தங்கநிலா
டாட்காம்

 இஸ்லாமிய இணைய 
வாரஇதழ்

Year 6 Week 31

08 08 2026 - ஞாயிறு

பெரியகுளம் 

முகம்மது

இதழாசிரியர்


اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْ‌وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.  

(அல்குர்ஆன் : 49:10)

தங்கநிலா
டாட்காம்   

இஸ்லாமிய

இணைய

வாரஇதழ்

  பார்க்கப்படும் உலகநாடுகள்

 (Google blogger stats)

இந்தியா சிரிலங்கா 
சிங்கப்பூர் மலேஷியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அரபு நாடுகள்
ஐரோப்பிய நாடுகள்
இந்தோனேஷியா
சீனா ஜப்பான் தென்கொரியா
சுவீடன் நார்வே











































முஸ்லிம்கள் வந்தே மாதரம் என்று சொல்லலாமா


மத நல்லிணக்கம்
சமூக நல்லிணக்கம்
வளர்ப்போம்.


நீட்டை ஒழிப்போம்.

கட்டண விளம்பரம்

ஒரு வாரத்துக்கு ரூ 500-/




Md.Ashif



திட்டமிடப் பட்டுள்ள அல்அஸ்ஹர் பள்ளியின் அமைப்பு

திருப்பாலைக்குடி


*அல் அஸ்ஹர்

 தொடக்கப்பள்ளியின் தற்போதைய நிலை மற்றும் புதிய நிர்வாகம் மேற்கொள்ளவுள்ள கட்டிட மேம்பாட்டுப் பணிகள் குறித்து விளக்கும் காணொளி.*

மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளுக்கு தங்களின் பொருளாதார பங்களிப்பை வழங்க விரும்பும் நல்உள்ளங்கள்,

கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு தங்களது நன்கொடையை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🏦 *வங்கி:* சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, திருப்பாலைக்குடி கிளை

👤 *கணக்கின் பெயர்:*
*AL AZHAR ISLAMIC EDN DEVELOPMENT A/C MIDDLE SCHOOL TPL*

💳 *கணக்கு எண்:* 3566622063

🔢 *IFSC Code:* CBIN0282055

🤝 வாருங்கள்... நமது அடுத்த தலைமுறைக்கு சிறந்த கல்விச் சூழலை ஒன்றிணைந்து உருவாக்குவோம், இன்ஷாஅல்லாஹ்.

*-அல் அஸ்ஹர் தொடக்கப்பள்ளி நிர்வாகம்*

Advertisement sponserd by Mansoor Ali Burunai

அல்அஸ்ஹர்

பள்ளிக்கூடம்

கல்விப் பணிக்கு
தாராளமாய் உதவுவோம்.


அப்துல்லாஹ் ஆலிம்ஷா

பெரியகுளம் முகம்மது

இதழாசிரியர்

தங்கநிலா டாட்காம்

இணைய வாரஇதழ்

முன்னாள் ஆசிரியர்
Secondary Crade Assistant

அல்அஸ்ஹர் தொடக்கப்பள்ளி (என் காலத்தில் நடுநிலைப்பள்ளி)

அல்அஸ்ஹர் பள்ளி
புத்தாக்க முயற்சி

நான் அல்அஸ்ஹரில்
பணிபுரிந்த காலத்திலேயே இத்தகைய முயற்சி
எடுக்கப்பட்டது.

இப்பொழுதுதான் அது சாத்தியமாகும்
நிலை ஏற்பட்டுள்ளது.

நன்கு படித்தவர்களாலும்
சமுதாய முன்னேற்றத்திற்கு
கல்வியின் பங்களிப்பை நன்கு
உணர்ந்தவர்களால்
மட்டுமே

கல்வி நிறுவனங்களை
சிறப்பாக நடத்த முடியும்.

இராமநாதபுரம் மாவட்டத்திலும் சரி
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சரி

திருப்பாலைக்குடி
அல்அஸ்ஹர் பள்ளி
ஆரம்பிக்கப்பட்ட
காலக்கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட
ஏராளமான ஆரம்பப் பள்ளிகள் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன்
இன்று மேல்நிலைப் பள்ளிகளாக
ஆலமரம் போல வளர்ந்து
செழித்து நிற்கின்றன.

1956 ல் ஒருசில ஆசியர்களுடனும்
கொஞ்சம் மாணவர்களுடனும்
ஆரம்பிக்கப்பட்ட அல்அஸ்ஹர் பள்ளி
அன்றையச் சிறந்த நிர்வாகம் காரணமாக

18 ஆசிரியர்கள்
750 மாணவர்களுடன்
நடுநிலைப் பள்ளியாக உயர்ந்திருந்ததாக
அறிய முடிகிறது.

இப்பொழுது அல்அஸ்ஹர் பள்ளியை சமூக ஆர்வம் கொண்ட படித்த கல்வியாளர் குழு ஒன்று

நவீன வசதிகளுடன் கூடிய உயர்ந்த தரத்துடன் கூடிய
திருப்பாலைக்குடி மட்டுமல்லாது

திருப்பாலைக்குடியைச் சுற்றியுள்ள
கிராமத்து பிள்ளைகளும் வந்து படிக்கக்கூடிய
அளவுக்கு,

திருப்பாலைக்குடியிலிருந்து வெளியூர் சென்று படிக்கும் பிள்ளைகள்
திருப்பாலைக்குடியிலேயே தரமான
உயர்கல்வியைப்
பெறுவதற்கான
முறையானத் திட்டத்தை

அல் அஸ்ஹரின் புதிய நிர்வாகக்குழு
தயாரித்திருப்பதை அறிய முடிகிறது.

அல்லாஹ் தஆலா
முன்னதாக
பொதுமக்கள்
இந்த முயற்சிக்கு
முழு ஆதரவு தர வேண்டும்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


இந்த நல்ல முயற்சி
வெற்றிபெற
எல்லாம் வல்ல அல்லாஹு 

தஆலா நல்லுதவி புரிவானாக.



அலீ மியான்(ரஹ்) அவர்களும் 
வந்தே மாதரமும்


1998-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங், 

மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் **'சரஸ்வதி வந்தனம்'** மற்றும் **'வந்தே மாதரம்'** பாடுவதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டார்.

அப்போது அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் (AIMPLB) தலைவரும், புகழ்பெற்ற லக்னோ நத்வத்துல் உலமா பல்கலைக்கழகத்தின் தலைவருமான **மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வி (அலீ மியான்)** 

இந்த உத்தரவை மிகக் கடுமையாக எதிர்த்தார்.

அவரது எதிர்ப்பிற்கான முதன்மை காரணங்கள்:

* **இஸ்லாமியக் கோட்பாடு (தவ்ஹீத்):** இஸ்லாமிய நம்பிக்கையின்படி, அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது எதையும் வணங்குவதோ தொழுவதோ கூடாது. 

தாய்நாட்டை நேசிப்பது வேறு, அதை வணங்குவது வேறு என்ற அடிப்படையில், கடவுளாக உருவகப்படுத்திப் பாடும் வரிகள் இஸ்லாமிய வரம்பிற்கு அப்பாற்பட்டவை என அவர் சுட்டிக்காட்டினார்.

**அரசியலமைப்பு உரிமை:** இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் **பிரிவு 28**, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் கட்டாய மத வழிபாடுகளைத் திணிப்பதைத் தடுக்கிறது.

எனவே இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று அலீ மியான் வாதிட்டார்.

*"நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம், ஆனால் அதை வணங்க முடியாது. 

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க இஸ்லாம் அனுமதிக்காது."*
என்றார் அவர்.

பள்ளிகளைப் புறக்கணிக்கும் அழைப்பு!

அரசு இந்த முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், **முஸ்லிம் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்** என்றும், 

கட்டாயப்படுத்தும் பள்ளிகளிலிருந்து மாணவர்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அலீ மியான் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

அவரது இந்த அறிவிப்பு, இஸ்லாமிய சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தையும் கிளப்பியது.

அலீ மியானின் இந்த அழைப்பைத் தொடர்ந்து:

கல்யாண் சிங் அரசில் அங்கமாக இருந்த லோக்தாந்த்ரிக் காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகளும்கூட இந்த விவகாரத்தில் அரசின் கட்டாய முடிவை எதிர்த்தன.

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாகச் சாடின.

முஸ்லிம் சமூகத்தின் தீவிர எதிர்ப்பினாலும், மாணவர்கள் அதிகளவில் பள்ளிகளைப் புறக்கணிக்கும் சூழல் உருவானதாலும், கல்யாண் சிங் அரசு பின்வாங்கியது. 

இப்பாடல்களைப் பாடுவது **கட்டாயமல்ல, விருப்பத்தின் அடிப்படையிலானது** என்று அரசு விளக்கமளித்துத் தனது உத்தரவைத் திரும்பப் பெற்றது.

வீட்டின் மீதான சோதனை (நவம்பர் 1998)

1998 நவம்பர் 21 அன்று இரவில், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் (தகியா கலான் கிராமம்) அமைந்திருந்த அலீ மியானின் பூர்விக வீட்டிற்குள் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அத்துமீறி நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

* அலீ மியான் அவர்கள் பள்ளிகளில் இப்பாடல்களைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து, முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பகிரங்கமாக அறிவித்த சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடந்தது.

* அந்த நபர்கள் வீட்டின் வரவேற்பறை உள்ளிட்ட இடங்களைச் சோதனையிட்டுவிட்டு, எதுவும் கிடைக்காமல் சில நிமிடங்களில் தப்பிச் சென்றனர்.

* இது அரசினாலும் புலனாய்வு அமைப்புகளினாலும் அலீ மியானைப் பயமுறுத்த அல்லது உளவு பார்க்க மேற்கொள்ளப்பட்ட 'திட்டமிட்ட சோதனை/தாக்குதல்' (Raid) என்ற சந்தேகம் பொதுமக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பலமாக எழுந்ததோடு, நாடு தழுவிய அளவில் கடும் கண்டனங்களை உருவாக்கியது.

இந்தச் சம்பவத்தில் அரசுக்கும் உளவு அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததும், அன்றைய பிரதமராக இருந்த **அடல் பிஹாரி வாஜ்பாய்** மற்றும் உ.பி. முதலமைச்சர் கல்யாண் சிங் ஆகிய இருவரும் அரசுக்கும் இந்தச் சோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தனர்.

வாஜ்பாய் இந்தச் சம்பவத்தைக் கண்டித்ததுடன், அலீ மியானின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கவும், அரசைக் கெட்டபெயரில் சிக்க வைக்கவுமே யாரோ சதி செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

* நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையைத் தணிக்கவும், இஸ்லாமிய சமூகத்திற்கு அமைதி ஏற்படுத்தவும், பிரதமர் வாஜ்பாய் லக்னோவில் இஸ்லாமியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உ.பி. மாநில அரசு இதற்காக மூன்று மூத்த ஐ.பி.எஸ் (IPS) அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த அரசியல் நெருக்கடி, நாடு தழுவிய எதிர்ப்பு மற்றும் சொந்தக் கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாகவே, கல்யாண் சிங் அரசு 'வந்தே மாதரம்' மற்றும் 'சரஸ்வதி வந்தனம்' பாடல்களைக் கட்டாயமாக்கும் தனது உத்தரவை இறுதியில் திரும்பப் பெற நேரிட்டது.

இச்சம்பவம், தனிநபரின் மதச் சுதந்திரம் மற்றும் கல்வி நிறுவனங்களில் மதச் சடங்குகளைத் திணிப்பது குறித்த விவாதங்களில் இன்றும் ஒரு முக்கிய வரலாற்று முன்னுதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

நேற்று வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் என்ற சட்ட மசோதா நிறைவேறிய சூழலில் அலீ மியான் (ரஹ்) அவர்கள் நினைவுக்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை. 

ஒரு வெற்றிடம் நிலவுவதை உணர்கிறோம்!


வந்தேமாதரமும் 
மதசார்பின்மையும்


நிஜாம் யூசுபி

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது, என்று கூறும் குர்ஆன் அதற்கு அடுத்தபடியாக பெற்றோர்களிடம் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டுமென்று கூறி பெற்றோர்களின் முக்கியத்துவத்தை முதன்மைப் படுத்தியிருக்கிறது, குர்ஆன். 

எனினும், அந்த பெற்றோர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யுமாறு - அல்லாஹ்வுக்கு இணை வைக்குமாறு உத்தரவிட்டால் அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம், என்றும் குர்ஆன் கூறுகிறது. 

பெற்ற தாயை வணங்கக் கூடாது, என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. 

அப்படியிருக்கும் போது தாய் நாட்டை வணங்கி வழிபட வேண்டுமென்பதை எப்படி இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும்?

வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம், என்பதாகும்.

அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்குவது இஸ்லாத்தை விட்டும் வெளியேறுவதற்குச் சமம்.

உயிரினும் மேலாக முஸ்லிம்கள் மதிக்கும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கூட கடவுளாகப் போற்றிவிடக்கூடாது, 
என்று இஸ்லாம் போதிக்கிறது.

சூரியன், சந்திரன், பூமி அனைத்தும் மனிதனுடைய பயன்பாட்டுக்காக அல்லாஹ்வால் படைக்கப் பட்ட படைப்புகளே தவிர

வணங்குவதற்குத் தகுதியானவை அல்ல, என்பதை இஸ்லாமிய இறைவேதம் திருக்குர்ஆன் அழுத்தமாகக் கூறுகிறது.

இந்நிலையில் இந்து மதத் தெய்வங்களை ஒப்பிட்டு பாடப்பட்ட வாந்தே மாதரம் என்ற பாடலை அனைத்து மதத்தினரும் பாட வேண்டுமென்று சொல்வது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட மத சுதந்திரத்திற்கு முரணாக அமைந்து விடாதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

வந்தே மாதரம் பாடுவதை காட்டாயமாக்க வேண்டுமென்பது குறித்து ஓர் எழுத்தாளர் தெரிவிக்கையில் வந்தே மாதரம் எழுதப்பட்டிருக்கும் மொழி வங்காளம். 

வங்காள மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட மேற்குவங்க மாநிலத்திலேயே இப்படி ஒருநடை முறை கிடையாது. 

அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் அங்கேயே இருக்கிறது.  

அது இந்து மதசார்பான பாடல் என்கிற விமர்சனம் மற்ற மதத்தினர் மட்டுமின்றி மத அடையாளங்களைத் துறந்தவர்கள், முற்போக்காளர்கள் மத்தியிலும் உள்ளது, என்று கூறியுள்ளார். 

தமிழகத்தில் சக்கரவர்த்தி சி. ராஜகோபாலச் சாரியார் தலைமையில் 1930 ஏப்ரல் 13 ம் நாள் தமிழ் வருடப்பிறப்பன்று திருச்சி தி.சொ. சௌ. ராஜன் வீட்டிலிருந்து வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரக வீரர்கள் கிளம்பினர்.... 

மறுநாள் காலை பிரார்த்தனையில் வந்தே மாதரம் ஏசுவே கிருபை தாரும் என்ற கீதங்கள் பாடப்பட்டன. 

முஸ்லிம் தொண்டர்கள் குர்ஆனிலிருந்து வசனங்களை வாசித்தார்கள்.

 (நூல்:விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்.)

இதன் மூலம், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்தப் பாடல் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்ததாகவே கருதப்பட்டது. 

அனைத்திந்திய மக்களால் அங்கீகரிக்கப் பட்ட தேசிய கீதமாகப் பார்க்கப் படவில்லை. 

எனவே தான் கிருத்தவர்கள், முஸ்லிம்கள் வந்தே மாதரம் என்ற வாசகத்தை உச்சரிக்கவில்லை.

 1923ல்  நடந்த க ங்கிரஸ் மாநாட்டில் வந்தேமாதரம் பாடிய போது அப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த முகம்மது அலி அவர்கள் மேடையிலேயே இதைக்கண்டித்து வெளிநடப்புச் செய்தார்.

கவிஞர் இக்பால் அவர்கள் ஸாரேஜஹான்சேஅச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற கீதத்தை இயற்றினார். 

இந்தப் பாடலின் பொருள் அகில உலகிலும் சிறந்தநாடு எங்கள் இந்தியா என்பதாகும். 

முஸ்லிம் கவிஞர் பாடிய பாடலில் தேசத்தின் சிறப்பை மட்டுமே பார்க்கிறார்.

இஸ்லாத்தின் கொள்கை எதையுமே திணிக்கவில்லை, என்பதை நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரவீந்திரநாத்தாகூர் எழுதிய ஜனகனமன என்பதே தேசிய கீதமாக இருக்கட்டும்  என்று 1950ஆம் ஆண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

2009 ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரமாகிய டெல்லியில் ஜம்மியத்துல் உலமாசபையின் மாநாடு நடந்தது. 

இரண்டு நாட்கள் நடந்தஅந்தமாநாட்டில்
முதல்நாளில்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வந்தேமாதரம் என்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானது.

முஸ்லிம்கள் அதைப் பாடக்கூடாது என்பதும் தீர்மானங்களில் ஒன்றாகும்.

அனைத்து மதத்தினரும், மதத்திற்கு அப்பாற்பட்டவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் தான் எல்லோருக்கும் பொதுவாக இருக்கமுடியும். 

மதசார்பற்ற இந்தியத் திருநாட்டில் இதை உணர்ந்து நாட்டின் பெரும்பான்மை மக்களும் பாடல் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

                      யூசுபிய்யயா ராஷித் - ஆகஸ்ட் 2017 (தலையங்கம்)
Nizamudden yousufi


DW தமிழ்


Karan Tv

காவல்துறையின் துன்புறுத்தல் தொடர்ந்தால், இளைஞர்கள் அரசாங்கத்தையே மாற்றுவார்கள்,"

அபிஜீத் திப்கே என்று எச்சரிக்கை .

➤ நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்த நிலையில், பல மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வீடுகளுக்குச் சென்று மிரட்டுவதாகவும், கைது செய்வதாகவும் கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவுநர் அபிஜீத் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

➤ "போராடும் மாணவர்கள் பயங்கரவாதிகள் அல்ல; ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும்
அபிஜீத் திப்கே எச்சரிக்கை.

abpnadu.com


Theniviewz


Saravsnan Manivel

கோடான கோடி தமிழர்களின் குருதியிலும் மூச்சிலும் கலந்திருக்கும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல், அண்மைக்காலமாகத் திட்டமிட்டே நசுக்கப்பட்டு, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் கொடூரமான பண்பாட்டுச் சிதைவு தமிழ் மண்ணில் அரங்கேறி வருகிறது.

தமிழர்களின் தன்மானத்தின் மீது தொடுக்கப்படும் இந்த ஆதிக்க வர்க்கத்தின் கொட்டத்தை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எவ்வித எதிர்ப்புமின்றி, முதுகெலும்பற்ற நிலையில் மௌனமாக வேடிக்கை பார்த்து வருகிறது.

டெல்லி அதிகார மையங்களின் வாய்மொழி உத்தரவுகளுக்கும், பிற துறை வழிகாட்டுதல்களுக்கும் அஞ்சி நடுங்கி, தன் சொந்த மாநிலத்தின் மொழிப் பெருமையைக் காலடியில் அடகு வைக்கும் தவெக அரசின் மெத்தனப் போக்கு வெட்கக்கேடானது,

மொழிப்போர் தியாகிகளின் ரத்தத்தால் காக்கப்பட்ட தமிழ் மண்ணில், தமிழ்த்தாய் வாழ்த்தின் புனிதத்தைக் குலைக்கும் சதியை தவெக அரசு சகித்துக் கொள்வது பெரும் அநீதி.

பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும், ஆளுநரின் உத்தரவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.


Stlin Simbarasan


அன்பிற்கினிய தோழர் StlinSimbarasan ஷாநவாஸ் பேட்டி ஒன்றினால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகின்றார் என்னுடைய கேள்வி ஒன்று தான் அவர் விடுதலை சிறுத்தையின் செயல்பாடு சரியில்லை, அல்லது கட்சியின் தலைவர்கள் விலை போய் விட்டனர் என்று ஏதாவது கட்சிக்கு ஒவ்வாத விமர்சனம் ஏதாவது செய்து விட்டாரா?

அல்லது தலைவர் திருமாவளவன் எடுத்த முடிவு தவறு அவர் இப்படி கூட்டணியை விட்டு கொள்கையை விட்டு வேறொரு கூட்டணிக்கு போயிருக்கக் கூடாது இப்படி ஏதேனும் தோணியில் வேறு ஏதாவது பேசி விட்டாரா சொல்லப்போனால் அவர் தான் சார்ந்த கட்சியையோ மற்ற கூட்டணி கட்சியையோ எதுவும் பேசவில்லை...

அவர் பேசியதெல்லாம் மக்கள் இந்த ஆட்சியில் படும் துயரம், அதை கடந்த ஆட்சியில் எதிர்த்து நின்ற தமிழக அரசை தான் உயர்த்தி பேசியும் கடந்த காலத்தில் தமிழகம் எதிர்த்து நின்ற பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த கொடுபாதக சட்டங்களை தான் எதிர்த்து பேசி இருந்தார் இப்படி பேசிய அவரை விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு வசை பாட வேண்டிய அவசியம் என்ன?

விடுதலைச் சிறுத்தைகளே ஷாநவாஸ் இன்னும் விடுதலை சிறுத்தையாகத்தான் தொடர்கிறார் நீங்கள் தான் கடந்து வந்த பாதையை மறந்து கொள்கையை மறந்து ஆதவ சிறுத்தைகளாய் மாறி நிற்கின்றீர்கள் ஆக திருந்த வேண்டியது அவர் இல்லை நீங்கள் தான்...

நன்றி
Melwin Packianathan


Distric tCollector


Voice Nadu


Thipu Jawathu.


கவிஞர் நாகூர் காதிர்ஒலி


Om Saravana Bhava



Hithayathullah


Azaan Aalam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உணவில் சிக்கன் பிரியாணி: பரிசீலனையைக் கைவிட வேண்டும்! - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஹமீது ஃப்ரோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.

பள்ளி மாணவர்களுக்குப் புரதச்சத்து எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு, மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து பாராட்டுக்குரியதுதான். மாணவர்களின் ஊட்டச்சத்தின் மீது அரசு காட்டும் இந்த அக்கறை வரவேற்புக்குரியது என்றாலும், இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் ஆபத்துகளையும் நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது.

இன்றைய சூழலில், பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளிலேயே பல நேரங்களில் கெட்டுப்போன முட்டைகள் மாணவர்களுக்குச் சென்றடைவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 

முட்டைக்கே இந்த நிலை என்றால், கோழி இறைச்சியைப் பராமரிப்பதும், சுகாதாரமாகச் சமைத்து வழங்குவதும் பெரும் சவாலாக இருக்கும்.

அதற்குப் பதிலாக, வீடுகளில் பயன்படுத்துவது போல தரமான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், சுண்டல் மற்றும் சிறுதானியங்கள் போன்ற ஆரோக்கியமான இயற்கை உணவுகளை மாணவர்களுக்குத் தடையின்றி வழங்கலாம்.

இவை கெட்டுப்போகாமல் இருப்பதுடன், குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும்.

எனவே, நல்நோக்கத்தோடு முன்வைக்கப்பட்ட இந்தச் சிக்கன் பிரியாணி யோசனையைக் கைவிட்டு, தரமான காய்கறிகள் மற்றும் சத்தான இயற்கை உணவுகள் மூலமாகவே மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தை வலுப்படுத்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


CPIML


#இந்திய_கம்யூனிச_இயக்கத்தின்_மிகச்சிறந்த_தலைவரும், CPIML ன் நிறுவனப் பொதுச் செயலாளருமான தோழர் சாரு மஜும்தாரின் 54-வது தியாக நினைவு நாள்! செவ்வணக்கம்!

தோழர் சாரு மஜும்தார் வகுத்த பாதை - மகத்தான நக்சல்பாரி விவசாயி எழுச்சி மற்றும் CPIML நமது பயணத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.


Singam News


FCRA திருத்தச் சட்டத்திற்கு எதிராக வள்ளியூரில் கொதித்தெழுந்த கிறிஸ்தவர்கள்.
திருநெல்வேலிமாவட்டம் வள்ளியூரில்,

சிறுபான்மையினரின் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நல நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியுதவிகளை முடக்கும் மத்திய அரசின் FCRA திருத்தச் சட்டத்தைக் கண்டித்து 

தென் மண்டல பல்சமயப் பணிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



Madhuri Ismail

. இஸ்லாத்தை ஏற்ற
*முதல்இந்தியரும்,தமிழரும்*

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா(CheramanPerumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தைஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே,முதல்இந்திய மசூதி கேரள மாநிலம்கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்ஆமசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் *இரண்டாவது ஜும்ஆ மசூதி*ஆகும்.

சேரமான் பெருமாள் ஜும்ஆ மசூதி பழைய தோற்றம்.சேரமான் பெருமாள் ஜும்ஆ மசூதி புதிய தோற்றம்.

🔍அறிவோம்....✍️மதுரை.,இஸ்மாயில்.


Nakkeran


சதகத்துல்லாஹ்



மு.வெங்கடேஷ்பாபு

பெரியகுளத்தில் வனச்சாலையோரம் காணப்படும் கல்வெட்டுக்கள்.
பெரியகுளம் மற்றும் இதனை ஒட்டிய சுற்றுப்புறங்களில் நாம் இதுவரை அறிந்ததை விடவும் இன்னும் நாம் அறியாத பல வரலாற்றுத் தடயங்களும் மறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. 

பெரியகுளம் மற்றும் இதனை ஒட்டிய சுற்றுப்புறப் பகுதிகளை தொல்லியல் துறையினர் ஆராய்ந்தால் இந்த ஊரைப் பற்றிய இன்னும் பல உண்மைகள் வெளிவரவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தக் கல்வெட்டுகளை புகைப்படம் எடுத்து என்னுடன் பகிர்ந்து கொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி.🙏


திண்டுக்கல்கஸ்தூரி பாம்

வெங்காய விவசாய செடி ☘️ தண்ணீர் ஊட்டல் 🌊



CPIM Tamilnadu

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ஜி. சுகுமாரன் தலைமையில் இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.

இக்கூட்டத்தில், #CPIM பொதுச் செயலாளர் தோழர் எம். ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி, மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர் பி. சம்பத், தோழர் என். குணசேகரன், தோழர் கே. பாலபாரதி உள்ளிட் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


Celon News


Mohamed Farook


திராவிடர் இயக்க 
தமிழர்பேரவை


திராவிடர் இயக்க
தமிழர்பேரவை



John Durai Asir Chellaia

இப்படி ஒரு சிக்கல் தனக்கு ஏற்படும் என்று அந்த இஸ்லாமியப் புலவர் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.

செய்குதம்பிப் பாவலர் என்றொரு தமிழ்ப் பெரும் புலவருக்குத்தான்
எதிர்பாராத இந்த சோதனை ஏற்பட்டது.
இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர் அவர்.

இது நடந்தது
ஒரு இலக்கிய மேடையில்.

அங்கே இருந்த புலவர்களில் ஒருவர், செய்குதம்பிப் பாவலரிடம்,
திடீரென இப்படி கேட்டார்.
“நீங்கள் ஒரு பெரிய மேதை என்று எல்லோரும் சொல்கிறார்களே ?
இப்போது நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்.
துருக்கனுக்கு ராமன் துணை.
இந்த வார்த்தைகளில் முடியும்படியாக ஒரு பாடலை இப்போதே, இந்த மேடையில் உங்களால் பாட முடியுமா ?"

ஒரு இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்த புலவரிடம், இப்படி ஒரு பாடலை பாடச் சொன்னால் என்னதான் செய்வார் அவர் ?
(“துருக்கர்” என்றால் இஸ்லாமியர் என்றும் பொருள்படும்.)

சபையில் இருந்தவர்கள் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார்கள்.

சாதாரணமான புலவர் அல்ல செய்குத்தம்பி பாவலர்.
ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர்.

அப்படி ஒரு சிறந்த மேதைக்குத்தான்,
இப்படி ஒரு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது

'என்ன செய்யப்போகிறார் செய்குத்தம்பி பாவலர்' என அவையில் இருந்தோர் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, கேள்வி கேட்டவரின் விஷம நோக்கத்தைப் புரிந்து கொண்டாராம் பாவலர்.

கண்களை மூடி சிந்திக்க ஆரம்பித்தார் பாவலர்.

கேள்வி கேட்ட விஷமம் பிடித்த புலவரோ, விழிகளை இமைக்காமல் பாவலரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சில நொடிகள் அமைதிக்கு பின் கண்களை திறந்து பார்த்த செய்குத்தம்பி பாவலர்,
விறு விறுவென்று ஒரு வெண்பாவை மூச்சு விடாமல் அந்த மேடையில் பாடி முடித்தாராம். அந்தப் பாடலின் முடிவு இப்படி இருந்ததாம் .

“...பரதன் லட்சுமணன் சத்
துருக்கனுக்கு ராமன் துணை.”

(சத்துருக்கன் ராமரின் தம்பி. இவரும் லட்சுமணனும் இரட்டையர்கள்.)

அவ்வளவுதான்.
கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருமே-
பாடச் சொன்ன விஷமக்காரர் உட்பட-
கைகளை தட்டி, ஆனந்த ஆரவாரம் செய்து, செய்குதம்பிப் பாவலரை பாராட்டி மகிழ்ந்தார்கள்.

அமைதியாக அந்த மேடையில் அமர்ந்து, ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார் செய்குத்தம்பி பாவலர்.

ஆம். வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்போதுதான், நமது திறமை நமக்கே புரிகிறது.

இந்திய அரசு 2008 ஆம் ஆண்டு செய்குத்தம்பி பாவலரின் நினைவாகச் சிறப்புத் தபால் தலை வெளியிட்டிருக்கிறது.

இன்று செய்குத்தம்பி பாவலரின் பிறந்த தினம்.

(ஜூலை 31, 1874 -
பெப்ரவரி 13, 1950)

John Durai Asir Chelliah
 

AbdulHameed SheikMohamed


Nasrath SRosy


முக்தார் அஹமது அன்சாரி - விடுதலைப் போராட்ட வீரரும் மருத்துவரும்

இந்திய தேச விடுதலைக்காக காங்கிரஸிலும், லீகிலும், தனிநபர்களாகவும் இன்னும் இயக்கங்களாகவும் இணைந்து போராடிய பல முஸ்லிம் முன்னோடி தலைவர்களைப் பற்றி அவ்வப்போது எழுதி வருகிறோம். அன்றைய கால வடக்கத்திய முஸ்லிம்கள் பெரும்பாலும் நிறைய கல்வித்தகுதி உடையவர்களாக, பொருளாதாரத்தில் உச்சம் தொட்டவர்களாக, சமூக அங்கீகாரம் பெற்ற உயர்குடி மக்களாகவே இருந்து வந்துள்ளனர். அவ்வகையில் மருத்துவரும் காங்கிரஸ் - முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளிலும் தலைமைப்பொறுப்புகள் வகித்தவரும், டெல்லியின் மதிப்புமிகு ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் நிறுவனர்களில் ஒருவருமான மருத்துவர் முக்தார் அஹமது அன்சாரி அவர்களைப் பற்றி நாம் மிக குறைவாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.

இவர் உபி மாநிலத்தின் முஹம்மதாபாத் நகரில் கிபி.1880 இல் காஸிகளும் முப்திகளும் நிறைந்த ஒரு ஸமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவர்களது குடும்பம் ஐதராபாத் நகருக்கு குடிப்பெயர்ந்தனர். அப்போதைய சென்னை மாகாணத்தில் இவர்களது குடும்பத்தார் காஸிகளாக பணியாற்றினர். மதராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவருக்கு இங்கிருந்து இங்கிலாந்து சென்று MD, MS போன்ற மேற்படிப்பு பயில ஸ்காலர்ஷிப் கிடைத்தது. எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக பட்டம் பெற்றுக்கொண்டவர் இங்கிலாந்திலேயே சில ஆண்டுகள் மருத்துவப்பணியும் செய்துவந்தார்.

லண்டனின் பிரபல மருத்துவமனைகளான லண்டன் லாக் மற்றும் சேரிங் கிராஸ் மருத்துவமனைகளில் இவர் மருத்துவராக இருந்தார். இவரது அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தை போற்றும் விதமாக இன்றும் சேரிங் கிராஸ் மருத்துவமனையில் இவரது பெயரால் அன்சாரி வார்டு என்ற ஒரு பிரிவு இயங்கி வருகிறது. லண்டனில் மட்டுமல்லாது வியன்னா, பாரிஸ், லூக்கேர்ன் போன்ற இதர ஐரோப்பிய நகரங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் ஆண்கள் சம்பந்தமான அறுவை சிகிச்சைகள் செய்வதில் வல்லவராக பணியாற்றியுள்ளார். இவரது மருத்துவச் சேவையின் போது சுமார் 700 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாக இவரை குறித்து தகவல் தரும் இணையதளம் குறிப்பிடுகிறது. இந்த அனுபவங்களைக் கொண்டு Regeneration of Man என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார்.

அன்சாரி அவர்கள் மதராஸில் மருத்துவ மாணவராக இருந்தபோதே கடற்கரையில் நடக்கப்பெறும் காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். லண்டனில் பணி செய்துகொண்டிருந்தபோதே இந்திய தேச விடுதலைக்காக போராட வேண்டி டெல்லிக்கு வந்து அரசியல் களங்களைக் கண்டார். லக்னோ ஒப்பந்தம், கிலாஃபத் இயக்கம் போன்றவற்றில் இவரது பங்கெடுப்பு அளப்பறியது.

1918 - 1920 காலகட்டங்களில் பால்கன் போர்கள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் காயமுற்ற துருக்கிய வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவக் குழுவிற்கு தலைமை தாங்கினார். இந்திய தேசிய காங்கிரஸிலும் இந்திய தேசிய முஸ்லிம் லீகிலும் தலைவராக பலமுறை இருந்துள்ளார். பின்னாளில் மகாத்மா காந்தி மீது கொண்ட பற்றினால் காங்கிரஸுடன் மட்டும் தனது அரசியல் உறவுகளை நீடித்துக்கொண்டார். அவரது செல்வமும் பொருளாதாரமும் விடுதலைப்போராட்ட இயக்கங்களுக்கும் பேரணிகளுக்கும் சட்ட போராட்டங்களுக்கும் என்று கடலில் கரைத்த உப்பினைப் போன ஆனது. தனது இறுதி நாட்களை ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்துடன் இணைத்துக்கொண்டு பயணித்தார். அங்கு துணைவேந்தராகவும் இருந்தார்.

டெல்லியில் இவர் வாழ்ந்த மாளிகை தாருஸ் சலாம் என்றழைக்கப்பட்டது. தொடக்க கட்ட காங்கிரஸ் கூடுகைகள் அனைத்தும் இவரது வீட்டிலேயே நடத்தப்படும். டெல்லி பயணங்களின் போது காந்தியவர்கள் அன்சாரி அவர்களின் மாளிகையில் தான் தங்க வைக்கப்படுவார்கள். 1936 இல் அன்சாரி அவர்கள் மரணித்தபோது ஜாமியா மிலியா வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

1947 தேச பிரிவினையின் போது அன்சாரி அவர்களின் குடும்பத்தாரில் ஓரிருவரைத் தவிர ஏனைய அனைவரும் உபி மாநிலத்தில் தங்கிவிட்டனர். இவரது சேவைகளைப் பாராட்டி டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் அன்சாரி சாலை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதி அன்ஸாரி நகர் என்று பெயர் சூட்டப்பட்டது. ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் கலையரங்கம் மற்றும் மருத்துவமனை ஆகியவை அன்சாரி அவர்களது பெயர் சூட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரது குடும்பத்தாரில் மகள் ஸொஹ்ரா அன்சாரி மற்றுமொரு விடுதலைப் போராட்ட வீராங்கனையாக அறியப்படுகிறார். ஸொஹ்ரா அவர்களைக் குறித்து நமது "இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம் பெண்கள்" புத்தகத்தில் எழுதியுள்ளோம். மகன் அப்துல் அசீஸ் அன்சாரியும் விடுதலைப்போராட்ட வீரராக இருந்தவர். ஒடிசாவின் முன்னாள் ஆளுநர் சவுக்கத்துல்லாஹ் அன்சாரி மற்றும் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் முஹம்மது ஹமீத் அன்சாரி ஆகியோரும் மேலும் சிலரும் இவரது குடும்பத்தில் இருந்த சென்ற புகழ்பெற்ற அரசியல் தலைவர்களாக அறியப்படுகின்றனர்.


Gummidipondi R Thanasekaran


16 வயது சிறுமி கண்டுலா ஜெஸ்சி… இன்னும் சில நாட்களில் சந்திரன் நோக்கிய விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாகிறார்! பொருளாதார சவால்களைத் தாண்டி கனவை நனவாக்கிய சாதனை.

ISRO-வில் விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவுடன் பயணித்து வரும் 16 வயது சிறுமி கண்டுலா ஜெஸ்சி, தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அதற்குக் காரணம், உலகின் முதல் லூனார் கியூப் சாட் (Lunar CubeSat) திட்டமான ‘சக்திசாட்’ (ShaktiSat) மிஷனுக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதுதான்.

மரப்பணித் தொழிலாளியான தந்தையின் குறைந்த வருமானம் காரணமாக, ஜெஸ்சியின் குடும்பம் கடுமையான பொருளாதார சிரமங்களை சந்தித்து வந்தது. இதனால், தனியார் பள்ளியில் படித்து வந்த அவர் பின்னர் அரசு பள்ளிக்கு மாறினார்.

ஆனால், அறிவியலின் மீது இருந்த அவருடைய ஆர்வம் எந்த சூழலிலும் குறையவில்லை. பள்ளியில் செயல்பட்டு வந்த அடல் டிங்கரிங் லேப் (Atal Tinkering Lab) வழங்கிய அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்தி, தனது அறிவியல் திறமையை வளர்த்துக் கொண்டார்.

அதன் பலனாக, உலகின் முதல் லூனார் கியூப் சாட் திட்டமான ‘சக்திசாட்’ மிஷனில் பங்கேற்க இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 20 மாணவர்களில் ஒருவராக ஜெஸ்சி இடம்பிடித்துள்ளார்.

மேலும், 108 நாடுகளைச் சேர்ந்த 12,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சந்திரனுக்கான பயணத்தில் பயன்படுத்தப்படும் சிறிய செயற்கைக்கோளை வடிவமைக்கும் பணிக்காக, பல முன்னணி விஞ்ஞானிகளிடம் ஜெஸ்சி தற்போது சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.

வரும் ஆகஸ்ட் 23 முதல் டெல்லியில் பயிற்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 11-ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதார தடைகளை வென்று, அறிவியல் மீது கொண்ட விடாமுயற்சியால் விண்வெளி கனவை நோக்கி பயணிக்கும் ஜெஸ்சியின் இந்த சாதனை, பல இளம் மாணவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.


உமர்உமர்



Samaukani


BasheerAhamed


BasheerAhamed



பவ்சுதீன்யூசுபி

PERIYAKULAM 

MUHAMMAD

(Mohamed Abdullah)

உரிமையாளர் 

வெளியிடுபவர்   

தங்கநிலா டாட்காம்

முகவரி

1- 207 Perumalpuram

Periyakulam 625 601

Theni Dt.

Cell 90 80 92 50 62


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர்ஷா தர்கா உண்மையான வரலாறு இந்த இதழில்

- குன்றுதோறாடும் குமரன் - முருகப் பெருமானை முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் எனக்கருதினால் அது முருகப் பெருமானுக்கு மேலும் புகழ் சேர்க்கும்

பாலஸ்தீன் தனி நாடு அமைவது சாத்தியமா ? & குளோபஸ் சுமூத் புளோடில்லா அமைதிப்படை காசாவை நோக்கி