Skip to main content

திருப்பரங்குன்றம் சிக்கந்தர்ஷா தர்கா உண்மையான வரலாறு இந்த இதழில்


           தங்கநிலா டாட்காம்

முற்போக்குச் சிந்தனையாளர்களின்   முத்துச்சரம்



Year 5 Week 48

07 12 2025

பெரியகுளம்முகம்மது

இதழாசிரியர்

தங்கநிலா டாட்காம்     பார்க்கப்படும் உலகநாடுகள்

(Google blogger stats)

இந்தியா சிரிலங்கா 
சிங்கப்பூர் மலேஷியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அரபு நாடுகள்
ஐரோப்பிய நாடுகள்
இந்தோனேஷியா
சீனா ஜப்பான் தென்கொரியா
சுவீடன் நார்வே
இங்கிலாந்து


07 12 2025 ஞாயிற்று அன்று மதுரையில் தங்கநிலா இதழாசிரியர் கலந்து கொண்ட  திருமணவிழாவில்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
மங்கலநாணை எடுத்துக்
கொடுக்க
மணமக்கள் வாழ்க மணமக்கள் வாழ்க
என்றக் குரலைத் தவிர
வேறெந்த மந்திரத்தையும் கேட்க முடியவில்லை.

முழுக்க முழுக்க பகுத்தறிவு
திருமணம்.

அழைப்பின் பேரில் 
25 உலமாக்கள் கலந்து கொண்டார்கள்.

வீடியோ
மௌலவி முகம்மது மாஹிர் இர்பானி


 

J


 


நீண்ட உரையாடலுக்கு பின் மலேஷியப் பிரதமர் உஸ்தாதிடம் கேட்டார்:


ஷேஹ் அவர்களே எனக்கு ஓர் உபதேசம் தாருங்கள்......

உஸ்தாத்:
*நீங்கள் ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் ஒருபோதும் கைவிடக்கூடாது.
அவர்களை எப்போதும் அரவணைக்க வேண்டும்*.

கண்ணியத்திற்குரிய ஆலிம் அவர்களின் கைகளை பிடித்து முத்தமிட்டவர்களான நிலையில் பிரதமர் மீண்டும் கேட்டார்.
நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்*?

*நான் சொன்னதை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் போதும்*.

(*உலமாக்களுக்கும்,உமறாக்களுக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தை பார்த்த தருணம்*)

Adv Muhammed Shamveel Nurani


Rj Tharsi


Kannadi Channel Bilaal


KNavas Kani

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து உமீத் போர்ட்டலில் வக்ஃபு சொத்துக்களை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம்.


கசதி அஜீஸ் ராவுத்தர்


Muthu Kumar


Loganayagi Lona
.


Gowri Sankar


Sadhakathulla


ThirumuruganGandhi


Payama Irukku

உன் மனச கஷ்ட படுற மாதிரி பேசி இருந்த என்னா மன்னிச்சுடு உனக்கு புரியனும்னு சண்டை போட்டு இருக்கேன தவிர உன்னை விட்டு பிரியனும்னு ஒரு நாள் கூட சண்டை போட்டதில்லை. "


Dr APM Abbas

"நிம்மதி என்பது நான் ஒரு அழகான வாழ்க்கையை வாழ்கிறேன் என்று அர்த்தமல்ல.

மாறாக எனக்குத் தொந்தரவு அளிக்கும் எல்லாவற்றிலிருந்தும் என் தலையை (மனதை) காலி செய்வதே என்று நான் ஏற்றுக்கொண்டேன்."


JayaramakrishnanV

வரலாற்றில் இன்று - டிசம்பர் 2, 1976 –

ஃபிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவராக பொறுப்பேற்ற நாள் டிசம்பர் 2

அவரது புரட்சிகர வரலாற்றில் இந்நிகழ்வு மற்றுமோர் மைல் கல். பிடல் காஸ்ட்ரோ கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 

49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். 

உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.


Mufthi Omer Sheriff Qasimi


சத்தியத்தை அழிப்பதற்காக, உண்மையை வேறருப்பதற்காக மகா சக்திகள் பல உலகத்தில் பெரு முயற்சிகள் செய்தன.

நம்ரூத், நபி இப்ரஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களை நெருப்பில் எறிந்தான்.

ஃபிர்வன், நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களையும் அவர்களின் சமுதாயத்தையும் அழிக்க பல வழிகளில் முயற்சித்தான்.

மக்காவின் தலைவர்களும் அரேபிய சமுதாயங்களும் யூத கோத்திரங்களும், கிறித்துவ, மஜூசி அரசாங்கங்களும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழிக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள்.

ஆனால், உண்மை உறுதி பெற்றது, நிலைப் பெற்றது. அசத்தியம் கேவலத்துடன் அழிந்து போனது. 

அல்லாஹ் தன் நபிமார்களை பாதுகாத்தான், தன் மார்க்கத்தை ஓங்கச் செய்தான்.

ஆகவே, இஸ்லாமும் அதன் சட்டமும் உண்மை என்று நம்பக்கூடிய நாம் ஒரு போதும் நம்மை அழிக்க நினைக்கும் சக்திகளை கண்டு மிரளவோ பயப்படவோ அஞ்சவோ கண்கலங்கவோ தேவை இல்லை. 

அல்லாஹ் ஒருவனின் பக்கம் மீண்டு அவனது மார்க்கத்தை பற்றிப் பிடிப்போம். மார்க்கத்தை பிரச்சாரம் செய்துகொண்டே இருப்போம். உறுதியாக பொறுமையாக இருப்போம்.

நல்ல முடிவு நல்லவர்களுகே! அல்லாஹ்வின் வாக்கு கண்டிப்பாக உண்மையாகும். 

பொய் அழிந்துபோகும். பொய் அழியக்கூடியதே!!

வாழ்ந்தால் இஸ்லாமோடு வாழ்வது, மரணித்தால் இஸ்லாமிற்காக மரணிப்பது என்று இருப்போம்.

இறந்தால் இன் ஷா அல்லாஹ் சொர்க்கம் இருக்கிறது. கவலை வேண்டாம்!!


அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்காக கொல்லப்பட்டவர்கள் முந்திய சமுதாயத்தில் அதிக உண்டு! அதனால் சோதனை ஒன்றும் விசுவாசிகளுக்கு புதிதல்ல.

அல்லாஹ்வே எங்களை நிராகரிப்பாளர்களின் சோதனைக்கு ஆளாக்கி விடாதே! அக்கிரமக்கார மக்களிடமிருந்து எங்களை பாதுகாப்பாயாக!!
நீயே எங்கள் பாதுகாவலன்! நீயே எங்கள் இரட்சகன்! உன் மீதே நம்பிக்கை வைத்தோம்!


Art

சூரியன் மறையும் போது


Payama Iruku


Dr. Inogo Iruthayaraj

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சென்னை,

 பசுமைவழிச் சாலை இல்லத்தில் சந்தித்து

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தேன். 


Banuumadi Joseb


VM Sakthivel


Narkis Muhaideen


Bslasingam Rsjendiran

பறையர் சமூகத்தில் பிறந்த பெண் ஆளுமைகளில் முதன்மையானவர்.ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அழைக்கப்பட்டவருக்கு பெரியார் என பட்டம் வழங்கி சீர்திருத்தியவர்.

சுதந்திரத்திற்கு பிறகான காலகட்டங்களில் பட்டியல் இன மக்களின் முதல் இயக்கமாக இருந்த ஷெட்யூல்டு கேசட் பேடரேஷன் அமைப்பின் மாநில தலைவராகவும் இருந்தவர்.

1950 இல் மாநில தலைவராக அன்னை மீனாம்பாள் பொறுப்பேற்ற போதுதான் அப்போதைய இளைஞர்களான தலைவர்கள் இளையபெருமாள் (மாநில செயலாளர் ) கே.பி.எஸ் மணி ( மாநில துணைத்தலைவர்) முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பரமேஸ்வரன்,உரிமை ரத்தினம் என பலரும் முன்னனி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

அம்மையாருக்கு நினைவஞ்சலி


சத்தியத்தை நோக்கி


திக சண்முகம்


தமிழன் வட நாட்டானுக்கு அடிமையாக இருக்கும் வரை அவன் நம் கருத்துகளையும் உரிமைகளையும் காதுகளிலே போட்டுக்கொள்ள மாட்டான்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பெரியார் இது விடுதலை அல்ல, பரங்கியன் கையிலிருந்த அதிகாரம் இனி பார்பான், பனியா, மார்வாடிகள் கையில் இருக்கும் என்றார்.

வரலாறு பெரியாரின் கூற்றை மெய்ப்பித்து விட்டது.

“நம் மீது இந்தியா இருக்கும் வரை இந்தியும் இருக்கும்.

எப்படி குதிரை இருக்கும் வரை குதிரை சாணி இருக்குமோ அது போல "

நல்ல உவமை கொண்டு சொன்னார்.

சாதியும் இருக்கும் மதமும் இருக்கும்
சாத்திரம் மக்களை வேறெனப் பிரிக்கும்

எங்கள் பெரும் புலமை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்

#பாவலரேறு_பெருஞ்சித்திரனார்.





IMUL Tamilnadu State


IMUL Tamilnadu State


Niki Saxton Bisci


Thirumurugan Gandhi


'பெரும்படை தோழர் நாள்'
- நவம்பர் 30

தமிழின போராட்டக் களத்தில் எம்முடன் பங்கெடுத்து, இயற்கையோடு கலந்த மே17 இயக்கத் தோழர்களுக்கான நினைவுநாள்.

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலெண்

றிரு மூன்று வகையிற் கல்லொடு புணரச்

சொல்லப்பட்ட வெழுமூன்று துறைத்தே”

- வெட்சித்திணை, புறத்திணை இயல், தொல்காப்பியம்.

திணை வாழ்வியலில் இருந்த காலத்தே தமது மக்களுக்காக தன்னலம்பாராது போரில் வாழ்வில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் வழக்கத்தை தொல்காப்பியத்தின் புறத்திணை குறிப்பிடுகிறது.

 இதில் முதல் வரியில் அமைந்த
'காட்சி', 'கால்கோல்', 'நீர்ப்படை', 'நடுதல்' எனும் சொற்கள் களத்தில் வீழ்ந்த வீரர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு, மரியாதையை விளக்குகிறது.

'காட்சி' – போரில் இறந்த வீரருக்கு, நடுதற்கு ஏற்ற கல்லைத் தெரிந்தெடுத்தல்.
'கால்கோள்' – அக்கல்லைக் கொண்டு வருதலும் நாட்குறித்தலும் குறிப்பிடுகிறது.

'நீர்ப்படை ' – அக்கல்லை நீராட்டுதல்
'நடுதல்' – உரிய இடத்தில் நடுவதை குறிக்கிறது.

இதில் குறிப்பிடப்படும் 'பெரும்படை வாழ்த்தல்' – கல்லில் வீரனது பெருமை, வலிமை, தன்னுணர்வு ஆகியவற்றை பொறித்து வணங்குதல் என்கிறது.

தம் மக்களுக்காக வாழ்ந்தவனுக்கான மரியாதை செய்யும் இலக்கணத்தை 'தொல்காப்பியம்' சொல்வதன் வழியில் எம் தோழர்களுக்கான மரியாதை செய்து வணங்கும் நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ம் தேதி நடத்துவதாக முடிவெடுத்து மரியாதை செய்கிறோம். 

நான்கு ஆண்டுகளுக்கு முன்
இதே நாளில் இயற்கை எய்திய தோழர் ஹரிஹரன் நினைவு நாளை 'பெரும்படை தோழர் நாளாக' நினைவேந்துகிறோம்.

எம்முடன் இயங்கிய தோழமைகள் தோழர் 'ஹரிஹரன்', கோவையின் இரத்தினபுரி 'இரா.செந்தில்குமார்', மதுரையின் 'நாகராஜ்', தர்மபுரியின் தோழர் 'மகாலிங்கம்', சென்னையின் 'நாகராஜ்', தஞ்சை உம்பளப்பாடி 'கிட்டு (எ) லெனின்', 

திருவாரூரின் திருக்குவளை 'சேரன்' மற்றும் குழந்தை பருவத்திலேயே
எம்முடைய போராட்டங்களில் உற்சாகமாக பங்கெடுத்த
செல்வமகள் 'மதுசுதா' என எம் நினைவில் நிற்கும் 

மே பதினேழு இயக்கத் தோழமைகள் வாய்ப்புள்ள சமயத்திலெல்லாம் எவ்வித எதிர்பார்ப்பில்லாமல் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள், பங்களித்தவர்கள்.

இவ்வாறாக எம்மோடு களப்பணி செய்து, போராட்டங்களில் பங்கெடுத்து, தமிழின கோரிக்கைகளை சிரமேற்று செயல்பட்ட தோழர்களை 'பெரும்படை தோழர்' என அறிவித்து நினைவேந்துகிறோம்.

இயற்கை எய்திய இத்தோழர்களின் நினைவுகள் எமக்கு உரமூட்டும், கூர்மைப்படுத்தும், செழுமையாக்கும், ஓர்மை உணர்வுடையோராக வார்த்தெடுக்கும்.

இயற்கையாகிய எம் தோழர்களே!
உங்கள் பங்களிப்புகள் போற்றுதலுக்குரியவை.

உங்கள் நிலைப்பாடுகள் சமரசமற்றவை. உங்கள் பங்கேற்புகள் துணிச்சலானவை. உங்கள் சிந்தனைகள் செழுமையானவை.

பெரும்படை தோழர்களே!! உங்களுக்கு எமது தலைதாழ்ந்த
வீரவணக்கம்.

'வாழ்க்கையை கொள்கையாக்குவோம்!
கொள்கையை வாழ்க்கையாக்குவோம்!'

மே பதினேழு இயக்கம்.


Haja Gani

அறியாமை யார் குற்றம்
----------------------
பாரதியாரின்

" காக்கைக் குருவி எங்கள் ஜாதி"

என்ற கவிதைவரி மிகவும் புகழ்பெற்றது.

பிற உயிர்களைத் தன்னைப்போல் எண்ணும் உன்னத மனத்தை அவ்வரிகள் உணர்த்துவதே அவ்வரியின் புகழுக்குக் காரணம்..

1450 ஆண்டுகளுக்கு முன்பே அருளப்பட்ட திருமறைக் குர்ஆனின் வசனம் ஒன்றில் இந்த ஓர்மை கூறப்பட்டிருப்பது கூர்ந்து நோக்கினால் விளங்கும்.

ஆயினும் ஏன் இக்கருத்து பரவலாகச் சென்றடையவில்லை.

குற்றம், அறியாதவர்கள் மீது மட்டுமல்ல.. சொல்லாதவர்களின் மீதும் தானே..

எனவே சொல்லிவிட்டோம்.

இதோ அந்த இறைமறை வசனம்:

‏ பூமியில் ஊர்ந்து திரியும்"
உயிரினங்களும்,

தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும்

உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை;

(இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
(அல்குர்ஆன்: 6:38)


Celon Voice

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை


சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.

உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீன் அவர்களின் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினியினால் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலை கையளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு போரா சமூக பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அதற்காக தமது நன்றியையும் தெரிவித்தனர்.


IMUL Tamilnadu State




Yasar Arafath

ஜனநாயகத்தை அழிக்கும் ஒன்றிய அரசு!

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!!!

இன்று இந்தியா கூட்டணி சார்பில் SIR-க்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியே மிக பெரிய போராட்டம் நடைபெற்றது..

பாராளுமன்றம் இந்திய மக்களுடையது என்று கூறிவிட்டு பொது மக்களின் முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதத்தில் இருந்து ஓடி ஔிகிறார் பிரதமர்.

எனவே அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க SIR மீது பாராளுமன்றத்தில் தீவிர விவாதிக்க எதிர்க்கட்சி கோரிக்கை.

SIR என்ற பெயரில் நடக்கும் அராஜகத்தை நாடு முழுவதும் கண்டிப்போம்..


தேவரின் சிறப்புசெய்தி

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நகரமான மும்பையில்—

தாராவி மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தை இணைக்கும் முக்கியப்பாதைக்கு பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திரு மகனாரின் பெயர் சூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள அற்புதமான காட்சி.

இது சமூக பெருமையின் ஒரு புதிய அடையாளம்…

நம் பாரம்பரியத்தையும் வீரத்தையும் நினைவூட்டும் ஒரு சிறப்பு தருணம்! 🇮🇳✨


Cmn Saleem

சென்னை ஆவடி பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 80 க்கும் மேற்பட்ட ஜமாஅத் நிர்வாகத்துக்கான சிறப்பு பயிலரங்கம் " நமது ஊர் நமது பொறுப்பு" என்ற பெயரில் ஆவடி மஸ்ஜிதே முபாரக் பள்ளியில் நடைபெற்றது.

வட இந்திய முஸ்லிம்களின் அவலமான நிலையை உணர்ந்து கல்வி சமூகப் பொருளாதார நிலைகளில் நம்மை ஆற்றல் படுத்திக்கொள்ள வேண்டும்.

முஹல்லா பிள்ளைகளை குர்ஆன் பாடத்துடன் உயர்கல்வி ஆராய்ச்சி உற்பத்தித் தொழில் ஆகியத் துறைகளில் ஆற்றல்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் அதற்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு குறித்தும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

UNWO தலைமைப் பொறுப்பாளர் ரஃபீக் ஹாஜியார் அவர்களும் மௌலவி கலீல் அஹமது முனீரி அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.

இந்நிகழ்வை திருவள்ளூர் மாவட்ட அரசு காஜி மௌலவி அப்துல் காதர் ஸலாஹி அவர்களும் மஸ்ஜிதே முபாரக் நிர்வாகமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.


மருத்துவ பழமொழிகள் அறிவோம்:


🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.

🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.

🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கீழாநெல்லி.

🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.

🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.

🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.

🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.

🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.

🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.

🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.

🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.

🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்.

விஞ்சு வாதத்தின் விளைவு போம்.

🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.

🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.

🌿15) வி**ஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.


Tic Toke Machan

நம்ம நெல்லு வள்ர்க்கிறா மாதிரி, இங்க மாடு, குதிரைகளுக்கு உணவாகும் புல்லு வளர்க்கிறோம். 200 ஏக்கரில் புல் வளர்க்கும் அமெரிக்க விவசாயி நடிகர் நெப்போலின் பேட்டி.


Segu 
Mohamed yusuf


Rj Tharsi


Kannadi Channel Bilaal

முகம்மது இஸ்மாயில்


Mohamed Faizudeen


பென்னி


தலித் இலக்கியம், தலித் பண்பாடு, தலித் இதழியல், தலித் அரசியல் ஆகியவற்றில் நாற்பதாண்டுகளாக இயங்கியதோடு, பெண்கள், பழங்குடியினர், திருநங்கையர் உள்ளிட்ட

விளிம்புநிலைச் சமூகங்களின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பங்காற்றிவரக்கூடியவர் எழுத்தாளர் ப.சிவகாமி IAS (Retd) அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐





தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் கனமழையால் பாதிக்கபட்ட மக்களை

மீட்பு மற்றும் நிவாரண களத்தில் SDPI மீட்புக்குழு
~~~~~~~~~~


Universal Painting

பிரான்சிஸ்கோ ரிபெய்ரோ, போர்ச்சுகலில் இருந்து சமகால கலைஞர்.




Jaffna Muslim

இவர்கள் 3 பேரும் கேரள உயர்நீதிமன்ற நீதியரசர்கள். நீதியரசர் வி.ஜி.அருண், நீதியரசர் சி.எஸ்.மானு, நீதியரசர் குரியன் ஜோசப்..

அமர்ந்திருக்கும் இடம் எர்ணாகுளம் உயர்நீதிமன்றம் அருகில் கச்சேரிப்படி Kochi Grand Masjid உட்பகுதியில்.. கடந்த வெள்ளிக்கிழமை 21.11.25 ஜும்மா தொழுகையை Open Masjid என்று அறிவித்த கிராண்ட் மஸ்ஜித் நிர்வாகம் அனைத்து சமூகத்தை சேர்ந்த பிரபலங்களுக்கு பிரசங்கம் கேட்கவும், தொழுகையை பார்வையிடவும் அழைப்பு விடுத்தனர்.

கிறிஸ்தவ பங்கு தந்தையர், இந்து சமயம், சீக்கிய சமயம் சார்ந்தவர்கள் உட்பட சகோதர சமூகத்தை சேர்ந்த ஏராளம் பேர் வருகை தந்தனர்.

மஸ்ஜித் இமாம் ஃபைசல் அஸ்ஹரி ஆற்றிய ஜும்மா உரை கேட்டவர்கள், ஜும்மா தொழுகையையும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழுகைக்கு பின் உரையாற்றிய ஜஸ்டிஸ் வி.ஜி.அருண் சமத்துவம் சகோதரத்துவம் எனும் உயர்ந்த பண்பாட்டு அடையாளம் தொழுகை வரிசையை காணும் போது வெளிப்படுகிறது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் குடியிருந்தாலும் மசூதிக்கு உட்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் எனும் நீண்டநாள் ஆசை இன்று நிறைவேறியது என்றும் பேசினார்.

Open Masjid நிகழ்வுகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்வது காலத்தின் தேவை.


Colachel Azheem


Chandran Veerasamy

தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் தான் இறந்தால்..
பேராசிரியர் அ. ச. சம்பந்தன் மற்றும் மு. வரதராசன் அவர்களையும் கொள்ளி வைக்கச் சொல்லியிருந்தார்.

அவர் இறந்தபிறகு சிதையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்து. சுடுகாட்டில் தந்தை பெரியார் தடியோடு நின்று கொண்டிருந்தார்.

அவரது தொண்டர் படை கடைசி நிகழ்வுகளை செய்வதற்காக சிறுசிறு பந்தங்களோடு நின்று கொண்டிருந்தனர்.

சம்பந்தம் அவர்களுக்கும், வரதராசனார் அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தயங்கியபடியே பெரியாரிடம் வந்து திருவிக அவர்கள், எங்களை கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.

இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டது.
"அப்படியா சொன்னார்?

அப்படீன்னா நீங்களே செய்யுங்க" என்று சொல்லிவிட்டு, தீப்பந்தங்களுடன் சிதையை சுற்றியிருந்த தோழர்களை தள்ளி வந்துவிடுமாறு பணித்தார்.

ஆனால் அவர்களோ வருவதாக இல்லை. உடனே பெரியாருக்கு சினம் வந்தது. "சொல்றனே காதுல விழல, தீப்பந்தங்களை ஓரமா வச்சுட்டு வாங்கப்பா "என்று கர்ஜித்தார்.

என்னைப் பார்த்து "தம்பி நீங்க எப்படி செய்வீங்க இதை " என்று கேட்டார்.

சின்னய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த திருவாசகம், சிவபுராணத்தை சொல்லி சிதைக்கு தீ மூட்டுவோம் என்றேன்.

" அப்படியே செய்யுங்க தம்பி "என்று சொல்லிய பெரியார் அவ்விடத்தை விட்டு புறப்படாமல் அங்கேயே நின்றார்.

நானும், வரதராசனும் தலைமாட்டில் அமர்ந்து சிவபுராணத்தை தொடங்கினோம்.

நாங்கள் பாடுகின்றவரை நின்று கொண்டு இருந்த பெரியார் ஆகிய அப்பெரியார்..

தம்முடைய நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு தொண்டர் படை சூழ புறப்பட்டார்.

தேசத்தொண்டு, தமிழ்த் தொண்டு, சைவத் தொண்டு புரிந்து வாழ்ந்த அம்மகானின் இறுதி ஊர்வலத்தில் தேசபக்தி தொண்டர்கள், தமிழ்ப் புலவர்கள், சைவர்கள் யாரும் வரவில்லை.

எதிர்க்கட்சியினர் என்று குறிக்கப் பெற்ற பெரியார் ஈ. வெ. ராவும் அவரது தொண்டர்கள் தான் இறுதிவரை நின்று இறுதி வணக்கம் செய்ய போயினர்.

தமிழகம், தனக்கும், மொழிக்கும் இறுதிவரை தொண்டாற்றிய திருவிக போன்ற பெருமக்களுக்கு எப்படி நன்றி பாராட்டுகிறது என்பதை அன்று காண முடிந்தது.

(அ. ச. ஞான சம்பந்தன் எழுதிய "நான் கண்ட பெரியவர்கள்" தமிழ்த்தென்றல் திரு.வி.க., பக்கம் 131-133)

அன்புடன்.
சுல்தான் இப்ராஹிம்
துணை அமைப்பாளர்
திமுக அயலக அணி
NRTIA பஹ்ரைன்.


Artist Alexander Prokopenko


Sm Hithayathullah

எதிர்கால ஆலிம்கள் மூலம் சமுதாயம் முன்னேற , குர்ஆன் & நபிமொழி காட்டும் கூட்டு ஜகாத்- வறுமை ஒழிப்பு, நிகழ்ச்சி திருச்சியில் 28.11.25 அன்று ஜமால்முகமது கல்லூரி( JMC ) ஆலிம் & MA அரபி மாணவர்களுக்காக நடந்தது.


நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

துறைத் தலைவர் டாக்டர் இஸ்மாயில், பேராசிரியர் அலி இபுறாஹீம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

1) செல்வந்தர்களிடையே செல்வம் சுழலக்கூடாது-குர்ஆன்.


2) ஜகாத் என்ற ஏழை வரி ஏழை, தேவையுள்ளோர, ஜகாத் வசூலிப்பவர் உள்ளிட்ட 8 வகையினருக்கு (வசூலாகி)பகிரப்பட வேண்டும்- குர்ஆன் 9:60

3) ஜகாத்தை ( குர்ஆன் & நபிவழி) செலுத்தாதவன் மறுமையை நிராகரிப்பவன் & இணை வைப்பவன், அவனுக்கு (மறுமையில்) கேடே(வைல்)- குர்ஆன் 41:6 &7
4) அவர்களின் (அந்தந்த பகுதி) செல்வந்தர்களிடம் ஜகாத் வசூலிப்பீராக- குர்ஆன் 9:103.

1)உங்கள் பகுதி செல்வந்தர்களிடம் ஜகாத் வசூலித்து, உங்கள் முகல்லா ஏழைகளுக்கு பங்கிடும் அடிப்படையிலேயே இறைவன் ஜகாத்தை கடமை ஆக்கியுள்ளான்- நபிமொழி.


2)(நிசாப் இருந்தும்) ஜகாத் செலுத்தாதவனுக்கு

தொழுகையே இல்லை-நபிமொழி
3) ஜகாத் செலுத்தாதவன் தொழுகையை இறைவன் நிராகரிக்கிறான்- நபிமொழி.

மேற்கண்ட குர்ஆன், நபி மொழியை கூட மொழிபெயர்ப்பு மூலம் படிக்காமல் நாமும் முஸ்லிம் என்பது சரியா? சிந்தியுங்கள்,
உங்கள் மஸ்ஜிதை இறைவன் & ஸல் மஸ்ஜித் போன்றும், பிரியமான பள்ளி வாசலாகவும் மாற்றுக.
மஸ்ஜித் வெறும் தொழுகை கூடமல்ல.


இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மணியம்மையை, கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்துகிறார்கள்..! ஜட்ஜ் கேட்கிறார்..!


கேள்வி: உங்கள் மதம் எது?

மணியம்மை: எனக்கு எந்த மதமும் கிடையாது

கேள்வி: உங்கள் ஜாதி?.!

மணியம்மை : திராவிட ஜாதி

கேள்வி: உங்களுக்கு 2 வருடம் தண்டனை அளிக்கிறேன்

மணியம்மை: சரி.. மிக்க மகிழ்ச்சி. வணக்கம்.

இந்த பதிலை கேட்டு ஆடிப்போய்விட்டார் ஜட்ஜ்..!

மணியம்மையின் மனஉறுதி இரும்பு போன்றது.. மணியம்மையின் நிஜமான அக்கறையும் அப்பணிப்பும்தான் 30 வருடம் பெரியாருடன் பயணிக்க வைத்தது...!

டாக்டர் என்ன சொல்கிறாரோ அந்த சாப்பாட்டை தவறாமல் பெரியாருக்கு தந்துவிடுவார்.. ஒருமுறை, மணியம்மைக்கு தெரியாமல் பெரியாருக்கு அவரது நண்பர் பிரியாணி தந்துட்டாராம்.. இதை பார்த்து பதறிப் போய் தடுத்துள்ளார்.. கடைசிவரை, தள்ளாடும் கிழவனை தாங்கி பிடித்து கொண்டது அந்த தாயுள்ளம்..!

அதனால்தானோ என்னவோ, மணியம்மையை பெரியார் "அம்மா" என்றே கூப்பிட்டுள்ளார். 

"இந்த வயதிலும் நான் சாகாமல் இருக்கிறேன் என்றால், இந்த அம்மாவால் என்பது யாருக்கும் தெரியாது" என்கிறார் தந்தை பெரியார்..!

இந்திராவின் அவசரநிலை அறிவிக்கப் பட்டிருந்த காKALAIGNARISTல்நிலை மோசமாக இருந்த நேரத்திலும் மணியம்மை காட்டிய மன உறுதி அசாத
மணியம்மை ஒரு பத்திரிகையின் பதிப்பாளர்.

பத்திரிகையாளர்... எழுத்தாளர்.. மிக சிறந்த பேச்சாளர்.. ஒரு இயக்கத்தின் தலைவர்.. இங்கிலிஷ் ரொம்ப அருமையா பேசுவார்.. உலகிலேயே ஒரு நாத்திக புரட்சி இயக்கத்துக்கு ஒரு பெண் தலைமையேற்றார் என்றால் அது நம் மணியம்மைதான்..

தமிழக அரசியல் களத்தில் ஒரு திருப்புமையமாக இருந்தவர் மணியம்மைதான்..!

காலம், தனது வெளிச்சத்தை இனியாவது மணியம்மை மீது பாய்ச்சட்டும்..! இன்றைய இளைஞர்கள் அன்னை மணியம்மையை அறிய வேண்டும்.. கற்க வேண்டும்..!


- ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்


Talks of Express

வில்லேஜ் குக்கிங் சேனல் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும் கமெண்ட் பக்கத்தில் கூறவும்!


Coonoor


Sadhakathullah

முன்னாள் அமெரிக்க கர்னல் சர் ஆண்டி இஸ்லாத்திற்கு மாறிய பிறகு தனது முதல் உம்ராவை முடிக்கிறார், இது அவரது புதிய ஆன்மீக பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

🖤❤️
# 🕶💺

#கலைஞரிஸ்ட் - #


எருமைமாடே,எருமைமாடே,


காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு பவுன் நகை 26 ஆயிரம் ரூபாய் எருமை மாடே,

இப்ப ஒரு லட்சம் ரூபாய் எருமை மாடே,

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் 60 ரூபாய் எருமை மாடே,

இப்போது 100 ரூபாய் எருமை மாடே,

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிலிண்டர் 450 ரூபாய் எருமை மாடே,

இப்போது ஆயிரம் ரூபாய் எருமை மாடே,

காங்கிரஸ் ஆண்ட காலங்கள் முழுக்க இந்தியாவின் கடன் 55 லட்சம் கோடி ரூபாய் எருமை மாடே,

இன்று 255 லட்சம் கோடி ரூபாய் எருமை மாடே,

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வறுமை குறியீட்டு எண் 72 எருமை மாடே,

இப்போது வறுமை குறியீட்டு எண் 121 என ஆயிடுச்சு எருமை மாடே,

உனக்கு இது புரியுதா எருமை மாடே,

இல்ல புரியாதது போல் நடிக்கின்றியா எருமை மாடே,

மதமும் மத அரசியலும் நமக்கு சோறு போடாது எருமை மாடே,

நம் உழைத்தால் தான் நமக்குச் சாப்பாடு எருமைமாடே.

இன்குலாப்
ஜிந்தாபாத்.


Beautiful Sandong


Jameel Hasan


Infotechindi.com


MCast MST


Sankar Sankar


டிசம்பர் 6,
விடுதலைப் போராட்ட வீரர் ருக்மிணி லட்சுமிபதி
பிறந்த நாள் இன்று.
ருக்மிணி சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா ராஜா டி. ராம்ராவ் ஒரு நிலக்கிழார். 

சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் இவர் பி.ஏ பட்டம் பெற்றார். இவரது கணவர் டாக்டர். அசண்ட லட்சுமிபதி
] ருக்மிணி 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். 

1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 

1930ல் வேதாரண்யத்தில்நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர் தான்.

1934ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார . 

சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937லும் வெற்றி பெற்று ஜூலை 15, 1937ல் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 1, 1946 முதல் மார்ச் 23, 1947 வரை சென்னை மாகாணத்தில் (முதலமைச்சர் த. பிரகாசத்தின் அமைச்சரவையில்) பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 

சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த பெண் இவர் மட்டும் தான்.. சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு இப்போது ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1997ல் இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

TP Jayaraman மீள் பதிவு


K.N.NEHRU


Ajmal Aalim


தூத்துக்குடி கனகராஜ்


*புதிய வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி அழைப்பு விதிகள் , நாளை முதல் அமல்படுத்தப்படுகின்றன* !


1 . அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும் .
2 . அனைத்து அழைப்பு பதிவுகளும் சேமிக்கப்படும் .
3 . வாட்ஸ்அப், ஃபேஸ்புக் , ட்விட்டர் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களும் கண்காணிக்கப்படும் .


4 . இந்தத் தகவல் இல்லாதவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் .
5 . உங்கள் சாதனங்கள் , அமைச்சகத்தின் அமைப்புடன் இணைக்கப்படும் .


6 . யாருக்கும் தவறான செய்தியை அனுப்பாமல் கவனமாக இருங்கள் .
7 . உங்கள் குழந்தைகள் , சகோதரர்கள் , உறவினர்கள் , நண்பர்கள் , மற்றும் அறிமுகமானவர்கள் கவனமாக இருக்கவும் , சமூக ஊடகங்களை குறைந்தபட்சமாகப் பயன்படுத்தவும் தெரிவிக்கவும் .


8 .அரசாங்கத்திற்கோ அல்லது பிரதமருக்கோ , எதிராக எந்த வகையான செய்தி , வீடியோ போன்றவற்றை அனுப்ப வேண்டாம் .


9 . இந்த நேரத்தில் , எந்தவொரு அரசியல் அல்லது மத தலைப்பிலும் , செய்தி எழுதுவது அல்லது அனுப்புவது ஒரு குற்றமாகும்...! அவ்வாறு செய்வது , வாரண்ட் இல்லாமல் கைது செய்ய வழி வகுக்கும் .


10 . காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிடும் ; அதன் பிறகு , சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்கப்படும் , இது மிகவும் தீவிரமானது .
11 . குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளே , இந்த விஷயத்தை நீங்கள் அனைவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் .


12 . தவறான செய்திகளை அனுப்புவதைத் தவிர்க்கவும் , மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும் , கவனமாக இருக்கவும் .


குழு உறுப்பினர்கள் , மிகவும் எச்சரிக்கையாகவும் , கவனமாகவும் , இருக்க வேண்டும் .

குழு உறுப்பினர்களுக்கான , WhatsApp பற்றிய முக்கியமான தகவல்...!
தகவல் என்றால் :

1 . ✔ = செய்தி அனுப்பப்பட்டது !

2 . ✔✔ = செய்தி வழங்கப்பட்டது !

3 . ✔✔ (நீலம்) = செய்தி வாசிக்கப்பட்டது !

4 . ✔✔✔ (மூன்று நீல மதிப்பெண்கள்) = அரசாங்கம் செய்தியை கவனித்தது !

5 . ✔✔✔ (இரண்டு நீலம், ஒரு சிவப்பு மதிப்பெண்) = அரசாங்கம் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் !

6 . ✔ (நீலம்) + ✔✔ (சிவப்பு) = அரசாங்கம் உங்கள் தகவலைச் சரிபார்க்கின்றது !

7 . ✔✔✔ (மூன்று சிவப்பு மதிப்பெண்கள்) = அரசாங்கம் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது ; விரைவில் நீதிமன்றத்திலிருந்து ஒரு சம்மன் வரும் .

பொறுப்புள்ள குடிமகனாக இருந்து , உங்கள் நண்பர்களுடன் இவை௧ளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .

இதை , விரைவில் , உங்கள் மற்ற குழுக்களுக்கு அனுப்பி வை௧்௧வும் .

திருப்பரங்குன்றம்
சிக்கந்தர்ஷா தர்கா
உண்மையான வரலாறு

சிறப்புக்கட்டுரை

திருப்பரங்குன்றம் மலையில் அடக்கமாகி இருக்கும்.

சிக்கந்தர் பாதுஷா அவர்கள்..

மிகச் சிறந்த ஆன்மீகவாதியாகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் என்னநேரமும் இறை தியானத்தில் இருப்பவராகவும் 5 நேர தொழுகையாளியாகவும் இருந்தார்கள்..

இவர்கள் சவூதி ஜித்தா என்ற துறைமுக நகரின் ஆளுநராகயிருந்தார்கள்..

ஏர்வாடி இப்ராகிம் பாதுஷா அவர்களின் கனவில் தோன்றிய 

நபிகள்நாயகம் தமிழகம் சென்று இஸ்லாம் பரப்ப வேண்டியன் பேரில்..

இப்ராகிம் பாதுஷா தலைமையில் 4000 பேர்களில் ஒருவராக சிக்கந்தர் பாதுஷாவும் தமிழகம் வருகிறார்கள்..

கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள்.

நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி ஒரே இறைவன் கொள்கைகளை விளக்கி மத பரப்புரை செய்து வந்தார்கள்.

அப்போது பாண்டிய நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை.

அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன.

இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள் மற்றும் 4000 பேர்களும் வாளேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இப்ராகிம் பாதுஷாவின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறார்.

குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவர் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறார்.

நியாயத்துக்காக போராடிய ஏர்வாடி பாதுஷாவே..
நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசேகர பாண்டியன் கெஞ்சலானார்..

இப்ராகிம் பாதுஷாவும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த 4000 பேரோடு..குலசேகர பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள்..

அப்போரில் விக்கிரபாண்டியன் தோற்கடிக்கப்பட்டார்.

பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தார்.

இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் படையின் கீழ் வந்தது..

இப்ராஹிம் படை மீட்ட பகுதிகளை குலசேகர பாண்டியரிடம் ஒப்படைக்கிறார்கள்

மதுரை பகுதியையும் , முகவை பகுதியையும் குலசேகர பாண்டியன் இப்ராகிம் பாதுஷாவிடம் ஒப்படைத்து

அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவர் விருப்பபடி குலசேகர பாண்டியனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு..
ஏனைய பகுதிகளுக்கு அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் நெல்லை, மதுரை பகுதிகளை ஆட்சி செலுத்தினார்கள்.

மதுரை பகுதியை சிக்கந்தர் பாதுஷா கவர்னராக இருந்து ஆட்சி புரிய நியமித்தார்கள்..

இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும்.

இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.

சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார்கள்..

அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார்கள்.

இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார்.

தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே!

போரில் தோற்ற மன்னன் விக்கிர பாண்டியன் ஓடோடி திருப்பதி சென்று தன் நண்பர்கள் அனைவரையும் சந்தித்து.. அரேபியர்களின் படையெடுப்பு பற்றி விவரித்தார்.

அங்கேயே விருந்தினராக இருந்து போர் பயிற்சி கற்று வந்தார்.. விக்கிரபான்டியன் அவர்களுக்கு விக்கிரபாண்டியன் நன்பர்கள் குழு ஒரு பெரிய போர் படையை உருவாக்க உதவினார்கள்..

12 ஆண்டுகள் பிறகு..

ஏர்வாடி பாதுஷா நாயக படையில் 4000 பேரில் அப்பாஸ் தலைமையிலான 3000 பேர் கொண்ட குழு மெக்காவிற்கு உம்ரா செய்ய சென்றார்கள்..

இவ்வாய்ப்பைப் பயன்படுத்திய விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் மற்றும் திருபான்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் மதுரையை நோக்கி படையெடுத்து வந்தார்கள்..

போர் நடத்த பெரும்படையோடு நெருங்கினார் திருபான்டியன.

திருப்பாண்டியன் மதுரை
வருகையை பற்றி அறியாத மதுரை கவர்னர் சிக்கந்தர் அவர்கள்..

தன் போர் படை பற்றி கவனம் செலுத்தாமல் இஸ்லாத்தை பரப்புவதில் கவனம் செலுத்தினார்..

திருப்பாண்டியனின் வலிமைமிக்கப் படை சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவுடன் தீவிரமாகப் போரிட்டது.

இரு தரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பல பகுதி சுல்தான்கள் இந்தப் போர்களில் கொல்லப்பட்டனர் படுகொலை செய்யப்பட்டனர்.

பாண்டியர்களை எதிர்கொள்ள அரேபியர்களுக்கு அதிக படைகள் தேவைப்பட்டன.

சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தனது ஒன்பது வீரர்களை அனுப்பி, போரைப் பற்றியும் மேலும் படைகள் தேவை என்றும் பௌத்திரமாணிக்கப்பட்டினத்தின் (தற்போது ஏர்வாடி) ஆட்சியாளரான சுல்தான் சையது இப்ராகிம் ஷகீத்துக்கு தெரியப்படுத்த அனுப்பினார்கள்..

இதனால் ஏர்வாடியிலிருந்து அதிகமான வீரர்கள் வருவார்களே என்று அஞ்சிய திருப்பாண்டியன்,
9 அரேபிய வீரர்களைத் தடுத்து நிறுத்த தன் படைவீரர்களை ஏராளமாக அனுப்பினார்.

கீழடி சிலைமான் அருகே உள்ள பள்ளிசந்தையில் சையத் சாலார் ஷா ஷஹீத் என்பவரும்,

சக்கிமங்கலம் அருகே உள்ள கர்சேரியில் சையது இப்ராகிம் ஷஹீத் கொல்லப்பட்டனர்.


எஞ்சிய ஏழு வீரர்களும் போரிட்டு ஏர்வாடி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர்.

மீண்டும் ஒரு பெரிய பாண்டியப் படைவீரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

மற்றும் மானாமதுரையில் நடந்த கடுமையான போரில்
(அஞ்சனமார் - பாஞ்ச் பீர்) என அழைக்கப்படும் ஐந்து அரேபிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மீதமுள்ள இரண்டு வீரர்கள் செய்தியை தெரிவிக்க கடினமாக பயணம் செய்தனர்.

உமர் கத்தாப் ஷஹீத் கொல்லப்பட்டார்.


உயிருடன் இருந்த ஒரே வீரர் பாண்டியர்களால் பலத்த காயமடைந்தார்.

அவர் ஏர்வாடியை அடைந்து..
மதுரைக்குத் திரும்பிய திருபாண்டியனின் படையெடுப்புச் செய்தியைத் தெரிவித்தார்.

இதனால் வருத்தமடைந்த மாமன்னர் சுல்தான் சையது இப்ராகிம் பாதுஷா நாயகம் அவர்கள்..

மதுரையை நோக்கி பெரும் படையை அனுப்பினார்..

ஆனால் பாதுஷாவின் படைகள் மதுரையை அடைவதற்குள்..

வீரப்பாண்டியன் ஏர்வாடி வந்து கடுஞ் சமர் புரிந்து
சுல்தான் சையது இப்ராஹீமை சகீதாக்கி வெற்றி கொண்டார்.

ஏர்வாடியில் சுல்தான் சையது இப்ராஹீம் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

பிறகு

மதுரையில் சிக்கந்தரை தேடி அலைந்த திருப்பான்டியன்
இறுதியாக திருப்பரகுன்றம் அருகே மலை மேலே சிக்கந்தர்பாதுஷா இருப்பதை அறிந்தார்கள்..

சிக்கந்தரை சுற்றி வளைத்தார்கள் பான்டிய படைகள்..

மரணம் நெருங்குவதை அறிந்த
சிக்கந்தர் சுல்தான் பாதுஷா
தனக்கு விருப்பமான திருப்பரங்குன்ற மலையில் தஞ்சமடைகிறார்.

பாண்டிய படைகள் திருப்பரங்குன்ற மலையில் சிக்கந்தர் இருப்பதை அறிந்து மலைக்கு வந்து சிக்கந்தரின் ஆலோசகரான தர்வேஸையும், அவரது படைத்தலைவரான பாலமஸ்தானையும், மருத்துவரான ஹக்கீம் லுக்மானையும் கொல்கிறார்கள்.

பின்னர் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா
அவர்கள் மலை குகையில் தொழுகையில் நின்று வணங்கியபோது...

பாண்டிய வீரர்களின் மாலூன்களில் ஒருவர் சுல்தான் சிகந்தர் பாதுஷா வை கொன்றார்.
#Innalillahiwainnailaihirojiun
சிக்கந்தர் பாதுஷா ஷஹீதாக்கப்பட்ட நாள் (#ஹிஜ்ரி 607) ரஜப் பிறை 17.

சிக்கந்தரின் மரணத்துக்கு பின் பாண்டிய மன்னருக்கு கண்பார்வை பறிபோனதால்,

சிக்கந்தர் அவர்களின் அடக்கத்தலத்தில் மன்னிப்பு பெற்று மீண்டும் கண்பார்வை பெற்றார்.

அதற்க்கு நன்றியாக சிக்கந்தர் இறந்த இடத்தையும்..
மலை உச்சியை சுத்தியுள்ள நெல்லிதோப்பு பகுதி
மலை நிலங்களையும் தானமாக கொடுத்து..
அதற்க்குச் செம்பு பட்டயமும் கல்வெட்டும் இட்டு கொடுத்தார்கள்..

அவர் இறந்த அந்த மலை உச்சி இடத்திலேயே பாண்டியர்களின் ஒத்துழைப்போடு கல்லறை கட்டபடுகிறது...

மலை மேல் அமைந்துள்ள அவர்களது புனித #தர்காஹ், தங்கும் மண்டபம், மலை பாதை படிக்கட்டுகள், தொழுகைப் பள்ளி ஆகியவற்றை கி.பி. 1805 ஆம் ஆண்டு #ஆற்காடு_நவாப் #அஜீமுத்_தவுலா அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது.

பெரிய அளவில் தர்காவை சீர்செய்தது..
இந்துவாய் இருந்து முஸ்லீமாக மாறிய மருதநாயகம் கான் சாகிபு ஆட்சியில் தான்.....

Comments