Skip to main content

 




Year 6 Week 17

19 04 2026 - ஞாயிறு

பெரியகுளம் 

முகம்மது

இதழாசிரியர்

தங்கநிலா டாட்காம்   

இணையவாரஇதழ்

  பார்க்கப்படும் உலகநாடுகள்

(Google blogger stats)


இந்தியா சிரிலங்கா 
சிங்கப்பூர் மலேஷியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அரபு நாடுகள்
ஐரோப்பிய நாடுகள்
இந்தோனேஷியா
சீனா ஜப்பான் தென்கொரியா
சுவீடன் நார்வே
இங்கிலாந்து

தொகுதி மறுவரையறை

 அறப்போராட்டம்

பெரியகுளம் ( தேனி மாவட்டம் )


 
தலையங்கம்

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்ட பா.ஜ.க.



கோபத்தின் உச்சிக்கே சென்ற எடப்பாடி.. தப்பான நேரத்தில் தொகுதி மறுவரையறை.. பாஜக இப்படி பண்ணிடுச்சே!


"ஆளுங்கட்சிக்கு எதிரான அலை... அதை அப்படியே அறுவடை செய்யலாம்!" - என எடப்பாடி பழனிச்சாமி கணக்கு போட்டுக்கொண்டிருந்த வேளையில்,

'டெல்லி' வீசிய ஒரு பந்து ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றியிருக்கிறது.

2026 தேர்தல் களம், இப்போது 'ஆன்டி இன்கம்பன்சி'யிலிருந்து 'அடையாள அரசியல்' நோக்கித் திரும்பியிருக்கிறது!

திசை மாறிய காற்று!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் மிக முக்கியமான மோதல் புள்ளியாக உருவெடுத்துள்ளது.


நாட்டின் அதிகார மையத்தை வட மாநிலங்களை நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சி என்று கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா,

தென்னிந்திய அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



இதற்கு இடையே தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் (EPS) வியூகம் முழுக்க முழுக்க 'திமுக-வின் ஆட்சி நிர்வாகக் குறைபாடுகள்' மற்றும் 'ஆண்டி-இன்கம்பன்சி' (ஆட்சி எதிர்ப்பு அலை) மீதுதான் மையம் கொண்டிருந்தது.

ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) எனும் பூதம் கிளம்ப, களமே தலைகீழாக மாறியிருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், தென் மாநிலங்களின், குறிப்பாகத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதுதான் தற்போதைய 'ஹாட்' விவாதம்.

இதை மிகச் சரியாகப் பிடித்துக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.








"இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் துரோகம், நமது உரிமையைப் பறிக்கும் செயல்" என அவர் முன்னெடுக்கும் 'இருத்தலியல் போராட்டம்' (Existential Crisis), இப்போது மக்கள் மத்தியில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான அலையை உருவாக்கியிருக்கிறது.

எடப்பாடியின் மௌனம்... சம்மதமா? சங்கடமா?
இங்கேதான் அதிமுக சறுக்குகிறது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக களம் கண்டு போராட்டம், தீர்மானம் என அதிரடி காட்ட, அதிமுகவோ ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தவிக்கிறது.

பயமா? : பாஜக-வின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்ற எண்ணமா?
பின்னடைவா? :

"பாஜக-வின் பி-டீம்" என்ற முத்திரையை உடைக்க எடப்பாடி போராடிக்கொண்டிருந்த வேளையில், இந்த விவகாரத்தில் அவர் காட்டும் 'சைலண்ட்' ஆதரவு, திமுக-வின் பிரசாரத்திற்குத் தீனி போடுவது போல் ஆகிவிட்டது.

"தமிழ்நாட்டின் உரிமையை விட டெல்லியின் உறவுதான் எடப்பாடிக்கு முக்கியமா?" என திமுக மேடைக்கு மேடை முழங்க ஆரம்பித்துவிட்டது.

வழக்கமாக ஆளுங்கட்சியைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டிய எதிர்க்கட்சி,

இப்போது தற்காப்பு ஆட்டம் (Defensive play) ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

திமுக-வின் மாஸ்டர் பிளான்!
திமுக-வை பொறுத்தவரை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு போன்ற உள்ளூர் பிரச்சனைகளை விட,

"தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுவது" என்ற கோஷத்திற்கு வலிமை அதிகம் என்று நம்புகிறது.

தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதன் மூலம், அதிமுக-வை 'தமிழ்நாட்டிற்கு எதிரான கட்சி'யாகச் சித்தரிப்பதில் அவர்கள் தற்காலிகமாக வெற்றியும் பெற்றுள்ளனர்.



கிளைமாக்ஸ் என்ன?

எடப்பாடிக்கு இப்போது இரண்டு சவால்கள்.

ஒன்று, திமுக-வின் மீதான மக்கள் அதிருப்தியைத் தக்கவைப்பது.

இரண்டு, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனது 'மௌனத்தை' உடைத்து, தமிழ்நாட்டின் நலனில் தனக்கும் அக்கறை உண்டு என்பதை நிரூபிப்பது.

தவறினால், 2026 தேர்தல் களம் எடப்பாடி நினைத்தது போல 'நிர்வாகப் போராட்டமாக' இருக்காது; அது 'தமிழ்நாட்டின் உரிமைப் போராட்டமாக' மாறிவிடும். அதில் ஸ்டாலின் ஏற்கனவே ஸ்கோர் செய்ய ஆரம்பித்துவிட்டார்!





மு.வெங்கடேஷ் 




மு.வெங்கடேஷ்

மலைகளின் இளவரசி

கொடைக்கானலின் நிழலில் பெரியகுளம்.


Readers Cafe


Selvaganesh


Rekka Takor


அன்புத்தோழன்
ரா.அருணன்


Paulraj P
 



Syed Maraikayar

Mohamed Ashik

நமது ஊரில் இப்படி ஒரு வாகனத்தை முன்புறம் ஃபோட்டோ உடன் பார்த்த உடனே... பொதுவாக நமக்கு என்ன தோன்றுகிறது என்றால்... வேண்டாம். நமக்கு ஏன் வீண் வம்பு..?!


Csbins&Landscape



Jan Copeli


Sweet Mangoes Ripening on a Sunny Orchard Tree 🥭🌞


வரலாறு நாகரீகம்


இந்த பாரசீக மொழி கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் கிராமத்தில் இருந்த சுல்தான் அப்பா பள்ளி வாசலில் இருந்து எடுக்கப்பட்டது. 

கிபி 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு.
இதில் குறிப்பிட்ட பாரசீக வார்த்தையில் fattan என்று உள்ளது.

 உலக பயணி இப்னு பதுதா தனது ரிஹ்லா என்ற புத்தகத்தில் குறிப்பிட்ட fattan என்ற அந்த அழகிய நகரம் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை பகுதிகள் தான் உள்ளது என்பது இந்த கல்வெட்டு மூலம் நிரூபணம்.

 உலக பயணி இப்னு பதுதா குறிப்பிட்ட fattan என்ற அந்த அழகிய நகரம் இன்றைய பெரிய பட்டினம் கிராம நிலபரப்பு மட்டுமல்லாமல், அது ஒரு பெரிய நிலபரப்பை கொண்ட பெரிய பகுதி.

இனி வேறு மாவட்டங்களில் இருக்கும் பிரபலமான இஸ்லாமிய ஊர்களில் வசிப்பவர்கள் இந்த இப்னு பதுதா குறிப்பிட்ட இந்த Fattan என்ற அழகிய நகரம் எங்கள் பகுதியில் தான் இருக்கிறது என்று claim செய்ய வேண்டாம்.


Trend Cipher 
Beirut Lebanon 🇱🇧









Imdhiyas Ahmed

இஸ்லாமிய வழியில் ஒரு முன்மாதிரி குடும்பம்: கணவன் - மனைவி உறவு
ஒரு முஸ்லிமின் வாழ்வில் குடும்பம் என்பது வெறும் சமூகக் கட்டமைப்பு மட்டுமல்ல, அது ஒரு புனிதமான இபாதத் ஆகும். 

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது.


அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: நீங்கள் அவர்களுடன் மன அமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே துணைகளை உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கருணையையும் ஏற்படுத்தியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.

 (அல்குர்ஆன் 30:21). திருமணம் என்பது வெறும் ஒப்பந்தமல்ல, அது இரு உள்ளங்களுக்கு இடையே அல்லாஹ் இறக்கி வைக்கும் அன்பு மற்றும் கருணையின் பிணைப்பாகும்.


சிறந்த கணவனுக்கு அடையாளம் அவனது மனைவியிடம் காட்டும் நற்பண்பே ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் யாரென்றால், அவர் தன் மனைவியிடம் சிறந்த முறையில் நடப்பவரே ஆவார்.

உங்களில் நான் என் மனைவியரிடம் சிறந்த முறையில் நடப்பவன் ஆவேன். (ஆதாரம்: திர்மிதி). மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும், வீட்டு வேலைகளில் உதவுவதும் சுன்னத்தாகும்.


ஒரு குடும்பத்தின் அமைதி என்பது மனைவியின் நற்பண்புகளில் தங்கியுள்ளது.

ஒரு பெண் ஐவேளை தொழுது, ரமலான் மாதம் நோன்பு நோற்று, தனது கற்பைப் பேணி, தனது கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவள் சொர்க்கத்தின் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் நுழையலாம் என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் நவில்கிறார்கள். (ஆதாரம்: அஹ்மத்). கணவனுக்குரிய மரியாதையை வழங்குவது குடும்பத்தில் கண்ணியத்தை நிலைநாட்டும்.


குர்ஆன் கணவன்-மனைவி உறவை மிக அழகாக வர்ணிக்கிறது: அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.

 (அல்குர்ஆன் 2:187). ஆடை எவ்வாறு உடலின் குறைகளை மறைத்து, அழகைக் கூட்டி, பாதுகாப்பை வழங்குகிறதோ, அதுபோலவே தம்பதியினர் ஒருவருக்கொருவர் குறைகளை மறைத்து, ரகசியங்களைப் பாதுகாத்து, கௌரவத்தை உயர்த்த வேண்டும்.


சிறந்த இல்லறத்திற்கு விட்டுக்கொடுத்தல் மிக அவசியமாகும். சிறிய தவறுகளை மன்னித்து, பெரிய நன்மைகளை நோக்கி பயணிக்க வேண்டும்.

வீட்டு விஷயங்களில் ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை கேட்டு முடிவு செய்வதும், இருவரும் இணைந்து தொழுகை மற்றும் திக்ருகளில் ஈடுபடுவதும் இல்லத்தில் பரகத்தை கொண்டு வரும்.

அல்லாஹ் நம் அனைவரின் குடும்பங்களையும் சொர்க்கத்து பூங்காவாக மாற்றி அமைப்பானாக. ஆமீன்.



தேவேந்திரகுல வேளாளர் சமூகமும் அவர்களது அரசியல் கட்சிகளும்.

பொற்கைப் பாண்டியன் -


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி
தமிழர்குடி என்பார்கள்‌.

மண்ணின் மைந்தர்களாகிய மூத்த தமிழ்க்குடியினரில்
பள்ளர், பரையர் சமூகத்தினரும் அடங்குவர்.

பரையர் சமுதாயத்தினர்,
நாங்கள்
தமிழகத்தின் அறிவுசார் சமுதாயத்தினர்
ஆவோம்.

திருவள்ளுவர்
பரையர் சமூகத்தைச் சேர்ந்தவரே என வாதிடுகின்றனர்.


பள்ளர் சமூகத்தினர்
நாங்கள்
தமிழகத்தின் நில
உடமையாளர்கள்.
ஏரும் போரும் எங்கள் குலத் தொழில்
என வாதிடுகின்றனர்.


இரு சமூகத்தார் சொல்வதும் முழுக்க முழுக்க உண்மையே.

இன்று
அறிவுசார் சமூகத்தினர்
செத்தமாட்டைத் தூக்குவதற்கும்
பிணம் எரிப்பதற்கும்
ஆளானநிலை
காலத்தின் கொடுமைதான்.

நில உடமையாளர்கள்
அன்றாடக் கூலித் தொழிலாளியாக
சேரிகளில் வாழ்ந்து கொண்டிருப்பதும்
காலத்தின் கொடுமைதான்.

மேலேயுள்ளவர்கள் கீழே வருவதும் கீழேயுள்ளவர்கள்
மீண்டும் மேலே வருவதும் உலகின் இயற்கை நிகழ்வுதான்.

இப்படியொரு சுழற்சியை உலக வரலாற்றில் நிறையக் காணமுடிகிறது.

இது ஒருபக்கம் இருக்கட்டும்.

எனது முகநூலுக்கு
வந்திருந்த கீழேயுள்ள காணொளியை தங்கநிலா பார்வையாளர்களுக்குத் தருகிறேன்.


 
தேர்தல் பரப்புரையில் தேவேந்திரகுல
வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்,

திருமாவளன் சொல்வதை பரையர் சமூகத்தினர்
ஒட்டு மொத்தமாகக் கேட்கின்றனர்.

திருமாவளவன் யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறாரோ
அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்.

அதனால் அவர் சார்ந்த கூட்டணியும் வெற்றி பெறுகிறது.

இதன் காரணமாக
கூட்டணியில் வி.சி.க. வுக்கு தொகுதிகள் கேட்கிறார் அவர்களும் கொடுக்கிறார்கள்.
இதன் காரணமாக
பரையர் சமூகப் பிரதிநிதிகள் சட்டப் பேரவைக்குள் நுழைகிறார்கள்.


ஆனால் தேவேந்திரகுல
வேளாளர்
சமூக தலைவரான
கிருஷ்ணசாமி சொல்வதை தேவேந்திரகுல
வேளாளர் சமுகத்தினர் கேட்பதில்லை
புதிய தமிழகம் கட்சிக்கு தேவேந்திரகுல
வேளாளர் சமுதாயத்தினர்
வாக்களிப்தில்லை‌.

அதனால் தேவேந்திரகுல
வேளாளர் சமுதாயத்தினர்
சமூகப் பிரதிநிதிகள் சட்டப்பேரவைக்குச் செல்ல முடியவில்லை.

ஆகவே இந்தத் தேர்தலிலாவது
புதிய தமிழகம் கட்சிக்கு தேவேந்திரகுல
வேளாளர் சமூகத்தினர் அனைவரும் வாக்களித்து
தேவேந்திரகுல
வேளாளர்
சமூகப் பிரதிநிதிகளை
சட்டப்பேரவைக்கு
அனுப்ப வேண்டும்.
என்கிறார்.

ஆனால்
எடப்பாடியாரோ,

பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள
புதிய தமிழகம் கட்சியினர் முதலில் பத்து தொகுதி கேட்டனர்.
பின்பு ஐந்துக்கு இறங்கி வந்தனர்‌.

கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கும்போது
கடந்த தேர்தலில்
அவர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான்
ஒதுக்கப்படும்.

கடந்தத் தேர்தலில்
புதிய தமிழகம் கட்சியினர். 32 தொகுதிகளிகளில்
போட்டியிட்டு
மொத்தமே
33 ஆயிரம் வாக்குகள்தான்
பெற்றிருக்கிறது.

இந்நிலையில்
தொகுதிகள் எவ்வாறு ஒதுக்க முடியும் எனக் கேட்டிருக்கிறார்.

பெரும்பான்மையான தேவேந்திரகுல
வேளாளர் சமூக மக்கள் கிருஷ்ணசாமிக்கோ புதியதமிழகம்
கட்சிக்கோ வாக்களிக்கவில்லை என்பது புலனாகிறது‌.

இதற்குக் காரணம்

எந்தவொரு சமூகமும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரையே
தங்கள் அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளும்.

தென்மாநில
தேவேந்திரகுல
வேளாளர் சமூக தலைவர் ஒருவர்

டாக்டர் கிருஷ்ணசாமி தேவேந்திரகுல
வேளாளர் சமூகத்தலைவர் கிடையாது
என்றக்
கருத்தை வெளியிட்டிருந்தார்.

இக்கருத்தை
தேவேந்திரகுல
வேளாளர்
சமூகத்தினர்
கவனத்தில் கொண்டிருக்கிறார்கள்‌ போல் தெரிகிறது.

இரண்டாவது
டாக்டர் கிருஷ்ணசாமியின் கொள்கை.

இந்தியக் குடியரசுத் தலைவராக மாண்புமிகு திரௌபதி அம்மையார் தேர்ந்தெடுக்கப் பட்டபோது

மனுசாஷ்திரத்தைக் கொள்கையாகக் கொண்ட சனாதன பாசிச சக்திகள்,

நாங்கள்
தலித் ஒருவரை
குடியரசுத் தலைவராக்கி பெருமைப் படுத்தியுள்ளோம்
என்று கூறினார்.

உடனே
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.

அவரை தலித் ஆக்கியவர்கள் யார்
எனக் கேட்டார்.

சரியானக் கேள்வி

ஒரு இந்துவை தலித் எனப் பிரித்துக் காட்டுவதில்தான்
அவர்களின் மகிழ்ச்சி அடங்கி
இருக்கிறது.

அம்பேத்காரால் உருவாக்கப்பட்ட
இந்திய அரசியல் சட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு

மக்களைக் கீழ் மேல்
எனப் பிரித்துவைக்கும் மனுஷ்மிருதியை
அரசியல் சட்டமாகக் கொண்டுவரத் துடிப்பவர்கள் சனாதன பாசிச சக்திகள்.

காங்கிரஸ் நாடாளுமன்ற
உறுப்பினர்
முஹ்சினா கித்வாய்,

இந்தியாவில்
முஸ்லிம்கள் இருப்பதாலேயே
இந்து என்றச்
சொல்லாடல் இருக்கிறது.

முஸ்லிம்கள் இல்லாதிருந்தால்
இந்து என்றச்
சொல்லாடல்
இருக்காது

பிராமணன்
சத்திரியன்
வைசியன்
சூத்திரன்
பஞ்சமன்
என்றச் சொல்லாடல்தான்
இருக்கும் என்றார்.

தமிழகத்திற்குள் சனாதனம் மனுஷ்மிருதி நுழைவதற்குமுன்

பள்ளர் முதல் 18 சாதிகள் (பெரும் சமூகங்கள் )

இவர்கள் அனைவரும்
எவ்வித வேறுபாடுமின்றி
ஓருதாய் மக்களாக
வாழ்ந்து வந்தார்கள்.

சனாதனம்
வருணாசிரமம் வந்தபின்புதான்
அறிவுசார் மக்களும்
நில உடைமையாளர்களும்

உடைமைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டு
சேரிக்கு விரட்டியடிக்கப் பட்டார்கள் என்பது
வரலாற்று உண்மை.

தமிழகத்தில் திராவிட உணர்வு
எழுச்சி பெற்றபிறகு
இன்று பட்டியல் வகுப்பினருக்கு
கல்வி கிடைக்கப்பெற்று
அவர்கள்
IAS IPS அதிகாரிகளாக
பல்வேறு துறைகளிலும்
முன்னேறி வருகிறார்கள்.

சனாதன பாசிச சக்திகள்,
மீண்டும்
பா.ஜ.க‌. அரசியல் முகத்துடன்
தமிழகத்தில் காலூன்றி
ஆட்சியைப் பிடித்து
மீண்டும் வருணாசிரம முறையை ஊக்கப்படுத்தி

பள்ளி கல்லூரிகளை
மூடி,
குலக் கல்வித்
திட்டத்தை மீண்டும்
தமிழகத்தில் கொண்டு வந்து

பட்டியல் வகுப்பாரை
மீண்டும் சேரிக்கு
அனுப்பத் திட்டமிட்டு வருகிறார்கள்.

இத்தகையோருடன்,
பட்டியல் வகுப்பாரின் நலனுக்கு எதிரான
சனாதன பாசிச சக்திகளுடன்
டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டு வைத்திருப்பதையும்

தேவேந்திரகுல
வேளாளர்
சமூக மக்கள் விரும்பவில்லை.
A

ஆகியக் காரணங்களால்
தான் டாக்டர் கிருஷ்ணசாமியையும் அவரது புதிய தமிழகம் கட்சியையும் சமூகத்தினர்
சமுதாய மக்கள்
கண்டு கொள்வதில்லை.


திருமாவளவனை
அவரது மக்கள்
ஏன் விரும்புகிறார்கள் என்றால்

அவர் சனாதன
எதிர்ப்பை நிலையான கொள்கையாகக்
கொண்டுள்ளார்.

ஒடுக்கப்பட்டோரும் (தலித்)
ஒடுக்கப்படுவோரும் (சிறுபான்மையினர்
முஸ்லிம்கள் கிறித்தவர்கள்)
சனாதனத்தின் எதிரிகளான திராவிட இயக்கத்தினர், கம்யூனிஸ்டுகள்
இவர்களுடன் இணைந்தால்
சனாதன பாசிச சக்திகள் தமிழகத்தில் தலையெடுக்காமல்
தடுக்கமுடியும்
என்பதை அவர்
உணர்ந்திருக்கிறார்.
இக்கூட்டுறவால்
முத்தரப்பினருக்கும் கூடுதல் பலன், கூடுதல் பாதுகாப்பு
என்பதைக் கருத்தில் கொண்டு
சிறுபான்மையினருக்கு தனது கட்சியில் முக்கியப் பொறுப்புக்கள் கொடுத்து
சிறுபான்மையினரை சட்டமன்ற
உறுப்பினராக
ஆக்கியுள்ளார்.




இந்திய அரசியல் அமைப்பு
பட்டியல் வகுப்பாருக்கு தனித்தொகுதியை
சட்டப்பூர்வமாக
வழங்கி இருக்கிறது.

தேவேந்திரகுல
வேளாளர்
சமூக மக்கள்
கட்சி வாயிலாக
சட்டசபைக்குள்
நுழைய வேண்டுமானால்

கட்சித் தலைவர் சனாதன எதிர்ப்பாளாராக இருக்க வேண்டும்.

சனாதன எதிர்ப்பாளர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

நலிவுற்ற ஒரு சமூகத்தை எப்படி
அரசியல் படுத்துவது என்பதற்கு திருமாவளனிடம்
நல்ல முன்மாதிரி
இருக்கிறது.



திருமாவளவனைப் போன்ற தலைவர்கள் தேவேந்திரக்குல வேளாளர் சமூகத்தில் உருவாக வேண்டும்.

திருமாவளவன் அவர் சமூகத்தாரூக்கு
தாரக மந்திரம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

அவர் சமூகத்தாரின் இல்ல விழாக்களிலே அது தவறாது ஒலி பரப்பப்படுகிறது.

காலங்காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த அச்சமூகத்தை
நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது.

அந்தத் தாரக மந்திரம்தான்

அடங்கமறு
அத்துமீறு
திருப்பி அடி.

PERIYAKULAM 

MUHAMMAD

உரிமையாளர் 

வெளியிடுபவர்   

இதழாசிரியர்

தங்கநிலா டாட்காம்

முகவரி

1- 207 Perumalpuram

Periyakulam 625 601

Theni Dt.

Cell 90 80 92 50 62


Comments