட்டம் போடும் கவிஞர்களைப் போல்
நீயும் நடந்து கொள்ளாதே..
உன் சைக்கிள்.
உன் விருப்பம்
அதை நீ எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம்.

குரங்கு பெடல் அடித்தாலும்
இருக்கையில் அமர்ந்து ஓட்டினாலும்
இரு கையும் எடுத்து விட்டு
எதிர் காற்றில் பாய்ந்தாலும்
சமநிலை குலையாதவரையிலும்
சைக்கிள் சவாரி சைக்கிள் சவாரிதான்.

ஒரே ஒரு நிபந்தனை :
உன் முன்னால் திறந்திருக்கும்
நாலாயிரம் திசைகளில்
இதுவரை யாரும் போகாத திசையில் மட்டும் போ.


 இந்திரன் 21-11 =2021


புத்துணர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி தர்பியா!


சத்தியத்தை எந்தச் சமரசமும் இன்றி எடுத்துரைப்பதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வுடைய வேதமும், அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதலும் மட்டும்தான் மார்க்கம் என்பதில் உறுதியாகப் பயணிப்பதால் மட்டும்தான் இந்த ஜமாஅத்திற்கு இறைவன் வெற்றியைத் தருகின்றான்.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழியைப் பற்றிப் பிடித்து நீதிநெறி ஒழுக்கத்தோடு பயணிக்கும் இந்த ஜமாஅத்தின் தூண்களாக பேச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேச்சாளர்களைக் கொண்ட இஸ்லாமியப் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே!

வலியவன், எளியவன் என்கிற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரும் சமம் என்று எடுத்துரைத்த இறைத்தூதரின் போதனைகளைக் கொள்கையாகக் கொண்டு பயணிக்கும் இந்த அமைப்பில் பயணிப்பவர்களுக்கு அவ்வப்போது நல்லொழுக்கப் பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜுமுஆ தாயிக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான மாநிலத் தர்பியா கடந்த நவ-. 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஜுமுஆ பேச்சாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆர்வத்துடன் மண்டபத்தில் குவியத் துவங்கினார்கள்.

நவ-. 15 சனிக்கிழமை காலை 9:50 மணிக்கு தர்பியாவின் முதல் அமர்வு துவங்கியது.

மாநிலப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான், ‘தர்பியாவின் ஒழுங்குகள்’ என்கிற தலைப்பில் துவக்க உரையாற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

அதன் பிறகு ‘அழைப்பாளர்களே உங்களைத்தான்’ என்கிற தலைப்பில் மாநிலத் தணிக்கைக் குழுத் தலைவர் எம்.எஸ்.சுலைமான் உரையாற்றினார்.

இந்த ஜமாஅத்தில் பயணிக்கும் அழைப்பாளர்கள்தான் இந்த ஜமாத்தைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய தூண்களாக இருக்கிறார்கள்.
அப்படி இருக்கக்கூடிய தாயீக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து தெளிவான செய்திகளை எடுத்துரைத்தார்.

தாயீக்களிடம் இருக்கக்கூடிய நடைமுறைத் தவறுகளை வெளிப்படையாக எடுத்துக் காட்டினார்.

தாயீக்கள் அரபி உச்சரிப்புகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும், அதிகமான சூராக்களை மனனம் செய்து கொள்ள வேண்டும்.
அரபி மொழியைக் கற்றுக் கொள்வதில் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும்.

தாயீக்களிடத்தில் ஈகோ இருக்க கூடாது. பெருமை, பொறாமை, ஆணவம் போன்ற செயல்கள் அறவே இருக்க கூடாது என்று தெரிவித்தார்.

தாவா களத்தில் இருப்பது நம்மை நாமே திருத்திக் கொள்வதற்காக மட்டும்தான்!

பொறுப்பு இருந்தால் மட்டும்தான் தாவா களத்தில் இருப்பேன் என்று எந்த நிலையிலும் சொல்லக் கூடாது.

மக்களிடம் பேசக்கூடிய தாயீக்கள் ஹதீஸ்களை சரியான முறையில் ஆய்வு செய்து பேச வேண்டும்.

அதற்கு ஜமாஅத் வெளியிடும் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்து அப்டேட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.ஐ.சுலைமான் ‘ஆய்வுகள் ஓய்வதில்லை’ என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த ஜமாஅத்தைப் பொருத்த வரைக்கும் ஆய்வுகளுக்கு எப்போதுமே ஓய்வில்லை.

ஆய்வுகள் வந்து கொண்டேதான் இருக்கும். அது அவ்வப்போது கட்டுரை வடிவில் வெளியிடப்படும்.

எனவே அந்த ஆய்வுகளை தாயீக்கள் மிகத் தெளிவாக பின்பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

தொடர்ந்து மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுலுஹா ரஹ்மானி, ‘இரு பெரும் சோதனைகள்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த ஜமாஅத் சத்தியத்தில் இருப்பதால் மட்டும்தான் நிலைத்து நிற்கின்றது.

இதில் பயணிக்கக் கூடிய ஆட்களுக்கு முக்கியத்துவம் இல்லை.
மாறாக இங்கே கொள்கைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இந்த ஜமாஅத்தில் மிகப்பெரும் பொறுப்புகளில், பிரபல பேச்சாளர்களாக வலம் வந்தவர்கள் கொள்கை மாறி இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள்.


கொள்கையில் சறுக்கல் வந்துவிட்டால் அவர்களிடத்திலே சத்தியம் இருக்காது.

ஜமாஅத்தின் மீது சுமத்தப்படும் அவதூறுகள் அல்லாஹ்வின் கிருபையால் அடித்து உடைக்கப்படுகின்றன.

பாலியலும், பொருளியலும் எப்போதுமே இரு பெரும் சோதனைகள்.
இந்த விஷயங்களில் தாயீக்கள் மற்றும் நிர்வாகிகள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய மாநிலப் பேச்சாளர் அப்துல் நாசிர், ‘அமல்களில் ஆர்வம் கொள்வோம்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார்.


தாயீக்களாக இருப்பவர்கள் அமல்களில் கோட்டை விடுவதைப் பற்றியும், சிறிய, சிறிய அமல்கள் கூட நாளை இறைவனிடத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும். 

எனவே அமல்களில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்திப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாநில துணைத் தலைவர் தாவூத் கைசர், ‘குர்ஆன் ஹதீஸ்களை புரியும் அடிப்படைகள்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

குர்ஆனையும், ஹதீஸ்களையும் அறிந்து கொள்வது எப்படி? அதில் உள்ள கருத்துக்களைப் புரிந்து கொள்ளும் அடிப்படை விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

அத்துடன் அன்றைய முதல் அமர்வு முடிவடைந்தது. லுஹர், அஸர் தொழுகை, மதிய உணவிற்கான இடைவேளை விடப்பட்டது.

பின்னர் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு மாலை 6:20 மணிக்கு இரண்டாம் அமர்வு துவங்கியது.

அதில் மாநிலத் தலைமை நடத்திய ஆன்லைன் வகுப்பில் பட்டம் பெற்ற தாயீக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தொடர்ந்து ‘பயான் குறிப்புகள் எடுக்கும் முறை’ என்கிற தலைப்பில் மாநிலத் தலைவர் அப்துல் கரீம் உரையாற்றினார்.

ஜுமுஆ என்பது ஒரு அமானிதம் என்று தெரிவித்த அவர், மற்ற நிகழ்ச்சிகளுக்கு நாம் மக்களைத் தேடிச் செல்ல வேண்டும். 

ஆனால் ஜுமுஆவிற்கு மட்டும்தான் மக்கள் நம்மைத் தேடி வருவார்கள்.


எனவே அதை தாயீக்கள் அமானிதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

தாயீக்கள் பயான் குறிப்பு எடுக்கும் முறைகள், ஜுமுஆவிற்கு எப்படி தயாராவது? பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்தல், காலத்துக்கேற்ற தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தல், மக்களிடத்திலே சலிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசாமல் இருத்தல் போன்றவற்றை தெளிவுபடுத்திப் பேசினார்.

மிக முக்கியமாக ஜுமுஆவிற்கு முதல் நாள் அவசர அவசரமாகக் குறிப்பை எடுத்துச் செல்வது கூடாது.


முன்னதாகவே தெளிவுபடுத்திக் குறிப்புகளை எடுத்துச் சென்று பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தாயீக்கள் குறிப்பெடுப்பதற்காக ‘பயான் நோட்ஸ்’ என்கிற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி ஏ.ஐ உதவி கொண்டு குறிப்புகள் எடுப்பது, ஏகத்துவ கொள்கையை பிரச்சாரம் செய்யும் அரபு வெப்சைட்டுகளில் குறிப்புகளைத் தேடுவது போன்ற அனைத்து விஷயங்களையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் தாயீக்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்த திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது.

இதில் அதிக மதிப்பெண் பெரும் தாயீக்களுக்கு அடுத்து நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

அனைத்து தாயீக்களும் இந்தத் தேர்வில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அத்துடன் இரவு உணவு, இஷா தொழுகையோடு அன்றைய அமர்வு சிறப்பாக முடிவடைந்தது.

இரண்டாம் நாள்:

நவ.-16 ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் தாயீக்களுக்கான தர்பியா நிகழ்வின் முதல் அமர்வு விடியற்காலை 4:00 மணிக்கு தஹஜ்ஜத் தொழுகையோடு துவங்கியது.

பஜ்ர் தொழுகை முடிவடைந்த நிலையில் ஒசாமா எம்.ஐ.எஸ்.சி ‘தஜ்வீத் சட்டங்கள்’ குறித்து மிகச் சிறப்பாக விளக்கினார். 

அதனைத் தொடர்ந்து காலை உணவிற்குப் பிறகு 9:25 மணிக்கு இரண்டாவது அமர்வு துவங்கியது.

மாநிலப் பொதுச் செயலாளர் இந்த அமர்வைத் துவக்கி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து ‘அசத்தியவாதிகளின் அலங்கார வார்த்தைகள்’ என்கிற தலைப்பில் மாநிலச் செயலாளர் சபீர் அலி உரையாற்றினார்.

அசத்தியவாதிகள் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை வளைக்கிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து தர்பியாவின் மிக முக்கிய நிகழ்வாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் மற்றும் நிர்வாகிகள் நீண்ட காலமாக எதிர்பார்த்த திருமண நிலைப்பாடு குறித்த செய்தியை மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம்.எஸ்.சுலைமான், ‘திருமண நிலைப்பாடு’ என்கிற தலைப்பில் பேசினார்.

எளிமையான திருமணத்தின் அளவுகோல் என்ன? என்பதை திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் தெளிவாக எடுத்துரைத்தார்.

எத்தனை நபருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்த அளவுகோலும் கிடையாது.

ஆனால் அதிக நபர்களுக்கு உணவளிக்கத் தயாராகும் நேரத்தில்தான் ஆடம்பரத்திற்கான வாசல் திறக்கப்படும்.

எனவே திருமணங்கள் எளிமையாக நடப்பதுதான் நபி வழி என்று மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதுமட்டுமின்றி சில கிளைகள் திருமணத்தை நடத்தி வைப்பதற்கு மிகப்பெரும் சோதனைகளைச் சந்திக்கிறார்கள்.

எத்தனை பேருக்கு உணவு கொடுத்தால் தஃப்தர் மற்றும் தாயி கிடைக்கும் என்கிற விஷயத்தில் கிளை மாவட்டங்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.


ஒன்றைத் தெளிவாகத் தெ
ரிந்து கொள்ள வேண்டும். இந்த ஜமாஅத்தின் நோக்கம் தாவா மட்டுமே பிரதானம் என்பதுதான்.


திருமணத்திற்காக கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.
நாம் நம்முடைய கொள்கைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதற்கு எதிராக வரும் திருமணங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாநிலப் பேச்சாளர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி, ‘தவ்ஹீத் கடந்து வந்த பாதை’ என்கிற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வரலாற்றை அன்று முதல் இன்று வரை தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்தக் கொள்கை எத்தனை சிரமங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை நகைச்சுவையோடு  கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவு படுத்தினார்.

இந்த உரையை தாயீக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த உரையைத் தொடர்ந்து மாநில மாணவரணிச் செயலாளர் சமிம், ‘கைப்பேசியில் அகப்பட்ட தலைமுறை’ என்கிற தலைப்பில் இன்றைய தலைமுறைகள் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

கைப்பேசியில் இந்த சமுதாயம் எப்படி அகப்பட்டுக் கிடக்கிறது, அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? என்பதை விகிதாச்சார அடிப்படையில் பட்டியலிட்டு வெளிப்படுத்திக் காட்டினார்.


தரவுத் தகவல்கள் மற்றும் விளக்கப் படங்கள் மூலம் கைப்பேசியின் தீமைகளை மிகச் சிறப்பாகப் பட்டியலிட்டார்.

தர்பியாவின் இறுதி நிகழ்வாக மாநிலத் தலைவர் அப்துல் கரீம் ‘மறுமைக்கான பயணம்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த ஜமாஅத்தில் நாம் பயணிப்பது இம்மை சுகங்களுக்காக அல்ல! நாளை மறுமையில் இறைவனை வெற்றியாளர்களாகச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாமெல்லாம் இந்த ஜமாஅத்திலே தாயீக்களாக, நிர்வாகிகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே தவ்ஹீத் கொள்கையில் தடம் புரண்டு விடாமல், சறுக்கி விடாமல், எந்தச் சமரசமும் இல்லாமல் அனைவரும் சத்தியக் கொள்கையில் பயணித்து இறைவனிடத்திலே வெற்றியடைய வேண்டும்.

எந்த நிலையிலும் தாவா களத்தை விட்டு யாரும் சென்று விடக்கூடாது.

தாவாதான் இந்த ஜமாஅத்தின் அஸ்திவாரம் என்று பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் மாநிலப் பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் நன்றி உரையாற்றினார்.

மதிய உணவு மற்றும் லுஹர் தொழுகையோடு முத்தாய்ப்பான பொள்ளாச்சி தரப்பியாவின் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.


இரண்டு நாட்கள் நடந்த இந்த தர்பியா அறிவுப் பசியோடு வந்திருந்த தாயீக்களுக்கு மிகச் சிறந்த அறுசுவை விருந்தாக அமைந்தது.

இந்தத் தர்பியா இரண்டு நாட்கள் நடந்திருந்தாலும் மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கான காலம் பற்றாக்குறையாகவே இருந்தது.


இன்னும் கூடுதலான நாட்கள் ஒதுக்கி தர்பியாவை நடத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்ததைப் பார்க்க முடிந்தது.

அதுமட்டுமின்றி தாயீக்களுக்கான தர்பியாவை வருடம்தோறும் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் பலர் வெளிப்படுத்தினார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்த தர்பியா நிகழ்வு தாயீக்களுக்கு ஒரு மிகப்பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

அல்ஹம்துலில்லாஹ்!

தாவா களத்தில் பணியாற்றும் பேச்சாளர்களுக்கு இருந்த சந்தேகங்களுக்கான தீர்வுகளாகவும், விளக்கங்களாகவும் இந்த தர்பியா அமைந்தது.

அதுமட்டுமின்றி தாயீக்கள் பயணிக்க வேண்டிய களம் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் இந்தப் பயிற்சி முகாமில் வழங்கப்பட்டன.

மார்க்கக் கல்வியை கற்றுக்கொள்ள மாணவர்களாக மாறிவந்த ஜுமுஆ பேச்சாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தர்பியாவில் கிடைத்த அறிவமுதத்தைப் பருகியவர்களாகத் தங்களது ஊர்களுக்குச் புறப்பட்டுச் சென்றார்கள.

அல்ஹம்துலில்லாஹ்!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!...


முகம்மது இஸ்மாயில்


*வரலாறு அறிவோம்*
மூட்டை தூக்கிய ஆளுநர்

மத்யன் நகரம். பரபரப்பான ஒரு காலை நேரத்தில் மக்கள் பொருட்களை வாங்குவதிலும்,,,
விற்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்குஆளுநராகஇருந்தவர்கள் சல்மான் பார்சி(ரலி) எனும் நபித்தோழர்....!!

இவர்கள் இறைத் தூதரின் அன்பை பெற்ற பெருந்தோழர்,,,,
அகழ் யுத்தத்தின் ஆலோசகர்.

அண்ணல்நபி(ரலி)அவர்களால்,

சல்மான் என் குடும்பத்தைச் சேர்ந்தவர் என கூறிஅவர்களை பெருமைபடுத்திஇருக்கின்றார்கள்,

சல்மான் பார்சி (ரலி) அவர்கள் ஆளுநராக இருந்தாலும் உண்பது முதல் உடுத்துவது வரைஎளிமையாகவேவாழ்ந்தவர்கள்.

தன் வீட்டுக்கு தேவையான பொருட்களை தானே கடை தெருவிற்குசென்றுவாங்கிவருவார்கள்.

அன்றும்,வழக்கம் போல் சில பொருட்கள் வாங்க, கடைத்தெருவிற்கு வருகின்றார்கள்.

அப்போது பயணி ஒருவர் ஏறாளமான பொருட்களை வாங்கி மூட்டையாக கட்டிக் கொண்டு தூக்கிச் செல்ல கூலியாட்கள் கிடைப்பார்களா? என பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.

அந்தநேரம்,சல்மான்பார்ஸி(ரலி) அவர்கள் அந்தப் பக்கமாக வருகின்றார்கள் .

அவரது கிழிந்துஒட்டுப்போட்டஆடைகளை கண்டு கூலியாள் என நினைத்த பயணி,அந்த மூட்டையை, தூக்கிவரும் படிகூற,மறுப்பேதும் சொல்லாமல் அதை சுமந்து கொண்டு அந்த பயணியின் உடன்,அவர் வீடு வரை சென்று இறக்கி வைத்து விட்டு திரும்ப எத்தனிக்கும் போது பயணி,

 "நில்லுப்பா கூலி வாங்காமல் செல்கிறாயே ,கூலி எவ்வளவு வேண்டும் ?என கேட்க,

பதிலுக்கு சல்மான் பார்ஸி(ரலி) அவர்கள்,கூலிஎதுவும்வேண்டாம்.
பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்காகதான் கலீஃபா அவர்கள் என்னை இந்த நகரத்தின் ஆளுநராக நியமித்துள்ளார்கள் என கூறி,
புன்னைகைத்த வண்ணம் திரும்பிச் செல்கின்றார்கள்,, ஆளுனர்சல்மான்பார்ஸி(ரலி) அவர்கள்...!!

பயணியோ திகைத்து நிற்கின்றார்....!!


இறைதூதரின் தோழர்களான ஸஹாபாக்கள்,ஆளுனர் ஆனாலும்அல்லாஹ்ரஸூலுக்குகட்டுபட்டஉண்மைநேசர்களாக மக்களின் மனங்களில் மணம் பரப்பினார்கள்.

(படம்; சல்மான் பார்சி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தோட்டத்தில் உள்ள கிணறு)

திகைப்புடன்.....மதுரை., இஸ்மாயில்..


A
MOHAMEDABDULLAH

(பெரியகுளம்முகம்மது)

உரிமையாளர் & இதழாசிரியர்


1- 207 Perumalpuram

Periyakulam 625 601

Theni Dt.50 62



A

Comments