Skip to main content

 



Year 6 Week 14

30 03 2026

பெரியகுளம்முகம்மது

இதழாசிரியர்

தங்கநிலா டாட்காம்     பார்க்கப்படும் உலகநாடுகள்

(Google blogger stats)

இந்தியா சிரிலங்கா 
சிங்கப்பூர் மலேஷியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அரபு நாடுகள்
ஐரோப்பிய நாடுகள்
இந்தோனேஷியா
சீனா ஜப்பான் தென்கொரியா
சுவீடன் நார்வே
இங்கிலாந்து


அடிபணிந்தார் டிரம்ப் 
மூட்டை கட்டும் அமெரிக்க இராணுவம்.


அமெரிக்காவிற்கு பேரிடி! மூட்டையை கட்டிக்கொண்டு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்ட வல்லரசு!

வாஷிங்டன்:

"அமெரிக்கர்கள் மிக மோசமான தோல்வியைத் தழுவிவிட்டு, இப்போது அங்கிருந்து வெளியேறத் துடிக்கிறார்கள்!"

என மக்கள் சக்தி கட்சியின் தலைவர் லிம் டீன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஜே.டி. வான்ஸின் அதிரடி நேர்காணல்
அமெரிக்கா இந்த போரை முடிவுக்குக் கொண்டுவரவும், தனது படைகளைச் சொந்த நாட்டிற்கு அழைக்கவும் எவ்வளவு அவசரம் காட்டுகிறது என்பதை நான் ஏற்கனவே சொல்லவில்லையா?

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) நேற்று அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை விரைவில் நிறுத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, "ட்ரம்ப் நிர்வாகம் தனது இராணுவ இலக்குகளை எட்டிவிட்டது" என்று வான்ஸ் மழுப்புகிறார்.

ஆனால் உண்மை என்னவென்றால், அமெரிக்கா இந்த போரில் படுதோல்வி அடைந்துவிட்டது என்பதை உலகமே அறியும்!

ஈரானின் கை ஓங்கியது:

பேச்சுவார்த்தையில் வான்ஸ்!
தற்போது ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை வான்ஸ் முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) கட்டுப்பாடு உட்பட ஈரானின் பெரும்பாலான கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

போரைத் தூண்டிவிட்ட லிண்ட்சே கிரஹாம், பீட் ஹெக்செத் போன்ற 'இஸ்ரேலிய கைக்கூலிகள்' இப்போது ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

2028 அதிபர் தேர்தலில் தனது வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால், வான்ஸ் இந்த பேரழிவுப் போரைத் தொடர விரும்பவில்லை.

இதற்கிடையில், எப்போதும் அதிரடியாகப் பேசும் ட்ரம்ப் இப்போது மௌனம் காக்கிறார்.

வரலாற்றுத் தோல்வி: வாட்டர்லூவை விட மோசம்!
அமெரிக்காவின் இந்தத் தோல்வியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

நெப்போலியனின் சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டு வந்த வாட்டர்லூ (Waterloo) போருக்கு நிகரானது இது.

வியட்நாம் போரை விடவும் உலகளாவிய ரீதியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே இரவில் ஈரான் உலக எரிசக்தி சந்தையின் ஏகபோக சக்தியாக மாறியுள்ளது.

37% உலக எண்ணெய் விநியோகம் இப்போது ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 25% மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாப் அல்-மண்டேப் ஜலசந்தி வழியாக 12% எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது.

ஈரானியர்களின் வீரம் மற்றும் வெற்றி
அமெரிக்காவிற்கு எதிரான இந்த மாபெரும் வெற்றியை மில்லியன் கணக்கான ஈரானியர்கள் விரைவில் வீதிகளில் இறங்கிக் கொண்டாடப் போகிறார்கள்.

ஈரானியர்கள் ஒரு மிகச்சிறந்த நாகரீகத்தைக் கொண்டவர்கள்; அவர்களின் சகிப்புத்தன்மை வியக்கத்தக்கது.

இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களைத் தோற்கடித்த ரஷ்யர்களின் சாதனையைப் போன்றது ஈரானின் இந்த வெற்றி.

குறிப்பு: இந்தச் செய்தி லிம் டீன் அவர்களின் சமூக வலைதளப் பதிவின் அடிப்படையாகக் கொண்டது.


தேர்தல் செய்திகள்














VCK LIVE

பெரியகுளம் வெற்றி வேட்பாளர்
சக்திவேல் என்ற ஆற்றலரசு அவர்கள்.




Tamil Muslim Media


Udhaya G

ஒரே மொழி, ஒரே இனம், ஒரே நிலப்பரப்பு. ஆனால், "உட்பிரிவு" என்ற ஒற்றை நூலைப் பிடித்துக் கொண்டு, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் வந்து 'நாட்டாமை' செய்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இவர்களுக்குள் இருக்கும் சிறிய எல்லைப் பிரச்சனைகளையும், மதப் பிரிவுகளையும் (ஷியா-சுன்னி) பயன்படுத்தி, ஒருவருக்கு எதிராக ஒருவரைத் தூண்டிவிட்டது.

"உன் அண்டை நாட்டை விட நான் தான் உனக்கு உண்மையான நண்பன்" நான் உன்னை பாதுகாக்கிறேன்..என்று நாட்டாமை வேஷம் கட்டி இன்று ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு மக்கள் செத்துக் கொண்டிருப்பதை கைகட்டி ரசித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா....

அவர்களின் அரசியல் அறியாமையைப் பயன்படுத்தி 'பாதுகாப்பு' என்ற பெயரில் தன் 40,000 படை வீரர்களை இறக்கி வைத்து, வளைகுடா நாடுகளின் உழைப்பை உறிஞ்சி தன்னுடைய "நரித்தந்திர" வியாபாரத்தை ஜாம் ஜாம் என்று நடத்திக் கொண்டிருக்கிறது...

உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, வளைகுடா நாடுகளைப் பார்த்து ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கிறார்கள், உங்களுக்கு ஆபத்து" என்று பூச்சாண்டி காட்டுகிறது..

இந்த 'பயத்தை' மூலதனமாக வைத்து, ஆறு வளைகுடா நாடுகளிலும் (GCC)தன் ராணுவத் தளங்களை நிறுவியது அமெரிக்கா...

( Gulf Cooperation கவுன்சில் என்ற அமைப்பின் கீழ் தனித்தனி மன்னராட்சி முறையைக் கொண்ட.சவுதி அரேபியா, குவைத், பக்ரைன்,அபுதாபி, துபாய், கத்தார்)

அங்குள்ள அமெரிக்காவின் 40,000 வீரர்களுக்கான சம்பளம், உணவு, ராணுவத் தளவாட பராமரிப்பு என அனைத்தையும் இந்த வளைகுடா நாடுகளே ஏற்க வேண்டும்.

தன் எதிரியைச் சுற்றிலும் வேலி அமைக்க, அந்த வேலிக்கான காசைப் பக்கத்து வீட்டுக்காரனிடமே பிடுங்கும் வித்தை அமெரிக்காவிற்கு மட்டுமே தெரியும்!

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பது அமெரிக்காவிற்குப் பிரச்சனை இல்லை. . ஈரான் தனது எண்ணெய் வர்த்தகத்தை 'டாலர்' பிடியிலிருந்து வெளியே கொண்டு வருவதுதான் அமெரிக்காவின் நிஜமான கோபம...

CGC நாடுகள் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு சிறு ஊசியைக் கூடச் சொந்தமாகத் தயாரிக்க முற்படவில்லை. 

சொந்தமாக ராணுவக் கட்டமைப்பையோ, ஆயுதத் தொழிற்சாலைகளையோ உருவாக்கத் துப்பில்லாமல், "அமெரிக்கா நம்மைக் காப்பாற்றுவான்" என்று குருட்டுத்தனமாக நம்பினார்கள்.

எண்ணெய் விற்று உலகிலேயே பெரும் பணக்கார நாடுகளாக வலம் வந்த வளைகுடா நாடுகள், சம்பாதித்த பணத்தை எல்லாம் அமெரிக்கக் கடன் பத்திரங்களில் (Treasury Bonds) டாலராக முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள்.. இப்போது அமெரிக்காவை எதிர்த்தால், "பொருளாதாரத் தடை" என்ற பெயரில் மொத்தப் பணத்தையும் அமெரிக்கா முடக்கிவிடும்.

ரஷ்யா உக்கிரைன் போரின்போது ரஷ்யா அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்து இருந்த 54 லட்சம் கோடிகளை அமெரிக்க முடக்கியது...இது 'முதலீடு' அல்ல, அமெரிக்காவிடம் சிக்கியிருக்கும் 'பிணைக் கைதி' பணம் என்று இந்த நாடுகள் இப்பொழுது உணர தொடங்கி இருக்கிறார்கள் !

அதனாலதான் இப்பொழுது பெரும்பாலான நாடுகள் இந்தியா உட்பட தங்களது உபரி வருமானத்தை தங்கமாக சேமிக்க தொடங்கி இருக்கிறார்கள்.. தங்கம் விலை ஏறுவதற்கு மிக முக்கிய காரணம் இதுவே...

அமெரிக்கா தனது ஆயுதங்களை இந்த தேசங்களிடம் விற்று லாபம் பார்க்கிறது... அந்தப் பணத்தைக் கொண்டு அமெரிக்க மக்கள் பாதுகாப்பாகவும், செழிப்பாகவும் இருக்கிறார்கள்...
ஆனால், ஒரே இனத்தைச் சேர்ந்த வளைகுடா நாடுகளும் ஈரானும் தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றன.. இது எவ்வளவு பெரிய முரண்...

வளைகுடா நாடுகள் தங்கள் மண்ணை அமெரிக்காவிற்குத் தாரை வார்த்து, அங்கேயே அமெரிக்காவிற்கு வியாபாரத்தையும் பெருக்கிக் கொடுத்துவிட்டு, இன்று தங்கள் உள் கட்டமைப்பு சிதைந்து போவதைக் கையைப் பிசைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றன...

எங்களைத் தாக்கும் அமெரிக்காவிற்கு உங்கள் மண்ணில் இடம் கொடுத்தால், நீங்களும் எங்கள் எதிரிதான்" என்பது ஈரானின் வாதம்..

வளைகுடா நாடுகளைத் தாக்குவதன் மூலம், அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து 

"போரை நிறுத்துங்கள்" என்று சொல்ல வைப்பதே ஈரானின் ராஜதந்திரம்.

"உங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், அமெரிக்காவை எங்களைத் தாக்காமல் தடுத்து நிறுத்துங்கள்" என்கிறது ஈரான்..

உலக மக்களிடம் இப்பொழுதுள்ள கேள்வி.... வளைகுடா நாடுகளுக்கு தங்கள் மண்ணில் முகாமிட்டிருக்கும் அந்நிய நாட்டு வீரன், அவர்கள் அண்ணன் தம்பிகளுடன் கை குலுக்க ஒருபோதும் விடமாட்டான் என்பது இன்னும் புரியவில்லையா..?

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" "ஈரானுடன் அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனையை, அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கித் தீர்க்க நினைத்த இவர்களின் 'அறிவுசார் தற்கொலையை " என்னவென்பது!!??? உலகமே செய்வதறியாது பார்த்துக் கொண்டிருக்கிறது..??

அமைதி திரும்ப வேண்டுமானால், வளைகுடா நாடுகள் தங்கள் 'சுயத்தை' மீட்டெடுக்க வேண்டும். அடுத்தவன் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பதை நிறுத்திவிட்டு, சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும்.

அமெரிக்கா தானாக வெளியேறாது. இந்த ஒரே இன மக்கள் தங்களுக்குள் இருக்கும் பகையை மறந்து ஒன்றுபட்டால் மட்டுமே விடிவு பிறக்கும்...

"அடுத்தவன் கையில் இருக்கும் ஆயுதம் நம்மைக் காப்பாற்றாது, நம்மை அடிமையாக்கும்;
எப்பொழுதும் இனத்தின் ஒற்றுமை மட்டுமே உண்மையான கவசமாகும்!""
ஒரே மொழி, ஒரே இனம் - பிரிந்திருந்தால் நாம் வெறும் 'இரை'; ஒன்றுபட்டால் உலகிற்கே நாம் தான் 'இறை'!"

இது வளைகுடா நாடுகளின் தலைமைக்கும் அந்த மக்களுக்கும் புரியும் பொழுது அந்த பிராந்தியமே அமைதியாகும்... பிரார்த்திப்போம்..

#பகிர்வு
நன்றி : #ammashagasraa


Jafna Muslim


வளைகுடா நாடுகள் அனைத்துமே சுய அதிகாரம் பறிக்கப்பட்ட நாடுகள். இயல்பாக இறையாண்மை அற்ற நாடுகள். இந்த அமெரிக்க ராணுவ தளங்கள் ஆரம்பத்தில் அவர்களின் சம்மதத்துடன் நிறுவப்பட்டன.

ஆனால் இப்போது அவைகளை வைக்கவும் முடியாமல் வெளியேற்றவும் முடியாமல் திண்டாடுகின்றனர்.

இந்த ராணுவ தளங்களிலிருந்துதான் பிற நாடுகள் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்துகின்றது. அதனை இந்த நாடுகளால் தடுக்கவும் முடியவில்லை.

இந்த ராணுவ தளங்களில் இருந்துதான் 2003-ல் ஈராக் மீதும், 2001-ல் ஆப்கானின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் வளைகுடா நாடுகள் இவற்றுக்காக பல பில்லியன் கணக்கில் செலவழித்துள்ளன.

✍ முஹம்மத் அல் ஒமாரி + Imran Farook


Tamil Mudlim Media



Haniya Hamid


Shifi Review


குலசை அப்துல்
கரீம்.

இமாமின் மகள் நீதிபதியாக தேர்வு...!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹபீபா புகாரி 32-வது பீகார் நீதித்துறை சேவைகள் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

• பீகார் பொதுச் சேவை ஆணையம் (BPSC) நடத்திய இந்தத் தேர்வில் அவர் மாநில அளவில் 30-வது இடத்தை பிடித்துள்ளார்...

•இவர் பீகாரின் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முகமது அகமது புகாரி, முங்கரில் உள்ள குல்சார் போகர் மசூதியின் இமாம் ஆவார்...!!

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) சட்டப் படிப்பை (BA LLB மற்றும் LLM) முடித்துள்ளார்...

• தற்போது அவர் பாகல்பூர் நீதிமன்றத்தில் பயிற்சி சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்...!!

ஹபீபா தனது வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது, "எனது தந்தை ஒரு இமாமாக இருந்தாலும், பெண் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்... அவரது ஊக்கமும் பிரார்த்தனையுமே நான் இன்று நீதிபதியாக நிற்கக் காரணம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்... !

• மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்து, விடாமுயற்சியால் நீதிபதியாக உயர்ந்த ஹபீபா புகாரியின் இந்தச் சாதனை பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது...

பொறுப்பு துறப்பு

தங்கநிலா பார்வையாளர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்ற நோக்கில் கீழுள்ள கல்வி, வேலைவாய்ப்பு விளம்பரங்களை கட்டணமின்றி வெளியிடுகிறோம்.

விளம்பரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொண்டு முயற்சிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

 - தங்கநிலா





Syed Ali

🔴 ஈரானிய ஆட்சியை வீழ்த்த நினைத்த டிரம்ப், இன்று வாஷிங்டனில் தனது சொந்த அரசாங்கத்தையே வீட்டுக்கு அனுப்பக் கோரி வீதிகளில் இறங்கியுள்ள 80 லட்சம் அமெரிக்கர்களைக் கண்டு விழி பிதுங்கி நிற்கிறார்!

நீங்கள் சர்வதேசச் செய்தி ஊடகங்களைத் தொடராமல், அரபு ஊடகங்களை மட்டும் நம்பியிருந்தால், அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் இப்போது வெடித்துள்ள இந்த மக்கள் எழுச்சியைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை... அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் "மன்னர்கள் வேண்டாம்" (No Kings) என்ற முழக்கத்துடன் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

அரசியல்வாதிகள், கலைஞர்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் நோக்கம், வெறும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிரானது மட்டுமல்ல; இஸ்ரேலின் நலனுக்காக அமெரிக்காவைப் பலிகடா ஆக்கும் டிரம்பின் ஆட்சிக்கு எதிரான ஒரு பெரும் புரட்சியாகும்!

🟢 தற்போதைய கள நிலவரம்

வியக்கத்தக்கதாகவும் வழக்கத்திற்கு மாறானதாகவும் உள்ளது... பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான BBC அறிக்கையின்படி அமெரிக்காவின் 3,100-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இன்று போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பிலடெல்பியா, சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தைக் கண்டு காவல்துறையினரே பின்வாங்கியுள்ளனர். 

அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் நடந்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக இது விவரிக்கப்படுகிறது!

நிலைமை எந்தளவு தீவிரமடைந்துள்ளது என்றால், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டிடத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர்.

அமெரிக்க ராணுவம் வன்முறையைப் பிரயோகித்து இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளது. 

மக்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகம், அவர்கள் மீது ஈரானுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பதாகவும் அவநம்பிக்கையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது.
ஆனால் இது எதற்கும் பலனில்லை.

 எரிபொருள் நிலையங்களில் கூட, "இந்த நிலைக்குச் சீயோனிஸ்டுகளும் நெதன்யாகுவுமே காரணம்" என்று மக்கள் ஸ்டிக்கர்களை ஒட்டித் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

🟣 பிரபலங்களும் உயர்மட்ட அரசியல்வாதிகளும் கூட டிரம்பின் கௌரவத்தைச் சந்தி சிரிக்க வைத்துள்ளனர்...

உதாரணமாக, அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் இன்று போராட்டத்தின் மத்தியில் உரையாற்றுகையில், டிரம்ப் ஒரு "மாஃபியா கும்பல் தலைவன்" என்றும், அவர் மக்களின் இரத்தத்திலும் அழிவிலும் தனது செல்வத்தைக் கட்டமைக்கிறார் என்றும், அவரால் அமெரிக்கா இன்று உலக அரங்கில் வெறுக்கப்படும் நாடாக மாறிவிட்டதாகவும் கடுமையாகச் சாடினார்!

ஹாலிவுட் நட்சத்திரங்களான ராபர்ட் டி நீரோ மற்றும் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் போன்றோரும் மக்களுடன் வீதியில் இறங்கியுள்ளனர். டி நீரோ டிரம்பை "அழிவை விரும்பும் ஒரு பைத்தியக்காரன்" என்றும், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் கூறினார்.

 ஸ்வார்ஸ்னேக்கர் கூறுகையில், "விரைவிலேயே அமெரிக்க வரலாற்றில் டிரம்ப் ஒரு குப்பையில் வீசப்பட்ட பழைய ட்வீட் (Old Tweet) போல மறந்து போவார்" என்றார்.

🔹 ஆச்சரியமான விசயம் என்னவென்றால், டிரம்பின் மருமகள் மேரி டிரம்ப் கூட அவரை ஏளனம் செய்துள்ளார். "எனது மாமா ஒரு வழியாக ஆட்சியை மாற்றப் போகிறார், ஆனால் அது ஈரானில் அல்ல, அவரது சொந்த நாட்டில்!" என்று அவர் கிண்டலடித்துள்ளார். 😃

இந்த நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய திருப்பமாக (Plot Twist), ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் இந்தப் போராட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


 அவர் கூறுகையில்: "மன்னர்களுக்கு இடமில்லை... 47 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எதைத் தொடங்கினோமோ, அதற்கு உங்களை வரவேற்கிறோம்... இது ஈரானிய மக்களின் குரல், நாங்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

🔸 நாம் இப்போது ஒரு வரலாற்றுத் தருணத்தைச் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மக்களின் விழிப்புணர்வும், அநீதிக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிரான இந்த எழுச்சியும் எவராலும் எதிர்பார்க்கப்படாதது... இறைவனின் வாக்கு எவ்வளவு உண்மை:

"நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை, மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்."

- மஹ்மூத் அல்லாம்


Jafna Muslim

🔴 அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர் அப்பி மார்ட்டின், டிரம்பைப் பதவி நீக்கம் செய்து மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

🔴 தனது X தளத்தில்: இந்த ஜனாதிபதி மனநல 100% மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் போரையும் குழப்பமான சூழலை உருவாக்குவதன் முலம் ரசிக்கும் மனநிலையில் இருப்பது திண்ணம் என்றும் அவர் கூறினார்.

🔴 ஈரான் அமெரிக்காவிற்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. இந்த பூமியில் உள்ள எந்தவொரு அறிவுள்ள மற்றும் மனச்சாட்சியும் உள்ள நபரும் வெனிசுலா, ஈரான் மற்றும் அடுத்து கியூபா மக்களுக்கு எதிரான டிரம்பின் அராஜகத்தை ஆதரிக்க மாட்டார்கள்.

🔴 டிரம்பைப் பதவி நீக்கம் செய்யக் கோரி அமெரிக்க மக்கள் நாளை ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஒரு மரியாதையான எதிர்காலத்தை விரும்பும் ஒவ்வொரு அமெரிக்கரும் கலந்து கொள்வார்கள். இந்த மனநிலை பிறழ்ந்த நபருக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.

🔴 டிரம்பை அவசரமாக ஒரு மனநல மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வயது காரணமாக சுய புத்தியை இழந்துவிட்டார். உலகில் தான் நாசகார வேலையில் முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருப்பது அவருக்கே தெரியதில்லை.


#shared
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர்.


எல்கேஎஸ் மீரான் முகைதீன்

ராதாபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் முஅப்பாவு அவர்களுக்கு,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக பொன்னாடை அணிவித்து
பிரச்சார துவக்க விழாவில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காமராஜர் திடலில்......

திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எல்கேஎஸ் மீரான் முகைதீன்
மாநில STU தொழிற்சங்கத்தின் தலைவர் கானகத்து மீரான் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த போது....
உடன் திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் கிரகாம்பெல் வி எஸ் ஆர் ஜெகதீஷ், ராஜா ஞான திரவியம் மற்றும் முன்னணியினர் பங்கேற்றனர்.
எல்கேஎஸ் மீரான் முகைதீன்.


பாய்வீட்டு பயலுவோ


Shot Tipbs


Paleo Life


Al Kaswa Tv


Sivakumar Subbarayan


P Shanmugsm


Nowsath AliBaqavi


Mohamed Ansary Mama


அடி உதவது அண்ணன்
தம்பிகளும் உதவ மாட்டார்கள்
..

நான்கு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் உடன்பாடு @highlight எட்டப்பட்டுள்ளதாக தெரிகின்றது!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஈரான் 🇮🇷 - South Korea 🇰🇷 இடையில் நடைபெற்ற எண்ணெய் வர்த்தகத்தில்
6$ Billions Tehran -க்கு வர வேண்டியது இருந்தது!

அந்த பணத்தை 2019-ல் Trump நிர்வாகத்தின் மூலம் அமெரிக்கா முடக்கியது!

2023-ல்‌ ஈரான் ‌சிறையில் இருந்து 5 அமெரிக்கர்களை விடுவிக்க கோரியது Baiden நிர்வாகம்!

அதற்கு பதிலாக சில தடைகளை நீக்கியும்,
South Korea 🇰🇷- வில் இருந்து வர வேண்டிய 6$ Billions பணத்தை Bank Of Doha -வில் உள்ள
ஈரான் வங்கி கணக்கில் மாற்றியும் கொடுத்தது!

இதை நடத்தி காட்டியவர் அன்றைய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரான Amir

அதன் பிறகு அதே 2023-ல் தான் பாலஸ்தீன் தனது சிறையை உடைத்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது!

அது போராக உருவெடுக்கவும்
ஈரான்
Hamas பின்னால் நிற்பதால் கத்தார் அந்த 6 பில்லியன் டாலர் பணத்தை Freez செய்து வைக்க வேண்டும் என்று அன்றைய அமெரிக்க செயலர் Antony Blinken நேரடியாக வந்து கத்தார் Emir -க்கு கோரிக்கை வைத்தார்.

அதன் பிறகு..,
ஈரானும் அந்த பணத்தை பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை!

அந்த 6 பில்லியன் டாலரை இந்த நான்கு நாட்களில்
IRGC 🇮🇷 கேட்ட இடத்திற்கு கத்தார் மாற்றி கொடுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் கத்தார் உள்ளே வெகுவாக குறைந்து விடும் என்றும் உறுதி செய்துள்ளனர் கத்தார் அதிகாரிகள்!

அதனை தொடர்ந்து தான்...,

கத்தார் மீதான தாக்குதல் என்பது இனி "0" என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!


Comments