தங்கநிலா டாட்காம்
முற்போக்குச் சிந்தனையாளர்களின் முத்துச்சரம்
தங்கநிலா டாட்காம் பார்க்கப்படும் உலகநாடுகள்
SazeerAnwari
Maniyankuli
#கேரளாவைச்சார்ந்த_ஓர்ஆலிமுக்கு ஓர் #நாட்டின்_பிரதமர் அளிக்கும் கண்ணியத்தை பாருங்கள்*...
(கறுப்பு தொப்பி போட்டி நிற்பவர் மலேஷியா நாட்டின் பிரதமர்)
Jaffna Muslim
கேரள மாநிலம் பெரும்பாவூர் அருகிலுள்ள வட்டக்காட்டுப்படி ஜும்மா மசூதி மதரஸா முன்பு கண்ட அழகான காட்சி இது.
மதரஸா சென்றுள்ள தனது மகனை திரும்ப அழைக்க உடனடியாக வரமுடியாத சூழலில் தந்தை ஹிஜாஸ் தனது நண்பர் பினோய் என்பவரிடம் சொல்ல அவரும் தனது பைக்கில்
மதரஸா சென்று நண்பர் மகனை
அழைத்து செல்லும் காட்சிகள்.
அணியும் ஆடையின் நிறம் வெறும் அடையாளம் மட்டுமே. பரஸ்பரம் அன்பை விதைத்து, அன்பையே அறுவடை செய்வோம்...
Colachel Azheem
Hasbi Haspi
தேவரின் சிறப்புச்செய்திகள்
இராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னர் திரு.குமரன்.நாகேந்திர சேதுபதி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில்
#முக்குலத்தோர்_எழுச்சி_கழக பொதுச்செயலாளர் #V_R_K_கவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு மனமக்களை வாழ்த்தினார்,உடன் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Anwardeen Benazir
நியூசிலாந்து சேர்ந்த/மார்க் டெய்லர் ஷஹாதாவை கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
"முஹம்மது" என்ற பெயரைப் பெற்றார்.
உலகத்தில் ஆக சிறந்த மார்க்கம் என்றால் இஸ்லாம் மட்டுமே.
அவர் கூறுகிறார்: ஒரு முஸ்லிமாக இருப்பதன் நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த மசூதியிலும் நடந்து சென்று பிரார்த்தனை செய்யலாம், மக்கள் உங்களை வரவேற்பார்கள்.
அவருக்கு உறுதியையும் நன்மை பயக்கும் அறிவையும் வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்.
Gowri Sankar
கணேசன்
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை...?
பழைய பொதிகளை சுமக்க தான் தெரியும்...
# கவர்னருக்கு எப்படிகம்யூனிசம் தெரியும் ?!
தோழர் க.பாலபாதி
Bala Bharathi
நக்கீரன்
திமுக காரர்களிடம் அரசியல் பேசலாம்!!
அனுபவம் நிறைந்தவராக இருப்பார்கள்!!
மக்கள் மீது அக்கறையும் மண்மீது பற்றும் உள்ளவர்களாக இருப்பார்கள்!!
கொள்கையை கேளுங்க என்பார்கள்
கொளுத்தும் வெயிலிலும் கழகத்துக்காக உழைப்பார்கள் கொடி பிடிப்பார்கள் கொள்கை உணர்வு மாறாது...!!
ஒரு தெருவில் ஒரு விபரம் தெரிந்த திமுக காரன் இருந்தாலே போதும் ஊருக்காக உழைக்கும் எண்ணத்தை வளர்ப்பான்,உறவுக்காக ஓடுவான், உரிமைக்காக போராடுவான்..!
திமுக என்பது சாதாரண மக்களின் வாழ்வியலையும் எளிய மக்களின் முன்னேற்றத்தையும் கணக்கில் கொண்டு உருவான இயக்கம் இன்று அது பேரியக்கம்...!
திமுக காரன் சொல்லும் போது ஒரு உணர்வு வரும் பாருங்க அது தான் தமிழ்நாட்டை தமிழகமாக மாற்றாது திராவிட சித்தாந்த உயிர்ப்புடன் ஓட வைத்துக்கொண்டு உள்ளது..!!
திமுக வந்தப்பின் மாறியவை ஏராளம்!
திமுக வருகைக்கு பின் மாறியவர்கள் ஏராளம்!!
திமுக மக்களுக்கான இயக்கம்
தமிழ்நாட்டிற்கான கழகம் (கட்சி)
திமுகாரனுக்கு " சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது
ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன்
அதைப்போல"
ஆம்... திமுககாரர்கள் இடப்பெயர்வு பெரும் நூலகங்கள்.. 🖤❤️
Dhinakaran Chellaia
சனாதனம் முதல் வர்ணத்தவர்களால் உயிர் வாழவில்லை, நாலாம் வர்ணத்தவர்களால் அது நிலைபெற்றுப் போனது.
இவர்கள் விழிதெழுந்தால் மட்டுமே சனாதனம் சமாதியாகும்!
குறிப்பு: புகைப்படத்தில் ‘வித்யாரம்பம்’ எனும் வைதிக கர்மானுஷ்டான சடங்கை கேரள முதல்வர் செய்வதைப் பார்க்கலாம்…
நாமகரணம்,அன்னப்பிரச்சனம்,திதி தர்ப்பணம் என எண்ணற்ற வைதிக சடங்குகளை பிராம்மணர் அல்லாதோரும் செய்கின்றனர்.
இந்தச் சடங்குகள் மூலம் சனாதனம் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது.
ParimalaRajan
நவ.26 ஜாதி ஒழிப்பு வீரர்கள் நாளில்...
உரத்து சிந்திப்போம்!
இளைய தலைமுறைக்கு ஒரு வரலாற்றுச் செய்தி. நவம்பர் 26, 1957 தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நாள்.
அன்றுதான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற புரட்சிகரப் போராட்டம் நடந்தது.
போராட்டத்தை அறிவித்தவர் பெரியார். அது என்ன போராட்டம்?
இந்தியாவின் அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தீ வைத்து எரிக்கும் போராட்டம்.
அப்படி ஒரு போராட்டம் நடந்ததா என்று வியப்படையாதீர்கள். உண்மையில் நடந்தது.
அரசியல் சட்டம் தமிழ்நாடு முழுதும் வீதிகளில் எரிக்கப்பட்டது.
பெரியார் இயக்கத்தின் தொண்டர்கள் 10000 பேர் எரித்தார்கள்.
கைதானவர்கள் 3000க்கும் மேல். அவர்களில் பெண்கள், ஆண்களும் சிறுவர்களும் இருந்தார்கள். 3 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றார்கள்.
மற்றொரு வியப்பான செய்தி தெரியுமா? இவர்கள் அனைவரும் பிணையில் வெளிவர மனு போட வில்லை; எதிர் வழக்காடவில்லை!
“ஆம் சட்டத்தை எரித்தோம்; நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்கத் தயாராக வந்துள்ளோம்” என்று நெஞ்சு நிமிர்த்தி சொன்னார்கள்.
அன்று சிறை வாழ்க்கை மிக கொடூரமானது. மோசமான உணவு; சுகாதாரமற்ற சிறை; அதுவும் இவர்கள் மீது போடப்பட்டதோ கிரிமினல் வழக்கு.
இவர்களை சிறை நிர்வாகம் அரசியல் கைதிகளைப்போல் நடத்தவில்லை; கிரிமினல் குற்றவாளிகளாகவே நடத்தியது.
அரைக்கால் சட்டை, அரைக் கைச் சட்டை, கிரிமினல் கைதிகளைப் போலவே சிறையில் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர்.
இத்தனை துயரங் களை ஜாதி ஒழிப்பு இலட்சியத்துக்காக இன்முகத்துடன் ஏற்றார்கள்.
சிறைக் குள்ளே 5 தோழர்கள் பலியானார்கள்.
சிறையின் மோசமான உணவு, வெப்பம் காரணமாக நலிவுற்று விடுதலை பெற்ற ஒரு மாதத்துக்குள்ளேயே உயிரிழந்த வர்களையும் சேர்த்து களப்பலியானோர் 18 பேர்.
சிறை வாழ்க்கையோடு குடும்பத்தையே இழந்தவர்கள் ஏராளம்.
ஜாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றில் தியாகங்களைச் சுமந்து நிற்கும் வரலாற்றுப் பக்கங்கள் இவை.
பார்ப்பனர்கள் சமூகத்தில் திணித்த இந்த ஜாதியம் தான் இப்போதும் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடைச் சுவர்.
ஏன் இந்த ஜாதி? எதற்காக ஜாதிக் கலவரங்கள்?
குடும்ப உறவுகளையே கொன்று போடும் இந்த ஜாதி ஆணவக் கொலைகள் ஏன்?
சமூகத்தின் எதிர்காலத்தை உரு வாக்கப் போகும் இளைய தலைமுறை யின் சிந்தனைக்கு சில கருத்துகளை முன் வைக்கிறோம். மனம் திறந்து சிந்தியுங்கள்.
• நம்மை இப்போது அடையாளப் படுத்தும் ஜாதியை நாம் விரும்பி, நாமே தேர்வு செய்து கொண்டோமா, இல்லையே!
• விருப்பமில்லாத ஜாதியை உதறிவிட்டு, விரும்புகிற ஒரு ஜாதிக்கு மாறு வதற்கான வாய்ப்புகள் நமக்கு இருக்கிறதா? இல்லையே! தோழர்களே! இந்த அடையாளம் நம் மீது பரம்பரை பரம்பரையாக திணிக்கப்பட்டு வருகிறது!
• எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் எப்போதோ நம் மீது திணிக் கப்பட்ட இந்த அடையாளத்தை சுமந்து கொண்டு, நமக்கு நாமே ‘பெருமை’ பேசிக் கொண்டிருப்பது ஒரு நாகரிக சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியுமா?
• குருதிக்கு ஜாதி இல்லை.
ஒரு ஜாதிக்காரன் குருதி இன்னொரு ஜாதிக்காரர் உடம்புக்குள் உயிர் காக்க ஏற்றப்படுகிறது.
• உடல் உறுப்புகளுக்கு ஜாதி இல்லை; விபத்தில் ‘மூளைச் சாவு’ அடைந்த ஒருவரின் உடல்உறுப்புகள் அப்படியே ஆண்-பெண் பாகு பாடின்றி வேறு ஒரு ஜாதிக்காரர் உடலுக்குள் பொருத்தப்படுகிறது.
இங்கே ஜாதி பார்க்காமல் ஏற்றுக் கொள்கிறோம்.
• இயற்கை சீற்றங்களான புயலும், வெள்ளமும் ஜாதி பார்க்கிறதா? தண்டவாளம் விரிசலடைந்து தடம் புரளும் தொடர் வண்டிகள், ஜாதி பார்த்து பயணிகளை சாகடிக்கிறதா?
நோட்டுக்களை மாற்றுவதற்கு வங்கிகள் முன் நாம் சோர்ந்து போய் நிற்கும் கியூ வரிசையில் ஜாதி இருக்கிறதா? எல்லாமே ஜாதி கடந்து தானே இருக்கின்றன.
• வர்த்தகங்களில் - சேவைகளில் ஜாதி இருக்கிறதா? இருக்கத்தான் முடியுமா? சொந்த ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே மருத்துவம் செய்வேன் என்று ஒரு டாக்டரோ, சொந்த ஜாதிக்காரர் களுக்கு மட்டுமே வியாபாரம் செய்வோம் என்று ஒரு வணிகரோ கூற முடியுமா? ஆனால் சொந்த ஜாதிக்குள் மட்டும்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவது என்ன, நியாயம், தோழர்களே!
ஒரே நாட்டில் - ஒரே சமூகமாக - ஒரே அரசியலமைப்பில் - ஒரே சமூக வாழ்க்கைக்குள் - நாம் வந்த பிறகும், மனித சமூகத்தை கூறுபோட்டு, ‘நீ உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன்’ என்று பிறப்பிலேயே பேதப்படுத்தும் ஜாதி ஏன்?
அதன் பெயரால் கலவரம் ஏன்? அடிதடி ஏன்?
மனித மாண்போடு சிந்தியுங்கள்!
ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்து சிறை புகுந்து, உயிர்ப்பலி தந்து, சொந்த வாழ்க்கையை இழந்த ஜாதி ஒழிப்பு வீரர்களின் நினைவு நாள் நவம்பர் 26!
60 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அதே நாளில் - நாம் சிந்திக்கவே இந்த அன்பான வேண்டுகோள்.
- திராவிடர் விடுதலைக் கழகம்.
(பெரியார் முழக்கம் இதழ். 24.11.2016).
Anika
SDPI CuddalorWest
சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமித்த சமத்துவ தலைவர்கள்.!
சமத்துவ வழக்கறிஞர்கள்சங்கம் நடத்தும் 2-வது மாநில மாநாட்டில் SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் பங்கேற்பு.
கிராமம் அவ்வளவு சுகமானது இல்லை நகர சுகவாசிகளே
கொளுத்தும் நடு வெயில், உச்சந்தலையில் ஆறு கிலோ விறகு, உள்ளங்கையில் கிலோமீட்டர் தூரம் நடந்த கால் வலியால் அழுவும் பிள்ளை, விறகு வீடு அடைந்தால் மட்டுமே உலை, அதிகபட்சம் ரேஷன் அரிசி, தொட்டுக்க புளி குழம்பு, மழை வந்தால் பட்டினி
நீங்கள் எல்லோரும் நினைப்பது போல் கிராம
தமிழா தமிழா
Benittokumar
ஒரு நீதிமன்ற குட்டி கதை.
ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை.
அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர்.
வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்.
நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது.
ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை.
அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார்.
வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.
அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான்.
ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”
Sm Hithayathulla
ஐ.டி. முத்துப்பாண்டி
Syed ZZ
பிஹார் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் சீமாஞ்ச்சல் மாவட்டத்தின் பல தொகுதிகளில் புல்டோசர் ஆக்சன்?
களத்திற்கே வரத்தயங்கும் ஒவைசி
MLA க்கள்..
உணர்ச்சிப் பேச்சுகளுக்கு அடிமையாகும் முட்டாள் சமுதாயம் உருப்பட்டதாக வரலாறு இல்லை.
முனைவர் முஜிபுர்ரஹ்மான் சிராஜி
இறையில்ல நிழலில் குழந்தைகள்..!
*******************************************
மதீனா முனவ்வரா 📖
மஸ்ஜிதுன்னபவியில் நடைபெறும் திருக்குர்ஆன் வகுப்புகளில் மதீனா நகர சிறார்கள் மார்க்க கல்வியை கற்பதற்காக அமர்ந்திருக்கிறா
ர்கள்.
சிறார்களுக்கே இருக்கும் இயல்பில் பள்ளிக்கூடம் சென்று வந்த சோர்வில் சில சிறார்கள் அப்படியே படுத்து ஓய்வெடுக்கிறார்கள்.
மஸ்ஜிதில் காலை மாலை மக்தப்கள் வழக்கத்தை ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்படுத்திய நடைமுறையாகும்.
எனவே தான் மஸ்ஜிதுன்னபவியில் முதல் உலகின் அனைத்து மஸ்ஜிதுகளிலும் திருக்குர்ஆன், தீனிய்யாத் மக்தப்கள் நடைபெறுகிறது.
உங்கள் பிள்ளைகளை உங்கள் மஹல்லாவில் அருகே உள்ள மஸ்ஜிதில் நடைபெறும் மக்தப் களுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இதனால் வளரும் பருவத்திலேயே மஸ்ஜிதின் மீது அவர்களுக்கு பிரியம் ஏற்படும்.
தொழுகையாளிகளாக உருவாகுவதற்கு இந்த பழக்கம் காரணமாக அமையும்.
Everest Trek
Dr APMAbbas
"ஓர் அருள் இல்லையெனில் மற்ற எல்லா அருட்கொடைகளும் இல்லாமலாகிப்போகும்.
அந்த அருள் எது என்று உனக்குத் தெரியுமா?
அதுதான் குறை மறைப்பு (அல்-சித்ர் ).
இறைவா! எங்களை விட்டு உனது மறைவுத் திரையை (குறை மறைக்கும் போர்வையை) நீக்காதே!"
Chandran Veerasamy
" எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே ? "
Razak Fareed
Dr Apm Abbas
"பறப்பதற்கு அனுமதி கேட்காதீர்கள்.
இறக்கைகள் உன்னுடையவை.
வானம் யாருக்கும் சொந்தமானதல்ல."
இசைமுரசு அவர்கள் நாகூரில் முதலில் வசித்தது நாகூர் தெற்குத் தெருவில் நரி வீடு என்று எல்லோராலும் அன்று அழைக்கப்படும் வீட்டில் தான்.
இசையுலகில் பிரபலமாகி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில்தான் நாகூர் தைக்கால் தெருவில் கசி வீடு என்றழைக்கப்படும் வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள்.
1966,67 ல் oநாகூர் பொறையாத்தா கடைத் தெருவில் முதன்முதலாக இசைமுரசின் கனவு இல்லமான அண்ணா இல்லம் புதுமனைப் புகும் விழா நடந்தது.
1980 வரை நாகூரில் கடைத்தெருக்கோ, அல்லது உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியது இருந்தால் நடந்து, அல்லது சைக்கிளில் தான் வருவார்கள்.
+++++++++++++++++++
கவிஞர் நாகூர் காதர்ஒலி....
Viramuthu
Arunagiri Sankarankovil
சோத்துப்பாறை போயிருந்தேன்
நீர்த்தேக்கத்தின்
நீரோசை கேட்டேன்
அந்த ஓசை என்னை
என்னென்னவோ செய்தது
கவிஞன் என்ற கர்வத்தைக்
கழுவி முடித்தது
மூளைக்குள் ஒட்டியிருந்த
ஒட்டடைகளை ஒற்றி எடுத்தது
என்னைப் பாதி மரணத்திற்குப்
பழக்கப் படுத்தியது
அதன் கரையில்
ஆலமரத்தடியில் அமர்ந்துவிட்டேன்
ஒரு மனிதன்
விழித்திருக்கும் நேரமெல்லாம்
தன்னையே நினைத்துக்
கொண்டிருத்தல் தவறு;
நித்தம் ஒருபொழுதேனும்
நினைவொழிய வேண்டும்
காலியாகாத பாத்திரத்தில்
புதியதை நிரப்ப முடியாது
தன்னை மறந்து
தன் நாமம் கெட்டுக்
காலம் கடந்து
கருத்தழிய வேண்டும்
அந்த ஓசை அப்படியோர்
உபாசனை செய்தது
அதுவொரு மன மருத்துவம்
அதை
எதிர்பார்த்துச் செல்லவில்லை;
ஆனால் அது நேர்ந்தது
அதுவொரு
சின்ன மரணத்தின் ஒத்திகை;
சுண்டுவிரல் மட்டும்
சொர்க்கத்தில் நுழைந்துவந்த அனுபவம்
எதில் வேண்டுமானாலும்
இது நேரலாம்
சிறு தூறலின் சிணுங்கலில்,
வானவில் துண்டில்,
கடக்கும் மேகங்களின்
உருவ மாற்றத்தில்,
இருளின் ஆழ்கடலில்,
முதல் வெளிச்சத்தின்
முணுமுணுப்பில்,
உதிரும் சருகில்
அதிரும் பூமியில்
இது நேரலாம்
எனக்கு
நீரோசையில் நேர்ந்தது
நேற்று
கொஞ்ச நேரம்
இறந்து பிறந்தேன்
இன்று எனக்கு
வயது ஒருநாள்
Puliyangudi Ameen
கோழிக்கோடு மர்கஸ் நொலேட்ஜ் சிட்டி நிர்வாக இயக்குநர். டாக்டர் முஹம்மது அப்துல் ஹக்கீம் அல் அஸ்ஹரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துப் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே ஏ எம் முஹம்மது அபூபக்கர் Ex.MLA, மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.MP, துணைத் தலைவர் கே.டி. கிஸர் முகம்மது, மாநிலச் செயலாளர் மில்லத்S.B. முகமது இஸ்மாயில், சென்னை மண்டல ஒருங்கிணைப்புச் செயலாளர் புளியங்குடி M.அல் அமீன், msf தேசிய பொதுச்செயலாளர் S.H. முகம்மது அர்ஷத், மணிச்சுடர் செரீஃப், முகம்மது ரஃபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மர்கஸ் நொலேட்ஜ் சிட்டி சார்பில் தலைமை நிர்வாக அலுவலர் வழ. தன்வீர் உமர், சென்னை பொருப்பாளர் ஃபயாஸ் நூரானி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Satanandam
Universal Painting
Beautiful emotive drawing by artsenicjr
பாரதி வாசன்
கு(ழாயடி)ழுச்சண்டைக்குள் குத்தவெச்சு உட்காருகிற அளவுக்கு நமக்கு நேரமுமில்லை.. அறிவுமில்லை.
நேரடி அரசியல் அல்லாத கலை இலக்கிய நகர்வுகளில் எந்தளவு இயங்க முடியுமோ அந்தளவு இயங்க நினைக்கிறேன். அவ்வளவே.
மற்றபடி
எம்நகர்வுகளெல்லாம் வலதுசாரி மற்றும் சனாதனக் கருத்துக்களுக்கு எதிரானதாகவே இருக்கும்.
ஓட்டரசியலெனில் இடதுசாரிகளின் பங்கேற்புக் கட்சிகளோடும்
இலக்கியமெனில் முற்போக்கு அமைப்புகளோடுமே
எம் பயணம்.
மற்றவையெல்லாம் எனக்கு எப்போதும் ஒரு பொருட்டே இல்லை.
நீங்களும் அவ்வாறேயெனில் வாங்க
கைகோர்த்து - கையுயர்த்துவோம்.
இருக்கும்வரை
இந்தச் சமூகத்துக்கு ஏதாவதொன்றை பயனுள்ளதாய் - செய்து,
மாற்றிவிட்டுப் போவோம்.
♦♦♦
தங்கநிலாவின் கொள்கையும்
பாரதிவாசனின் கொள்கையோடு ஒத்துப்போகிறது.
SheikMohideen Ksn
அவர்கள்என்சகோதரர்கள்...!
ஒரு சீனப் பெண் இஸ்லாத்தைத் தழுவினார், ஆனால் அவரது கணவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நாள், அவருடைய மூத்த மகள் (அப்போது இருபது வயதுகளில் இருந்தவர்) தொலைபேசியில் அழைத்துக் கூறினாள்:
"அம்மா, ஓக்லஹோமாவில் எங்களைப் பார்க்க வாருங்கள். அப்பா இறுதியாகச் சம்மதித்துவிட்டார்."
தாய் உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
"எனக்கு ஏதேனும் நேர்ந்தால், உடனடியாக இந்த எண்ணுக்கு அழைப்பு செய்."
மகள் ஆச்சரியத்துடன் கேட்டாள்: "அவர்கள் யார்?"
தாய் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் பதிலளித்தார்: "அவர்கள் என் சகோதரர்கள்."
ஒரு முஸ்லிமாக, இஸ்லாத்தில் "சகோதரன்" மற்றும் "சகோதரி" என்ற உறவு வெறும் வார்த்தைகள் அல்ல—அது ஓர் அசைக்க முடியாத உண்மை என்று அவர் அறிந்திருந்தார்.
பென்னி
RSDVedio Darvis
25 ஆண்டுகாலமாக தொடர்ந்து எனக்கு ஆன்மீக ஞானத்தை வழங்கிவரும் இரு மார்க்க மேதைகள் மௌலவி.முஹம்மது கான் பாகவி அவர்கள் மௌலவி.கணியூர் இஸ்மாயில் நாஜீ மன்பஈ அவர்கள் இருவருக்கும் அல்லாஹ் உடல் ஆரோக்கியத்தை வழங்கி தொய்வின்றி தொடர்ந்து மார்க்க பணிகளில் மேலும் சிறப்பாக செயல்பட துஆ செய்வோம்....
ராஜ்கிரண்
கடவுளை பற்றி சொன்னவர்கள் எல்லாம் கடவுளாக்கப்பட்டுவிட்டனர்...
ஆனால் கடவுளைப்பற்றிச்சொன்ன, கடவுளாக ஆக்கபடாத ஒரே ஒரு மத தலைவர் யார் ?
ஒரு மதத்தை புனரமைத்த தலைவருக்கு 14 நூற்றாண்டுகளாக ஒரு சிலை இல்லையே, ஒரு உருவம் இல்லையே, யார் இவர் ?
இவரின் பெயர் 24 மணிநேரமும் உலகெங்கும் ஒலிக்கிறதே, யார் இவர் ?
14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ
ஆகாத, ஒரே அரசியல் தலைவர், யார் ?
14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ ஆக்க ப்படாத, ஒரே ஜனாதிபதி, சக்கரவர்த்தி யார் ?
14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ ஆக்கபடாத, ஒரே ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி யார் ?
மனிதன் என்றால் தவறு வரும், அவன் எழுதும் புத்தகத்தில், அவனது கருத்தில் ஆண்டுகள் செல்லச்செல்ல, பல திருத்திய பதிப்புகள் வெளியிடுவார்கள்.
ஆனால் 14 நூற்றாண்டாக இவர் சொன்ன செய்தியான ஒரு நூல், எழுத்து, ஒலி, அர்த்தம் ஏதும் பிசகாமல்,
மாற்றத்திற்கு அப்பாற்பட்டு, மாற்றத்திற்கு அவசியம் இல்லாமல், அப்படியே இருக்கிறதே...
திருத்திய, திருத்தப்பட்ட, விரிவாக்கப்பட்ட, சுருக்கப்பட்ட, பிழை நீக்கப்பட்ட பதிப்பே இல்லாமல், இன்றுவரை "திருக்குர்ஆன்" என்ற பெயரில் இருக்கிறதே?
இது கடவுளின் வாக்கியங்கள் இல்லையா?
காலத்திற்கு ஏற்ப மாறாமல், மாற்ற அவசியம் இல்லாமல், அப்படியே இருகிறதே, அதன் பொருளும், அர்த்தமும், எல்லா காலத்திற்கும் பொருந்தி வருகிறதே,
அறிவியலை மிஞ்சுகிறதே
இந்த நூல்...அது எப்படி ?
இதை எப்படி எழுதப்படிக்கத்தெரியாத ஒரு நபர் சொல்லி இருக்க முடியும் ? அதுவும் 6ம் நூற்றாண்டில் ?
இவர் கால் பதிக்காத இடத்திலெல்லாம், இவர் சொன்ன கொள்கைகள்
எப்படி கால் பதித்தது ?
அதுவும் அறிவியல் வளர்ச்சியே இல்லாத அந்த காலத்திலேயே...
சிந்தியுங்கள், எப்படி 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதர் சொன்ன செய்தி, இன்றும் உலகெலாம் பரவி, விரிந்து வளர்ந்துகொண்டிருக்கிறது...
என்ன காரணம் ?
எப்படி 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர் 21 ம் நூற்றாண்டில் -நடக்கும் செய்திகளை, அப்படியே முன்னறிவிப்பு செய்திருக்க முடியும்?
தன் தாய் மொழியில் எழுத படிக்க தெரியாத ஒருவர், அம்மொழியின் இலக்கணத்தை வரையறுக்கிறார்,
எப்படி சாத்தியம் ?
அரபு மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு மனிதர் சொன்ன நூலில் (திருகுர்ஆனில்)
இருந்து அரபு இலக்கணம் வருகிறது ..
இதை எல்லாம் மீறி, இவரை ஒரு சமூக சீர்திருத்த வாதிகளின் தந்தை என்று அழைக்கிறார்கள் என்றால்,
இவர் சொன்ன சட்டங்கள், செய்திகள் அறிவுரைகள், இன்றும் உலகம் முழுக்க பின்பற்ற படுகிறதே, யார் இவர்கள்?
உருவத்தில் வாழாமல், 200 கோடி இதயத்தில் வாழும், யார் இவர்கள் ?
திருக்குரான் இறைவனின் வாக்கியங்களேயாகும்.
"திருகுர்ஆன்" தமிழ் பதிப்பு இருக்கிறது.
விரும்புபவர்கள் படித்துப்பாருங்கள்.
அரேபிய துணை கண்டத்தின் ஜனாதிபதி, பேரரசர், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, இஸ்லாமிய மார்க்கத்தை புனரமைத்த தலைவர்,
சமூக சீர்திருத்தவாதிகளின் தந்தை, நாணயமான வணிகர், தத்துவவாதி, வாய்மையான பேச்சாளர், போர் வீரர்,
இராணுவ தலைவர், கொடையாளி,
மனிதநேய செம்மல், சிறந்த குடும்பத்தலைவர்,
அகிலத்தின் அருட்கொடை பெருமானார்
நபிகள் நாயகம் அவர்கள்,
மனிதர்களின் முன்மாதிரி மாமனிதர்.
இறைவனின் இறுதி தூதுவர்,
"நபிகள் நாயகம்" அவர்கள்.
Mohamed Gouse
மனிதனை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பித்த பார்ப்பனிய மனுவாத–சனாதன கோட்பாட்டை அடித்து துவைத்து மூளையில் உட்கார வைத்த இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் நவம்பர் 26 - ஐ கொண்டாடுவோம்.ஃ
நீதி – சுதந்திரம் – சமத்துவம்.
"சமத்துவம்" (Equality)
Article 14: எல்லோரும் சட்டத்தின் முன் சமன்.
Article 15: மதம், இனம், ஜாதி, பாலினம், பிறப்பு முதலியவற்றின் அடிப்படையில் பாகுபாடு செய்ய தடை.
Article 17: அச்சமூகத்தில் இருந்த தூய்மையின்மை – அசுத்த Untouchability முறையை முழுமையாகத் தடை செய்கிறது.
"சுதந்திரம்"(Liberty)
Article 19: கருத்துச் சுதந்திரம், கூட்டமைப்பு, இயக்கம், தொழில், உரை போன்ற அடிப்படை சுதந்திரங்களை வழங்குகிறது.
Article 21: மனிதரின் ஜீவனும் தனிமனித சுதந்திரமும் சட்டப் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என உறுதி செய்கிறது.
"நீதி" (Justice)
இந்திய அரசியலமைப்பு
முன்னுரையில் (Preamble): சமூக, பொருளாதார, அரசியல் என மூன்றிலும் அனைவருக்கும் நீதி வழங்குவதாக உறுதி.
சட்டத்தின் முன் ஒன்றே ஒரு நீதிமுறை அது அனைவருக்கும் ஒரே சட்டம்.
மனுவாத–சனாதன கோட்பாடுகள் பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை இயல்பாக ஏற்க செய்கிறது.
இந்திய அரசியலமைப்பு பார்ப்பனிய மனுவாக சனாதன
அநீதிகளை முறியடித்து
நீதி (Justice)
சுதந்திரம் (Liberty)
சமத்துவம் (Equality)
சகோதரத்துவம் (Fraternity)
என மனித கண்ணியத்தை உயர்த்தும் புதிய ஜனநாயக அடித்தளத்தை உருவாக்கியது.
பல்லாண்டு காலம் மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை விதைத்து அதை இயல்பாகிய சனாதன பார்ப்பன சித்தாந்தத்தை தூக்கி எறிந்து நிதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உயர்த்தி பிடிப்போம்.
- ம. முகமது கவுஸ்
MansoorAli Brunai
பென்னி
Donna DLopaz
ஐ.டி. முத்துபாண்டி
KhajaSharif ASM
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன கவுன்சிலர் பதவி வழங்கும் திட்டத்தின் கீழ்
அரவக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சியின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள
மதிப்பிற்குரிய முன்னால் திமுக நகர செயலாளர்,
அரவக்குறிச்சி முன்னால் கூட்டுறவு சங்கத் தலைவர்
என் அண்ணன்
*ஜனாப். A. S. M.காஜா ஷரீப்*
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...
அன்புடன்
*ஹாஜி M. C. M. A. காஜா முகையதீன்*
Ex - தலைவர் - முத்தவல்லி
ஜூம்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் அரவக்குறிச்சி,
Ex - தலைவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அரவக்குறிச்சி பிரைமரி.
Quran&SunnahAbuAyyas
SyedKather M
YusufSiraj
காலையிலே கால மீன் வந்துருச்சு 🥰🥰
Anwardeen Benazir
மௌலானா அர்ஷத் மதனி இந்தியாவுக்கு ஒரு எளிய உண்மையை நினைவூட்டுகிறார்:
"மக்களை மதத்தால் பிளவுபடுத்துவது தேசத்தை பலவீனப்படுத்துகிறது.
முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அழிக்க முயலும் சக்திகள் ஒன்றை மறந்து விடுகின்றன, இந்த ஒளி பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது, ஒருபோதும் மங்காது. இந்தியாவுக்கு ஒற்றுமையும் நீதியும் தேவை, வெறுப்பு அல்ல."
Arab Tamil Daily
குவைத்தில் வெளிநாட்டினர் வசிக்கின்ற பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடிக்கும் பணிகள் இன்று துவங்கியுள்ளது:
குவைத்தில் வெளிநாட்டினர் அதிகமாக வசிக்கின்ற முக்கிய இடங்களில் ஒன்றான ஜலீப் அல் ஷுயூக்கில் உள்ள பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடிக்கும் பணி இன்று(24/11/25) திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக 67 கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட உள்ளன. இங்கு வசித்து வந்த வெளிநாட்டினரை வெளியேற்ற கடந்த சில வாரங்களுக்கு முன்னரே இந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நகராட்சி துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டிருந்தன.
இதையடுத்து இங்கு வசித்துவந்த அனைவரும் மற்ற இடங்களுக்கு பாதுகாப்பாக வெளியேறிய நிலையில் இன்று காலையில் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் துவங்கியுள்ளது.
நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வதன் ஒரு பகுதியாக, குவைத்தில் வேலைக்காக வருகின்ற வெளிநாட்டினரான தொழிலாளர்கள் வசிக்கின்ற விதத்தில் குடியிருப்புக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையில் பலவகையான வளர்ச்சி பணிகள் இங்கு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த இடமானது இட நெருக்கடி, போக்குவரத்து பிரச்சனை, தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட பல்வேறு சுகாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.
குவைத்தில் முதல் முதலாக வேலைக்காக வந்து இங்கு தங்கியிருந்து வேலை பார்த்த யாராவது இந்த செய்தியை பார்த்தால் உங்கள் பழைய நினைவுகளை பதிவு செய்யலாம்.
PayamaIruku
பேச்சில் இனிமை,
கொள்கையில் தெளிவு,
செயலில் உறுதி
இந்த மூன்றும் உள்ளவர்களால் எதையும் சாதிக்க முடியும்....
வாழ்க்கையில் சில மனிதர்களிடம் கேள்வியையும், சில மனிதர்களிடம் பதில்களையும் எதிர்பார்க்காமல் இருப்பது மிகவும் நல்லது.....
இந்த உலகம் "தீர்ப்பளிக்க" மிக
விரைவானது.... "புரிந்துகொள்ள" மிகவும் தாமதமானது....

Velmurugan
இன்றைய விடியல் கொடைக்கானல்
H Rajik Fareed
கசதி அஜிஸ்ராவுத்தர்
Abdul Qayum
தாஜுதீன்
அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் அணைத்தையும் hamas முழுமையாக கடைபிடித்துக்கொண்டுள்ளது.
ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா சொன்ன எதையும் கேட்கவும் இல்லை செய்யவும் இல்லை அமெரிக்காவை மதிக்கவும் இல்லை..
இப்போது அமெரிக்காவுக்கு எதிராக செயல் படுபவர்கள் யார் நடப்பவர்கள் செய்பவர்கள் யார் என்று அமெரிக்கா சிந்திக்க வேண்டும்,
இல்லை என்றால் நிலைமை விரைவில் மோசமாகும் .. ~ turki erdogan
ShortNews lk.
Velmurugan Ramskrishnan
TamilBuzz Dubai
Iniya Islam
#Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது ஜெர்மானியர்கள் அல்ல. மாறாக அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தாம்.
ஒரு நாள் உமர் (ரழி) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள்.
அப்போது வயதான தோல்சுருங்கிய ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள்.
உமர்(ரழி) அவர்கள் அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்டார்கள்?
அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், நான் வயதான ஒரு யூதகுடும்பத்தை சேர்ந்தவன். உங்களுக்கு வரி கட்டவும், மீதமுள்ளதை எனது குடும்பத்திற்குக் கொடுக்கவும் மக்களிடம் யாசகம் கேட்கிறேன் என்றார்.
உமர் (ரழி) அவர்கள் இரக்கப்பட்டு மனமுருகிச்
சொன்னார்கள், என்ன நீதி செலுத்துகிறோம் வயதானவர்களான உங்கள்மீது....?
நீங்கள் இளைஞராக இருந்தபோது உங்களிடம் வரியை வாங்கிக்கொள்கிறோம்.
வயதானபோது அப்படியே விட்டுவிடுகிறோமே...!? என்று சொல்லிவிட்டு
பின்னர் அந்த வயதான யூதரின் கையைப் பிடித்துக் கொண்டு தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு உணவளித்தார்கள்.
மேலும் அரசுக் கருவூலப் (பைத்துல் மால்) பொறுப்பாளரிடம் இவருக்கும், இவரைப் போன்ற வயோதிகர்களுக்கும் வரி வாங்கக் கூடாது என்றும் , மேலும் மாதம்தோறும் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும் குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சட்டமியற்றி கட்டளை பிறப்பித்தார்கள் ...
அல்லாஹ் உமர் ரழி அவர்களை பொருந்திக்கொள்வானாக!
📚 கிதாப் அஹ்லு திம்மதில் இப்னு கய்யிம் ஜவ்ஸிய்யா
📚 கிதாபுல் அம்வால்- லிஅபீ அபீத் அல் காஸிம் இப்னு ஸலாம்..❤❤
Indran Rajendran
14 வயதில்( 7-5-1962 ) இந்திரன் நடத்திய கையெழுத்து பத்திரிகை " வானவில்"
முதல் பக்கம்.
"படிப்பவர்கள் இந்த புத்தகத்தை அழுக்காக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-- ஆசிரியர் "
என்பதைப் படிக்கும் போது எனக்கே சிரிப்பு வருகிறது.
அன்பெனும் ஜோதி
Natrtathi Murugesa Nadar
குப்பைக்குவியலில் இருந்து ஒரு பெண்ணை எடுக்கவில்லை… நான் ஒரு வைரத்தை எடுத்தேன்.”
— அசாமின் சோபரன் கூறிய இந்த ஒரு வசனமே, மனிதநேயத்தின் உண்மையான முகத்தை உலகுக்கு நினைவூட்டுகிறது.
அசாமைச் சேர்ந்த சோபரன்,
30 வயதுடைய இளைஞர்…
தினமும் காய்கறி விற்று வாழ்வு நடத்தி வந்தவர். திருமணமே ஆகாதவர்.
ஒரு மாலை, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது சாலையோர புதர்களில் குழந்தை அழும் சத்தம்…
சென்று பார்த்தார் —
குப்பைக்குவியலில் பல நாட்களாக கைவிடப்பட்டிருந்த ஒரு பச்சிளம் குழந்தை.
அழகும், நிர்ப்பாவமும் நிறைந்த அந்தச் சிறுமியை பார்த்த நொடியே சோபரனின் மனம் உருகிவிட்டது.
யாரும் இல்லை… எங்கும் ஆதாரம் இல்லை.
ஆனால் அவர் எடுத்த முடிவு வாழ்க்கையை மாற்றியது.
அந்த குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து,
அவளை “ஜ்யோதி” என்று பெயர் வைத்து,
“மகள்” என்று பார்த்து வளர்க்கத் தொடங்கினார்.
✔ காலையிலும் இரவிலும் கடுமையாக உழைத்தார்
✔ தானே பசித்தாலும் ஜ்யோதி பசிக்க விடவில்லை
✔ நல்ல பள்ளியில் படிக்க வைத்தார்
✔ அவளுக்கான ஒவ்வொரு ஆசையும் நிறைவேற்ற முயன்றார்
2013-ல் ஜ்யோதி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றார்.
2014-ல் Public Service Commission தேர்வில் தேர்ச்சி பெற்று
➡ Income Tax Department-ல் Assistant Commissioner ஆனார்!
அந்த நாள் சோபரன் கண்கலங்கினார் —
“நான் செய்ய முடியாததை என் மகள் சாதிச்சிட்டா…” என்று பெருமையுடன் கூறினார்.
இன்றும் ஜ்யோதி தன் தந்தையை முழு மனதுடன் பார்த்துக்கொள்கிறாள்.
ஆனால் அவர் இன்னும் எளிய காய்கறி வியாபாரத்தையே தொடர்கிறார்.
“இது தான் எனக்கு பிடிச்ச வாழ்க்கை…” என்று சிரித்தபடி சொல்கிறார்.
இந்த உலகில்
👉 தந்தை என்றால் ரத்தம் பொருந்தியவர் மட்டுமல்ல,
👉 அன்பால் உருவாக்கப்பட்ட உறவுகளும் அதைவிட பெரியவை என்பதை
சோபரன் மற்றும் ஜ்யோதி நிரூபித்திருக்கிறார்கள். 🙏🙏🙏
#காற்றின்
கையெழுத்து
- பழநிபாரதி -
அழகான பெண்ணை
அணைத்துக்கொள்ளும் சமூகம்... அறிவான பெண்ணை
அணைத்துவிட முயல்கிறது.
ஐஸ்வர்யா ராய்க்கான பாராட்டுகளுக்கும்
அருந்ததி ராய்க்கான எதிர்ப்புகளுக்கும் அதுதான் காரணம்.
காடாக இருந்தாலும் சரி...
நாடாக இருந்தாலும் சரி...
ஒவ்வொரு உயிரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்கிற ஜனநாயகி அருந்ததி ராய்.
இயற்கை வளத்தைச் சுரண்டுகிறவர்களுக்கும்
அதிகார போதை தலைக்கேறியவர்களுக்கும்
அவர் அடங்காப்பிடாரி.
அறிவுதான் அழகு என்பதை அறிந்துகொள்ளும்வரை
இந்த அறியாமை
இருக்கத்தான் செய்யும்.
#பழநிபாரதி
Cmn Saleem
ஊரின் சிறப்பே அதன் கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களும் தான்.
தொண்டியில் கடந்த 40 ஆண்டுகளாக கல்விச் சேவையாற்றி வரும் அல் ஹிலால் மெட்ரிக் மேனிலைப்பள்ளி , முனவ்வரா நடுநிலைப்பள்ளி,அமீர் சுல்தான் அகாடமி மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆகிய மூன்று நிறுவனங்களின் ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன்.
தொலைநோக்கு இலக்குடைய நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் தகுதிமிக்க ஆசிரியர்களின் பயிற்சியில் இந்த பள்ளிக்கூடங்கள் மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றன.
அல்லாஹ்வின் அருள்வளம் பெருகட்டுமாக....
அட்வகேட் ஆசிக்
#மக்கள்_போராளி_சிறப்பு_விருது
எனது பொது நல மக்கள் நல சேவை
பணிகளை அங்கீகரித்து
மக்கள் போராளி சிறப்பு விருது வழங்கி கவுரவித்த
விசிக தலைவர் அண்ணன் தொல்,திருமாவளவன் MA,BL அவர்களுக்கும் பரிந்துரைத்த
விசிக இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் பாசமிகு அண்ணன் நம்புதாளை பாரீஸ் அவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி
சென்னையில் இன்று (22/11/2025)நடைபெற்ற நிகழ்வில் என்னால் செல்ல முடியாத நிலையில் எனது உடன் பிறந்த அண்ணன் கலந்தர் ராசிக் அவர்கள் என் சார்பில் சென்று நிகழ்வில் பங்கு கொண்டு விருதை பெற்றார்
என்றும் பொதுநல மக்கள் பணியில்
வழ- கலந்தர் ஆசிக் அகமது
SDPI கட்சி
முனைவர் முஜிபுர்ரஹ்மான்
IMUL TamilnaduState
Chandran Veerasamy
மகிழா
மகிழ்ச்சி வரத் தேவையில்லை ...
மறதி வந்தால் போதும் ...
வாழ்க்கை வெறுக்க ஆயிரம் காரணம் இருந்தாலும் ...
வாழ்வதற்கு ஒரே காரணம் தான் .
எல்லாம் சரியாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே ..
யார் உண்மையாக இருக்கிறார்கள்
யார் நடிக்கிறார்கள் என்று கூட கண்டுபிடிக்க முடியல ...
அந்தளவுக்கு எல்லோரும் சூப்பராக நடிக்கிறார்கள் ...
உலகின் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் சிரிப்பு ...
அதை விடச் சிறந்த விஷயம் அவருடைய சிரிப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது ..
உறவு என்பது ஒரு கோயில் , அதற்குள் செல்லும் முன் ஈகோ எனும் செருப்பைக் கழட்டி வைத்தல் நல்லது ...🕊️
~மகிழா. 💃
- பகிர்வு பதிவு.
🌹🌹🌹
வீரஅறிவொளி
விசிக
பிரதமரை
மேடையில் வைத்துக் கொண்டு இப்படி பேசியதற்கே உங்களை கொண்டாடலாம்...
மனம் தான் அழகு...
அதனால்தான் நீங்கள் உலக அழகி.
மதுரை இஸ்மாயில்
TS Mohd Buhari
ஒரு ஐயப்பனோ ஆப்ரஹாமோ செய்யும் குற்றம்
விபத்ததோ, விபரீதமோ
அவர்களது சமயத்தையோ சமய வழிபாட்டாளர்களையோ சேர்வதில்லை!
ஆனால் யாரோ ஒரு அரபிப் பெயர் சூட்டியவன் விளைவிக்கும் வினைக்காக உலக முஸ்லிம்களையும் அவர்கள் நெறியாகக் கொண்டுள்ள நேர்வழியையும் கறைபடியச் செய்வது எந்த விதத்தில் நியாயம்!
விபத்தாய் நடந்ததையும் விபரீதமாய் காட்டுகின்றன ஊடகங்கள். விசாரணைக்கு முன்பே வசனம் எழுதி வசைப்பாடுகின்றன பத்திரிக்கைகள்.
தீவிரவாதி என்றாலே தொப்பி அணிந்து, ஜிப்பா உடுத்தி, தாடி வைத்திருப்பான் எனும் விஷம பிம்பத்தை வித்திட்டுவிட்டனர்.
ஒரு சராசரி முஸ்லிமின் வழக்கமான பண்பாட்டையே பயங்கரவாதிக்குரிய அடையாளமாய் மாற்றிவிட்டனர்.
ஒரு பகுதியில் தாக்குதல் நடக்கிறது எனில், அது விபத்தாக நடந்ததா? பயங்கரவாதச் செயலா? குற்றத்தை நிகழ்த்தியது யார்? அவனின் பின்னணி என்ன? அவனுக்குக் குற்றப்பின்னணிகள் உள்ளனவா? அவனாகச் செய்தானா அல்லது தூண்டுதல் பேரில் செய்தானா? ஆகியவற்றை கொண்டல்லவா ஒருவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்!
நாட்டில் சமூகநீதி என்பது சமநிலையில் அளிக்கப்பட வேண்டும்.
ஆனால் இம்மண்ணில் இஸ்லாமியர்களுக்கான நீதி நீர்த்துப் போனதாய் உள்ளது.
காவல் மற்றும் நீதித்துறையின் நடவடிக்கைகள், அரசியல் சூழல், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் முஸ்லிம் சமூகத்தின் மீதான வெறுப்பைப் பார்க்க முடிகிறது.
முஸ்லிம் தீவிரவாதி எனும் சொல்லாடல் ஊடகங்களின் தீராத வியாதியாக உள்ளது.
இத்தகைய அபாண்டத்தையும், அவதூறையும் பரப்புவோருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! சற்று இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை புரட்டிப் பாருங்கள்!
மாற்றாராக இருந்தாலும் அவருக்காக அமைதியை வேண்டச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.
வீதியில் கிடக்கும் கல்லும் முள்ளும் கூட அடுத்தவருக்கு தீங்கிழைக்க கூடாது என நினைத்தவர்கள் நபிகளார்.
அண்டைவீட்டுக்காரன் பசித்திருக்கும் நிலையில் நீ புசித்திருக்கக் கூடாது என உரைத்தார்கள்.
இத்தகையச் சன்மார்க்கம் வன்முறையைத் தூண்டுமா? வன்மைக் கொள்கையை வரவேற்குமா? சமநிலையோடு சிந்தியுங்கள்!
இஸ்லாத்தைத் தீரப் படித்தவர்களுக்குத் தெரியும் இஸ்லாத்தின் மறுபெயர் பொதுநலம் என்று!
MohamedAnsary Mamangany
இந்த அமைப்பே போலியானது என்று முஸ்லிம்கள் தரப்பில் தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால் திட்டமிட்டு வளர்ப்பவர்கள் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதை முஸ்லிம் அமைப்பாக காண்பிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
அமெரிக்காவும் இஸ்ரேலிய மொசாட்டும் உருவாக்கிய பல்வேறு தீவிரவாத குழுக்கள் முஸ்லிம் பெயர்களில் உள்ளன. அதில் ஒன்றுதான் இது.
அதே போல் இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு குழு.
மன்மோகன் சிங் ஆட்சியில் முஸ்லிம் எம்பிக்கள் ஒன்று கூடி இந்த இந்தியன் முஜாஹிதீன் எங்கே இருந்து செயல்படுகிறது.
அதற்கு அன்றும் தீர்வு இல்லை. இன்றும் தீர்வு இல்லை.
முஸ்லிம்கள் ஒரு போதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் அதிகாரத்தை வைத்து தனது கட்டுக் கதைகளை ஊடகங்கள் மூலம் பரப்பி முஸ்லிம்களை இழிவு படுத்துகின்றனர்.
பாஜக இதை நேரடியாக செய்கிறது.
காங்கிரஸ் மறைமுகமாக செய்கிறது.
இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான "சுரதா'வை அறியாதவர்கள் இருக்க முடியாது. மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று வெளியிடும் துணிவு மிக்கவர்.
பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். ""தனக்கு அதில் உடன்பாடில்லை, "அந்த நிழல் வழி வாசலை' விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்'' என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.
ராஜகோபாலன், "சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது.
1941-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார்.
நன்றி : தினமணி , கலைமாமணி விக்ரமன் .
#உவமைக்கவிஞரின் பிறந்தநாள்,
என்றும்அவர் புகழ் போற்றுவோம் !
KhajaSharif ASM
குறள் எண்: 115
*கலைஞர் உரை:*
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.
*திருக்குறள்*
முனைவர் முஜிப்புர்ரஹ்மான் சிராஜி
நபிகளார் வருகைக்கு முன்பு....!
மதீனா முனவ்வரா
இந்த இடத்தில் ஒரு மஸ்ஜிது இருந்தது.
அதற்கு பெயர்
"மஸ்ஜிதுல் நூர், மஸ்ஜிதுல் அஸபா "
என்று பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா முனவ்வரா நகருக்கு ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பாக இங்கு தொழுகை நடைபெற்று வந்தது.
ஹஜ்ரத் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு
ஹஜ்ரத் ஸாலிம் ரலியல்லாஹு அன்ஹு
ஹஜ்ரத் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாமாக தலைமை தாங்கி தொழுகை நடத்தியுள்ளார்கள்.
"பிஃருல் ஹஜீம் "என்ற பெயரில் ஒரு கிணறு இங்கு இருந்தது. அதில் நீர் எடுத்து ஒழு செய்து கொள்வார்கள்.
ஹிஜ்ரத் செய்து ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா முனவ்வரா நகரில் நுழைந்த போது இந்த இடத்தில் இருந்தவாறே மதீனாவாசிகள் வரவேற்றுள்ளார்கள்.
Fazil S
ஆங்கில படைகளை அதிரவைத்த ஜான்ஸிராணி லட்சுமிபாயின் நம்பிக்கை மிக்க பெண்கள் படையில் தளபதியாக விளங்கி ஆங்கிலேயருக்கு எதிராக பல வெற்றிகளை குவித்த வீராங்கனை ஜல்காரிபாய் அவர்களின் 195வது பிறந்தநாள் 23 11
❤️ 🇮🇳 🙏
அ. வெற்றிவேல்
MS Farooz
Mohamed Ashik
👍🏻👌🏻🤩🌟✨⚡💫🎉🎊💥💯👑
சாவித்திரி கண்ணன்
இந்தியாவில் எவ்வளவு மோசடிகள், குற்றங்கள் செய்தாலும், அரசியல்வாதிகள் மட்டும் தண்டிக்கபடுவதில்லை.
ஏனென்றால், ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்வார்கள்!
இதற்கு மாறாக, வங்க தேசத்தில் காட்டாட்சி நடத்தி, நாட்டின் வளங்களை சூறையாடிக் கொழுத்ததோடு, கிளர்ச்சி செய்த மாணவர்களை கொன்று குவித்த ஷேக் ஹசீனாவிற்கு அந்த நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், இஸ்லாமியர்கள் என்றாலே இஞ்சி தின்ற குரங்காகும் பாஜக அரசு, வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பது ஏன்? என்பது தான் பலரது கேள்வியாகும்.
ஷேக் ஹசீனா ஒரு மக்கள் விரோத ஆட்சியை நடத்தியவர்!
சொந்த மண்ணின் இளம் கல்லூரி மாணவர்கள் 1,400 பேரை சுட்டுக் கொன்றவர்.
தன் தந்தை வங்கதேச விடுதலைக்காக போராடிய தலைவர் என்ற ஒரே தகுதியைக் கொண்டு ஆட்சி பீடத்திற்கு வந்து, வங்க விடுதலை போராளி முஜிபூர் ரகுமானையே மக்கள் முற்றாக வெறுக்கும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு, நாட்டை சூறையாடி பெரும் செல்வம் சேர்த்து மக்களின் கோபத்திற்கு ஆளானவர் தான் ஹசீனா.
இந்தியாவின் இந்துத்துவ ஆட்சியாளர்கள் ஏன் ஹசீனாவை ஆதரிக்கிறார்கள் என்றால், வங்கத்தின் வளத்தை சூறையாட இந்துத்துவ பெருமுதலாளிகளுக்கு அவர் அங்கு வாயிற் கதவை திறந்துவிட்ட விசுவாசத்திற்காகத் தான்.
வங்க தேசத்தின் ஏழை, எளிய அப்பாவி இஸ்லாமியர்களின் ரத்தத்தை குடித்த ஷேக் ஹசீனாவை தன் நெருங்கிய கூட்டாளியாக மோடி கருதுகிறார் என்றால், அது மக்கள் விரோதிகள் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டுள்ளனர், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டனர் என்றே பொருளாகும்.
வங்க தேசம் நம் அண்டை நாடு. அண்டை நாட்டுடன் நட்புறவாக இருப்பது நம் பாதுகாப்புக்கும் பலம் சேர்க்கும் அம்சமாகும்.
ஆனால், அந்த நாட்டு அரசு பல முறை வேண்டுகோள் விடுத்தும், ஹசீனாவை வெளியேற்றாமல் – இங்கே ஒளித்து வைத்து பாதுகாக்கிறது மோடி அரசு.
தற்போது இளம் மாணவர்களை நரவேட்டையாடிய ஹசினாவிற்கு மரண தண்டனை என நீதிமன்றம் -சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) - தீர்ப்பளித்துள்ளது.
இரு நாட்டுக்கிடையே ஏற்கனவே உள்ள குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தப்படி கொடுர குற்றவாளியை ஒருவருக்கொருவர் ஒப்படைக்க வேண்டும்.
அவர்கள் ஹசீனாவை ஒப்படைக்க கோரும் போது மறுப்பது, இரு நாட்டு நல்லுறவுகளை பாதிக்கும் என்பது மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களிடம் இந்தியாவிற்கு எதிரான மன நிலையையும், உணர்ச்சி கொந்தளிப்பையும் உருவாக்கும்.
இது வங்க தேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகிவிடும். ஒரு வேளை பாஜக அரசு அதைத் தான் விரும்புகிறதோ என்னவோ?
அங்கு இந்துக்கள் தாக்கப்பட்டால், பதிலுக்கு இங்குள்ள இஸ்லாமியர்களை தாங்கள் தாக்குவதற்கு நல்ல சாக்காக அமையும் என்று கூட நினைக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய கட்சிகள்
இந்த பிரச்சினையில் தெளிவான - ஒன்றுபட்ட - ஒரு முடிவை எடுத்து வெளிப்படுத்த வேண்டும்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மௌலானா காரி முஃப்தி
பி.எம். முகம்மது சர்புதீன் பாகவி ஹஜ்ரத் ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள்
பெரியகுளம் தந்த பெரிய ஆலிம் என்று எல்லோராலும் போற்றப்படும் மௌலானா மௌலவி அல்லாமா முஹம்மது அப்துல் காதர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஈன்ற அருந்தவபுதல்வராக 27- 02-1924 இல் பிறந்தார்கள்.
பெரியகுளம் மௌலானா காரி, முஃப்தி பி .எம். முகம்மது சர்புதீன் பாகவி ஹஜ்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி. அவர்கள்.
எடுப்பான தோற்றம், துருக்கி தொப்பியின் குஞ்ச அசைவுகளோடு சீமான்களை எல்லாம் எழுந்து நின்று வரவேற்க தூண்டும் வசீகரமான நாவாசைக்கு பேச தொடங்கினால் குயிலின் குரல் வளம், கம்பீரமான ஒப்பற்ற சொல்லாற்றல் கொண்ட அவர்களுடைய மார்க்க உபதேசங்களை கேட்டு இஸ்லாமிய உணர்வு பெற்றோர் ஆயிரம் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
நூருல் இஸ்லாம், குர்ஆனின் குரல் போன்ற மாத இதழ்களில் மார்க்க வினாக்களுக்கு விடைபகிரும் பொறுப்பினை ஏற்று ஆயிரம் கணக்கான பிரச்சனைகளுக்கு மார்க்க தீர்ப்பு வழங்கும் வல்லுனராக திகழ்ந்தார்கள்.
"பிரயாண நண்பன்" என்ற தலைப்பில் ஹஜ்ரத் அவர்கள் எழுதியுள்ள நூல் வெளியூர் பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய இஸ்லாமிய நெறிமுறைகளை மிகச் சிறப்பான முறையில் விளக்குவதாக அமைந்திருந்தது.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் சிறுமியரும் ,பெண்களும் மார்க்க ஞானத்தை முறையாக பெற வேண்டும் என்பதற்காக மௌலானா தீவிர முயற்சி எடுத்து வாணியம்பாடியில் அமைந்துள்ள மதரஸா நிஸ்வான் ஒரு முன்னோடியான பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக நிறுவி அதன் புகழ் தமிழகமெங்கும், வெளிநாடுகளிலும் பரவ மௌலானா அவர்கள் பெரிதும் காரணமாக அமைந்தார்கள்.
தமிழ் மொழி பேசக்கூடிய பெண் குழந்தைகளுக்கு மார்க்கம் ஞானம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு எங்கும் ஓயாமல் சுற்றி செய்த பிரச்சாரத்தின் பயனாக பல்வேறு ஊர்களில் மதரஸா நிஸ்வான் இக்காலங்களில் தோன்றுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கும் மார்க்க அறிஞர்களை ஒருங்கிணைந்து மாநில தழுவிய முறையில் தமிழ்நாடு மாநில ஜமாத் உலமா சபை உண்டாகுவதற்கு அறிஞர் பெருந்தகை ஹஜ்ரத் அவர்கள் பெரிதும் காரணமாக இருந்தார்கள்.
முதலில் மதுரை மாவட்டம் ஜமாத்துல் உலமா சபையின் செயலாளராகவும் பின்னர் மாநில அமைப்பை உண்டாக்கி அதன் முதல் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து போற்றத்தக்க சேவையாற்றிய மௌலானா காரி, முஃப்தி பி .எம். முகம்மது சர்புதீன் பாகவி ஹஜ்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்....
ஹஜ்ரத் அவர்கள் மார்க்க ஞானம் பயின்ற தாய் கல்லூரியான வேலூர் பாக்கியாத்தூ சாலிஹா மீது பெரும் மதிப்பும் கொண்டு இருந்தார்கள் தம் ஒரு பாகவி என்று சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்.
பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் தம் மார்க்கத்தை முழுமையாக தெரிந்துகொள்ள தாமே ஒரு முன்மாதிரியாக இருந்து வழி காட்டினார்கள்.
மௌலானாவின் மூத்த புதல்வர் அரபியில் எம்.ஏ பட்டம் பெற்றவர் ஆவார் அவர்களின் மகளார் வானியம்பாடியில் தமது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரு ஆலிமா தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
1901 இல் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் நடைபெற்று வரும் அஞ்சு மண் ஹைர்காஹே ஆம் மதரஸா நிஸ்வான், தஞ்சை மாவட்டம் சங்கரன் பந்தல், கிளியனூர், கொடிக்கால் பாளையம் ஆகிய ஊர்களில் மதரசாவின் பயின்ற பெண் ஆலிமாக்கள் தனது ஊரிலேயே இயங்கிட செய்வதன் மூலமாக ஆலிமாக்கள் ஆசிரியராகவும் உயர்ந்தார்கள் இதனால் மௌலானா அவர்கள் நிஸ்வான்களின் அஸ்திவாரமே....
அரசு தனியார் பள்ளிக்கூடங்களில் நம் சமுதாய கண்மணிகள் மார்க்க கல்வி பாடத்திட்டம் தெரியாமல் பட்டதாரி ஆகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு நமது அரசாங்க அங்கீகாரத்துடன் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துடன் இணைந்து "முஸ்லிம் போதனை" என்ற பாடநூல் முதல் பாகம் தொடங்கி மொத்தம் "ஏழு பாகங்கள்"
செய்து நாலாவது வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி வரை பயிலும் மாணவ மாணவிகள் தீனியாத் கல்வி கற்பதற்கு வசதியாக ஒரு பாடத்திட்ட தயாரித்து அதில் இரண்டு பாகங்கள் வெளியீடு செய்ததால் நல்ல பலன் ஏற்பட்டது.
( அதாவது வருடம் 1970 க்கு பிறகு காலங்களில்) யாருமே இது மாதிரியான பாடத்திட்டம் ஏற்பாடு செய்யவில்லை எனலாம்.
கல்விக்காக பாடுபட்ட பெருந்தகை உலமாக்களின் விடிவெள்ளி பெரியகுளம் பெற்றெடுத்த மார்க்க மேதை மௌலானா முஃப்தி பி. எம். முகம்மது சர்புதீன் ஆலிம் ஹஸ்ரத் பாகவி ரஹ்மத்துல்லாஹி என்றால் அது மிகையல்ல.
அரசியல் துறையில் மௌலானா அவர்கள் தங்களுடைய முத்திரையை பதிப்பித்து உள்ளார்கள்.
கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய அன்பை பெற்று தாய் சபை முஸ்லிம் லீக் பெரிதும் ஈடுபாடு கொண்டு பணியாற்றினார்கள்.
மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் துணைத் தலைவராகவும் மாநில செயற்குழுவில் நீண்ட கால உறுப்பினராகவும் சேவையாற்றினார்கள் தலைவர் காயிதே மில்லத் சிராஜ் ஆகியோரின் தலைமையில் அசைக்க முடியாத கொள்கை குன்றாக விளங்கினார்கள்.
மார்க்க ,அரசியல் துறையில் பல நற்பணிகளை ஆற்றிய மௌலானா
காரி முஃப்தி பி. எம். முகம்மதுசர்புதீன் பாகவி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் அல்லாஹ் தன் நாட்டப்படி
1977 ஆம் ஆண்டில் தன்னிடத்தி அழைத்துக் கொண்டான்.
மார்க்க கல்விக்காக தம்மை அர்ப்பணித்து ஈடு இல்லா பணியாற்றிய ஹஜ்ரத் அவர்கள் மறுமையில் உயர்ந்த நற்பதிவியை எல்லாம் வல்ல அல்லாஹ் தந்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சொர்க்கத்தை உரிமையாக்கி தந்து சேவைகளை
அங்கீகரித்து ஏற்றுக் கொள்வானாக.
திகைப்புடன்.....மதுரை., இஸ்மாயில்..
நம் முன்னோரெல்லாம்
- பெரியகுளம் முகம்மது-
மேலுள்ள தலைப்பு
என்றோ நான் கேட்டத் திரைப்படப் பாடலின் முதல் வரியாகும்.
இராமநாதபுரம் மாவட்டம்
திருப்பாலைக்குடி என்ற ஊரில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த
போது
அருகிலுள்ள தேவிபட்டிணத்திற்கு நான் அடிக்கடி செல்வதுண்டு.
தேவிபட்டிணம் கடற்கரையில்
நவபாசாணம்
என்ற ஒரு இடமுண்டு.
கரையோரத்தில்
கடலுக்குள் சுற்றுச் சுவருள்ள கடல் பகுதி ஒன்று உள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்ஏராளமான மக்கள் நாள்தோறும்
அங்கு சென்று குளித்து வருவதை நான் பார்த்திருக்கிறேன்.
எனக்குள் ஒரு ஆசை இருந்தது.
வாய்ப்புக்
கிடைத்தால் அடிக்கடி அங்கு சென்று குளித்து வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை.
இன்றுவரை
அந்த ஆசை நிறைவேறாமலேயே இருக்கிறது.
காரணம்
அந்த இடம் இந்து சமயத்தாரின் புனித இடமாகக் கருதப்பட்டு வருகிறது.
நான்
தாடி, தொப்பியுடன்
கால்வரை நீண்ட மேலாடை அணியக்கூடியன்.
என்னைப் பார்த்தாலே இவர் பக்கா முஸ்லிம்,
அசரத், தப்லீக்காரர்
என்று யாரும் சொல்வார்கள்.
இஸ்லாத்தை வாழ்க்கை
முறையாக ஏற்றுக் கொண்ட இம்மண்ணின் மைந்தனான சாதாரண தமிழ்மகன்தான்
நான்.
சில நூற்றாண்டுகட்கு முன் எனது முன்னோர்கள், அவர்கள் அன்றையச் சமயநெறியைப் பின்பற்றிய வகையில்
அவர்களெல்லாம்
நவபாசனத்திற்குச் சென்று குளித்தவர்கள்தான்.
அவர்கள் பழநி சென்று அங்குள்ள நவபாசான முருகன் சிலையில் இருந்து வரும் நவபாசான
தீர்த்தத்தைக் குடித்தவர்கள்தான்.
எனது முன்னோர்கள்
திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று
அங்குள்ள தீர்த்தக் கிணறுகளில் குளித்தவர்கள்தான்.
ஆகையால்தான்
என் முன்னோர் நீண்ட ஆயுளோடும்
நல்ல உடல் நிலையோடும் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆகையால் எனக்கும் ஒரு ஆசை நல்ல உடல் நலத்தோடு நீண்ட ஆயுளோடு வாழ
நாமும் அங்கு சென்று குளிக்க வேண்டும் என்பதுதான்.
நான் நவபாசானத்துக்குக்
குளிக்கச் சென்றால்
இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்பார்கள்.
நான் எப்படியோ மாறுவேடத்தில் அங்கு போய் குளித்து விட்டு வந்தாலும்.
எனது ஊர் முஸ்லிம் ஜமாஅத்துக்குத் இந்தச் செய்தி தெரிந்தால் இவன் முர்தத் மதம் மாறிவிட்டான் எனச் சொல்லி என்னை ஊரைவிட்டு விலக்கி வைத்து விடுவார்கள்.
மீண்டும் கலிமா சொல்லி
நான் இஸ்லாத்துக்கு வரவேண்டும்.
இது இரண்டுமே அந்தந்த மதத்தவர்களின் கொள்கை நிலைப்பாடு.
அதைப்பற்றி நான்
எந்தக் கருத்தும் சொல்ல வரவில்லை.
நான் இங்கே சொல்ல வந்தது
நவபாசாணத்தைப் பற்றி மட்டுமே.
ChatGPT & Google
இருவர்களிடம்
நவ பாசானத்தைப் பற்றி விசாரித்ததில்
கிடைத்தப் பதிலைச் சுருக்கமாகக்
கீழே தந்துள்ளேன்.
" போகர்
என்ற சித்த
மருத்துவ அறிஞர்
மனிதனுக்கு அதிக வலியையும் துயரத்தையும் ஏற்படுத்திய பல நோய்களைக் குணப்படுத்துவதில் குறிப்பாக கவனம் செலுத்தினார்.
ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி மருந்துகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக,
எல்லா
நோய்களையும் குணப்படுத்தக்
கூடிய ஒரே மருந்தைக் கொண்டு வர விரும்பினார்.
இந்த விஷயத்தில் அவரது சீடர் புலிபாணி சித்தர் அவருக்கு உதவினார்.
64 வகையான விஷங்களை அவர் வகைப்படுத்தியதில்,
32 இயற்கையாகவும், மீதமுள்ள 32 செயற்கையாகவும்
அமைந்தன.
முன்பாக போகர்,
மற்ற முனிவர்களுடன் விரிவான விவாதம் நடத்தினார்.
போகர்
நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு
பழனி மலைகளில் கிடைத்த ஏராளமான மூலிகைகளைப் பயன்படுத்தி, அவற்றை ஒரு கலவையாக உருவாக்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது விஷப் பொருட்கள்
வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கௌரி பாசனம், வெள்ளை பாசனம், மிருதர்சிங் மற்றும் சிலாசட் ஆகும்.
பாசனங்களை மனித உடலுக்கு ஏற்றதாகவும், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நோய்களைக் குணப்படுத்தக்
கூடியதாகவும்
கூட்டுக்கலவையாக
உருவாக்கினார்.
இத்தகையக் கலவையையின்
பயனை
எல்லாமக்களும்
அடைய வேணாடும்
என விரும்பினார்.
ஆகவே அந்த
நவப்பாசனங்களைக் கொண்டே
முருகன் சிலையை
உருவாக்கினார்.
நாள் தோறும்
முருகப் பெருமானுக்கு
நடைபெறும் நீராட்டு நிகழ்ச்சியில்
நீர் நவபாசான
சிலைமீது பட்டு
வெளி வரும் மருத்துவக் குணம்
வாய்ந்த நீரைக்குடித்து
கோடிக்கணக்கான
மக்கள் பயனடைகிறார்கள்.
போகர் காலத்தில்
இப்பொழுதுள்ள
மதங்கள்
தீண்டாமை
தீட்டு போன்ற
எதுவும் இல்லை.
ஆகையால் யார்
வேண்டுமானாலும்
பழநிமலை சென்று
முருகனை கண்ணுற்று
அந்த மருத்துவத்
தன்மை வாய்ந்த
நீரை அருந்த முடியும்.
தேவிபட்டிணம்
நவபாசானமும்
அந்த வகையைச்
(மருத்துவம்)
சேர்ந்ததுதான்
எனச் சொல்கிறார்கள்.
தனிமனிதனுக்கும்
மனிதசமூகத்திற்கும்
அதிகப் பயன் தரக்கூடியவற்றை
மனிதனைச் செய்ய வைப்பதற்கு
மத உணர்வையும் அதனுடன் கலந்து
விடுவிடுவது
பொதுவான
உலக வழக்கமாக
இருக்கிறது.
அதுவரை மதம்
சரியே.
எல்லா மதங்களிலும்
மதநம்பிக்கையாளர்
களிடம் மதநம்பிக்கையுடன் மூடநம்பிக்கையும்
சேர்த்து வளர்த்து
அதன் மூலம் வயிறு வளர்க்கும் கூட்டம்
இருந்தே வருகிறது.
எந்த ஒரு மத நம்பிக்கையாளரும்
மதநம்பிக்கை எது
மதநம்பிக்கையின் பெயரால் நம்மை ஏமாற்றிக் காசு பறிக்கும் மூடநம்பிக்கை எது
என்ற பிரித்தறியும்
அறிவாற்றலைப்
பெற்றிருப்பது
கட்டாயத் தேவையாகும்.
ஒரு மதநம்பிக்கையாளர் ஏமாளியாக இருக்கக்கூடாது.
தற்சமயம் நான் வசிக்கும் ஊர்
தேனி மாவட்டம்
பெரியகுளம்.
வைகைஅணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை ஆகியவை
சுமார் 10 கி.மீ. தொலைவில் பெரியகுளத்தைச் சுற்றியுள்ளன.
எங்கள் குடும்பத்தினர்
உட்பட பெரியகுளம் அதைச் சுற்றியுள்ள ஊரினர்
அடிக்கடி கும்பக்கரை,
சோத்துப்பாறைக்குச்
சென்று
மூளிகைக் குளியல்
போட்டு வருவோம்.
மூன்று இடங்களுக்கும்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில்
பெய்யும் மழையால்தான்
தண்ணீர் வருகிறது.
மலைகளிலுள்ள
நூற்றுக்கணக்காண
மூலிகை மரஞ்செடி கொடிகளை தழுவிக் கொண்டுதான்
மழைநீர் அருவிவழியாக
ஓடை வழியாக நம்மை
வந்தடைகின்றன.
அத்தகைய நீரில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்வு
பெறுகின்றன.
இதுவும் ஒரு இயற்கை
மருத்துவமே.
இந்த இயற்கை மருத்துவத்தை நாம்
அடைவதற்கு
மதமோ சாதியோ
தடைகிடையாது.
ஆனால்
நவபாசன மருத்துவத்தின் பயனை அடைய
மதம் தடையாக இருக்கிறது.
மதவழிப்பறி
ஏகாதிபத்திய வழிப்பறி
இவையெலாம் ஒழிந்து
இந்தியா பொதுஉடைமைக் கொள்கையை
ஏற்கும் நாடாக மாறும்போது.
எல்லாமே பொதுஉடைமையாகும்
போது.
நவபாசானக் குளியல்
எல்லோருக்கும் சாத்தியமாகும்.
இன்குலாப்
ஜிந்தாபாத்.
AMOHAMED ABDULLAH
(பெரியகுளம் முகம்மது)
உரிமையாளர் & இதழாசிரியர்
1- 207 Perumalpuram
Periyakulam 625 601
Theni Dt.50 62
Whatsapp No. 90 80 92 50 62














































































































Comments
Post a Comment