தங்கநிலா
டாட்காம்

 இஸ்லாமிய இணைய 
வாரஇதழ்

Year 6 Week 32

15 08 2026 - சனிக்கிழமை

சுதந்திரத்தின மலர்

பெரியகுளம் 

முகம்மது

இதழாசிரியர்


اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْ‌وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.  

(அல்குர்ஆன் : 49:10

தங்கநிலா
டாட்காம்   

இஸ்லாமிய

இணைய

வாரஇதழ்

  பார்க்கப்படும் உலகநாடுகள்

 (Google blogger stats)

இந்தியா சிரிலங்கா 
சிங்கப்பூர் மலேஷியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அரபு நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்
இந்தோனேஷியா
சீனா ஜப்பான் தென்கொரியா
சுவீடன் நார்வே


Update News 360


சாரே ஜஹான் சே அச்சா


சுதந்திரத் தினத்தை வரவேற்கும் ஏர்வாடி தர்கா





பைத்தியக்கார இந்தியன்
வள்ளல் ஹபீப் முகம்மது ஹாஜியார்





மது அரக்கனின் கோரப்பிடியில் இருந்து மக்களைக்காப்போம்.

விழுந்த மாவடி ஊராட்சியைப் பின்பற்றுவோம். இதைச் சுதந்திரத்தின சபதமாக ஏற்போம்.



பெண்பிள்ளையைப்போல் ஆண்பிள்ளையை பொத்தி பொத்தி வளக்கனுமா








கட்டண விளம்பரம்
ஒரு வாரம் ரூ 500-/


கட்டண விளம்பரம்
Sponsored By Mansor Ali Burnei

கல்விப் 
பணிக்கு உதவுங்கள்


திட்டமிடப் பட்டுள்ள அல்அஸ்ஹர் பள்ளியின் அமைப்பு

திருப்பாலைக்குடி


*அல் அஸ்ஹர்

 தொடக்கப்பள்ளியின் தற்போதைய நிலை மற்றும் புதிய நிர்வாகம் மேற்கொள்ளவுள்ள கட்டிட மேம்பாட்டுப் பணிகள் குறித்து விளக்கும் காணொளி.*

மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளுக்கு தங்களின் பொருளாதார பங்களிப்பை வழங்க விரும்பும் நல்உள்ளங்கள்,

கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு தங்களது நன்கொடையை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🏦 *வங்கி:* சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, திருப்பாலைக்குடி கிளை

👤 *கணக்கின் பெயர்:*
*AL AZHAR ISLAMIC EDN DEVELOPMENT A/C MIDDLE SCHOOL TPL*

💳 *கணக்கு எண்:* 3566622063

🔢 *IFSC Code:* CBIN0282055

🤝 வாருங்கள்... நமது அடுத்த தலைமுறைக்கு சிறந்த கல்விச் சூழலை ஒன்றிணைந்து உருவாக்குவோம், இன்ஷாஅல்லாஹ்.

*-அல் அஸ்ஹர் தொடக்கப்பள்ளி நிர்வாகம்*








தங்கநிலா டாட்காம்
இஸ்லாமிய இணைய 
வார இதழ். 
பெரியகுளம் தேனி மாவட்டம். 
துவக்கம் சனவரி 2020

சந்தா சேர்ந்து  இஸ்லாமிய வார இதழுக்கு ஆதரவு தாரீர்

அன்புமிகு இஸ்லாமியப் பெருமக்களுக்கு

அஸ்ஸலாம் அலைக்கும்.

கடந்த 6 ஆண்டுகளாக ஊகடத்துறையில் இஸ்லாத்தின் சார்பாக 

சமூக ஒற்றுமை

மத நல்லிணக்கம்,

நாட்டுப்பற்று 

ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்டு

பணியாற்றி வரும்  நடுநிலை இதழாகச் சேவைச் செய்து வரும் தங்கநிலா டாட்காமில்

சந்தாதாரகச் சேர்ந்து ஆதரிக்க

அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஆண்டுச் சந்தா ரூ 100-/

ஆண்டுச்சந்தா ரூ 100-/ செலுத்தினால்

1 முதல் 5  வெவ்வேறு எண்களில்

அவரவர் செல்லில் பார்க்கலாம்.

உலகின் எந்தப் பகுதியில் இருந்தும்
செல்போனில்
தங்கநிலா வார இதழைக் காணலாம்.


சந்தாதாரராகச் சேர விரும்புவோர்
1 முதல் 5 செல்போன் எண்களை 
90 80 92 50 62 எண்ணுக்கு வாட்சப்பில் அனுப்பி
சந்தாதொகை ரூ100-/ ஐ
மேலுள்ள எண்ணுக்கு Gpay Phone அனுப்பி
Detailed Statement அனுப்பி வைக்க வேண்டும்.

நம்பர் அனுப்பும்போதும்
Detailed Statement
அனுப்பும்போதும்
ஒரே எண்ணிலிருந்து
அனுப்புங்கள்.


இப்படிக்கு

இதழாசிரியர்

தங்கநிலா

                    மாதிரி அட்டை

பத்திரிக்கைப் பிரதிநிதிகளை

வரவேற்கிறோம்.

உலமாக்களுக்கு முன்னுரிமை

ஆண்டுதோறும் ரூ  5 -/ ஆயிரம் முதல் ரூ 10-/ வரை மேல் வருமானம் பெறலாம்.

உங்களது முழு முகவரியுடன் வாட்சப் எண்ணையும் 90 80 92 50 62 எண்ணுக்கு அனுப்பி மேல்விபரங்களை பெறலாம்.


Periyakulam News


Muslim World



Alavudeen Mohamed





Velmurugan T






Sarathkumar Dhanalakhsmi


Tirupur Mufthi


Journalist
PressBawa





Islamic World


Murugesh Maths


எங்கட சிறீலங்கா



Zahir Husain


Kattavan Rabi


Vanathi Srinivsan


Tamil Buzz Dubai


Hamsa Moncigal

Alhamdulillah..😍. Graduated in Btech CSE





Islamic World


JA Naushad Ali






Ali Ali



Jahir Husain Abdul


Abdul Samathu


Seeni Seeni


Iqbal Ibnu Razac


Jasmin Binth 
Dhivansha


Shiek Mohideen Ksn


Jaffna Muslim

🇺🇸 அமெரிக்கா மற்றொரு சக்திவாய்ந்த அரசியல் நிகழ்வைக் கண்டுள்ளது. கனெக்டிகட் தொகுதி 2-ல் மரியம் கான் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது வெற்றி வெறும் தேர்தல் முடிவை மட்டும் குறிப்பதல்ல; அமெரிக்கப் பொது வாழ்வில் வளர்ந்து வரும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் மற்றொரு மைல்கல்லாகவும் இது அமைகிறது. ஒரு முஸ்லிம் குரல் முற்போக்கு அரசியலை முன்னிலைக்குக் கொண்டு வருகிறது.

பல முஸ்லிம்களைப் பொறுத்தவரை, இத்தகைய தருணங்கள் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளன: பொது வாழ்வில் பங்கேற்று, தங்களைச் சுற்றியுள்ள சமூகங்களை வடிவமைக்கும் அதே வேளையில், இஸ்லாமிய அடையாளத்திலும் உறுதியாக நிலைத்திருக்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது.

பிரதிநிதித்துவம் முதல் கொள்கை முடிவுகள் வரை அமெரிக்க அரசியல் களம் தொடர்ந்து மாறி வருகிறது; இந்த வெற்றியும் நிச்சயம் விவாதங்களைத் தூண்டும்.

அல்லாஹ் ﷻ அவருக்கு ஞானத்தையும் உறுதியையும் அருளட்டும்...


Ramya Sanukan


⚪ விதவை மறுமணம் என்பது வெறும் ஆண் பெண் சேர்க்கை அல்ல❕
அது இருண்ட சோகத்தில் மூழ்கிய
ஒரு பெண்ணின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் மனிதநேய புரட்சி...❕✅

⚪ முடங்கிப் போன உயிரை மீண்டும்
துடிக்க வைக்கும் இயற்கையின் நியதி...❕✅

⚪ சமுதாயத்தின் இருளைப் பிளந்து கொண்டு எழும் புதிய வெளிச்சம்...❕
மூட நம்பிக்கைகளின் சடங்குகளை எரித்து விட்டு சமத்துவத்தையும் நிலை நாட்டுதல்...❕✅

🗨️ பெண் என்பவள் -
தாலியத்தவள் இழக்கிறாள்
பூவும், பொட்டும், விதவை என்ற
பட்டமும் பெற்று...❕💬

⬜ ஆனால் ஆண்.... (மனைவியை இழந்த ஒரு சிலர்) ❔❔❔❔

🗨️ ஆண் என்பவன் -
மனைவி இழந்த ஆண் மகுடம் சூட்டுகிறான் புது மாப்பிள்ளையாய் மணமேடையில்...❕💬

🟥 மனிதனுக்கு மனிதனாகவே உருவாக்கிய சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிவு செய்து விடுகிறது கணவனை இழந்தால் விதவை❗
மறுமணம் செய்தால்
நடத்தைக் கெட்டவள் என்று...❗

🟥 உடல் தேவைக்கு தான் திருமணம் என்றால் முதல் திருமணமே அடிப்படைத் தவறு தான்...‼️❎❎❎

👆🏻 இது தான் உலகம்❗🌍
👆🏻 இருண்ட உலகம்❗🌍

❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎



கணினி அறிவியல் போட்டிகளில் வெற்றி


கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் பயிலும் மாணவிகள் பூவந்தி, சிவகாசி நாடார் பயோனியர் கல்லூரியில் 07.08.2026 அன்று நடைபெற்ற PHOENIX'26 கணினி அறிவியல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.

இணைய வடிவமைத்தல் (Web Design) பிரிவில் மூன்றாமாண்டு தரவு அறிவியல் பயிலும் மாணவி B. நிகமத் நிஷா, செயற்கை நுண்ணறிவு வீடியோ தயாரித்தல் (AI Video making) பிரிவில் இரண்டாமாண்டு தரவு அறிவியல் பயிலும் மாணவி A. மரியம் நிஷா மற்றும் நெருப்பில்லா சமையல் (Fireless Cooking) பிரிவில் மூன்றாமாண்டு இளங்கலை கணினி அறிவியல் பயிலும் மாணவி H. மாஜிதா பானு ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.


மேலும் குழு நடனம் (Group Dance) பிரிவில் மூன்றாமாண்டு தரவு அறிவியல் மாணவி P. நிவேதா, இரண்டாமாண்டு கணினிஅறிவியல் பயிலும் மாணவிகள் K. சௌந்தர்யா மற்றும் K.G. சுபத்ரா, முதலாமாண்டு கணினிஅறிவியல் பயிலும் மாணவிகள் B. கிரிஜா மற்றும் S. வர்ஷா ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் வாழ்த்தினார். அருகில் துறைத்தலைவர் முனைவர் உதவிப்பேராசிரியர்கள் திரு. K. ராவுத்தர் நெய்னா, திருமதி N. அல்பெனாசிர் மற்றும் திருமதி S. ஹசீனா மர்சானா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


மீலாத் விழா சொற்பொழிவுகள்

1. அண்ணல் நபி ஸல் அவர்களின் அரசியல் மாண்புகள்! (2013)
https://vellimedaiplus.blogspot.com/2013/05/blog-post_16.html?m=1

2. முழு வெற்றி கண்ட முழு மனிதர் முஹம்மது ஸல் அவர்கள்! (2013)
https://vellimedaiplus.blogspot.com/2013/11/blog-post_13.html?m=1

3. உயிருக்கு உயிரான... உயிரினும் மேலான...
(2014)
https://vellimedaiplus.blogspot.com/2014/01/normal-0-false-false-false-en-us-x-none.html?m=1

4. வழிகாட்டும் ஒளி விளக்கு! (2014)
https://vellimedaiplus.blogspot.com/2014/01/blog-post.html?m=1

5. அண்ணல் நபி ஸல் அவர்களின் அறிவார்ந்த அணுகுமுறைகள்! (2014)
https://vellimedaiplus.blogspot.com/2014/01/blog-post_15.html?m=1

6. உலகம் வியந்து போற்றும் அரசியலாளர்!
(2014)
https://vellimedaiplus.blogspot.com/2014/01/blog-post_23.html?m=1

7. சாதனை படைத்த சர்தார் நபி ஸல் அவர்கள்! (2014)
https://vellimedaiplus.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html?m=1

8. அண்ணல் நபி ஸல் அவர்களின் ஆளுமைத்திறன்! பாகம்1. (2015)
https://vellimedaiplus.blogspot.com/2015/01/blog-post_8.html?m=1

9.அண்ணல் நபி ஸல் அவர்களின் ஆளுமைத்திறன்! பாகம்2. (2015)
https://vellimedaiplus.blogspot.com/2015/01/2.html?m=1

10. அண்ணலாரை நேசிப்போம்! (2015)
https://vellimedaiplus.blogspot.com/2015/12/blog-post_16.html?m=0

11. அண்ணல் நபி ஸல் அவர்களின் வாழ்வை சுவாசிப்போம்! (2015)
https://vellimedaiplus.blogspot.com/2015/12/blog-post_24.html?m=0

12. புகழோடு பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி ஸல் அவர்கள்! பாகம் 1. (2016)
https://vellimedaiplus.blogspot.com/2015/12/blog-post_31.html?m=0

13. புகழோடு பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி ஸல் அவர்கள்! பாகம் 2. (2016)
https://vellimedaiplus.blogspot.com/2016/01/2_6.html?m=0

14. மானுட வாழ்வியல் அமைத்த மகத்தான புரட்சியாளர்! (2016)
https://vellimedaiplus.blogspot.com/2016/12/blog-post_1.html?m=1

15. தென்றலும் புயலாகும்!!! (2016)
https://vellimedaiplus.blogspot.com/2016/12/blog-post_15.html?m=1

16. முஹம்மது நபி ஸல் அவர்கள் எனும் (2017)
https://vellimedaiplus.blogspot.com/2017/05/blog-post_29.html?m=0

17. தாஹா நபி ஸல் அவர்களின் தனித் தன்மைகள்! (2018)
https://vellimedaiplus.blogspot.com/2018/11/blog-post_79.html?m=1

18. பெண் குழந்தைகளை வளர்ப்பதில் பெருமானார் ஸல் அவர்களின் முன்மாதிரி! (2018)
https://vellimedaiplus.blogspot.com/2018/11/blog-post_79.html?m=1

19. வாழ்வியல் முன்மாதிரி வள்ளல் நபி ஸல்! (2020)
https://vellimedaiplus.blogspot.com/2020/10/normal-0-false-false-false-en-us-x-none_22.html?m=1

20. உங்களை அவமதிப்பதை அனுமதியோம் யாரசூலுல்லாஹ்! பாகம் 1. (2020)
https://vellimedaiplus.blogspot.com/2020/10/normal-0-false-false-false-en-us-x-none_74.html?m=1

21. மாநபி ஸல் அவர்களின் அழைப்பை ஏற்போம்! (2020)
https://vellimedaiplus.blogspot.com/2020/11/normal-0-false-false-false-en-us-x-none.html?m=1

22. நவீன உலகின் பிரச்சினைகளும் நபி ﷺ அவர்கள் (2020)
https://vellimedaiplus.blogspot.com/2020/11/normal-0-false-false-false-en-us-x-none_19.html?m=1

23. உங்களை அவமதிப்பதை அனுமதியோம் பாகம் 2. (2021)
https://vellimedaiplus.blogspot.com/2021/02/2.html?m=1

🗓️ *Updated 13.08.2026*


🔮 *ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்* 🔮


*2016 முதல் 2025 வரை கடந்த பத்து ஆண்டுகளில், ஷைகுனா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி ஹள்ரத் அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் பற்றி ரபீஉல் அவ்வல் மாதங்களில் நிகழ்த்திய 34 உரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் ஆண்டுகளின் வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.*


*அல்லாஹ், ஹழ்ரத் அவர்களின் சேவைகளை கபூல் செய்வானாக! ஆஃபியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை அருள்வானாக! அவர்களின் வாழ்வில் மென்மேலும் பரகத் செய்வானாக!*


1️⃣ மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிவோம் - 1 (02.12.2016)

https://youtu.be/vIdLh_U2lts?si=OdBO0JNFwkzyDINQ


2️⃣ மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிவோம் - 2 (09.12.2016)

https://youtu.be/zaSdg6mlUN8?si=AY-PS-7hzX6lSbLD


3️⃣ பெருமானாரின் மகத்துவம் (24.11.2017)

https://youtu.be/Vow5XlH3650?si=4TkLSJkpgBua2_u2


4️⃣ பெருமானாரின் இறுதி தருணங்கள் (01.12.2017)

https://youtu.be/LIw8I0CvSto?si=6ucqq1TD8nGzAxip


5️⃣ பெருமானாரின் தூய வாழ்வும், தூய மரணமும் (08.12.2017)

https://youtu.be/zLq5UHVtB1Q?si=Zjd7_ZsNaE9po-t0


6️⃣ பெருமானாரின் அற்புதங்கள் (06.04.2018)

https://youtu.be/V_EUcQiRnCE?si=RwejfHcmU6R-PoS3


7️⃣ வசந்தமே வருக! (09.11.2018)

https://youtu.be/WSnLkEVwmsQ?si=1m6rq0EpmXNrXoD8


8️⃣ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்ந்த பண்புகள் (09.11.2018)

https://youtu.be/fvulGeVfrF8?si=CsuRzW2jsw8tN_sy


9️⃣ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்து நினைவுகள் (16.11.2018)

https://youtu.be/T6Xfvf-Z2H4?si=tk7SpzTBcpearmjh


1️⃣0️⃣ பெருமானாரின் மகத்துவம் (25.10.2019)

https://youtu.be/x_AvHwa0uic?si=1XOB8qld4bCRswR7


1️⃣1️⃣ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வும் வாக்கும் (01.11.2019)

https://youtu.be/6LUga-TW1ik?si=vn2WWn9n3w39B3Lo


1️⃣2️⃣ மாநபியின் இனிய பிறப்பு முதல் தூய மரணம் வரை - 1 (01.11.2019)

https://youtu.be/1mwmf_n872s?si=gOW85m6k2eonOuxP


1️⃣3️⃣ நபித்துவத்தின் மாண்புகளும் நவீன வழிகேடர்களும் (04.11.2019)

https://youtu.be/cpgCuG9_WZk?si=MO-bj_I-NRp4VMRh


1️⃣4️⃣ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அறிவது அவசியம் ஏன்? (08.11.2019)

https://youtu.be/6-HAhlOZjUM?si=MUYpoCTJJcOut2bT


1️⃣5️⃣ மாநபியின் இனிய பிறப்பு முதல் தூய மரணம் வரை - 2 (08.11.2019)

https://youtu.be/IdUsM9iAByg?si=Gxm1qR9BcosI_POG


1️⃣6️⃣ ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (23.10.2020)

https://youtu.be/mAsRqGllKMc?si=JljRvp9_73iIj_s_


1️⃣7️⃣ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்துபவர்களின் கதி (30.10.2020)

https://youtu.be/1GkSC-YF3Kg?si=sijhwVjdrv-d3PnB


1️⃣8️⃣ மணம் கமழும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - 1 (08.10.2021)

https://youtu.be/LE0dC2FgtkE?si=I-5fv16KFE9NXHtF


1️⃣9️⃣ மணம் கமழும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - 2 (15.10.2021)

https://youtu.be/NYXFs5uNBQE?si=JmwHqGksBAuAKWZo


2️⃣0️⃣ இறுதி நபித்துவத்தை பாதுகாப்பதில் அண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறை (16.10.2021)

https://youtu.be/NtQ8lYjabTc?si=r4Rc_A9QKBCYuyCz


2️⃣1️⃣ இறுதி நபித்துவம் (22.10.2021)

https://youtu.be/crGBJs0Hj1c?si=7dzrlUn68Qh-tXwl


2️⃣2️⃣ நபித்துவத்தின் மகுடம் - 1 (30.09.2022)

https://youtu.be/Fhghb1b1hbM?si=LQ6AWw5HAiRPlJjQ


2️⃣3️⃣ நபித்துவத்தின் மகுடம் - 2 (07.10.2022)

https://youtu.be/Zfy6ZR8COxA?si=dvgRkaNhmmMWANTA


2️⃣4️⃣ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய தோற்றம் (14.10.2022)

https://youtu.be/Bd4paj4Dh6Y?si=bMZCFGl38v_Xuoee


2️⃣5️⃣ அகிலத்தின் பேரொளி (15.09.2023)

https://youtu.be/rhQUg-kh9HA?si=Au_5G4_uB5HwHBvR


2️⃣6️⃣ நட்பை காத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (22.09.2023)

https://youtu.be/dlOUNwVe6H4?si=Rgfq0Dhrd4v6ZLUd


2️⃣7️⃣ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி தருணங்கள் (29.09.23)

https://youtu.be/cwsdI70z9Sk?si=cs6SjKPmks0kximv


2️⃣8️⃣ மாநபியின் தனித்துவம் (13.09.2024)

https://youtu.be/yIWUTaQ2yQg?si=MCDeFZlXgWOxFdQ6


2️⃣9️⃣ நபியை நேசிப்போம், நபியை புகழ்வோம் (27.08.2025)

https://youtu.be/EMRANsoH95c?si=jAP-604-p4A9c-nD


3️⃣0️⃣ அருட்கொடையின் வருகை (29.08.2025)

https://youtu.be/yP54yb8Bsdk?si=jWCI78Y7AtfDgTR-


3️⃣1️⃣ முத்திரையிடப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (03.09.2025)

https://youtu.be/2TpTfJTjKrY?si=9If4sBLy4pZj7fn3


3️⃣2️⃣ பிறப்பும் தூய்மை, வாழ்வும் தூய்மை, இறப்பும் தூய்மை (05.09.2025)

https://youtu.be/T2Q6llbyi7c?si=8TcK3MGco9QFd7DO


3️⃣3️⃣ நற்குணத்தின் சிகரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (12.09.2025)

https://youtu.be/JN4d9iq23EI?si=xuZgQcJPTMBp7YCN


3️⃣4️⃣ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓர் அற்புதம் (30.09.2025)

https://youtu.be/GuNaayoTDIg?si=X4yPLAK1pZefv8vY

♻ Team Voice of Nadwi ©️


Puzhal Saikmohamed Ali

கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள Markaz Knowledge City — கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் சிறப்புமிக்க கல்வி நகரமாகும்.

அதன் நிறுவனரும், மார்க்க அறிஞருமான கண்ணியத்திற்குரிய அபூபக்கர் முஸ்லியார் அவர்களின் மகனும், இஸ்லாமிய அறிஞர், கல்வியாளர் மற்றும் சமூக முன்னேற்றத்தின் வழிகாட்டியாக விளங்கும் டாக்டர். முஹம்மது அப்துல் ஹக்கீம் அல்-அஸ்ஹரி அவர்களுடன் இனிய சந்திப்பு.


மறைக்கப்பட்ட வரலாற்றின் ஒரு பக்கம்!

கண்டுபிடித்தது வாஸ்கோடகாமா அல்ல ஓமானின்
'கடல் சிங்கம்' அஹ்மத் இப்னு மாஜித்!" 🌊⚔️🔥


1498-இல் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்ட போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமா, ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைக் கடந்து அரபிக்கடலின் எல்லையை அடைந்தபோது, ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டார்.

அரபிக்கடல் என்பது சாதாரண கடல் அல்ல. அதன் பருவகாலக் காற்றுகள் (Monsoon winds), சக்திவாய்ந்த நீரோட்டங்கள் மற்றும் மாறுபடும் கடல் பாதைகள் பற்றிய அறிவு இல்லாமல் அதை கடப்பது மிகப்பெரிய ஆபத்தாக இருந்தது.

அப்போது ஐரோப்பிய கப்பல் படையிடம் இருந்த திசைகாட்டிகளும் வரைபடங்களும் ஆப்பிரிக்கக் கரையைத் தாண்டி இந்தியப் பெருங்கடலில் பயணிக்க முழுமையாக போதுமானதாக இல்லை.

'கடல் சிங்கம்' அஹ்மத் இப்னு மாஜித் 🌊

அந்த நேரத்தில், கென்யாவின் மாலிந்தி கரையில், அன்றைய ஓமான் நாட்டைச் சேர்ந்த மாபெரும் கடல்சார் விஞ்ஞானியும் மாலுமியுமான "கடல் சிங்கம்" (Asad al-Bahr) அஹ்மத் இப்னு மாஜித்தை வாஸ்கோடகாமா சந்திக்க நேரிட்டது.

இப்னு மாஜித் ஒரு சாதாரண மாலுமி அல்ல.

அவர் கடலின் ரகசியங்களை அறிந்த ஒரு அறிவியல் மேதை. அட்சரேகைகளைக் கணக்கிடும் 'கமால்' (Kamal) கருவி, விண்மீன்களை வைத்து திசை அறியும் முறைகள் மற்றும் அரபிக்கடலின் ஒவ்வொரு அலைவரிசையையும் விளக்கும் பல கடல்சார் நூல்களை உருவாக்கியவர்.

'கமால்' கருவியும் வியக்க வைத்த தொழில்நுட்பமும்! ⚓

போர்த்துகீசியர்களிடம் இருந்த வழிகாட்டும் கருவிகளை விட, இப்னு மாஜித் போன்ற அரபு மாலுமிகளிடம் கடல் வழிச் செலுத்தும் அனுபவமும் அறிவும் மிகுந்ததாக இருந்தது.

'அல்-கமால்' (Al-Kamal) என்ற கருவியின் மூலம், துருவ நட்சத்திரத்தின் கோணத்தை வைத்து நடுக்கடலிலும் கப்பல் இருக்கும் துல்லியமான அட்சரேகையை (Latitude) கணிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

23 நாட்களில் அரபிக்கடலைக் கடந்த விந்தை! 🌊

1498 ஏப்ரல் 24 அன்று, இப்னு மாஜித் தனது கடல்சார் கணிப்புகளைப் பயன்படுத்தி போர்த்துகீசியக் கப்பல்களை வழிநடத்தினார்.

அரபிக்கடலின் பருவக்காற்றை சாதகமாகப் பயன்படுத்தி, வெறும் 23 நாட்களில் வாஸ்கோடகாமாவை கேரளத்தின் கோழிக்கோடு (Calicut) கரைக்கு கொண்டு சேர்த்ததாக கூறப்படுகிறது.

இப்னு மாஜித்தின் வழிகாட்டுதல் இல்லையெனில், போர்த்துகீசியப் படைகள் அரபிக்கடலின் சுழல் காற்றிலும் புயலிலும் சிக்கியிருக்கும் என்ற கருத்தும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

வரலாற்றில் தூவப்பட்ட சேறும் திட்டமிட்ட இருட்டடிப்பும் 😡

பிற்காலத்தில் உலகளவில் தங்களது மேலாதிக்கத்தை நிறுவ நினைத்த ஐரோப்பிய சக்திகள், ஒரு கிழக்கத்திய/இஸ்லாமிய மாலுமியின் அறிவும் பங்களிப்பும் இருந்ததை மறைத்ததாக சிலர் கூறுகின்றனர்.

போர்த்துகீசிய வரலாற்றுப் பதிவுகளில் (எ.கா: Joமூo de Barros பதிவுகள்) இப்னு மாஜித் தொடர்பான குறிப்புகள் இருப்பதாக கூறப்பட்டாலும், பிற்கால மேலைநாட்டு வரலாற்றாசிரியர்கள் சிலர் அவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

இறுதியில், இப்னு மாஜித் போன்ற கடல்சார் மேதைகளின் அறிவியல் பங்களிப்புகள் போதுமான அளவில் பேசப்படாமல், வாஸ்கோடகாமா "இந்தியாவைக் கண்டுபிடித்த மாவீரன்" என்ற பிம்பம் உலகளவில் பரவியது.

உங்கள் கருத்து என்ன?

கிழக்குலகின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு, வரலாற்றில் இதுபோன்று மறைக்கப்பட்டதா?

கீழே கமெண்ட்டில் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! 👇💬


ஜுவைதீன் ரவூப்

MusthafaKMM
மலேஷியா இந்தோவில் இஸ்லாம்...! ☪️

• பிரிட்டிஷ் 🇮🇴 வரலாற்றாசிரியரான 👨‍🏫 சர் தாமஸ் வாக்கர் #அர்னால்டு (Sir Thomas Walker Arnold), இந்தோனேசியா 🇮🇩 மற்றும் மலேசியா 🇲🇾 ஆகிய நாடுகளில் #இஸ்லாம் ☪️ மதம் பரவியதற்கு அரபு மற்றும் இந்திய 🇮🇳 முஸ்லிம் வர்த்தகர்களின் 🛍️ நற்பண்புகளும், #நேர்மையான வணிகமுமே முக்கியக் காரணம் என்று தனது ஆய்வில் 🕵️ திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்... 📌

• புகழ்பெற்ற பிரிட்டிஷ் 🇮🇴 வரலாற்றாசிரியரான 👨‍🏫 சர் தாமஸ் #அர்னால்டு, 1️⃣8️⃣9️⃣6️⃣ஆம் ஆண்டு "தி ப்ரீச்சிங் ஆஃப் இஸ்லாம் ☪️" (The Preaching of Islam) என்ற தனது உலகப் 🌐 புகழ்பெற்ற புத்தகத்தை 📗 எழுதினார்... ✍️

• தென்கிழக்கு ஆசியாவில் (மலேசியா 🇲🇾, இந்தோனேசியா 🇮🇩) #இஸ்லாம் ☪️ மதம் வாள் 🗡️ முனையிலோ அல்லது போர்கள் ⚔️ மூலமாகவோ பரவவில்லை ❎ என்பதை அவர் ஆதாரங்களுடன் 📚 நிரூபித்தார்...

• அந்த நாடுகளுக்குச் சென்ற முஸ்லிம் ☪️ #வணிகர்களின் 🛍️ நேர்மை, சிறந்த குணாதிசயங்கள் (Good Character) மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் மூலமாகவே அங்குள்ள மக்கள் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் ☪️ #தழுவினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்...

• மலேசிய 🇲🇾 வரலாற்றில் மிக முக்கியமானது #மலாக்கா பேரரசு ஆகும். இதன் இந்து 🕉️ மன்னரான 🤴 பரமேஸ்வரா (Parameswara), அரபு மற்றும் இந்திய 🇮🇳 #முஸ்லிம் ☪️ வணிகர்களின் நேர்மையால் ஈர்க்கப்பட்டார். 

பின்னர் அவர் இஸ்லாத்தை ☪️ ஏற்று, தன் பெயரை #சுல்தான் இஸ்கந்தர் ஷா (Sultan Iskandar Shah) என்று மாற்றிக் கொண்டார். மன்னரின் 🤴 மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது #அமைச்சர்களும் மக்களும் அடுத்தடுத்து இஸ்லாத்தைத் ☪️ தழுவினர்...

• இந்தோனேசியாவின் 🇮🇩 சுமத்ரா பகுதியில் இருந்த மாலிக் அல்-சாலிஹ் (Malik al-Salih) என்ற உள்ளூர் #அரசர் 1️⃣3️⃣ ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாத்தை ☪️ ஏற்றார்.

இதுவே இந்தோனேசியாவின் 🇮🇩 முதல் 🥇 இஸ்லாமிய ☪️ அரசு ஆகும்...

• இந்தோனேசியாவின் 🇮🇩 ஜாவா தீவில் இஸ்லாத்தைப் ☪️ பரப்புவதில் "வாலி சாங்கா" (Wali Sanga) எனப்படும் 9️⃣ தத்துவஞானிகள்/#சூஃபி மகான்கள் முக்கியப் பங்காற்றினர். 

இவர்கள் உள்ளூர் இந்து-பௌத்த கலாச்சாரத்தை மதிக்கக் கற்றுக் கொடுத்து, மக்களின் மனங்களை வென்றனர்🏆. 

இதன் விளைவாக, புகழ்பெற்ற #மஜபஹித் அரச 👑குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களும் அதிகாரிகளும் இஸ்லாத்தை ☪️ ஏற்றனர்...

• வர்த்தகர்களுடன் 🛍️ வந்த #சூஃபி (Sufi) துறவிகளின் எளிய வாழ்க்கையும், ஆன்மீகப் போதனைகளும், ஏழை எளிய மக்களிடம் காட்டிய #சமத்துவமும் அப்பகுதி மக்களைப் பெரிதும் கவர்ந்தன...

• முஸ்லிம் ☪️ வணிகர்கள் 🛍️ உள்ளூர் பெண்களைத் 🧕 #திருமணம் ❤️‍🩹 செய்து கொண்டு அங்கேயே குடியேறினர்🏡. 

அவர்கள் தங்களின் உயர்ந்த #ஒழுக்கத்தால் சமூகத்தில் மதிக்கப்படும் மனிதர்களாக மாறினர். இது அரச 👑 குடும்பத்தினருடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த உதவியது...

• #நபிகள்_நாயகம் 💗 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது இறுதி உரையில் 🎙️ சஹாபாக்களுக்கு இஸ்லாத்தைப் ☪️ பற்றி உலகெங்கும் 🌐 பரப்புங்கள் என்று சொன்னபோது, யா ரசூலுல்லாஹ்! நாங்கள் எப்படி இஸ்லாத்தை ☪️ எடுத்துச் #சொல்வது 🗣️ என்று கேட்டார்கள். நீங்கள் சொல்ல வேண்டாம் ❎ செய்து #காட்டுங்கள் என்று நபிபெருமானார் பதில் கூறியதாக இஸ்லாமிய ☪️ வரலாறு 📚குறிப்பிடுகிறது...

• நபிகள் நாயகத்தின் 💗 கட்டளைக்கு அடிபணிந்து #ஸஹாபாக்கள் தன் வாழ்வியல் மற்றும் வியாபார 🛍️ நேர்மை மூலமாக இஸ்லாத்தைப் ☪️ பரப்பினார்கள்...



AbdulHakeem Dindugal

உண்மையான தலைமைப் பண்பு பணிவில்தான் தொடங்குகிறது
சமத்துவமும் மரியாதையும் கற்றுத்தரும் ஒரு வலிமையான பாடம்
இந்தப் படம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. 

ஒரு மனிதரின் தொழில், பதவி அல்லது சமூக அந்தஸ்து அவரின் மதிப்பை நிர்ணயிப்பதில்லை.

துப்புரவுப் பணியாளராக இருந்தாலும், மருத்துவராக இருந்தாலும், காவல் அதிகாரியாக இருந்தாலும் அல்லது வேறு எந்தத் தொழிலில் இருந்தாலும், ஒவ்வொரு மனிதரும் சமமான மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரியவரே.


வழிபாட்டின் நேரத்தில், பணிவு மனிதர்களை ஒன்றிணைக்கிறது. 

அந்த தருணங்களில் பதவி, செல்வம் அல்லது புகழைவிட, நற்குணம், நேர்மை, இரக்கம் மற்றும் இறையச்சமே உயர்ந்தவை என்பதை அது நமக்கு உணர்த்துகிறது.


நம் சமூகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதற்காக அமைதியாக உழைக்கும் மனிதர்களின் சேவையை நாம் மதிக்க வேண்டும்.

ஒவ்வொரு நேர்மையான தொழிலும் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறது; எந்த உழைப்பையும் இகழக்கூடாது.

ஒவ்வொரு மனிதரின் மதிப்பையும் உணரும்போதுதான் உண்மையான மரியாதை உருவாகிறது.


இந்த ஊக்கமளிக்கும் காட்சி, நம் அன்றாட வாழ்க்கையில் அன்பு, பணிவு மற்றும் நன்றியுணர்வை கடைப்பிடிக்க நம்மை ஊக்குவிக்கட்டும்.

மனிதர்களை அவர்களின் தொழிலின் அடிப்படையில் அல்ல, அவர்களின் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் மதிப்போம்.

சமத்துவமும் இரக்கமும் நிறைந்த சமூகமே உண்மையான முன்னேற்றத்தை உருவாக்கும்.

சிறிய மரியாதை கூட மற்றவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அறிவிப்பு
இந்தப் பதிவு ஊக்கமளிக்கும் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பகிரப்படுகிறது. 

இது பொதுவாகப் பரவியுள்ள தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும். 

இதில் இடம்பெறும் நபர்களின் அடையாளம், பதவி அல்லது நிகழ்வுகளை தனித்தனியாக உறுதிப்படுத்தும் நோக்கம் இல்லை. மனிதர்களிடையே மரியாதை, பணிவு மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய பண்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.


எளிய வார்த்தைகளைக் கொண்டு பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம், காலத்தால் அழியாத பல திரைப்பாடல்களைத் தந்த கவிஞர், எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா கா.மு.ஷெரீப் அவர்களின் பிறந்தநாள் நினைவு நாள் இன்று.


கவிஞர் கா.மு.ஷெரீப்

எளிய வார்த்தைகளைக் கொண்டு பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம், காலத்தால் அழியாத பல திரைப்பாடல்களைத் தந்த கவிஞர், எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா கா.மு.ஷெரீப் அவர்களின் பிறந்தநாள் நினைவு நாள் இன்று.

தஞ்சை மாவட்டம் அபிவிருத்தீஸ்வரத்தில் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்த இவர், முறையான பள்ளிப் படிப்பை விடத் தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞராக உயர்ந்தார்.

 

‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற தனது பெயரையே ‘கா.மு.ஷெரீப்’ எனச் சுருக்கிக் கொண்டார். 

15 வயதிலேயே அரசியலில் நுழைந்து, சுயமரியாதை இயக்கம், தேசிய இயக்கம் மற்றும் தமிழரசுக் கழகம் எனப் பல களங்களில் இயங்கிய இவர், ‘தமிழ் முழக்கம்’, ‘சாட்டை’ உள்ளிட்ட பல இதழ்களையும் நடத்தினார்.

1948ஆம் ஆண்டு வெளிவந்த "மாயாவதி"

படத்தின் மூலம் பாடலாசிரியராகத் திரையுலகில் அறிமுகமான இவர், 400-க்கும் மேற்பட்ட வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார்.

 "ஏரிக்கரையின் மேலே போறவளே", 

"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே", 

"வாராய் நீ வாராய்",

 "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்",

 "அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை" போன்ற எக்காலத்துக்கும் பொருந்தும் தத்துவ மற்றும் காதல் பாடல்களைப் படைத்துள்ளார்.

குறிப்பாக, கொடூர வில்லனாக அறியப்பட்ட எம்.என். நம்பியாருக்காக இவர் எழுதிய "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா" என்ற டூயட் பாடல் இன்றும் பலரால் வியந்து பேசப்படுகிறது.

திரையுலகில் உச்சத்தில் இருந்தாலும் அதன் ஆடம்பரங்களிலோ, சீரழிவுகளிலோ சிக்காமல் தனது கொள்கையில் உறுதியாக நின்றார்.

"கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருந்து, ரசிகர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு எழுத வேண்டும்" என்று கூறியது மட்டுமல்லாமல், அதன்படியே வாழ்ந்து காட்டினார். 

தனது பிற்காலத்தில் சிறந்த ஆன்மீகவாதியாக மாறி, சீறாப்புராணத்திற்கு மிகச் சிறந்த உரையையும், பல வாழ்வியல் நூல்களையும் எழுதினார்.

யாரையும் சார்ந்து வாழாத தன்மானக் கவிஞரான கா.மு.ஷெரீப் அவர்களின் திரைத்தொண்டையும், தமிழ் முழக்கத்தையும் இந்த பிறந்த தினத்தில் போற்றுவோம்!

#KaMuSheriff

🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷

Sm.Hithayathulla

நெல்லை- மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா அறிவியல் கலை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது.


பெண்களுக்கான சட்ட கல்லூரி இந்த நிர்வாகம் துவக்கினால், அனைத்து உதவி மற்றும் அனுமதியை உடனேயே மாண்புமிகு முதல்வர் விஜய் அரசு வழங்கும், அது சிறுபான்மையினரால் நடத்தப்படும் முதல் பெண்கள் சட்ட கல்லூரியாகும் என சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாண்புமிகு அமைச்சர் நிர்மல் குமார் வாக்குறுதி அளித்தார்.


நெல்லை மண்ணில் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர்களுக்கு மகளிர் அணி சார்பாக எழுச்சிமிகு வரவேற்பு!


✨" பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!"

என்ற முழக்கத்தோடு திருநெல்வேலியில் நடைபெறும் "மாநில தலைவர்கள் சங்கமம்" (State Leader's Conclave) நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த:👑 கட்சியின் தேசிய தலைவர் மதிப்பிற்குரிய எம்.கே. ஃபைஸி அவர்கள்

👑 கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய மஜீத் ஃபைஜி அவர்கள்👑

கட்சியின் தேசிய பொருளாளர் மதிப்பிற்குரிய அப்துல் சத்தார் அவர்கள்
ஆகியோருக்கு, எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தலைமையிலும், மாவட்ட, தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நெல்லை மண்ணில் எழுச்சிமிகுந்த மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது!


மருத்துவ மாணவரான ஜொஹைப் ஹம்ஸா வெறும் 105 நாட்களில் முழு திருக்குர்ஆனை மனனம் செய்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார். 

இந்தச் சாதனை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் இறைநம்பிக்கையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பலராலும் பாராட்டப்படுகிறது.


அல்லாஹ்வின் வார்த்தைகளை மனனம் செய்வது மிகப்பெரிய பாக்கியமாகும். 

கல்விப் பொறுப்புகளுடன் இணைந்து இந்த உயரிய இலக்கை அடைந்த அவரது முயற்சி, பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.

🤝🛡

Abdullah Basha



நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்வித் தரத்தை மதிப்பிடுவதற்கும், முதுநிலை மருத்துவப் படிப்புகள் (DNB/MD/MS/Diploma) மற்றும் சிறப்பு மருத்துவத் தகுதிகளுக்கான நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகளை நடத்துவதற்கும் இந்த வாரியம் பொறுப்பாகும். 

இதில் மாநில அளவில் முதலிடம் பெறுவது என்பது மிக உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது...


Siraju Deen


திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தேசிய விண்வெளி தினம்
வினாடி வினா போட்டி நடைபெற்றது,
இப்போட்டியில்
ஐந்து மாவட்டங்கள் கலந்து கொண்டுள்ளதில் , நம் திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடம் பெற்றுள்ளது,
🇮🇳 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஶ்ரீஹரிகோட்டா இயக்குனர்,
உயர் திரு, சத்திய நாராயணன் அவர்களிடம்
மாணவ மாணவியர்கள் பரிசு பெற்ற தருணம் 💐🤝🌺🙏🤲

தலைமை ஆசிரியர், ஆசிரியை ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் , மாணவியருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் 💐💐💐🤝

என்றும் அன்புடன்-
J.டூயட் பாபு.
Ex. PTA . Wise president.
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி
திருப்பாலைக்குடி

🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷

Fathima Muzaffar

தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி, திரு. A.B. தமீம் அன்சாரி அவர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) தலைவர் (Chairman) அவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

07.08.2026 (வெள்ளிக்கிழமை ) மாலை 4.15 மணிக்கு, சென்னை TAMCO தலைவர் அறையில் மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையிலும், மாண்புமிகு IAS அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையிலும், புதிய தலைவர் அவர்களை பொறுப்பேற்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பாக புதிய தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், துஆவையும் தெரிவித்தோம்.

Islamic World


Aqram Noon

ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ள அஷ்-ஷைக் வை. எல். எம். நவவீ, இன்று (10) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் அகில ஜம்இய்யத்துல் உலமாவின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் அதன் பணிகள் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார்.


மு.வெங்கடேஷ்பாபு

திண்டுக்கல்-குமுளி புதிய ரயில் பாதைக்கான சர்வேப் பணிகள் தேனி மாவட்டத்தில் தொடங்கி விட்டதாகத் தகவல். பெரியகுளத்தை ஒட்டி புதிய ரயில் பாதையும், பெரியகுளத்தின் பெயரில் ரயில் நிலையமும் வருவதற்கு பெரியகுளம் மக்கள் மற்றும் பெரியகுளத்திலுள்ள சங்கங்கள் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய நேரம் இது.🚆🚃


🧕 ஹிஜாப்... ஒரு துணி மட்டுமல்ல, அது ஒரு அடையாளம்!

கென்யாவின் ககுமா அகதி முகாமில் பிறந்து, பின்னர் அமெரிக்காவில் வளர்ந்த ஹலிமா ஏடன், ஹிஜாபுடன் உலக ஃபேஷன் மேடைகளில் களமிறங்கி வரலாறு படைத்தார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற Miss Minnesota USA போட்டியில் ஹிஜாப் மற்றும் புர்கினி அணிந்து பங்கேற்ற முதல் போட்டியாளராக உலகின் கவனத்தை ஈர்த்தார்.

அதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் நிகழ்ச்சிகளிலும், முன்னணி இதழ்களின் அட்டைப்படங்களிலும் இடம்பிடித்தார்.

ஆனால், தனது இஸ்லாமிய மதிப்புகளையும் ஹிஜாபின் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியுடன், 2020 ஆம் ஆண்டு மாடலிங் துறையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இன்று அவர் அகதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், இஸ்லாமிய ஒழுக்கங்களுக்கு ஏற்ப அமைந்த Modest Fashion துறையிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.

🌹 உலக மேடையில் வெற்றி பெறுவதற்காக தனது அடையாளத்தை மாற்றவில்லை; தனது அடையாளத்தோடு வெற்றி பெற்றார்.

அல்லாஹ் நம் சகோதரிகளுக்கு ஹிஜாபின் மரியாதையையும் உறுதியையும் நிலைநிறுத்த அருள் புரிவானாக. ஆமீன். 🤲


Nawfar Bava

மாத்தளை ஆமீனா மகளிர் கல்லூரியின் திறமையான மாணவியான எம். எப். ஆய்ஷா ரய்பா, அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற 16ஆவது "சிதம்பரா கணித விழா – 2026" போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்தி தங்கப்பதக்கத்தை வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.


PERIYAKULAM 

MUHAMMAD

(Mohamed Abdullah)

உரிமையாளர் 

வெளியிடுபவர்   

தங்கநிலா டாட்காம்

முகவரி

1- 207 Perumalpuram

Periyakulam 625 601

Theni Dt.

Cell 90 80 92 50 62


code

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர்ஷா தர்கா உண்மையான வரலாறு இந்த இதழில்

- குன்றுதோறாடும் குமரன் - முருகப் பெருமானை முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் எனக்கருதினால் அது முருகப் பெருமானுக்கு மேலும் புகழ் சேர்க்கும்

பாலஸ்தீன் தனி நாடு அமைவது சாத்தியமா ? & குளோபஸ் சுமூத் புளோடில்லா அமைதிப்படை காசாவை நோக்கி